கருத்துமுரண்பாடுகள்
தொலைக்காட்சி
தொலைக்காட்சி
woensdag 13 april 2011
இலங்கையில் ரயில் மோதி பெண்ணொருவர் உயிர் தப்பினார்
(வீடியோ இணைப்பு)
ஓடும் ரயிலில் மோதிய பெண்ணொருவர் உயிர் தப்பிய அரிதான சம்பவமொன்று இதல்கஸ்ஹின்ன பிரதேசத்தில் அண்மையில் இடம்பெற்றது.
எதிர்பாராத விதமாக இடம்பெற்ற இந்த விபத்தின் காட்சிகள் கெமராவிலும் பதிவாகின.
சுதேச வைத்திய அமைச்சு ஊடகப் பிரிவின் பிரபாத் அபெசிறி பதிவு செய்த காட்சிகளே இவை
பிரபாத் சில நாட்களுக்கு முன்னர் சுதேச வைத்திய அமைச்சர் சாலிந்த திஸாநாயக்கவுடன் அபிவிருத்தி செயற்திட்டமொன்று தொடர்பில் ஒளிப்பதிவு செய்வதற்காக இதல்கஸ்ஹின்ன பிரதேசத்திற்கு சென்றிருந்தார்.
இதன்போது ஓர் நாள் மாலை 6.10 மணியளவில் கொழும்பில் இருந்து பயணித்த உடரட்ட மெனிக்கே இதல்கஸ்ஹின்ன பிரதேசத்தை அண்மித்தது
இந்தக் காட்சியை ஒளிப்பதிவு செய்து கொண்டிருந்த வேளையில் ரயில் தண்டவாளத்துக்கு அருகில் எதிர்பாராத விதமாக இடம்பெற்ற சம்பவமொன்று அங்கிருந்தவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
லெவகலவத்தையைச் சேர்ந்த 18 வயதான யுவதியே இந்த எதிர்பாராத சம்பவத்தை எதிர்நோக்கினார்.
12 Apr 2011
Geen opmerkingen:
Een reactie posten
Nieuwere post
Oudere post
Homepage
Abonneren op:
Reacties posten (Atom)
Geen opmerkingen:
Een reactie posten