தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 21 april 2011

வன்னி மக்களை சிறீலங்கா அரசு நடத்தும் விதம்! அதிர்ச்சிப்படங்கள் இணைப்பு

வன்னியில் தமிழீழ விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டு விட்டார்கள்... 30 வருட காலப் போர் முடிந்து விட்டது...


இந்தத் தகவல் உத்தியோகபூர்வமாக இலங்கையின் அரச கட்டமைப்புக்களால் அறிவிக்கப்பட்டு இரண்டரை வருடங்கள் முடிந்து விட்டன.

ஆனால் இங்கே கையில் விபரப் பலகையுடன் நிறுத்தப்பட்ட வயதானவர்கள் வன்னியில் வாழ்ந்து கொண்டிருக்கும் எஞ்சிய தமிழ் மக்கள்...


இப்படி ஆட்டு மந்தைகளைப் போல கொடூரமாக எடுக்கப்பட்ட வன்னி வாழ் மக்களின் படங்கள்

இப்படியான வயதான காலத்திலும் சிறிலங்காப் படையினரால் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்படுவது போல நிறுத்தப்படுகிறார்கள்..


உளவியல் ரீதியாகச் சிதைத்தே மீதமிருப்பவர்களையும் சிறுகச் சிறுகச் சாகடிக்கிறார்கள் இந்த சிறீலங்காவின் நவீன ஜம தூதர்கள்...

அவர்கள் ஒவ்வொருவரின் முகத்தையும் கூர்ந்து பாருங்கள்... முகங்கள் அப்படியே சுருங்கி விட்டன...


படங்களில் உள்ள அனைவருமே தங்களின் பாசத்துக்குரிய உறவுகள் யாரையாவது நிச்சயம் இழந்திருப்பார்கள்... எத்தனை நாள் உணவின்றி இருந்திருப்பார்கள்...

ஒரு தமிழனாக உயிர் வாழுவதற்காய் அவர்கள் படும் அவலத்தை பார்க்க இதை விட நேரிடைச் சாட்சியம் எங்கும் கிடையாது....


புலிகளை முற்றாக அழித்து விட்டோம் என்று கூவிக் கொண்டு திரியும் சிறீலங்கா அரசு இன்னமும் ஏன் இவர்களைச் சித்திரவதை செய்கின்றது.

இவர்களால் இனி ஆயுதம் ஏந்த முடியுமா? அப்போ எதற்காக கொலைக் குற்றவாளி போல நிற்க வைத்து இந்தக் கேவலமான படப் பிடிப்புக்கள்...

இன்றைய நிலையில் தமிழ் மக்கள் இவர்களிடம் அப்படி என்ன கேட்டார்கள்... தற்போதைக்கு இருக்க ஒரு இடமும் குறைந்தது இரண்டு வேளையாவது சாப்பாடும்....


புலிகளை முன்னின்று கொன்றொளித்த இந்தியாவுக்கும் இவர்களின் வேதனை தெரிவதில்லை... சர்வதேசத்துக்கும் புரிவதில்லை..

எந்த ஒரு சந்தர்ப்பத்திலாவது ஒரு சிங்களவனை இப்படியாக நிற்கவைத்து படம் பிடித்திடுமா சிறிலங்கா அரசு?

இவர்களுக்கு குறைந்தது மனிதத் தன்மை கூட இல்லையா?

சிறீலங்காவின் நவீன தண்டனைகளை நித்தமும் அனுபவித்து வரும் தமிழ் மக்களைப் பற்றிப் பேசுவதற்கு இலங்கையில் ஆட்கள் இல்லை... உண்மையும் கூட..

ஏனெனில் இவர்களுக்காகப் பேசியவர்கள், போராடியவர்களை அழித்தும் இரண்டரை வருடங்கள் ஆகி விட்டனவே... இனி யார் பேசப் போகிறார்கள்...

உலகிலேயே தனது சொந்த நாட்டு மக்களையே இப்படிக் கொடூரமாக சிறுகச் சிறுக சித்திரவதை செய்து சாகடிக்கும் அரசு உள்ள நாடு சிறீலங்கா மட்டுமே...

புலிகளை அழித்து விட்டால் தமிழர்களின் உரிமையைக் கொடுத்து விடுவோம் என்று சொன்ன சிறிலங்கா அரசு மானம் மரியாதையோடு வாழ்ந்த தமிழ் மக்களை கள்ளன், காடையர்களை போல நிற்க வைத்துப் படம் பிடிக்கிறது...

சிறீலங்கா அரசின் தமிழ் மக்கள் மீதான இத்தகைய கேவலமான செயல்கள் இன்னமும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன..

கொடூர கொலைக்குற்றம் செய்தவர்கள் போல இந்த அப்பாவி மக்களை நிறுத்தப்படும் கொடூரம் உலகில் உள்ள எந்த ஒரு மனிதனுக்கும் ஏற்படக் கூடாது...
20 Apr 2011

Geen opmerkingen:

Een reactie posten