[ புதன்கிழமை, 27 ஏப்ரல் 2011, 09:49.37 PM GMT ]
தமிழ்நெற் இணையத்தின் இன்றைய தலையங்கச் செய்தி ஆய்வில் ஐ.நா. யுத்தக்குற்ற அறிக்கை ஈழத்தமிழர்களின் உரிமைகளில் அத்துமீறிக் கருத்துத் தெரிவித்துள்ளதைத் தெளிவாகக் சுட்டிக்காட்டி அறிக்கையின் ஒரு பக்கத்தையும் அந்தச் செய்தி ஆய்வில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது.
இங்கே இணைக்கப்பட்டுள்ள அந்த அறிக்கையின் ஒரு பக்கமானது புலம்பெயர்ந்த தமிழர்களை வலிந்து இந்த அறிக்கைக்குள் கொண்டு வந்திருப்பதை ஆணித்தரமாக சுட்டிக்காட்;டி அந்த அறிக்கையின் குறிப்புக்கள் 417ல் இருந்து 420 வரையான நான்கு குறிப்புக்களையும் விலாவாரியாக ஆராய்ந்துள்ளது.
தமிழ்நெற் இணையத்தளத்திற்கு யாழ்ப்பாணத்தில் இருந்து கருத்துத் தெரிவித்த அரசியல்வாதியொருவர் இந்த அறிக்கையின் மேற்படி நான்கு குறிப்புக்களையும் புலம்பெயர்ந்த தமிழர்கள் மிகவும் அவதானமாக நோக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். இவரது கருத்தும் தமிழ்நெற்றின் விழிப்புணர்வு ஆய்வும் நிட்சயமாக புலம்பெயாந்த தமிழ் மக்களால் நிதானத்துடன் பரிசீலிக்கப்பட வேண்டியவை.
ஏனெனில் இந்த அறிக்கை வந்த மறுதினமே ஐரோப்பிய ஒன்றியக் காவற்துறை விடுதலைப்புலிகள் தற்போது பணச்சேகரிப்பிற்கு ஆட்களை நாடுகளிற்கு சட்டவிரோதமாகக் கடத்துதல், கடணட்டை மோசடி செய்தல், பயமுறுத்திப் பணம் சேர்த்தல் போன்றவற்றைச் செய்கிறார்கள் எனவும், தங்களது ஊடகங்களை இந்தப் பணச் சேர்ப்பிற்குப் பயன்படுத்துகிறார்கள் என்று அறிவித்துள்ளது.
அதனையே ஐ.நா.வின் அறிக்கையிலும், விடுதலைப்புலிகள் தற்போது புலம்பெயர்ந்த நாடுகளில் இப்போது தங்களின் நோக்கத்திற்காகப் பணம் சேர்ப்பதற்காக “மாபியா” பாணியிலான பதாள உலகக் கோஸ்டியின் நடவடிக்கைகளை ஒத்த நடவடிக்கைகளில் இறங்கியுள்ளார்கள் என்றும் வியாபார நிறுவனங்களை நடத்துதல், அமைப்புக்கள், ஆலயங்கள் மூலம் வருமாணத்தைப் பெறுதல் என்பனவும் நடைபெறுகிறது என்றும்,
இதனை மேற்கு நாடுகள் கவணித்து தற்போதும் நடைபெற்றுவரும் மேற்படி நிதி சேகரிப்பை காண்காணித்து மேற்குலக நாடுகளிலுள்ள விடுதலைப்புலிகளின் நிதிவழங்களை போரினால் பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழ்ச் சமுகத்திற்குப் போய் சேரும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது.
இதில் கவணிக்கப்பட விடயம் என்னவென்றால், சம காலத்தில் வெளியான இந்த இரண்டு அறிக்கைகளும் புலிகளின் நிதி சேகரிப்பையும், நடவடிக்கைகளையும் மாபியா, ஆட்கடத்தல், கடணட்டை மோசடி, துன்புறுத்தல் என வகைப்படுத்தி புலம்பெயர்ந்த தமிழர் அமைப்புக்களை சட்டவிரோத அமைப்புக்களாக்க முத்திரை குத்தியுள்ளன.
இது குறித்து விசணம் தெரிவித்துள்ள தமிழ்நெற் ஆய்வு யார் புலிகளின் சொத்துக்களை இவ்வாறு தாயக மக்களிற்கு பிரித்துக் கொடுப்பது என்பது பற்றி ஐ.நா.வின் அறிக்கை பரிந்துரைக்கத் தவறிவிட்டது என்றும் விடுதலைப்புலிகளின் வெளிநாட்டு வழங்களை மக்களிற்கு கொண்டு செல்லும் பணியை புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புக்களிடமே விடவேண்டும் என்றும் கேட்டுள்ளது.
ஆனால் புலிகளின் ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்ட நிலையில், புலிகள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களிற்குப் பொறுப்பேற்க யாருமற்ற நிலையில், இந்த அறிக்கைகளில் புலம்பெயர்ந்த தேசிய நோக்கான அமைப்புக்களின் செயற்பாடுகளை எந்தவித ஆதரமுமற்று சட்டவிரோத செயற்பாடுகளை விடுதலைப்புலிகள் சார்பாக மேற்கொள்ளும் அமைப்புக்களாகச் சித்தரித்துள்ளது ஏதோ மர்மம் நிறைந்த நடவடிக்கையாகவுள்ளது.
ஊடகங்கள், ஆலயங்கள், அமைப்புக்கள், வியாபாரங்கள் என வகைப்படுத்தப்பட்டு புலம்பெயர்ந்த நாடுகளின் செயற்பாடுகளை குறிவைக்க வேண்டிய தேவை என்ன? ஏந்த நாடுகளுமே குறிப்பிடாத வகையில் “மாபியாவின் பாணியில்” என ஏன் யுத்தக்குழு குறிப்பிடுகிறது என்பதை தமிழர்கள் நிதானத்துடன் சிந்தித்துச் செயலாற்ற வேண்டும் என்பதை தமிழ்நெற் சிறப்பாய்வு அவசரமாக சுட்டிக் காட்டுகிறது.
ஐ.நா. அறிக்கையின் முழு வடிவத்தினை நேரடியாக பார்வையிட

Geen opmerkingen:
Een reactie posten