எல்லாமே பணத்தை நோக்கியே!!வெளிநாட்டிலிருந்து வரும் குரல்கள் வெறுப்பானவை,கசப்பானவை!
பக்கசார்பால் தமிழனை பிளவுபடுத்தி அரசியலில் தெளிவற்றவனை அரசனாக்கி ஆட்டம் போட நினைத்த அமெரிக்க அடிவருடிக்கூட்டம் எதிரியின் பலமும் அமெரிக்கா என்பதனை மறந்ததால் வந்த அழிவை அமெரிக்காவின் காலடியில் வீழ்ந்து மறைத்து போர்க்குற்றம் பாடி பொதுமக்களை மீண்டும் பேயர்கள் ஆக்குகிறது.பாடல்கள் பாடி பல்லைக்காட்டுகிறது.ஏமாந்தால் மீண்டும் முதுகினில் ஏறி நம்மை நிமிரவிடாமலே அழித்துவிடும்!!
போரிலே பாதிக்கப்பட்டவன் எல்லாம் வீதியில் தவிக்கிறான்,போர் குற்றம் சொல்வோரோ பாரினில் தவிக்கிறான்.வறுமையையும் துயரையும் நீக்கும் கரங்களோ இங்கு இல்லை,தம்மை காப்பற்ற போரை பாவிக்கும் பாவியரும் பணத்தை சுரண்டுவோருமே ஆடு நனைவதாக அழுவோர் !!போராட்டத்தை திசை மாற்றி,வெற்றியை தடுத்து அமெரிக்காவுக்கு அடிமையாக்கிய அந்த புண்ணியவாளர்கள் ஆட்டம் மக்கள் விழித்ததுமே ஓட்டம்!!
Geen opmerkingen:
Een reactie posten