தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 20 april 2011

அமெரிக்க எடுபிடியான ஐக்கிய நாடுகள் சபை அமெரிக்காவை பகைத்தால் சோத்துக்கு எங்கே போகும்???

ராஜீவ் காந்தியையும் பிரேமதாசவையும் படுகொலை செய்யுமாறு விடுதலைப் புலிகளைத் தூண்டியது அமெரிக்காவும் பிரிட்டனுமே: அமைச்சர் சம்பிக்க ரணவக்க
[ புதன்கிழமை, 20 ஏப்ரல் 2011, 04:44.04 PM GMT ]
ராஜீவ் காந்தி மற்றும் ஜனாதிபதி பிரேமதாச ஆகியோரைப் படுகொலை செய்ய விடுதலைப் புலிகளைத் தூண்டியது அமெரிக்கா மற்றும் பிரிட்டன் தான் என்று அமைச்சர் சம்பிக்க ரணவக்க குற்றம் சாட்டுகின்றார்.
அது மாத்திரமன்றி விடுதலைப் புலிகளுடனான இறுதிக்கட்ட யுத்தத்தின் போது அமெரிக்கா  உள்ளிட்ட சில நாடுகள் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் உள்ளிட்ட 47 முக்கியஸ்தர்களைப் பாதுகாக்கவும் முயற்சித்ததாகவும் அவர் மேலும் குறிப்பிடுகின்றார்.
நேற்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மகாநாடொன்றில் வைத்தே அவர் மேற்கண்ட கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
அத்துடன் வடக்கில் தமிழ் சிவிலியன்கள் கொல்லப்பட்டதற்குக் காரணம் இராணுவத் தாக்குதல்கள் அன்றி அந்த மக்களை மனிதக் கேடயங்களாக விடுதலைப் புலிகள் அமைப்பு பயன்படுத்தியமையே ஆகும்.
அதே நேரம் யுத்த காலத்தில் சிற்சிறு தவறுகளை மேற்கொண்ட இராணுவத்தினரை அரசாங்கம் உடனுக்குடன் தண்டித்திருக்கின்றது. இராணுவத்தின் கட்டுக்கோப்பு குலையாத வகையில் அவர்கள் செயற்பட மட்டுமே அனுமதியளிக்கப்பட்டிருந்தது. அதன் காரணமாக அவர்கள் தவறு செய்யவே அஞ்சினர்.
அவ்வாறான நிலையில் ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கை மூலம் இலங்கை அரசாங்கம் மீது முன்வைக்கப்பட்டுள்ள அனைத்துக் குற்றச்சாட்டுகளும் அடிப்படையற்ற பிதற்றல்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐ.நா. நிபுணர் குழு அறிக்கைக்கெதிராக சஜித் குழுவினர் அரசாங்கத்துடன் கைகோர்ப்பு
[ புதன்கிழமை, 20 ஏப்ரல் 2011, 04:03.40 PM GMT ]
ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கைக்கு எதிராக சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய தேசியக்கட்சியின் முக்கியஸ்தர்கள் குழுவொன்று அரசாங்கத்துடன் கைகோர்க்கவுள்ளது.
ஆணைக்குழுவின் அறிக்கையை கடுமையாக விமர்சிப்பது,  அதற்கெதிரான அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு ஆதரவு வழங்குவது உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபட சஜித் பிரேமதாச தலைமையிலான பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு தீர்மானித்துள்ளது.
அதன் ஒரு கட்டமாக தற்போதைக்கு அக்குழுவின் முக்கியஸ்தர்களுள் ஒருவரான தயாசிரி ஜயசேகர அரசாங்கத்துக்கு ஆதரவான முறையில் பகிரங்கமாக கருத்து வெளியிட்டுள்ளார். டைம்ஸ் சஞ்சிகையில் ஜனாதிபதி பெற்ற வெற்றி குறித்தும் பாராட்டியுள்ளார்.
ஆயினும் இவர்களின் நடவடிக்கைக்கு ஐக்கிய தேசியக் கட்சிக்குள்ளேயே பலத்த எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. குறைந்த பட்சம் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நாடு திரும்பும் வரையேனும் அமைதியாக இருக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்கள் அவர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Geen opmerkingen:

Een reactie posten