தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 7 april 2011

கனடா உதயன் பொய்யை மீண்டும் மீண்டும் சொல்வதால் பொய் உண்மை ஆகிடுமா சொல்!!

ஒதுக்கப்படும் பிரபாவின் பெயரும் திணிக்கப்படும் முன்னாள் தலைவர்களின் நாமங்களும்...
[ புதன்கிழமை, 06 ஏப்ரல் 2011, 02:09.09 PM GMT ]
இலங்கையில் தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளுக்காக போராடிய தமிழ்த் தலைவர்களில் தந்தை செல்வாவின் நாமம் மறக்கப்படக் கூடியதல்ல என்பதை அதிகளவு தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்வார்கள்.
அவர் பற்றிய பல விமர்சனங்களை முன்னர் இலங்கையின் இடதுசாரி அரசியல் தலைவர்கள் முன்வைத்த போதிலும் அவை தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்டு தந்தை செல்வா, ஈழத்து காந்தி; என்றெல்லாம் அவர் போற்றப்பட்டார்.
அவருக்கும் பின்னர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் ஈழத்தமிழ் மக்களின் தலைவராக அடையாளம் காணப்பட்ட போதிலும் இடையில் தோன்றிய தீவிரவாதத் தலைமை அல்லது விடுதலைப் போரின் அவசியம் என்பனவற்றால் அவரது காலம் பறிக்கப்பட்டுவிட்டது. அதைப் போலவே அவரது பெயரும் மறுக்கப்பட்டும் மறைக்கப்பட்டும் நின்றது.
ஆனாலும் அமரர் அமிர்தலிங்கம் மீதான பல அரசியல் விமர்சனங்கள் தீவிரவாதத் தலைமைகளினால் முன்வைக்கப்பட்ட காரணத்தால் அமிர்தலிங்கத்தை போற்றிப் புகழ்ந்தவர்கள் கூட துரோகிகள் என்று குற்றஞ்சாட்டப்பட்டு விமர்சிக்கப்பட்டார்கள். இவை கடந்த காலங்களில் நாங்கள் கண்ட அரசியல் காட்சிகள்.
இன்று உலகத்தமிழர்களின் அரசியல் போக்கு முற்றிலும் எதிர்பாராத விதமாக மாறிவிட்டது. உலகத் தமிழர்களினால் போற்றப்பட்டும் புகழப்பட்டும் பூஜிக்கப்பட்டும் வந்த தேசியத்தலைவர் பிரபாகரன் அவர்களின் பெயர் உலகத் தமிழர்களால் உச்சரிக்கப்படும் சந்தர்ப்பங்கள் மிகக் குறைவாகவே உள்ளன. என்பதை கனடா உதயன் மிகுந்த மனவருத்தத்தோடு குறிப்பிட விரும்புகின்றது. அதற்கு காரணங்கள் பல உள்ளன.
விடுதலைப்புலிகளின் வன்னியின் பலம் திட்டமிட்டு அழிக்கப்பட்டதன் பின்னர் தலைவர் பிரபாகரன் தொடர்பான செய்திகள் திட்டமிடப்பட்ட வகையில் அடக்கி வாசிக்கப்படுகின்றன.
அவரது பெயர் உச்சரிக்கப்படுவதோ அன்றி அவரது முக்கியத்துவம் பற்றி பிரஸ்தாபிக்கப்படுவதோ இலங்கையிலும் புலம்பெயர்ந்த நாடுகளிலும் இரண்டு வேறுபட்ட தன்மையைக் கொண்டனவாகவே காணப்படுகின்றன.
இலங்கையில் தற்போது செயற்பட்டு வரும் தமிழ்த் தலைமைகள் தலைவர் பிரபாகரனின் பெயரை உச்சரிப்பது என்பது அவர்கள் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் என்ற காரணத்தை நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.
ஒரு பக்கத்தில் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டு விட்டார் என்ற செய்தியை மிகவும் உறுதியோடு கூறி அது தொடர்பான பிரசாரங்களை முன்னெடுக்கும் அரசாங்கம்.
அங்குள்ள தமிழ்த் தலைமைகள் தலைவர் பிரபாகரன் இன்னும் உயிருடன் உள்ளார் என்ற செய்தியைச் சொன்னால் அவர்கள் தேசத் துரோகக் குற்றச்சாட்டுக்கு உள்ளாவார்கள் என்ற அச்சம் அவர்களுக்கு உள்ளது நியாயமானதே.
மேலும் தலைவர் பிரபாகரனுக்கு எமது அஞ்சலிகள் என்று தமிழ்த் தலைமைகள் அறிக்கை வெளியிட்டாலும் அவர்களுக்கு அரசாங்கத்திடமிருந்து எச்சரிக்கை வரும் என்பதும் உண்மையே.
ஆனால் புலம் பெயர்ந்த நாடுகளில் உள்ள தமிழர் அமைப்புக்களின் செயற்பாடுகள் இங்கு வாழும் தமிழ் மக்கள் மத்தியில் பல குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளன.
அண்மையில் கனடாவில் உள்ள ஒரு முன்னாள் விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர் ஒருவர் தனது தனிப்பட்ட நண்பர்களுடன் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்ட போது அவர் தெரிவித்த விடயம் சில செய்திகளை நமக்கு சொல்லி நிற்கின்றது.
முள்ளிவாய்க்கால் படுகொலைகள் நடைபெற்ற சில வாரங்களுக்குப் பின்னர் தானும் தனது சகாக்கள் சிலரும் கனடாவில் உள்ள ஏனைய சில முக்கிய உறுப்பினர்களிடம் சென்று வாருங்கள் நமது தலைவனுக்காக ஒரு விளக்கை ஏற்றிவைத்து அவருக்கு அஞ்சலி செய்வோம் என்று அழைத்தபோது, அந்த மற்ற அணியினர், இல்லை அவ்வாறு செய்தால் நாம் இங்கு தொடர்ந்து இயங்குவதில் சிக்கல்கள் தோன்றும் என்று கூறினார்களாம்.
இவ்வாறாக தலைவர் பிரபாகரனின் பெயர் இலங்கையிலும் புலம்பெயர்ந்த நாடுகளிலும் திட்டமிட்டோ அலலது தற்செயலாகவோ மறுக்கப்பட்டு வருகின்றதை நாம் அவதானிக்கலாம்.
ஆனால் அண்மைக்காலத்தில் இலங்கையில் தந்தை செல்வா போன்ற தலைவர்களின் பெயர்கள் உச்சரிக்கப்படுவதும் அவரது பெயரானது அரசியல் நகர்வுகளின் போது அவசியமாகக் கருதப்படுவதும் போன்ற தன்மையும் வெளிக்காட்டப்படுவதை நாம் அவதானிக்கலாம்.
இந்த வாரத்தில் இலங்கையில் மாவை சேனாதிராஜா மற்றும் கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான் போன்றவர்கள் மிகவும் அழுத்தமாக தந்தை செல்வாவின் பெயரை உதாரணம் கூறி தங்கள் அறிக்கைகளில் குறிப்பிட்டதை வாசகர்கள் காணலாம்.
இலங்கையில் உள்ள தமிழ்த் தலைமைகள் தந்தை செல்வாவின் பெயரை பயன்படுத்துவது என்பது ஒரு செயற்கையான விடயமாக நாம் பார்க்கவில்லை.
ஆனால் பிள்ளையான் போன்றவர்கள் முன்னர் விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்தபோது தந்தை செல்வா மற்றும் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் போன்றவர்களை தமிழ் மக்களை காட்டிக் கொடுத்த தலைவர்கள் என்று குற்றஞ்சாட்டி நின்றார்கள்.
ஆனால் இன்று தேசியத்தலைவர் பிரபாகரன் பெயரை மக்கள் படிப்படியாக மறக்க வேண்டும் என்ற தீய நோக்கத்தோடு பழைய தலைவர்களின் பெயர்களை பயன்படுத்துவதை நாம் கவனிக்க வேண்டும்.
இவ்வாறான திட்டமிட்ட அரசியல் புறக்கணிப்புக்களை முறியடிக்க புலம் பெயர்ந்த தமிழ் மக்களும் புலம் பெயர்ந்த நாடுகளில் உள்ள தமிழ் மொழி சார்ந்த ஊடகங்களும் முன்வரவேண்டும் என்ற வேண்டுகோளை இவ்வாரம் கனடா உதயன் முன்வைக்கின்றது.
கனடா உதயன்- கதிரோட்டம்

Geen opmerkingen:

Een reactie posten