[ திங்கட்கிழமை, 11 ஏப்ரல் 2011, 03:20.09 PM GMT ]
இளம் பெண் ஒருவரைத் தவறான வழியில் தனிமையில் அழைத்துச் சென்ற இராணுவ சிப்பாய் ஒருவர் பொது மக்களினால் மடக்கி பிடிக்கப்பட்டு எச்சரிக்கை செய்யப்பட்ட பின் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இச் சம்பவம் யாழ். இணுவில் பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்றது.
இச்சம்பவம் பற்றி தெரியவருவதாவது:
நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை இணுவில் பகுதியில் இயங்கும் தனியார் வைத்தியசாலை ஒன்றின் பின்புறத்தில் உள்ள கட்டிடத்திற்கு இளம்பெண் ஒருவரை இராணுவச் சிப்பாய் அழைத்துச் சென்றிருக்கின்றார்.
இராணுவ சிப்பாயுடன் பெண் ஒருவர் ஆட்கள் நடமாட்டமற்ற பகுதிக்கு செல்வதை வைத்தியசாலையில் நின்ற பொதுமக்கள் கண்டுள்ளனர்.
சம்பவத்தை பற்றி வைத்தியசாலை நிர்வாகத்தினருக்குப் பொதுமக்கள் தெரியப்படுத்தியதைத் தொடர்ந்து நிர்வாகத்தினர் பொதுமக்களுடன் சென்று இளம் பெண்ணையும் இராணுவ சிப்பாயையும் கையும் களவுமாகப் பிடித்தனர்.
கோபமடைந்த இராணுவ சிப்பாய் அங்கிருந்தவர்களைத் துப்பாக்கியைக் காட்டி பயமுறுத்தியிருக்கின்றார்.
அவ்வேளையில் சம்பவம் குறித்து யாழ்.மாவட்ட இராணுவ தலைமைப் பீடத்திற்க்கு தெரிவிக்கப் போவதாக அங்கிருந்தவர்கள் தெரிவித்ததைத் தொடர்ந்து, மன்றாட்டத்துடன் சிப்பாய் அங்கிருந்து புறப்பட்டதாக சம்பவத்தை நேரிற் கண்டவர்கள் தெரிவித்தனர்.

Geen opmerkingen:
Een reactie posten