மகிந்தவை முன்னிறுத்துவதில் சிங்கள அரசியலும் அதிகாரிகளும் காட்டிய ஆர்வம் போன்றே அவரை அவமானப்படுத்துவதில் புலியாதரவுத்தமிழர் மிக மிக ஆர்வமாயிருந்தனர்,அதற்காக பல இணைய தளங்களையும் குறிப்பாக முகப்புத்தகத்தையும் பயன்படுத்தினர்.பத்திரிகையின் தலைமையின் தன்னிச்சையான முடிவாலும் அதிகார அகந்தையாலும் அப்போட்டி முடிவுக்கு வந்துவிட்ட்டது.எனினும் விழுந்தவன் மீசையில் மண்படவில்லை?!!
அதிகாரிகளின் செயற்பாடுகளினாலேயே டைம்ஸ் சஞ்சிகை வாக்கெடுப்பில் நான் அவமானப்பட நோ்ந்தது: ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ
[ வெள்ளிக்கிழமை, 22 ஏப்ரல் 2011, 11:47.48 AM GMT ]
ஒரு சில அதிகாரிகளின் செயற்பாடுகள் காரணமாகவே டைம்ஸ் சஞ்சிகை வாக்கெடுப்பில் நான் அவமானப்பட நோ்ந்தது என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று குற்றம் சாட்டியுள்ளார்.
ஜனாதிபதியின் மேலதிகச் செயலாளர் காமினி செனரத்துடன் டைம்ஸ் சஞ்சிகையில் தன் பெயர் இடம்பெறாமை குறித்து இன்று காலை உரையாடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவின் முக்கியஸ்தர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
டைம்ஸ் சஞ்சிகை வாக்கெடுப்பில் தனது பெயரை உள்ளடக்க வைத்து, அதன் மூலம் உலகளாவிய ரீதியில் பெரும் கௌரவத்தை ஈட்டிக் கொள்ள முடியும் என்று ஜனாதிபதியை நம்ப வைத்த அதிகாரியொருவரும், அவரது நண்பரான வர்த்தகர் ஒருவரும் அந்த நடவடிக்கைகளுக்கென கோடிக்கணக்கில் ஜனாதிபதியிடம் பணம் வாங்கிக் கொண்டிருந்தனர்.
அதன் பின்பு அவர்கள் ஜனாதிபதியின் பெயரைப் பயன்படுத்தி வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்களில் இருந்தும் தமது நடவடிக்கைகளுக்கான ஆதரவைப் பெற்றுக் கொண்டிருந்தனர். அதன் மூலமாக ஜனாதிபதியின் பெயரை டைம்ஸ் சஞ்சிகையின் வாக்கெடுப்பு பட்டியலில் இடம்பெற வைத்து மேலுமொரு தொகையையும் அரசாங்கத்திடம் இருந்து கறந்து கொண்டிருந்தனர்.
டைம்ஸ் சஞ்சிகையின் வாசகர்களின் வாக்குகள் மூலமாக மட்டுமே உலகின் செல்வாக்குமிக்க நபர்களின் வரிசை பட்டியலிடப்படும் என்று நம்பியிருந்த ஜனாதிபதியும் அவரது புகழ்பாடும் ஊடகங்களும் பட்டியலில் நான்காம் இடத்தை ஜனாதிபதி பெற்றுக் கொண்டிருந்தமை குறித்து பெருமெடுப்பிலான பிரச்சாரங்களை மேற்கொண்டிருந்தனர்.
ஆயினும் டைம்ஸ் சஞ்சிகையின் ஆசிரியர் குழுவின் இறுதி முடிவின் பிரகாரமே உலகின் செல்வாக்கு மிக்க நபர்கள் தொடர்பான பட்டியல் வெளியான நிலையில் முன்னைய மாயைகள் கலைந்து போனதன் காரணமாக அதற்குக் காரணமாக இருந்த அதிகாரிகளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடுமையாகத் திட்டித் தீர்த்துள்ளார்.

Geen opmerkingen:
Een reactie posten