தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 16 april 2011

இலங்கை அரசை புகழ்ந்ததால் ஸ்ரேயாவுக்கு எதிர்ப்பு

[ Saturday, 16 April 2011, 10:26.32 AM GMT +05:30 ]
இலங்கையில் நடந்த சினிமா சூட்டிங்கிற்கு சென்ற நடிகை ஸ்ரேயா, இலங்கை அரசை புகழ்ந்து பேசியதால் சர்ச்சையில் சிக்கியிருக்கிறார்.
இந்தி மற்றும் ஆங்கிலத்தில் உருவாகி வரும் புதிய படமான "வின்ட்ஸ் ஆப் சேஞ்ச்" படத்தின் சூட்டிங் இலங்கையில் நடந்து வருகிறது. இதில் நாயகியாக நடிக்கும் நடிகை ஸ்ரேயா, சூட்டிங்கிற்காக இலங்கை சென்றிருந்தார்.

அப்போது இலங்கை அரசை அவர் பாராட்டி பேசியதாக செய்திகள் வெளியாயின. இந்நிலையில் ஸ்ரேயாவுக்கு எதிராக இந்து மக்கள் கட்சி எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக அக்கட்சியின் மாநில செயலாளர் பி.ஆர்.குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: இலங்கையில் படப்பிடிப்புக்கு செல்ல வேண்டாம் என்று நடிகர், நடிகைகள் ஏற்கனவே கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளனர். லிபியா போன்ற நாடுகளில் மக்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்படுவதை ஐ.நா சபை கண்டித்து யுத்தமும் நடத்தி வருகிறது.

அதே நிலைமை தான் இலங்கையிலும் நடந்தது. லட்சக்கணக்கான தமிழர்களை ராஜபக்க்ஷே அரசு கொன்று அழித்தது. அவர் மீது மனித உரிமை மீறல் விசாரணைகள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் ஸ்ரேயா இலங்கை படப்பிடிப்புக்கு சென்றது கண்டிக்கத்தக்கது.

நிறைய தமிழ் படங்களில் ஸ்ரேயா நடித்து உள்ளார். அவர் சமூக அக்கறையோடு நடந்து கொள்ள வேண்டும். ஸ்ரேயா இலங்கை போனது மட்டுமின்றி அந்த நாடு அழகாக இருப்பதாகவும் படப்பிடிப்புகள் நடத்த உகந்த நாடு என்றும் புகழ்பாடி இருக்கிறார்.

ஸ்ரேயா பேச்சை வன்மையாக எதிர்க்கிறோம். இலங்கைக்கு சாதகமாக நடந்து கொள்ளும் அவரது நடிவடிக்கைகள் தொடர்ந்தால் போராட்டத்தில் ஈடுபடுவோம். ஸ்ரேயா படங்களை புறக்கணிப்போம் என்று கூறியுள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten