தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 22 april 2011

அதிகார துஸ்பிரயோகம் பத்திரிக்கை தலைமையகத்திலும்!!

மஹிந்தவின் பெயர் அதிரடி நீக்கம் - டைம்ஸ் நடவடிக்கை
[ வெள்ளிக்கிழமை, 22 ஏப்ரல் 2011, 06:16.41 AM GMT ]
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டைம்ஸ் சஞ்சிகையின், உலகில் மிக அதிகாரம் வாய்ந்த தலைவர்களின் பட்டியலில் இருந்து, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நீக்கப்பட்டுள்ளார்.
இன்று காலை வரையில் முதல் நூறு பேர்களின் பட்டியில் நான்காம் இடத்தில் இருந்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, காலை டைம்ஸ் சஞ்சிகையின் ஆசிரிய குழாமால் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வாக்கெடுப்பின் அடிப்படையில் அவர் இன்று காலை வரையில் நான்காம் இடத்தில் இருந்தார்.

எனினும் இந்த வாக்களிப்புகளில் பாரிய மோசடிகள் இடம்பெற்றதாகவும், இதற்காக ஜனாதிபதியின் ஊடக செயலகத்தில் பிரத்தியேகமாக குழு ஒன்று அமைக்கப்பட்டு, மோசடி வாக்குகள் பிரயோகிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.

இந்த நிலையில் இன்றைய தினம், டைம்ஸ் சஞ்சிகையின் ஆசிரியர் குழாமினால், அவரது பெயர் திடீரென நீக்கப்பட்டுள்ளது.

Geen opmerkingen:

Een reactie posten