புலம் பெயர் தமிழர்கள் கைதுசெய்யப்பட வேண்டுமாம்.
18 April, 2011 by adminபுலம்பெயர் நாடுகளில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகச் செயற்படும் தமிழ் அமைப்புகளின் முக்கியஸ்தர்கள் அனைவரும் அந்தந்த நாடுகளில் வைத்து கைது செய்யப்பட வேண்டும் என்றும் அவர்கள் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டு தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் இலங்கையின் இராணுவப் பேச்சாளர் உபய மெதவல வலியுறுத்தியுள்ளார்.
வெளிநாடுகளில் வாழும் புலம்பெயர் தமிழர்களாலேயே சிறிலங்காவுக்கு சர்வதேச மட்டத்தில் கெட்டபெயர் வருவதாகவும் இதனைத்தடுக்க வேண்டுமாயின் அவர்கள் கைது செய்யப்பட வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந் நபர்கள் இலங்கை தொடர்பிலான தப்பபிப்பிராயத்தை தாம் வாழும் நாடுகளில் உருவாக்க முனைவதன் மூலம் தொடர்ந்தும் அந்த நாடுகளில் வசதியாக வாழ முயற்சிப்பதாகவும் இராணுவப் பேச்சாளர் உபய மெதவல குற்றம் சாட்டியுள்ளார். அவர்கள் இலங்கையில் தொடர்ந்தும் முரண்பாடுகளும் மோதல் நிலைகளும் தொடர்வதாக போலிப் பிரச்சாரமொன்றை மேற்கொள்வதுடன், அவ்வாறான போலி சாட்சியங்களை உருவாக்கி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
எனவே சட்டத்திற்குப் புறம்பாக போலியான செயற்பாடுகளை மேற்கொண்டுள்ள அவர்கள் தொடர்பில் சம்பந்தப்பட்ட நாடுகள் அவதானமாக இருக்க வேண்டுமென்பதுடன், அவர்களைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Geen opmerkingen:
Een reactie posten