தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 28 april 2011

தளபதி ரமேஷ் சித்திரவதையின் பின் சீருடையணிந்து சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்

 
[ வியாழக்கிழமை, 28 ஏப்ரல் 2011, 02:26.17 AM GMT ]
இறுதிக்கட்டப் போரில் சரணடைந்த தளபதி ரமேஷ் அவர்கள் சித்திரவதைகளின் பின்னர் சீருடையணிந்து சுட்டுக் கொல்லப்பட்ட படம் தற்போது வெளியான போர்க்குற்ற ஆதாரப் படங்களில் இடம்பெற்றுள்ளது.
தளபதி ரமேஸ் அவர்கள் இராணுவத்திடம் சரணடைந்த பிறகு அவர் நெருக்கடியான விசாரணைக்கு உட்படுத்தப்படும் வீடியோவும், அவர் இராணுவக் கனரக வாகனமொன்றில் வைத்து விசாரிக்கப்படும் வீடியோவும் என இரண்டு வீடியோக்கள் கடந்த காலங்களில் வெளிவந்திருந்தன.
எனினும் தளபதி ரமேஸ் எங்கே என்ற அவரது குடும்பத்தினரின் விசாரிப்புக்கு அவரைத் தாங்கள் காணவில்லை என்ற பதிலே தெரிவிக்கப்பட்டது. இருந்தும் இவர் நடேசன், புலித்தேவன் ஆகியோருடன் இணைந்து சரணடைந்தார் என்றே கருத்தும் கூறப்பட்டது.
இந் நிலையில் இன்று வெளியாகியுள்ள மற்றொரு தொகுதி யுத்தக் குற்றப் படங்களில் ஒருவர் ரமேஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளது. இது ரமேஸ் கைது செய்யப்பட்டு சித்திரவதை செய்யப்பட்ட பின்னர் மிகவும் கொடுரமான முறையில் சுட்டுக் கொல்லப்பட்டதை எடுத்துக் காட்டுகிறது.

Geen opmerkingen:

Een reactie posten