தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 14 april 2011

இலங்கை இராணுவமே எனது மகனைக் கொன்றது! டாக்டர் மனோகரன் - சர்வதேச மன்னிப்புச் சபை வெளியிட்டுள்ள புதிய வீடியோ

[ வியாழக்கிழமை, 14 ஏப்ரல் 2011, 12:43.41 PM GMT ]
2006 ம் ஆண்டு திருகோணமலையில் கொல்லப்பட்ட 5 மாணவர்களுள் ஒருவரின் தந்தையான டாக்டர். மனோகரன் தனது மகனை இலங்கை இராணுவமே சுட்டுக் கொன்றது எனத் தெரிவித்துள்ளார்.
இவர் நீதி வேண்டி சர்வதேச மன்னிப்புச் சபையின் ஆதரவுடன் பல்வேறு போராட்டங்களையும் மேற்கொண்டு வருகின்றார்.

இந்தக் கொலைக்கான நியாயம் தனக்கு கிடைக்கும் வரை இலங்கை அரசுக்கு எதிராகத் தொடர்ந்தும் போராட்டங்களில் ஈடுபடப்போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் யுத்தக் குற்றங்கள் இடம்பெற்றனவா என்பது பற்றி ஐ.நா.செயலாளருக்கு ஆலோசனை வழங்கும் குழு தனது அறிக்கையை சமர்ப்பித்துள்ள நிலையில் டொக்டர். மனோகரனின் கூற்று பற்றி சர்வதேச மன்னிப்புச் சபை புதிய வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளது.
திருமலையில் மேற்கொள்ளப்பட்ட தமிழ் மாணவர்கள் மீதான படுகொலைக்கு நீதி கிடைக்கவேண்டும் என தெரிவித்து 55,000 மக்களின் கையெழுத்துக்களை பெற்றுக்கொண்ட டாக்டர் மனோகரன் அதனையும் ஐ.நாவில் சமர்ப்பித்திருந்தார்.
சிறீலங்காவில் பல ஆயிரம் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர், பல ஆயிரம் மக்கள் காணாமல் போயுள்ளனர். ஆனால் அங்கு தொடர்ந்தும் மனித உரிமை மீறல்கள் நடைபெறுகின்றன. குற்றவாளிகள் தண்டிக்கப்படவுமில்லை என அனைத்துலக மன்னிப்புச்சபையின் சிறீலங்கா தொடர்பான பிரதிநிதி ஜோலந்தா போஸ்ரர் தெரிவித்துள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten