ஆடு நனைவதாக அழும் ஓநாய்களும் அவற்றை நக்கி வாழும் நம்மினவுதிரிகளும்!!
கிளர்ச்சியாளர்களுக்கு தொலைத் தொடர்புக் கருவிகளை வழங்க பிரிட்டன் முடிவு
[ வியாழக்கிழமை, 07 ஏப்ரல் 2011, 11:01.15 மு.ப GMT ]
லிபியக் கிளர்ச்சியாளர்கள் தங்களுக்கிடையிலான தகவல் பரிமாற்றங்களை இலகுவாக மேற்கொள்ளும் வகையில் பிரிட்டனின் தொலைத் தொடர்புச் சாதனங்கள் வழங்கப்படவுள்ளன.
பிரிட்டன் அமைச்சரவை லிபியக் கிளர்ச்சியாளர்களுக்கு தொலைத் தொடர்புக் கருவிகளை வழங்க அனுமதி வழங்கியதையடுத்தே இச்செயற்பாடு முன்னெடுக்கப்படவுள்ளது.
தொலைத் தொடர்பு சாதனங்கள் அனைத்தும் இலவசமாக வழங்கப்படவுள்ளதுடன், இனிவரும் காலங்களில் நேட்டோ படைகளின் தாக்குதல் இலக்கு குறித்தும் அவர்கள் முன்கூட்டியே அறிவுறுத்தப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
அதன் மூலம் லிபியக் கிளர்ச்சியாளர்கள் அப்பிரதேசங்களிலிருந்து பாதுகாப்பான இடங்களுக்கு நகர்ந்து கொள்ள முடியும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
மேலும் கிளர்ச்சியாளர்கள் வசம் இருக்கும் லிபியாவின் கேந்திர முக்கிய நிலையங்கள் குறித்த தகவல்களை நேட்டோ படையினருக்கு வழங்கவும் பிரஸ்தாப தொலைத் தொடர்பு சாதனங்கள் பயன்படும் என்று கூறப்படுகின்றது.
கூட்டுப் படைகள் தாக்குதலை எதிர்க்க மனிதர்களை கேடயங்களாக பயன்படுத்தும் ராணுவம்: ஐ.நா அதிர்ச்சி
[ வியாழக்கிழமை, 07 ஏப்ரல் 2011, 07:47.47 மு.ப GMT ]
லிபியாவில் கடந்த பெப்ரவரி 15ம் திகதி முதல் புரட்சிப் போராட்டம் வெடித்துள்ளது. கடாபி கடந்த 42 ஆண்டுகளாக சர்வாதிகார ஆட்சி நடத்தி வருகிறார்.
போராட்டத்தை ஒடுக்க வான்வழித் தாக்குதலை லிபிய துருப்புகள் பயன்படுத்தின. இதனால் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். இந்த நிலையில் பொதுமக்களை பாதுகாக்க லிபியா வான் எல்லையில் விமானம் பறக்க ஐ.நா தடை உத்தரவு பிறப்பித்துள்ளதால் அந்த உத்தரவை நிறைவேற்ற கூட்டுப்படைகள் ராணுவம் மீது தாக்குதலை நடத்துகின்றன.
இதில் லிபிய ராணுவம் தடுமாறியுள்ளது. கூட்டுப்படை தாக்குதலை எதிர்கொள்ள மனிதர்களை லிபிய ராணுவம் கேடயங்களாக பயன்படுத்துகின்றன. இந்த நடவடிக்கையை கண்டு ஐ.நா அதிர்ச்சி அடைந்துள்ளது. இது தொடர்பாக உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளது.
இந்த நிலையில் மத்திய தரைக்கடல் துறைமுகத்தை சுற்றி உள்ள பகுதிக்கு செல்லும் பாதையை திறக்க பிரான்ஸ் உறுதி கொண்டுள்ளது.
போர் நிறுத்தம் தொடர்பாக கடாபி அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவுக்கு கடிதம் எழுதினார். அந்த கடிதத்தை வெள்ளை மாளிகை ஏற்கவில்லை. லிபியா போராட்டகாரர்களுக்கு சில நாடுகள் அங்கீகாரம் அளித்ததை தொடர்ந்து டோப்ருக் துறைமுத்தில் இருந்து எண்ணெய் ஏற்றுமதி செய்யப்பட்டது.
ஆனால் லிபியாவின் மிகப்பெரும் எண்ணெய் வயலான அல்சரீர் பகுதியில் பிரிட்டன் குண்டு வீசியதாக லிபியா அயல்துறை அமைச்சர் காலித் கய்ம் குற்றம் சாற்றினார். மனிதர்களை கேடயங்களாக பயன்படுத்துவதால் ஐ.நா படைகள் அஜ்டபயா மற்றும் மிஸ்ரட்டாவுக்கு செல்லும் முக்கியப் பாதையை தாக்கத் துவங்கியுள்ளன. இங்கு ஒரு மாதத்திற்கும் மேலாக கடாபி ராணுவத்தினர் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.

Geen opmerkingen:
Een reactie posten