தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 22 april 2011

பாம்பின்கால் பாம்பறியும்

அன்று தமது அரசியல் எதிரிகளை பழிவாங்க தமிழ் இளைஞரை தவறாக வழிநடத்திய தமிழர் விடுதலைக்கூட்டணி இன்று கூட்டமைப்பு என்ற பெயரிலும் அதை தொடர,இன்னுமே விழித்தெழாத தமிழர்கள் அவர்களை நம்புவதும் அவர்களுக்காக நவீன தொடர்பாடல்களில் பிரச்சாரமழை பொழிவதும் மாற்றுக் கட்சிகள் காசுக்கு ஆட்களை திரட்டுவதாக புலம்புவதும் வேடிக்கை மட்டுமல்ல,வேதனையும்தான்.இவர்களுக்காக என்றே ஒரு பழமொழி அன்றே கூறப்பட்டுள்ளது.அது`பாம்பின்கால் பாம்பறியும்`விளங்கினால் சரிதான்!!
கூட்டமைப்பினரின் குரல்வளையை ஒடுக்க அழுகுணி ஆட்டம் ஆடும் அமைச்சர் டக்ளஸ்
[ வியாழக்கிழமை, 21 ஏப்ரல் 2011, 09:12.43 PM GMT ]
தன் சுயரூபம் மக்கள் முன்னிலையில் வெளிப்பட்டுவிடக்கூடாது என்னும் முனைப்பில் அமைச்சர் என்பதையும் மறந்து அநாகரீக அழுகுணி ஆட்டத்தில் இறங்கியுள்ளார் அமைச்சர் டக்ளஸ்.
கோப்பாய் பிரதேச அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் இன்று வியாழக்கிழமை கோப்பாய் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற போது , டக்ளஸால் விலை கொடுத்து வாங்கப்பட்ட சிலர் மூலம் திட்டமிட்ட முரையில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது அவதூறான வார்த்தைப் பிரயோகங்களைத் தொடுத்து,தமது கருத்துக்களை அவர்கள் முன்வைப்பதைத் தடுக்கும் முயற்சி தோல்வியில் முடிவடைந்தது.
அண்மைக்காலமாக அபிவிருத்தி தொடர்பான கூட்டங்களுக்கு தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் நாடளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்படாத நிலையே நீடித்தது.எனினும் தமது பிரதேச அபிவிருத்தியிலும், நலனிலும் அக்கறை கொண்ட தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இக்கூட்டங்களில் கலந்துகொள்ள ஆரம்பித்தனர்.
அத்துடன் வழித் தேங்காயை எடுத்து அடித்து பெயரெடுக்கும் டக்ளஸின் உண்மை முகத்தையும் அவர்கள் இக்கூட்டங்களின் போது வெளிச்சம் போட்டுக் காட்டிவந்தனர். இந்நிலையில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் இந்தக் கூட்டங்களுக்கு வந்தால் தன்னுடைய பொட்டுக்கேடுகள் எல்லாம் வெளியே வந்துவிடும் எனப்பயந்த டக்ளஸ் , “அவர்களுக்கு (தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினருக்கு) அழைப்பு அனுப்பக்கூடாது” என்று பிரதேச செயலர்களை மிரட்டியுள்ளார்.
எனினும் இது குறித்து அபிவிருத்தி அமைச்சர் பசிலின் கவனத்துக்கு சரவணபவன் எம்.பி கொண்டுவந்ததையடுத்து, யாழ்.மாவட்ட அரச அதிபரிடம் தமிழ்தேசியக் கூட்டமைப்பினருக்கும் அழைப்பு அனுப்புமாறு அறிவுறுத்துவதாக பசில் உறுதியளித்திருந்தார்.
இந்நிலையில் நேற்று தென்மராட்சிப் பிரதேச அபிவிருத்தி தொடர்பான கூட்டத்தில் சரவணபவன் எம்.பி கருத்தொன்றை முன்வைக்க முற்படுகையில், திடீரென ஆவேசம் வந்தவராக எழுந்த டக்ளஸ் தன்னிச்சையாக அந்தக் கூட்டம் முடிவுற்றதாகக்கூறி புறப்பட்டுச்சென்றுவிட்டார். இந்தச் செயல் பல்வேறு தரப்புகளிடமிருந்தும் டக்ளஸுக்கு அழுத்ததை ஏற்படுத்திவிட்டது.
இதனால் இன்று கோப்பாயில் நடைபெற்ற கூட்டத்தில் , விலை கொடுத்து வாங்கப்பட்ட சிலரை , பிரதேச மக்கள் என்ற போர்வையில் களமிறக்கினார் டக்ளஸ். அவர்களும் வாங்கிய பணத்துக்கு வஞ்சகம் செய்யாமல் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறிதரன், சரவணபவன் ஆகியோர் மீது சரமாரியான கேள்விக்கணைகளைத் தொடுத்தனர்.
“ இவ்வளவு நாளும் எங்கே போயிருந்தீர்கள்? உங்களுக்கு அழைப்பு அனுப்பியது யார்?” என்பன போன்ற கேள்விகளால் சற்றும் அசராத அவர்கள் “ தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பன்முகப்படுத்தப் பட்ட நிதியில் இருந்து 3.5 கோடி ரூபாய்கள் கோப்பாய் பகுதி அபிவிருத்திக்கென வழங்கப்பட்டுள்ளது.எனவே அந்த நிதி சரியான் வகையில் பயன்படுத்தப்பட்டுள்ளதா? என்பதை அறியவே இங்கு வந்துள்ளோம்” என சிறிதரன் எம்.பி பதிலளிக்க, கூலிக்கு மாரடித்தவர்களின் வாயடைத்துப் போனது.
கூட்டம் முடிந்த பின்னர் கூட்டமைப்பு எம்.பிக்கள் மீது வசைபாடியவர்கள் கோப்பாய் பிரதேச ஈ.பி.டி.பி பொறுப்பாளர் ஐங்கரன் என்பரால் ஒழுங்கு செய்யப்பட்ட ஓட்டோவில் ஏறி ஒய்யாரமாகச் சென்று மறைந்தனர்.
தன்னுடைய வாக்கு வங்கியைத் தக்க வைப்பதற்காக எந்தவொரு இழிசெயலிலும் இறங்க அமைச்சர் டக்ளஸ் தயங்கமாட்டார் என்பதையே இச்சம்பவம் வெளிப்படுத்துவதாக கூட்டத்தில் கலந்து கொண்ட அதிகாரிகளும், புத்திஜீவிகளும் கருத்து தெரிவித்தனர்.

Geen opmerkingen:

Een reactie posten