தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 7 april 2011

ஐரோப்பாவை(அமெரிக்கா) எதிர்த்தால் அடக்கும் யுத்தம் ஆரம்பிக்கும்,நியாயம் சொல்ல ஐக்கிய நாடுகள் சபை துணை நிற்கும்!!

நேட்டோ இராணுவம் ஐவரிகோஸ்டில் தாக்குதலை ஆரம்பித்துள்ளது
[ செவ்வாய்க்கிழமை, 05 ஏப்ரல் 2011, 11:35.00 மு.ப GMT ]
ஐவரிகோஸ்ட் ஜனாதிபதி லோரண்ட் கபகோவின் இராணுவ முகாம்களை இலக்கு வைத்து நேற்றைய தினம் ஐக்கிய நாடுள் மற்றும் பிரான்சியப் படைகள் தாக்குதல் தொடுத்துள்ளன.
பிரான்சின் ஹெலிகொப்டர்கள் அப்பிரதேசங்களில் தாழ்வாகப் பறந்து குண்டுகளை வீசியதாக பன்னாட்டுச் செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதன் போது ஜனாதிபதியின் மாளிகையும் இலக்கு வைக்கப்பட்டுத் தாக்கப்பட்டுள்ளது. கபகோவின் படைகள் அந்நாட்டு சிவிலியன்களை இலக்கு வைத்துத் தாக்குதல் மேற்கொள்வதைத் தடுப்பதற்காகவே தாம் தாக்குதல்களை மேற்கொண்டதாக நேட்டோ படைகள் தெரிவிக்கின்றன.

தற்போதைய நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் அலஸ் சென் அவுட்டாரா தலைமையிலான கிளர்ச்சியாளர்கள் ஐவரிகோஸ்டின் தலைநகரைக் கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டிருக்க, சர்வதேசப் படைகள் அவர்களுக்கு ஆதரவளித்து வருகின்றன.

இரு தரப்பினருக்கும் இடையிலான மோதல்களின் போது இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிவிலியன்கள் கொல்லப்பட்டுள்ளதாக நிவாரணப் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Geen opmerkingen:

Een reactie posten