தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 14 april 2011

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது பொதுமக்களின் இலக்குகள் மீது தாக்குதல் நடத்தியமைக்கு செய்மதி படங்கள் சான்று! அமெரிக்க இணையத்தளம்

[ வியாழக்கிழமை, 14 ஏப்ரல் 2011, 02:19.16 PM GMT ]
இலங்கை வன்னியில் இடம்பெற்ற இறுதியுத்தத்தின் போது இலங்கைப்படையினர் வன்னியில் பொதுமக்கள் இலக்குகள் மீது தாக்குதல் நடத்தியமைக்கு மற்றும் ஒரு சான்று கிடைத்துள்ளது. தெ கிரிஸ்டியன் சயன்ஸ் மொனிடர்ஸ் என்ற இணையத்தளம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
எனினும் இந்த செய்மதி படங்களின் மூலம் பொதுமக்களின் சடலங்களை தெளிவாக காட்டமுடியவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்க வாசிங்டனில் அமைந்துள்ள AAAS எனப்படும் American Association for the Advancement of science  நிறுவனத்தின் புவியியல் ஆய்வாளரான புரொம்லி என்பவர், இலங்கையின் இறுதி யுத்தத்தின் போது செய்மதிகளின் மூலம் யுத்த நிலவரங்களை சேகரித்துள்ளார்.
சுமார் 15 மணித்தியாலங்களாக இந்த தகவல்கள் மூலம் வன்னியில் ஏற்கனவே பொதுமக்கள் ஒன்றுகூடிய இடங்கள், தமிழீழ விடுதலைப்புலிகளின் மயானங்கள, பொதுக்கட்டிடங்கள் என்பவற்றின் மீது இலங்கைப் படையினர் தாக்குதல் நடததியமையை அவதானிக்க முடிகிறது.
இந்தநிலையில் செய்மதி படங்களின் மூலம் இலங்கைப் படையினர் பொதுமக்கள் பாதுகாப்பு வலயங்களின் மீதே தாக்குதல் நடத்தியதாக நம்புவதாக புரொம்லி குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை தமது படையினர் பொதுமக்கள் மீது தாக்குதல்களை நடத்தவில்லை என்று இலங்கை அரசாங்கம் மறுப்பு வெளியிட்டு வருகிறது.
எனினும் புதிய தொழில்நுட்பங்களின் மூலம் இதனை ஒப்புவிக்க முடியும் என்று தெ கிரிஸ்டியன் சயன்ஸ் மொனிடர்ஸ் என்ற இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.

Geen opmerkingen:

Een reactie posten