[ சனிக்கிழமை, 10 டிசெம்பர் 2011, 03:03.20 AM GMT ]
திருகோணமலை மாவட்டத்திலுள்ள கந்தளாய்க் கோயிற் கிராமம் 1950 ம் ஆண்டிற்கு முன் தமிழ்க் கிராமமாக இருந்துள்ளது. 1952 ஆம் ஆண்டிற்கு பின் சிங்களக் குடியேற்றம் ஆரம்பிக்கப்பட்டடு அது சிங்களக் கிராமமாக மாற்றப்பட்டது என திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பிரதியமைச்சருமான கே.டி.எஸ்.குணவர்த்தன தெரிவித்தார்.
திருகோணமலை மாவட்ட பல்வேறு அபிவிருத்தி சம்பந்தமாக அரசாங்க அதிபர் காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே பிரதியமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
ஊடகவியலாளர்களுக்காக நடாத்தப்படும் இம் மாநாட்டில் எனது அனுபவ ரீதியான தனிப்பட்ட கருத்தைத் தெரிவிக்கின்றேன்.
1952 ம் ஆண்டிற்குப் பின்னரே திருகோணமலை மாவட்டத்தில் சிங்களக் குடியேற்றங்கள் ஆரம்பிக்கப்பட்டன.
கந்தளாய் போன்ற பாரம்பரியக் கிராமங்களில் சிங்களக் குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டதன் காரணமாக கந்தளாயிலுள்ள கோயிற் கிராமம் என்னும் தமிழ்க் கிராமத்தில் ஏனைய சமூகங்கள் குடியேறியது.
இதுபோல மாவட்டத்திலுள்ள வேறு கிராமங்களிலும் குடியேற்றங்கள் நடைபெற்றன.
கோமரங்கடவல என்ற கிராமம் சிங்களப் பிரதேசமாக விளங்கியது. அன்று சகோதரர்கள் போல் மூவின மக்களும் வாழ்ந்தார்கள்.
பொதுமக்கள் ஐக்கியமாகவும் ஒன்றாகவும் வாழ்ந்தார்கள். இனவாதிகள் பிரச்சினைகளை உருவாக்கினார்கள் மக்களிடையே வேற்றுமையும் பிரிவும் ஏற்பட்டன. இதன் காரணமாக இந்த மாவட்டத்தின் கல்வி, சுகாதாரம் ஏனைய அபிவிருத்திகள் குன்றத் தொடங்கின.
எனவே ஒரு சில இனவாதிகளால் பிரபாகரன் துவக்குத் தூக்கினார். சிங்கள மக்களுக்கு எதிராக தூக்கப்பட்ட துவக்குக் காரணமாக எல்லாச் சிங்களக் கிராமங்களும் தாக்கப்பட்டன.
பெருந்தொகையான கிராம மக்கள் தாம் குடியிருந்த கிராமங்களை விட்டு வெளியேறினார்கள். மூன்று இனத்தைச் சேர்ந்தவர்களும் உயிரைப் பலி கொடுத்தார்கள்.
எனவே சிங்களவன் என்ற வகையில் நான் குற்றம் சுமத்தப் போவதில்லை. 1971 ஆம் ஆண்டு தொடக்கம் 1979 ஆம் ஆண்டுவரை பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங் கொடுத்தோம்.
புலிகளினால் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டார்கள். அதற்காக தமிழ் சமூகத்தின் மீது குற்றம் சுமத்த முடியாது. பொறுப்பாக இருந்தவர்கள் மீது தான் நாம் குற்றம் சுமத்துகிறோம்.

Geen opmerkingen:
Een reactie posten