தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 18 december 2011

பயம் காரணமாக அமெரிக்காவில் தனக்கு வாதாட வக்கீலை நியமித்தார் மகிந்தர் !

அமெரிக்காவில் 3 தமிழர்கள் மகிந்தருக்கு எதிராக வழக்கு ஒன்றைத் தொடர்ந்தனர். இன அழிப்புக்கான தமிழர் அமைப்பு(TAG) இதற்கு பெரும் துணையாக இருந்தது. தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதி மகிந்தருக்கு அழைப்பாணை அனுப்பினார். ஆனால் மகிந்தரோ அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. அமெரிக்க சட்ட முறைப்படி குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு அழைப்பாணை கட்டாயம் சென்றடையவேண்டும். அவ்வாறு அது சென்றடையவில்லை என்றால் அந்த வழக்கு தள்ளுபடியாகும். இந்த நிலையில் கொழும்பில் இருந்து வெளிவரும் ஒரு ஆங்கிலப் பத்திரிகையிலும் மற்றும் தமிழ் நெட் இணையமூடாகவும் மகிந்தருக்கான அழைப்பாணை பிரசுரிக்கப்பட்டது. இப் பிரசுரங்களை அமெரிக்க நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது. அதாவது மகிந்தருக்கு இந்த அழைப்பாணை கிடைக்கப்பெற்றுள்ளது அல்லது அறிவிக்கப்பட்டுள்ளது என்பதனை நீதிமன்றம் ஏற்றுகொண்டுள்ளது.

இதன் அடிப்படையில் இந்த வழக்கு அடுத்த கட்ட நகர்விற்குச் சென்றுள்ளது. இதனை இரகசியமாக அறிந்த மகிந்தர் தனது சார்பில் வாதாட தற்போது ஒரு வக்கீலை நியமித்துள்ளார் என அதிர்வு இணையம் அறிகிறது. இதுவே வழக்கு தொடுத்த 3 தமிழர்களுக்கும் ஏன் உலகத் தமிழர்கள் அனைவருக்கும் கிடைத்திருக்கும் முதல் வெற்றியாகும். தான் மெளனமாக இருந்தால் வழக்கின் தீர்ப்பு தனக்கு பாதகமாகச் செல்லும் என்பதால் நீதிமன்றில் வாதாட மகிந்தர் ஒரு வக்கீலை களமிறக்கியுள்ளார். "மிச்செல். ஆர். பேர்கர்" என்ற வழக்கறிஞர் தற்போது மகிந்தரால் நியமிக்கப்பட்டுள்ளார். திரு.பேர்கர் அவர்கள் ஒரு மனுவைத் தாக்கல் செய்துள்ளார். அதில் தமது தரப்பிற்கு மேலதிக நேரம் தேவைப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இருப்பினும் இதனை நீதிபதி ஏற்பாரா என்பது சந்தேகமே என தமிழர்களுக்கா வாதாடும் மூத்த வழக்கறிஞர் புரூஸ் பெஃயின் தெரிவித்துள்ளார்.

எது எவ்வாறு இருப்பினும் அமெரிக்க நீதிமன்றம் தனக்கு எதிராக தீர்ப்புச் செல்லிவிடும் என்ற பயம் காரணமாகவே மகிந்தர் தற்போது ஒரு வக்கீலை நியமித்துள்ளார் என்பது வெட்டவெளிச்சமாகியுள்ளது. இந்த வழக்கில் மகிந்தர் குற்றவாளியாக இனங்காணப்பட்டாலும் அவர் கைதுசெய்யப்படமாட்டார். ஏன் எனில் இது ஒரு நஷ்ட ஈடு வழக்காகும். மகிந்தர் குற்றவாளியாக இனங்காணப்பட்டால் 3 தமிழர்களும் கோரியுள்ள நஷ்ட ஈட்டுத்தொகையை அவர் கட்ட நேரிடும். இல்லாது போனால் அவர் அமெரிக்கா வரமுடியாத நிலை தோன்றும். அவர் ஒரு நாட்டின் அதிபர் அந்த வகையில் அவருக்கு வெளிநாடுகளில் இருக்கும் சிறப்பு அதிகாரங்கள் இன்னமும் இருக்கின்றன. ஆனால் இது கைதுசெய்யும் விடையம் இல்லையே ! காசு சம்பந்தப்பட்ட விடையமாச்சே. எனவே அவருக்கு விசா வழங்குவதில் பிரச்சனை தோண்ற வாய்ப்புகள் இருப்பதாவும் சொல்லப்படுகிறது.

மொத்தத்தில் அமெரிக்காவில் உள்ள 3 தமிழர்கள் தொடுத்த வழக்கு மகிந்தருக்கு சிம்மசொப்பனமாக அமைந்துள்ளது.

Geen opmerkingen:

Een reactie posten