சர்வதேச மனிதாபிமானச் சட்டம் தொடர்பான விடயங்களில் தவறிழைத்தது பற்றிய முறைப்பாடுகள் தொடர்பான இலங்கையின் அனுபவத்தை பகுப்பாய்வு செய்யும்போது இராணுவச் செயற்பாடுகளைக் கையாண்ட, எல்.ரி.ரி.ஈ. யின் அதிகாரத்தில் இருந்த பிரதேசங்களை மிகவும் அவதானமாக கைப்பற்றுவதற்கு எடுத்த செயற்றிறன் குறித்து ஆணைக்குழு திருப்தி அடைகிறது.
இந்தச் செயற்பாட்டின்போது பொது மக்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் விடயம் அதி உன்னத நிலையில் முன்னுரிமை அளிக்கப்பட்டது.
இது தொடர்பாக ஆணைக்குழு யுத்தம் முடிவடையும் கடைசி கட்டத்தில் பாதுகாப்பு படையினர் தங்கள் யுத்த நடவடிக்கைகளை வேண்டுமென்றே மெதுவாக மேற்கொண்டதையும் தங்களால் அவதானிக்க முடிந்தது என்றும்,
அதன் மூலம் பொதுமக்கள் காயமடைவதையோ, உயிரிழப்பதையோ தடுப்பதற்கான யுக்திகளை மிகவும் கவனமாக கையாண்டமையையும் அல்லது பொது மக்களின் உயிரிழப்பு, காயமடைவதை ஆகக் குறைந்த மட்டத்தில் வைத்திருப்பதிலும் அவதானமாக இருந்தது என்பதனையும் புரிந்து கொள்ள முடிந்தது என்று ஆணைக்குழு தெரிவிக்கின்றது.
இந்த விடயங்களை அவதானிக்குமிடத்து இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது பொது மக்களின் உயிரைப் பாதுகாப்பது பிரதான காரணியாக வைத்து அதற்கான கொள்கை வகுக்கப்பட்டு அது தொடர்ந்தும் கடைப்பிடிக்கப்பட்டதை எடுத்துக் காட்டுகிறது. வேண்டுமென்றே பொது மக்களை இலக்கு வைத்து மேற்கொள்ளும் செயற்பாடுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதுமிந்தக் கொள்கையின் ஓர் அங்கமாக இருந்தது.
சகல தகவல்களையும் சந்தர்ப்பங்களையும் நன்கு அவதானித்த பின்னர் ஆணைக்குழு யுத்த சூன்ய பிரதேசங்களில் பொது மக்கள் துப்பாக்கி பிரயோகங்களின் போது காயமடைந்து அல்லது உயிரிழப்பை எதிர்நோக்கியிருந்தாலும் ஆயுதப் படையினர் பொது மக்களை இலக்கு வைத்து செயற்படவில்லை என்ற தீர்மானத்திற்கு வந்துள்ளது.
ஆயினும் எல்.ரி.ரி.ஈ யினர் பொது மக்களை இலக்கு வைத்து அவர்கள் யுத்தம் நடக்கும் பிரதேசங்களிலிருந்து தப்பிச் செல்வதற்கு எத்தனித்த போது சுட்டுக் கொன்றமையும் மற்றும் தரைக் கண்ணி வெடிகளினால் பொது மக்கள் மரணத்தைத் தழுவியதுடன் காயமடைந்தமையும் நந்திக் கடல் ஏரியைக் கடந்து தப்பிச்செல்லும் பதற்ற நிலையில் பொது மக்கள் பாதிப்பிற்குள்ளானமையும் ஏற்றுக் கொள்ளக் கூடிய விடயமாகும்.
மேற்படி தீர்மானங்களைச் செய்துகொண்ட ஆணைக்குழு ஆயுதப்படையினர் வேண்டுமென்றே பொது மக்களை இலக்கு வைத்துத் தாக்கவில்லை என்பதையும், எல்.ரி.ரி.ஈ. யினரின் தாக்குதலுக்கு எதிராக யுத்த சூன்யப் பிரதேசத்தின் மீது ஆயுதப் படையினர் எதிர்த் தாக்குதலை மேற்கொண்டது மட்டுப்படுத்தப்பட்ட இராணுவத் தாக்குதல் என்ற கொள்கைக்கு சற்று கூடுதலாக கையாளப்பட்டதா என்பதையும் நாம் அவதானித்தோம்.
இது குறித்து ஆணைக்குழுவின் முன்னர் சமர்பிக்கப்பட்ட தகவல்களை மிகவும் கவனமாக சகல அம்சங்களையும் அவதானித்துப் பார்த்த பின்னர் ஆயுதப் படையினர் என்றுமே நடக்காத ஒரு சூழ்நிலையை எதிர்நோக்க வேண்டியிருந்ததனால் சகலவிதமான பாதுகாப்புச் செயற்பாடுகளையும் மேற்கொள்வதற்கு வேறு எந்தவொரு வாய்ப்பும் அவர்களுக்கு அன்றைய சூழ்நிலையில் இருக்கவில்லையென்றே நாம் கருதுகிறோம்.
இந்த சந்தர்ப்பத்தில் இராணுவ நடவடிக்கையின்போது ஏற்படும் மரணங்கள், காயமடைதல் அல்லது சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுதல் போன்றவற்றிற்கு அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் என்பதையும் நாம் அவதானிப்பது பொருத்தமாக இருந்தது.
சர்வதேச நீதிமன்றங்கள் கொள்கை சார்புடைய அதிகார பீடங்கள் பற்றிக் குறிப்பிடுகையில், இது எதுவுமே செய்ய முடியாத நிலைக்கு அடுத்தது என்று குறிப்பிட்டு யுத்த முனையில் இடம்பெற்ற சகல நிகழ்வுகளையும் நீதிமன்றத்தின் முன் அன்றைய சூழ்நிலையையும் சுட்டிக்காட்டி அங்கு நிலவிய நடவடிக்கைகள் பற்றி போதியளவு தகவல்களை முன்வைப்பதன் மூலமே உண்மையில் என்ன நடந்தது என்பதைத் தெரிந்து கொள்ள முடியும்.
பொது மக்கள் மரணமடைந்தமை குறித்து ஆணைக்குழுவில் செய்யப்பட்ட முறைப்பாடுகள் குறித்தும் நடந்தது என்ன என்பதை தகவல்கள், நிகழ்வுகளை ஒன்று சேர்த்து பார்ப்பதிலும் ஆணைக்குழு இது போன்ற கஷ்டங்களை எதிர்நோக்கியது. எந்தச் சூழ்நிலையில் இத்தகைய சம்பவங்கள் இடம்பெற்றன என்பதை இனம் காண்பதிலும் ஆணைக்குழு கஷ்டத்தை எதிர்நோக்கியது.
கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை அடிப்படையாக வைத்துப் பார்க்குமிடத்து பொது மக்களின் மரணம் அல்லது காயமடைதல் சம்பவங்களில் பாதுகாப்பு படையினருக்கும் தொடர்பு இருக்கின்றது என்ற குற்றம் சுமத்தப்டுகிறது.
சில சந்தர்ப்பங்களில் பாதுகாப்பு படையினர் வேண்டுமென்றே இந்த நிகழ்வுகளுக்குப் பொறுப்பாக இல்லாமலும் இருந்திருக்கலாம். அவர்கள் பொது மக்களுக்கு தீங்கிழைக்கும் எண்ணத்துடன் இவ்விதம் நடந்து கொள்ளாமலும் இருந்திருக்கலாம். இத்தகைய சூழ்நிலையில் நடந்த உண்மைகளை சரியாகத் தெரிந்து கொள்வது அரசாங்கத்தின் கடமை என்று சுட்டிக்காட்டுகிறது.
எத்தகைய சூழ்நிலையில் இந்தச் சம்பவங்கள் இடம்பெற்றன என்பதையும் தெரிந்து கொண்டு அந்த விசாரணைகள் ஆயுத படையினர் தவறிழைத்து விட்டார்கள் என்பதை வெளிப்படுத்தினால் இவ்விதம் தவறிழைத்தவர்களுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்து அவர்களைத் தண்டிப்பதும் அரசாங்கத்தின் பொறுப்பாகும்.
மனிதாபிமான நல்லெண்ணத்தை வெளிப்படுத்துவதற்காக மரணமடைந்தவர்களின் அல்லது காயமடைந்தவர்களின் இரத்த உறவுகளுக்கு பொருத்தமான நிவாரணங்களை பெற்றுக் கொடுப்பது அவசியம். இதனால் தங்களுக்கு ஏற்பட்ட தனிப்பட்ட இழப்பினால் பாதிப்பிற்குள்ளானவர்களுக்கு மன ஆறுதலை அளிப்பதாகவும் அமையும்.
சகல சூழ்நிலைகளையும் அவதானமாக பரிசீலனைக்கு எடுத்துக் கொண்ட பின்னர் ஷெல் வெடிகள் ஆஸ்பத்திகள் மீது விழுந்து அவற்றிற்குச் சேதம் விளைவித்தமை மற்றும் அங்குள்ளவர்களை மரணிக்கச் செய்தமை அல்லது காயமடையச் செய்தமை போன்ற நிகழ்வுகள் குறித்து ஆணைக்குழு தெரிந்து கொண்டது.
ஆயினும் ஆணைக்குவின் முன் சமர்ப்பிக்கப்பட்ட தகவல்கள் நடந்த சம்பவங்கள் குறித்து ஓரளவு குழப்ப நிலையை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளன. இந்தத் தகவல்களின் படி எந்நேரத்தில் எவ்விடத்தில் எந்த திசையில் இருந்து ஷெல் தாக்கியது என்பதை சரியாக கூற முடியாதிருக்கிறது.
இத்தகைய பின்னணியில் வலுவான சாட்சியத்தின் மூலம் எவர் இந்தச் செயற்பாடுகளுக்கு பொறுப்பாக இருந்தார்கள் என்று தீர்மானம் எடுப்பது ஒரு பெரும் சவாலாக அமைந்துள்ளது. ஆணைக்குழு இதுபற்றித் தீர்மானம் எடுப்பதற்கு இரண்டு நிலைப்பாடுகள் கஷ்ட நிலையை ஏற்படுத்துகின்றன.
இத்தகைய நிகழ்வுகள் குறித்து உடனடி விசாரணைகள் மேற்கொள்ளப்படாத நிலையில் மோதலின் தாக்கம் மற்றும் எந்தெந்த பகுதிகளில் அவை ஏற்பட்டன என்பன பற்றியும் தெரிந்து கொள்வது அவசியமாக இருக்கின்றது.
எங்கள் முன் வந்து முறைப்பாடு செய்தவர்களில் ஒருவர் கூட ஷெல் வெடிகள் ஆஸ்பத்தியில் வந்து விழுந்ததை அவை இலங்கை இராணுவ தரப்பில் இருந்தா அல்லது எல்.ரி.ரி.ஈ. தரப்பில் இருந்தா வந்தது குறித்து தெளிவான நிலைப்பாட்டை எடுத்துரைக்கவில்லை.
ஆணைக்குழுவின் முன்னர் ஆஜரான பொது மக்கள் இரு தரப்பில் இருந்தும் ஷெல் வெடிகள் வந்து விழுந்தன என்று கூறுகிறார்கள்.
எப்போதாவது ஒரு ஷெல் வந்து விழுந்தால் மக்கள் இராணுவத்தினர் அடித்த ஷெல் என்று நினைப்பார்கள் என்றும் அந்தக் கருத்தைச் சரியாக வலியுறுத்த முடியாதென்றும் ஒரு சிவிலியன் கூறினார்.
முன்னர் எல்.ரி.ரி.ஈ. இயக்கத்தைச் சேர்ந்த ஒருவர் அளித்த வாக்குமூலத்தில் புதுமாத்தளன் ஆஸ்பத்திரியின் மீது எல்.ரி.ரி.ஈ. தவறுதலாக ஷெல் தாக்குதலை நடத்தியது என்றும் எல்.ரி.ரி.ஈ பின்னர் அதற்காக மன்னிப்பு கேட்டதாகவும் கூறினார்.
ஆஸ்பத்திரிகளுக்கு ஷெல் தாக்குதல்களை மேற்கொண்டு உயிரிழப்புகளுக்கும் கட்டிடங்களுக்கு சேதத்தை ஏற்படுத்துவதற்கும் பொறுப்பாக இருந்தவர்கள் யார் என்பதை திட்டவட்டமாக தீர்மானிப்பதற்கும் கஷ்டமாக இருந்தது. தேவையான அளவு பூர்வாங்க சாட்சியங்கள் நடந்த நிகழ்வுகளை எடுத்துக் காட்டுவதற்கு இல்லாதிருந்ததே இதற்கு காரணமாகும்.
அத்துடன் பொது மக்களும் திட்டவட்டமாக இது பற்றி சாட்சியங்களை அழிக்கமுடியாத நிலையில் இருந்தனர். எனவே, இந்தத் தரப்பினர் அல்லது மற்றத் தரப்பினர் ஷெல் தாக்குதலுக்கு பொறுப்பாக இருந்தார்கள் என்று கூறுவதற்கு இயலாதிருக்கிறது.
ஷெல் தாக்குதலுக்கு இந்த தரப்பினர் அல்லது மற்றத் தரப்பினர் பொறுப்பாக இருந்தார்கள் என்று திட்டவட்டமாக தீர்மானிக்க முடியாத நிலை ஆணைக்குழுவுக்கு இருந்தாலும் பொது மக்கள் ஆணைக்குழுவின் முன்னர் சமர்ப்பித்த சாட்சியங்களின் மூலம் ஷெல் வெடிகள் ஆஸ்பத்திரிகள் மீது விழுந்து ஆஸ்பத்திரிகளுக்கு சேதம் ஏற்படுத்தியதுடன் சில சந்தர்ப்பங்களில் சிவிலியன் மக்கள் காயமடைந்து, மரணமடைந்து இருக்கிறார்கள் என்பதும் புலனாகிறது.
எனவே இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விசாரணை செய்து முடித்த பின்னர் பொருத்தமான அளவு நிவாரணத்தை மனிதாபிமான அடிப்படையில் வழங்க வேண்டும். இத்தகைய செயற்பாட்டை அரசாங்கம் எடுத்தால் நல்லிணக்கப்பாட்டு நடைமுறை மீது மக்களுக்கு நம்பிக்கை ஊட்டுவதாக அமையும்.
இவ்வாறு நல்லிணக்க ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
அறிக்கையின் முழுவடிவம்
இராணுவம் குற்றமற்றது நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை திட்டவட்டம்
இறுதிப் போரின் போது இடம்பெற்ற போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு இராணுவத்தின் மீது குற்றம் சுமத்த முடியாது என்று திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கிறது, ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட நல்லிணக்கத்துக்கான படிப்பினைகள் ஆணைக்குழு.
படையினர் சிலரால் சில சம்பவங்கள் இடம்பெற்றிருக்கக்கூடும் என்றாலும் அதற்காக ஒட்டுமொத்த இராணுவத்தையும் குற்றச்சாட்டுக்கு உள்ளாக்க முடியாது என்று தனது 400 பக்க அறிக்கையில் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
ஆணைக்குழுவின் அறிக்கை நேற்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அறிக்கையைச் சபையில் சமர்ப்பித்து உரையாற்றினார்.
அறிக்கையில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீது தெளிவான பல குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. அதேவேளை, சர்வதேச சமூகத்தால் இலங்கைப் படையினருக்கு எதிராக எழுப்பப்படும் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களுக்குப் பதிலளிக்கும் விதத்தில் அறிக்கையின் அவதானிப்புக்கள் மற்றும் பரிந்துரைகளின் சுருக்கம் அமைந்துள்ளது.
குறிப்பாக ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கையில் படையினர் மேற்கொண்டனர் என்று நம்பக்கூடிய குற்றச்சாட்டுக்களாகக் குறிப்பிடப்பட்ட மருத்துவமனைகள் மீதான ஷெல் தாக்குதல், பாதுகாப்பு வலயங்கள் மீதான ஷெல் தாக்குதல், உணவு மற்றும் மருந்துப் பொருள்களைப் போதியளவில் அனுப்பாமை, பொதுமக்களுக்கு அதிக உயிரிழப்புக்களை ஏற்படுத்தியமை, இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டவர்கள் காணாமற்போனமை, சரணடைந்தவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டமை ஆகிய குற்றச்சாட்டுக்களுக்கு அறிக்கையில் விரிவாகப் பதிலளிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் உயிரிழப்பு
இறுதிப் போரில் பொதுமக்களின் உயிர்கள் கணிசமான அளவில் இழக்கப்பட்டன என்பதை அறிக்கை ஒப்புக்கொண்டுள்ளது. எனினும் பொதுமக்களுக்கு ஏற்படக்கூடிய இழப்புக்களைத் தவிர்ப்பதற்கான கொள்கையை வகுத்து அதன்படி அரசும் அரச படையினரும் செயற்பட்டனர் என்று அறிக்கை கூறுகின்றது.
"பொதுமக்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் விடயத்தில் அதி உன்னத நிலையில் முன்னுரிமை அளிக்கப்பட்டது. இதற்காக போர் முடிவடையும் கடைசிக் கட்டத்தில் இராணுவத்தினர் வேண்டுமென்றே படை நடவடிக்கைகளை மெதுவாக மேற்கொண்டுள்ளனர் என்பதை ஆணைக்குழுவால் அவதானிக்க முடிந்துள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் காயமடைவதையோ உயிரிழப்பதையோ தடுப்பதற்கான உத்திகளைப் படையினர் மிகக் கவனமாகக் கையாண்டமை அல்லது பொதுமக்களின் உயிரிழப்புகளையும் காயமடைவதையும் ஆகக் குறைந்த மட்டத்தில் வைத்திருப்பதில் அவதானமாக இருந்தமையைப் புரிந்துகொள்ள முடிகிறது" என்று அறிக்கை கூறுகின்றது.
பாதுகாப்பு வலயங்கள் மீதான தாக்குதல்
பாதுகாப்பு வலயங்களில் பொதுமக்களுக்கு உயிர் இழப்புக்களும் காயங்களும் ஏற்பட்டிருந்தாலும் படையினர் பொதுமக்களை இலக்கு வைத்துச் செயற்படவே இல்லை என்று ஆணைக்குழு திட்டவட்டமாகத் தீர்மானித்துள்ளது. அத்தகைய பாதுகாப்பு வலயங்களில் இருந்து இராணுவப் பகுதிகளுக்குத் தப்பிச் செல்ல முயன்ற பொதுமக்களை புலிகள்தான் சுட்டுக்கொன்றார்கள் என்றும் அறிக்கை கூறுகின்றது. அதேசமயம், புலிகளின் நிலைகளைத் தாக்கி அழிக்கும் நோக்கத்துடன் செயற்பட்ட இராணுவத்தினருக்குப் பொதுமக்களைக் கொல்லும் நோக்கம் எதுவும் இருக்கவில்லை என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"ஆணைக்குழு, ஆயுதப் படையினர் வேண்டுமென்றே பொதுமக்களை இலக்கு வைத்துத் தாக்கவில்லை என்பதையும் புலிகளின் தாக்குதலுக்கு எதிராகப் பாதுகாப்பு வலயங்கள் மீது படையினர் எதிர்த் தாக்குதலை மேற்கொண்டமை, மட்டுப்படுத்தப்பட்ட இராணுவத் தாக்குதல் என்ற கொள்கைக்குச் சற்றுக் கூடுதலாகக் கையாளப்பட்டதா என்பதையும் அவதானித்தது.
இது குறித்து ஆணைக்குழுவின் முன்னர் சமர்ப்பிக்கப்பட்ட தகவல்கள் மிகவும் கவனமாக சகல அம்சங்களையும் அவதானித்துப் பார்த்த பின்னர் ஆயுதப் படையினர் என்றுமே நடக்காத ஒரு சூழ்நிலையை எதிர்நோக்க வேண்டியிருந்ததனால் சகலவிதமான பாதுகாப்புச் செயற்பாடுகளையும் மேற்கொள்வதற்கு வேறு எந்தவொரு வாய்ப்பும் அவர்களுக்கு அன்றைய சூழ்நிலையில் இருக்கவில்லை என்றே குழு கருதுகின்றது" என்று கூறும் அறிக்கை அங்கு நடந்தது என்ன என்பதை உண்மையில் அறிய நீதிமன்ற விசாரணை நடத்தவேண்டும் என்றும் கூறியிருக்கிறது.
படையினரின் குற்றம்
பொதுமக்கள் உயிரிழந்தமை மற்றும் காயமடைந்தமைக்கு இராணுவத்தினர் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுத் தொடர்பாகக் கருத்துத் தெரிவித்திருக்கும் அறிக்கை "சில சந்தர்ப்பங்களில் பாதுகாப்புப் படையினர் வேண்டும் என்றே இந்த நிகழ்வுகளுக்குப் பொறுப்பாக இல்லாமலும் இருந்திருக்கலாம். அவர்கள் பொதுமக்களுக்குத் தீங்கிழைக்கும் எண்ணத்துடன் இவ்விதம் நடந்து கொள்ளாமலும் இருந்திருக்கலாம்" என்று தெரிவித்திருக்கிறது.
இந்தக் குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணை நடத்தி அதில் எவராவது குற்றம் இழைத்துள்ளார்கள் என்று நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்து தண்டனை வழங்குவது அரசின் கடமை என்று ஆணைக்குழு சுட்டிக்காட்டி உள்ளது.
மருத்துவமனைகள் மீதான தாக்குதல்
இறுதிச் சண்டைகளின்போது மருத்துவமனைகள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டன என்பதை ஆணைக்குழு ஏற்றுக் கொண்டுள்ளது. எனினும் அந்தத் தாக்குதலை புலிகளா படையினரா மேற்கொண்டனர் என்பதை தெளிவுபடுத்த முடியாத இக்கட்டு இருப்பதாகவும் கூறுகின்றது. ஆணைக்குழு முன் சமர்ப்பிக்கப்பட்ட தகவல்கள் நடந்த சம்பவங்கள் குறித்து குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறும் அறிக்கை "இத்தகைய பின்னணியில் வலுவான சாட்சியத்தின் மூலம் எவர் இந்தச் செயற்பாடுகளுக்குப் பொறுப்பாக இருந்தார்கள் என்று தீர்மானிப்பது பெரும் சவால்" என்றும் தெரிவித்துள்ளது.
இதற்கான முக்கிய காரணமாக சாட்சியமளித்தவர்கள் மருத்துவமனைகள் மீது வீழ்ந்து வெடித்த ஷெல்கள் இராணுவத்தினர் பக்கம் இருந்து வந்தனவா என்பதை எந்த ஒரு சாட்சியாலும் உறுதியாகத் தெரிவிக்க முடியவில்லை என்பதை அறிக்கை சுட்டிக்காட்டுகின்றது. புதுமாத்தளன் வைத்தியசாலை மீது ஒரு தடவை புலிகள் தவறுதலாக ஷெல் தாக்குதல் நடத்திவிட்டுப் பின்னர் மன்னிப்புக் கேட்டார்கள் என்று சாட்சியமளித்த முன்னாள் போராளி ஒருவர் தெரிவித்திருந்தார் என்பதும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மருந்து, உணவு தட்டுப்பாடு
2009 பெப்ரவரி மாதம் வரைக்கும் வன்னி மக்களுக்குத் தேவையான உணவு மற்றும் மருந்துப் பொருள்கள் அனுப்பப்பட்டன என்று கூறும் அறிக்கை, பெப்ரவரி, மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதத்தின் அரைவாசிக் காலத்தில் மட்டுமே உணவு, மருந்து விநியோகம் குறைவாக இருந்தது என்று குறிப்பிடுகிறது.
ஆபத்தான சூழல், உணவு மற்றும் மருந்து அனுப்புவதில் இருந்த கஷ்டங்கள், புலிகள் உணவை அபகரிக்கும் நிலைமை என்பவற்றுக்கு மத்தியிலும் அரசு சிறப்பாக மக்களுக்கு அவற்றை வழங்கி வந்தது என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மக்கள் தொகை மதிப்பீடு
போர்ப் பகுதிக்குள் சிக்கிக் கொண்ட மக்களின் எண்ணிக்கையை அரசு ஒருபோதும் குறைத்து மதிப்பிடவே இல்லை என்று அறிக்கை வாதாடுகிறது. "சர்வதேச அமைப்புக்களான ஐ.சி.ஆர்.சி, உலக உணவுத் திட்டம் என்பவற்றுடன் இணைந்து அரசு மேற்கொண்ட முயற்சிகளை அவதானிக்கும்போது பாதுகாப்பு வலயத்தில் சிக்கியிருந்த பொதுமக்களின் எண்ணிக்கையை குறைவாக மதிப்பீடு செய்வதற்கு அரசு முயற்சிக்கவில்லை என்பது ஆதாரபூர்வமாகப் புலனாகிறது. பொதுமக்களைப் பசிப்பிணியில் தத்தளிக்கச் செய்யும் இன்னுமொரு வகையான போரை அரசு முன்னெடுக்கவில்லை என்பதையும் இதன்மூலம் நாம் கண்டறிந்தோம்" என்று அறிக்கை கூறுகின்றது.
அதேவேளை, மருந்து விநியோகத்தில் பற்றாக்குறை ஏற்பட்டது என்பதை அறிக்கை ஏற்கிறது. எனினும் போர் நடக்கும் பகுதியில் இத்தகைய நிலை ஏற்படுவது சகஜமே என்று அறிக்கை அதனை நியாயப்படுத்தவும் செய்கிறது. எப்படி இருப்பினும் இது மருந்துப் பற்றாக்குறை குறித்து திட்டவட்டமாகக் கருத்துச் சொல்ல ஆணைக்குழுவுக்கு ஆதாரங்கள் போதவில்லை என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைதாகி காணாமற்போனோர்
படையினரிடம் சரணடைந்த பின்னர் காணாமல்போனவர்கள் தொடர்பில் அரசு விசாரணை நடத்த வேண்டும் என்று அறிக்கை கேட்டுள்ளது. இதுபற்றிய விசாரணையின் போது படையினர் எவராவது தவறிழைத்திருந்தால் அவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்து தண்டிக்க வேண்டும் என்றும் பரிந்துரை செய்துள்ளது. "ஒருசிலரின் தவறான செயற்பாட்டினால் இராணுவத்தின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்பட இடமளிக்கலாகாது" என்றும் அறிக்கை தெரிவிக்கிறது.
மற்றொரு ஆணைக்குழு
அரச படைகள் நல்ல முன்னுதாரண அடிப்படையில் செயற்பட்ட போதிலும் பெருமளவிலான காணாமற்போதல்கள், கடத்தப்படுதல் மற்றும் சட்ட விரோத தடுத்து வைப்புக்கள் இடம்பெற்றுள்ளதாக ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
இவை குறித்து விசாரிக்க காணாமற்போனவர்களுக்கான ஒரு சிறப்பு ஆணைக்குழு அமைக்கப்பட்டு, சூத்திரதாரிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் ஆணைக்குழு பரிந்துரைக்கிறது.
இந்த விவகாரங்கள் தொடர்பில் சாட்சியமளித்த சிலர் ஈ.பி. டி.பி, கருணா குழு, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் ஆகிய அமைப்புக்கள் மீது ஆள்கள் கடத்தப்பட்டமை குறித்து முறைப்பாடு செய்துள்ளதாகவும், ஆனால், அந்த அமைப்புக்கள் அவற்றை மறுத்துள்ளதாகவும் கூறியுள்ள ஆணைக்குழுவின் அறிக்கை, சட்டவிரோத ஆயுதக்குழுக்கள் குறித்த மேலதிக விசாரணைகள் தேவை என்றும் குறிப்பிட்டுள்ளது.
காணாமற் போனவர்களை கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும் என்றும், பயங்கரவதாத் தடுப்புச் சட்டத்தின் கீழ் நீதிமன்றங்களில் குற்றஞ் சுமத்தப்படாமல், பல வருடங்களாகத் தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்களின் விவகாரங்களை ஆராய சுயாதீன ஆலோசனைக்குழு ஒன்று நியமிக்கப்பட வேண்டும் என்றும் ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது.
பிரிட்டனின் சனல்4 தொலைக்காட்சியால் வெளியிடப்பட்ட இலங்கையின் கொலைக்களம் ஆவணப்படத்தின் நம்பகத்தன்மை குறித்து ஆணைக்குழு கேள்வி எழுப்பியுள்ளது.
போர்ச் சட்டங்களில் மாற்றம்
சர்வதேச போர்ச் சட்டங்கள் குறித்து தனது பரிந்துரையில் குறிப்பிட்டுள்ள நல்லிணக்க ஆணைக்குழு, தற்போதைய சர்வதேச மனித உரிமைச் சட்டங்கள், அரசுகளுக்கும், அரசு அல்லாத போராட்டக் குழுக்களுக்கும் இடையிலான போர்களுக்கு உகந்த வகையில் மறுசீரமைக்கப்பட வேண்டும் என்று குறிப்பட்டுள்ளது.
அரசு அல்லாத குழுக்கள் எந்த விதமான விதிகளையும் பின்பற்றாத காரணத்தால், அதற்கேற்றவாறு சர்வதேச சட்டங்களை மாற்றுவது தொடர்பில் சர்வதேச சமூகம் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அது கூறியுள்ளது.
இராணுவ தலையீடு
வடமாகாணத்தில் சிவில் நிர்வாக நடவடிக்கைகளில் இராணுவம் தலையீடு செய்வதாக அடிக்கடி வரும் குற்றச்சாட்டுக்கள் குறித்து கருத்துக் கூறியுள்ள ஆணைக்குழு, சிவில் நடவடிக்கைகளில் இராணுவத் தலையீடு இல்லாது செய்யப்பட வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது.
அதிகாரப் பகிர்வு தேவை
தமிழ் மக்கள் மத்தியில் காணப்படும் தற்போதைய "வன்செயல்கள், சந்தேகங்கள், தாம் பாரபட்சமாக நடத்தப்படுவதான உணர்வு" ஆகியவற்றை நீக்க, மக்களை மையமாகக் கொண்ட அதிகாரப் பகிர்வு முறைமை ஒன்று கொண்டுவரப்பட்டு, அதன் மூலம் உள்ளுராட்சி சபைகள் பலப்படுத்தப்பட வேண்டும். தற்போதைய மாகாண சபைகள் முறை திருத்தப்பட்டு, மத்தியில் அதிகாரம் பகிரப்பட வேண்டும் என்றும் நல்லிணக்க ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது.

Geen opmerkingen:
Een reactie posten