தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 28 november 2011

பிரித்தானியாவில் நடைபெற்ற மாவீரர் நாளில் பெருந்திரளான மக்கள்

[ ஞாயிற்றுக்கிழமை, 27 நவம்பர் 2011, 07:40.15 PM GMT ]
தமிழீழதேசத்தின் விடுதலைக்காக விதையாக வீழ்ந்த எமது தேசப்புதல்வர்களை நினைவு செய்யும் மாவீரர்நாள் பிரித்தானியாவில் ஆறு இடங்களில் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவினரால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
மண்டபங்கள் திறக்கப்பட்ட சிறிதுநேரத்திலேயே மண்டபங்கள் நிறைந்து மண்டபத்துக்கு வெளியிலும் மக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருந்து மாவீரர்களுக்கு மலர்வணக்கம் செய்தனர்.
மிகவும் உணர்வுமிகுந்ததாக இன்றைய நிகழ்வுகள் அமைந்திருந்தன.
தாயக விடுதலைக்காக தமது இனியஉயிர்களை அர்ப்பணித்த மாவீரர்களின் நினைவில் உருகி வணக்கம் செய்த மக்கள்மண்டபத்துக்கு வெளியில் காத்திருந்த பெருந்திரளான மக்களுக்கும் இடம் கொடுக்கும்விதத்தில் நகர்ந்துகொண்டே இருந்தது எல்லா மண்டபங்களிலும் காணக்கிடைத்தது.
மாவீரர் நாளில் தாயகத்தில் கடைப்பிடிக்கப்படும் நிகழ்வுகளின் வரிசைக்கிரமத்தில் இங்கும் நிகழ்வுகள் நடாத்தப்பட்டன.
மாவீரரை நினைத்து மணிகள் ஒலிக்க ஒரு கணம் மௌனமாகி துயிலும் இல்லப் பாடலுக்கு ஒவ்வொருவரும் தமது கைகளில் மாவீரர் நினைவு தீபங்களை ஏந்திப்பிடித்து நின்றது உணர்வுகளின் உச்சமாகவே இருந்தது.
அதன் பின்னர்தமிழகத்திலிருந்து வருகை தந்திருக்கும் தமிழின உணர்வாளர்களும் தமிழீழவிடுதலைக்காக நீண்டகாலமாக குரல் எழுப்பி போராடி வருபவர்களுமாகிய திரு.மணியரசன் திரு.செயப்பிரகாசம் ஆகியோர் மாவீரர்களின் கனவுகளை நனவாக்குவதற்காக இனிவரும் காலங்களில் தமிழினம் என்ன செய்யவேண்டும் என்று உரையாற்றினார்கள்.
தமிழகத்திலிருந்து தமிழின உணர்வாளர்களும் தமிழீழ விடுதலைப் போராட்டத்துடனும் தமிழீழத் தேசியதலைவருடனும் நெருக்கமாக பழகியவர்களுமான திரு.பழ.நெடுமாறன் ஐயா திரு.வைகோ
உணர்ச்சிக்கவிஞர் காசி ஆனந்தன் ஆகியோர் வழங்கிய மாவீரர் நாள் செய்திகள் வெண்திரையில் காண்பிக்கப்பட்டது. அத்துடன் தேசிய செயற்பாடுகளில் ஈடுபட்டுவரும் கவிஞர் திரு.கந்தையா ராஜமனோகரன் அவர்கள் வடமேற்கு லண்டன் மாவீரர் நிகழ்வு மண்டபத்திலும் தமிழீழ விடுதலைக்கான போராட்;டத்தில் நீண்டகாலம் செயற்பட்டவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான திரு.ஜெயனந்தமூர்த்தி அவர்கள் தென்மேற்கு லண்டன் மாவீரர் நிகழ்வு மண்டபத்திலும் உரையாற்றினார்கள்.
மேலும் SiobhanMcDonnagh MP (Mitcham Morden), Andrew Pelling former Croydon CentralMPஆகியோர் தென்மேற்கு இலண்டனிலும் JimCunningham MP (Coventry South), Councillor Jim Sawyers, CouncillorNeem Hussain, Councillor Jaswant Singh Virdie, Councillor Marco Manak ஆகியோர் கொவன்றியிலும் TheresaPearce MP (Erith & Thamesmead) தென்கிழக்குஇலண்டனிலும் ActNow அமைப்பைச் சேர்ந்த GrahamWilliamson வடகிழக்கு இலண்டனிலும் முன்னாள்ஐரோப்பியப் பாராளுமன்ற உறுப்பினர் RobertEvans வடமேற்கு இலண்டனிலும் உரையாற்றினர்.

Geen opmerkingen:

Een reactie posten