தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 2 november 2011

அந்நியர் பண்டாரவன்னியனுக்கு நினைவுச்சின்னம் அமைத்தனர்! இன நல்லிணக்கம் பேசுபவர்கள் இடித்தனர்! – சிவச்தி ஆனந்தன்


[ புதன்கிழமை, 02 நவம்பர் 2011, 07:59.43 AM GMT ]
போருக்குப் பின்னர் இந்த அரசாங்கம் பொருளாதார, கலை, கலாசாரம் பண்பாடு அரசியல் ரீதியாக நேர்மையாகச் செயற்படவில்லை என்பது கவலை தரும் விடயமாக இருக்கின்றது. என பண்டாரவன்னியனின் நினைவுதின வைபவத்தில் உரையாற்றிய வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் என்.சிவசக்தி ஆனந்தன் கேட்டுக்கொண்டார்.
இந்த நிலை மாற்றியமைக்கப்பட வேண்டும். இதற்காக அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட முன்வரவேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது:
பண்டார வன்னியனின் வீரத்தை அன்னியர்களும் வியந்து போற்றியிருக்கின்றார்கள். அவனுடன் சண்டையிட்ட டச்சுக்காரர்கள், எத்தனையோ பேருடன் சண்டையிட்டிருக்கின்றோம், ஆனால் பண்டார வன்னியனைப் போல வீரமுடைய எவரையும் நாங்கள் போர்க்களத்தில் சந்திக்கவில்லை என தெரிவித்துள்ளதாக வரலாற்று ஆசிரியர்கள் தெரிவித்திருக்கின்றார்கள்.
அத்தகைய வீரனை நினைவுகூரும் வகையில், அவனைத் தோற்கடித்த ஆங்கிலேயரினால் நிறுவப்பட்டிருந்த நினைவுக்கல் உடைக்கப்பட்டிருப்பது வன்னி மக்கள் மனதில் பெரும் வேதனையை ஏற்படுத்தியிருக்கின்றது.
சிறந்த வீரனாகிய பண்டார வன்னியனின் நினைவு தொடர்ச்சி;யாக நினைவுகூரப்பட வேண்டும். இதற்காக உடைக்கப்பட்ட அந்த நினைவுக்கல்லைப் புதுப்பிப்பதற்காக இந்த ஆண்டு பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் இருந்து 2 லட்சம் ரூபா ஒதுக்கியுள்ளேன்.
பண்டார வன்னியனின் நினைவுச் சின்னம் சிதைக்கப்பட்டது மட்டுமல்லாமல் வடக்கு கிழக்குப் பிரதேசத்தின் கலை, கலாசாரம், பண்பாடு போன்ற பல்வேறு விடயங்கள் போர்க்காலத்தில் சிதைக்கப்பட்டிருக்கின்றன. 2500 இந்துக் கோவில்கள், 400 கத்தோலிக்கத் தேவாலயங்கள் அழிக்கப்பட்டிருக்கின்றன.
ஆனால் போர் முடிந்து 30 மாதங்களுக்குள்ளே வடக்கு கிழக்கிலே 2000 பௌத்த சிலைகள் நிறுவப்பட்டிருக்கின்றன. எனவே இத்தகைய செயற்பாடுகள் இந்த நாட்டில் சி;ஙகள மக்களுக்கும் தமிழ் மக்களுக்கும் இடையி;ல் ஒரு நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்குப் பெரும் தடையாகவே இருக்கும்.
எனவே, போர் முடிந்த பின்பும் தமிழ் மக்களின் கலை கலாசாரம், பண்பாடு, வரலாறு போன்றவற்றை சிதைப்பதைத் தடுத்து நிறுத்துவதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
போரினால் இடம்பெயர்ந்து மீள்குடியேறியுள்ள மக்களுக்கான அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காகப் பல வேலைகள் செய்யப்பட வேண்டியிருக்கின்றது. ஆனால், அரசாங்கம் களியாட்டகங்களில் பெரும் தொகைப் பணத்தைச் செலவு செய்கின்றது.
இரண்டு நாட்களாக வவுனியா நகரசபை மைதானத்திலும், பூங்காவிலும், தமிழ் மத்திய மகாவித்தியாலயத்திலும் கண்காட்சி, கொண்டாட்டங்கள் என்ற பெயரில் மில்லியன் கணக்கான ரூபர் நிதி செலவு செய்யப்படுகின்றது.
அண்மையில் நடைபெற்ற விவசாய கண்காட்சியிலும் இதேபோன்று பெரும் தொகையான பணம் வீணாகச் செலவு செய்யப்பட்டிருக்கின்றது. ஆனால் மீள்குடியேற்றத்திற்காகச் சென்றுள்ள மக்களின் அத்தியாவசிய தேவைகளைப் பூர்த்தி செய்வதற்குப் பணமில்லை, நிதியில்லை என அரசும் அதிகாரிகளும் கைவிரிக்கின்றார்கள்.
ஓமந்தைக்கு அப்பால் உள்ள மகிழங்குளம், பன்றிக்கெய்த குளம் ஆகிய கிராமங்களில் மீள்குடியேற்றம் அனுமதிக்கப்பட்டு, எந்த அடிப்படை வசதிகளும் இல்லாமல் உங்களுடைய கிராமங்களுக்குச் செல்லுங்கள் எனக் கூறி; அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்கள்.
சொந்தக் கி;ராமங்களுக்கு 25 வருடங்களுக்குப் பின்னர் சென்றுள்ள அந்த மக்கள் தமது கிராமத்திற்குச் செல்கின்ற பாதையில் அடர்ந்து வளர்ந்து காடுகளை வெட்டித் துப்பரவு செய்து போக்குவரத்திற்கு வழிசெய்யுமாறு கேட்டுக்கொண்டார்கள்.
ஆனால் அண்மையில் நடைபெற்ற மீளாய்வு கூட்டத்தி;ல் இதற்கான நிதி இல்லையென கைவிரிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் மக்களின் கண்முன்னால் லட்சக்கணக்கான பணம் வீண் விரயம் செய்யப்படுகின்றது.
இது மட்டுமல்ல, வன்னியில் போரின் போது உடைப்பெடுத்த எத்தனையோ குளங்கள் இருக்கின்றன. அவற்றைத் திருத்திப் புனரமைப்பதற்குக் கூட நிதியில்லை என கூறுகின்றார்கள்.
போருக்குப் பின்னர் இந்த அரசாங்கம் பொருளார, கலை, கலாசாரம் பண்பாடு அரசியல் ரீதியாக நேர்மையாகச் செயற்படவில்லை என்பது கவலை தரும் விடயமாக இருக்கின்றது. இந்த நிலை மாற்றியமைக்கப்பட வேண்டும்.
இதற்காக தமிழ்த்தேசிய கூட்டமைப்பில் இணைந்துள்ள கட்சிகள் அந்த அமைப்பை மக்கள் மயப்படுத்தப்பட்ட ஓர் இறுக்கமான கட்டமைப்பாக உருவாக்குவதற்கு முன்வர வேண்டும்.
எமக்கு இடையில் உள்ள இடைவெளிகள், கருத்துக்களைக் களைந்து தமிழ் மக்களின் பிரச்சினைகளத் தீர்ப்பதற்கான ஓர் அரசியல் தீர்வை ஏற்படுத்துவதற்கு ஒன்றிணைந்து இறுக்கமாகச் செயற்பட முன்வரவேண்டும் என கேட்டுக்கொண்டார்.

Geen opmerkingen:

Een reactie posten