தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 15 november 2011

புலிகள் அடக்கியே ஆண்டனர் என்பதற்கு இக்கடிதமே போதாதா??

இன்றிய பிளவுகளும் ,சேற்றை வாரி ஒருவர் மீது இன்னொருவர் எறிவதும்,
யாழ் விபச்சார விடுதிகளும் கூறும் உண்மை தமிழ் மக்கள் ஒற்றுமை 
விரும்பிகளோ  இனப்பற்று கொண்ட இனமோ அல்ல என்பதுதான்.போராட்டத் துயர் தீர்வதற்குள் தலைமைப்போட்டிகளும் புலிகளின் பெயரில் அறிக்கைகளும் தொண்டறேன்று போராடியோரின் எச்சரிக்கை
மடல்களும் அப்பப்பா சிங்களவரே பரவாயில்லை என்ற முடிவுக்கே வர முடிகிறது.எதிரி செய்யாத கொலை,தூற்றல்,கேவலப்படுத்தல்,எச்சரித்தல் அனைத்தையும் தமிழனே தமிழனுக்கு எதிராய்  இன்று செய்வதுடன்
காட்டிக்கொடுப்பிலும் முன்னணியில்.இது தேவையா??
முகமூடிகளைக் கிழிக்கு ரோடியோவுக்கு தமிழ் தீ எழுதும் மடல் !
15 November, 2011 by admin
நேற்று (13/11/2011) ஆறு மணியளவில் ஒரு தொலைபேசி அழைப்பு. IBC வானொலி உடனடியாக கேட்கும்படி.. கேட்டேன்... வாக்கெடுப்பென்றார்கள். கொடுத்த தலைப்பு " மாவீரர் தினம் ஒரே இடத்தில் நடத்தப்பட வேண்டுமா பிரிந்து பிரிந்து நடக்க வேண்டுமா?". இதுதான் தலைப்பு. இரண்டு மணித்தியால நிகழ்ச்சி நடத்த வேண்டுமென்றால் முதலில் அதற்குப் பொருத்தமான தலைப்பு தெரிவு செய்யப்படவேண்டும்.

தமிழ் மக்களின் சுதந்திரத்தித்காகவும் கௌரவத்தித்காகவும் நம் பாதுகாப்புக்காகவும் தமது இன்னுயிரை தியாகம் செய்த தியாகிகள் நம் மாவீரர்கள்.காலம் காலமாக நம் இதயக் கோவில்களில் வைத்துப் பூசிக்கப் படவேண்டியவர்கள் இவர்கள். அந்தத் தெய்வங்களை நம் நெஞ்சப் பசுமையில் நிறுத்திக் கொள்ளும் நாளாக கார்த்திகை 27 எங்கள் ஒப்பில்லாத் தங்கத் தலைவனால்
பிரகடனப்படுத்தப் பட்ட நாள். அவர்களுக்கே உரிய அந்த நாள் நிகழ்வுகள் ஒரு இடத்தில் நடக்கக் கூடாது, வேறு வேறு இடங்களில்தான் நடக்கவேண்டும் என்று எந்த உணர்வுள்ள தமிழனாவது அல்லது தமிழச்சியாவது சொல்வார்களா? அப்படி சொல்பவர்கள் உணர்வுள்ள ஒரு தமிழ்த் தாய்க்குப் பிறந்தவர்களாக இருக்க முடியுமா? இரண்டு இடத்தில்தான் நடக்க வேண்டும் என்று யாராவது, எந்தத் தமிழராவது சொல்வார்களா?? ஒரு இடம், ஒரே இடம் என்றுதானே எல்லோரும் சொல்வார்கள். இதிலெதட்கு ஒரு வாக்கெடுப்பு?. என்னால் நம்ப முடியவில்லை இப்படிக்கூட உங்களால் சிந்திக்ககூடமுடியுமென்று... ஒரு உணர்வுள்ள தமிழனின் விருப்பம் எதுவாக இருக்கமுடியும் என்பதில் எங்கிருந்து உங்களுக்கு சந்தேகம் வந்தது? நீங்கள் தமிழர்கள்தானே.

இப்படியான ஒரு வாக்கெடுப்பை நீங்கள் நடத்த முயல்கிறீர்கள் என்றால் அவ்வளவு கீழ்த்தரமாக நம் மக்களை நினைத்திருக்கின்றீர்கள், அப்படித்தானே? மக்களுக்குத் தோன்றாத விடயங்களையே தோன்ற வைத்துவிடுவீர்கள் போல் இருக்கின்றதே. IBC, எனக்கு விளங்கவில்லை. இப்படி ஒரு வாக்கெடுப்பு மூலம் நீங்கள் என்ன சொல்ல வருகின்றீர்கள். பக்க சார்பில்லா ஊடகம் என்று சொல்ல வருகின்றீர்களா? உங்கள் பக்கச் சார்பற்ற தன்மைதான் தெட்டத் தெளிவாக விளங்கியதே.


எந்தக் கருத்துக்கும் இடமில்லை இது வெறும் வாக்கெடுப்பு மட்டுமே என்று நிகழ்ச்சியை ஆரம்பித்தீர்கள். ஆனால் போகப் போக ஒரு கருத்துக்கு மட்டும் அடிக்கடி இடம் கொடுத்தீர்கள். இடம் கொடுத்தது மட்டுமல்லாமல் மீண்டும் ஒரு முறை கூறுங்கள் என்று விளம்பரம் வேற. எதைப்பற்றி பேசுகின்றேன் என்று விளங்கவில்லை? விளக்கம் தரவா IBC? "ஒரு இடத்தில் நடக்க வேண்டும் எக்செல் இல் நடக்க வேண்டும் அதுவும் நாடுகடந்த அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட வேண்டும் " என்று ஒரு நேயர் கூறியபொழுது மீண்டும் கூறுங்கள் என்று அந்த அறிவிப்பாளர் வேண்டுகோள் விடுப்பதெல்லாம் பார்க்கும்பொழுது இது பக்க சார்பற்ற நிகழ்ச்சியாக நமக்குத் தெரியவில்லை. ஒரு பக்க சார்பினரால் நடத்தப்படும் நிகழ்ச்சி போன்ற ஒரு உணர்வைத்தான் ஏற்படுத்தியது.

எப்பொழுதும் நடத்தியவர்களே நடத்தவேண்டும் என ஒரு நேயர் சொல்ல வரும்பொழுது அதை அனுமதிக்க மறுத்த அறிவிப்பாளர் நாடுகடந்த அரசாங்கத்தினால் எக்செல்லில் நடக்கவேண்டும் எனக் கூறும்பொழுது அதைத் தடுக்காமல் விட்டது ஏனோ? அதுவும் ஒரு தடவை அல்ல பல தடவைகள்...நாடு கடந்த அரசாங்கம், நாடுகடந்த அரசாங்கம் என்று அடிக்கடிக் கூறிக் கூறி நாடுகடந்த அரசினால் நடத்தப்படும் ஒரு நிகழ்ச்சியோ என எண்ணும் அளவுக்கு ஆக்கி விட்டீர்கள் போங்கள்..இதுதான் பக்க சார்பற்ற ஊடகச் செயலோ? நீங்கள் பக்க சார்பற்றவர்கள் என்பதை மக்கள்தான் சொல்லவேண்டும். உங்களை நீங்களே சொல்லக்கூடாது. ஏனெனில் எந்த ஊடகம் தன்னைத்தானே பக்க சார்பான ஊடகம் என்று இதுவரை கூறியிருக்கிறது? குறிப்பிட்ட ஒரு அமைப்பிடம் கொடுக்கவேண்டுமென சிலர் தொலைபேசியில் அடிக்கடி கூற அனுமதிப்பது... பின்பு நிகழ்ச்சி முடிவடையும் பொழுது நல்லவர்போலவும் பக்க சார்பற்றவர் போலவும் " அவர்கள் எக்செல் செல்ல வேண்டும் என்று குறிப்பாக கூறிய காரணத்தால் அந்த வாக்குகளை நாம் எண்ணவில்லை" என்றும் குட்டி நாடகம் போட வேண்டியது.. இந்த வாக்கெடுப்பு மூலம் நமக்கு ஏற்கனவே தெரியாத எந்த விடயத்தைப் புரியவைத்துவிட்டீர்கள் என்று நினைக்கிறீர்கள்?அந்த வாக்குகள் எண்ணப்பட்டாலென்ன படாவிட்டாலென்ன?

ஒரு இடத்தில் மாவீரர் தினம் நடக்கவேண்டுமா இல்லையா என்பது மக்களின் கேள்வியல்ல.. அந்தக் கேள்விக்கே இடமில்லை. மக்களின் விருப்பம் வேறு ஏதாவதாக இருக்கும்வேண்டும் என எதிர்பார்த்தீர்களோ?. அதைத் தவிர மக்கள் வேறு எதையும் அனுமதிக்கக் கூட மாட்டார்கள். இது உங்களின் மனங்களில் மட்டும் தோன்றும் தேவையற்றக் கேள்வி.. இதற்கொரு நிகழ்ச்சியே தேவையில்லை. அந்த இரண்டு மணி நேரத்துக்கும் மாவீரர் பாடல்களைப் போட்டிருக்கலாம். அடிக்கடி நீங்கள் கூறிய வார்த்தைகள் " இப் மூலம் இவர்களின் முகமூடி கிழிக்கப்படுகிறது, முகமூடி கிழிக்கப்படுகிறது". இதுதானே ஐயா நமக்கும் தேவை. நீங்கள் கிழித்த அந்த முகமூடிக்குள் இருப்பவர்கள் யார் என்பதை நமக்கு கூறுங்கள். கிழிக்கப்படும் முகமூடிகள் என்ற தலைப்பில் நிகழ்ச்சி நடத்துங்கள். துரத்தித் துரத்தி முகமூடிகளைக் கிழியுங்கள்..... அப்பொழுது நாம் உங்கள் வானொலியைத் தவறாமல் கேட்கின்றோம். பக்க சார்பற்றவர்கள் என்றால் அந்த முகமூடி அணிந்த நம்மினத் துரோகிகள் யார் என்பதைத் தயங்காமல் அடையாள படுத்துங்கள் மக்களுக்கு. அப்பொழுது உங்களளுக்கு நாமே பக்க சார்பற்ற ஊடகம் என்ற சான்றிதழ் தரலாம். அதை விட்டு விட்டு... சில ஊடகங்கள் பக்க சார்பாக நடக்கின்றன என்று குறை கூறுவதை நிறுத்துங்கள். ஒரு ஊடகமாக மக்களுக்கு என்ன செய்யவேண்டுமோ அதை செய்யுங்கள்.

அரசியல் என்பது மக்கள் மீது ஆட்சி நடத்தும் அல்லது அதிகாரம் செலுத்தும் விவகாரமல்ல. அரசியலென்பது மக்களுக்கு சேவை புரியும் பணி. மக்களின் நல்வாழ்வுக்கு ஆற்றப்படும் தொண்டு. இந்த அரசியலை தமக்குரிய அங்கீகாரமாக நாடு கடந்த அரசாங்கம் எடுத்துக் கொள்ளக்கூடாது. மாவீரர் தினத்தை நடத்துவதற்கு இவர்கள் யார்? விடுதலைப் போராட்டம் என்பது இரத்தம் சிந்தும் அரசியல் பாதை. தலைவரினால் அமைக்கப்பட்ட கட்டமைப்பைத் தள்ளிவைத்து, ஓரங்கட்டிவிட்டு இதை உங்கள் தலைமையில் நடத்துவதற்கு நீங்கள் யார்? இப்படிச் செய்வதன்மூலம் என்ன அங்கீகாரத்தைத் தேடுகின்றீர்கள்? மக்களின் துன்ப துயரங்களில் பங்கு கொண்டு அவர்களின் சுமைகளை நாமும் தாங்கி அவர்களின் கஷ்டங்களைப் போக்குவதற்குத் திட்டமிட்டு செயலாற்றுவதுதான் உண்மையான அரசியல் வேலை. சொல்லுக்குமுன் செயலாக இருக்க வேண்டும். செயலற்ற சொற்பிரயோகங்கள் மூலம் மக்களை ஏமாற்றக்கூடாது. ஏமாறுவதற்கு மக்களும் முட்டாள்கள் அல்ல.

ஸ்கந்தா மீது நமக்கு நிறையவே மதிப்பும் மரியாதையுமுண்டு. ஆனால் சென்ற கிழமை நம் தேசிய தொலைக்காட்சி என்று கூறிக்கொண்டே நம் தேசியத்தைத் தொலைக்கும் தொலைக்காட்சி ஒன்றில் தோன்றி அவர் கூறிய சில பொருத்தமற்ற கருத்துக்கள் மனதுக்கு வேதனை அளிப்பனவாகவே இருந்தன. அதாவது தாயகத்திலிருந்து இதை நடத்துவதற்கு யாருக்கு அனுமதி கொடுக்கப்பட்டதோ அல்லது இன்னொரு விதத்தில் கூறுவதானால் தாயகத்திலிருந்து இதற்கென அமைக்கப்பட்ட ஒரு கட்டமைப்பின் மூலமே இரண்டாயிரத்துப் பத்தாம் ஆண்டுவரை மாவீரர் நிகழ்வுகள் நடத்தப்பட்டன. அதே கட்டமைப்பில்தான் ஸ்கந்தா வும் இணைந்து ஒன்றாக வேலை செய்தார். ஆனால் அதே ஸ்கந்தா இன்று பிரிந்து நின்று தலைவரால் உருவாக்கப்பட்ட கட்டமைப்பினரைப் பார்த்துக் கேட்கின்றார் " இதை நடத்துவதற்கு இவர்கள் யார் போராளிகளா " என்று. அப்படியானால் நீங்கள் யார் என்று உங்களுக்கே இவ்வளவுகாலமும் தெரியவில்லையா? யாரென நினைத்து இவ்வளவு காலமும் அவர்களுடன் சேர்ந்து நடத்தினீர்கள்? இரத்தம் சிந்தி உயிர் துறந்த போராளியா நீங்கள்? திடீரென, என்றுமில்லாத் திருநாளாக இவை போராளிகளினால்தான் நடத்தப்பட வேண்டுமென்கிறீர்களே, இதைப் போராளிகள்தான்இவ்வளவு காலமும் நடத்தினார்களா? போராளிகளுக்குப் புலத்தில் என்ன வேலை? போராளிகள் என்றால் என்ன அர்த்தம் என்று தெரியுமா உங்களுக்கு?

" உண்மையான போராளி என்பவர் யார். அவர் தான் கொண்ட கொள்கையில் வென்றிருக்க வேண்டும். அல்லது அந்தக் கொள்கைக்காக வீரச்சாவடைந்திருக்க வேண்டும்.எனவே நான் என்னை ஒரு உண்மையானப் போராளி எனச் சொல்ல மாட்டேன். நான் எனது கொள்கையில் வெல்லவுமில்லை. வீரச்சாவடையவுமில்லை" இது தலைவரினால் ஒரு போராளிக்குக் கொடுக்கப்பட்ட விளக்கம். தலைவரே தன்னை அப்படிக்கூறிக்கொள்ளும் பொழுது புலத்தில் நின்று கொண்டு நான் பழைய போராளி, நான் பழைய போராளி என்று சொல்வது முறையல்ல. தனது மன ஆசைகளிலிருந்தும் அச்சங்களிலிருந்தும் தன்னை விடுதலை செய்து கொள்பவன்தான் உண்மையான விடுதலை வீரனாக முடியும். பணத்தை நினைப்பவன் உண்மையான போராளியாக இருக்க முடியாது. புலத்தில்,சாதாரணமான ஒரு பொதுமகன் போல எல்லா ஆசைகளுடனும் பந்தப் பாசங்களுடனும் வாழ்ந்து கொண்டிருக்கும் நீங்கள் நம்மைப் போல் சாதாரண பொதுமகனாகின்றீர்கள். ஒரு உண்மையான போராளி பணம் புரளுமிடத்தில் தன்னை இணைத்துக் கொள்ளமாட்டான்.

அதுமட்டுமல்ல. புலிகளைப் பலவீனப் படுத்த எப்படி கருணா என்ற ஒரு ஈனப் பிறவியைச் சிங்களம் பயன்படுத்தியதோ அதே போல் புலம் பெயர் தமிழரின் பலத்தையும் பலவீனப் படுத்தவெனப் பல " பழைய போராளிகள்" நம் மத்தியில் அனுப்பப்பட்டுள்ளனர் என்பது யாவரும் அறிந்த உண்மை. வரலாறுகள் நமக்கு பாடங்கள் புகற்றுகின்றன.. வரலாற்றிலிருந்து நாம் பாடங்களைக் கற்றுக்கொள்ளப் பழகிக்கொள்ள வேண்டும். திடுதிப்பென நமக்குள் போராளிகள் முளைத்து நாம்தான் மாவீரர்தினத்தை நடத்துவோம் என்றால் சந்தேகம் வருவது நியாயம்தானே. அப்படி ஒரு சந்தேகம் வரும்பொழுது ஒரு உண்மையான விடுதலை உணர்வுள்ள போராளி என்ன செய்திருக்க வேண்டும். என்னால் ஒரு பிரச்சனை அதுவும் மாவீரர் சம்பந்தப்பட்ட விடயத்தில் உருவாகின்றது என்ற கணமே அதிலிருந்து தன்னை விலத்திக் கொண்டிருக்க வேண்டும். இதற்குள் எல்லாம் இவர்கள் நுழைந்திருக்கவே கூடாது. ஏதோ ஆர்வக் கோளாறாக எடுத்துக் கொண்டாலும் எதைச் செய்திருக்க வேண்டுமோ அதை இவர்கள் செய்யவில்லை. தவறி விட்டார்கள்.

இவர்களைத்தான் நீங்கள் போராளிகள் என்கின்றீர்களா ஸ்கந்தா அவர்களே? அது மட்டுமல்ல. எக்செல் என்பது என்ன துயிலுமில்லமா ? இல்லையே. உலகப் பொருளாதார சீர்கேட்டில் அடுத்த வருடம் எக்செல் வங்குரோத்துக்குப் போனால் எக்செலே இருக்காது. எக்செல் இல்லை என்பதற்காக மாவீரர் தினம் அனுஷ்டிக்காமலா விடப்போகிறோம். அதுவுமில்லை. அப்படியானால் எதற்காக எக்செல் என்பது ஒரு துயிலுமில்லம் என்ற பிரமையை மக்கள் மத்தியில் விதைக்கிறீர்கள்?எங்கள் மாவீரரின் ஒரு ஆத்மாவாவது புலத்திலே உண்டா? இல்லை. அவர்களை நம் நெஞ்சங்களிலே நாம் சுமக்கிறோம், அவர்கள் என்றும் நம்முடனேயே வாழ்வார்கள் என்பதன் ஒரு அடையாளமாகத்தான் நாம் இந்நாளை புலத்தில் எழுச்சியடன் நடத்துகிறோம். ஆனால் அவர்கள் ஆத்மா இங்கில்லை. அவர்கள் காத்திருப்பது தாய்மண்ணின் விடுதலைக்காக. அவர்கள் காவலிருந்தது நம் மண்ணிலுள்ள மக்களைக் காக்க. மொத்தத்தில் அவர்கள் உடல் அந்த மண்ணுக்கு, அவர் உயிர் அந்தமண்ணுக்கு, அவர் ஆத்மா காத்திருப்பதும் அந்த மண்ணின் விடுதலைக்கு. அவர்கள் காவலிருப்பதும் காத்திருப்பதும் அந்த மண்ணில் மட்டும்தான்.

"எமது எதிரியையும் அவனது நோக்கத்தையும் இனம் கண்டு கொள்வது சுலபம். ஆனால் துரோகிகள் முகமூடி அணிந்து நடமாடுகின்றனர். எதிரியின் கைப்பொம்மையாகச் செயட்படுகின்றனர். தமது சுயநலத்திற்காக தமது இனத்தையே காட்டிக் கொடுக்கத் தயங்காத இந்த ஆபத்தான பிற்போக்குச் சக்திகள் மீது நம் மக்கள் மிகவும் விழிப்பாக இருக்க வேண்டும்." தேசியத் தலைவர் மேதகு. வே. பிரபாகரன். இப்படிப்பட்ட முகமூடி அணிந்த மனிதர்களின் முகமூடிகளைக் கிழிக்கும்பொழுது ஐ.பி.சி அவர்களின் முகங்களை மக்களுக்குக் காட்ட வேண்டுமென்பதுதான் நம் தாழ்மையான வேண்டுகோள்.. ஏற்கனவே நீங்கள் கிழித்த முகமூடி மனிதர்களின் நிஜ முகங்களை உடனடியாகவே ஊடகங்களில் போடுங்கள்.

தமிழ்த்தீ

Geen opmerkingen:

Een reactie posten