தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 3 november 2011

இவர்களுக்கு இதுதான் இப்போ மிக முக்கியம்,மக்களை இப்படித்தான் மாந்தைகள் ஆக்கி சாவடிப்பது!!

பிரித்தானிய இராணி மகிந்தருக்கு கைகொடுத்ததாக போலிப் படத்தை காட்டி மோசடி !
02 November, 2011 by admin
காமன்வெலத் மாநாட்டின் வரவேற்பில் பிரித்தானிய மகாராணி 2ம் எலிசபெத் அவர்கள் மகிந்தருக்கு கைகொடுத்தார் என்று சொல்லப்படுகின்ற புகைப்படம் ஒன்றை இலங்கை அரசு வெளியிட்டுள்ளது. அப் புகைப்படத்தை இலங்கை அரசின் ஊடகப் பிரிவு தமக்கு வழங்கியதாகக் கூறி இலங்கையின் பல செய்திச் சேவைகள் அப்புகைப்படத்தை பிரசுரித்துவிட்டு பின்னர் அவசர அவசரமாக அதனை நீக்கியுள்ளன. இப் புகைப்படம் போட்டோ ஷாப்பில் செய்யப்பட்டுள்ளது என தற்போது நிரூபனமாகியுள்ளது. அதாவது மாநாட்டிற்குச் சென்ற மகிந்தர் பிரித்தானிய மகாராணியின் கணவரான பிலிப் அவர்களின் கைகளையே குலுக்கியுள்ளர். அவர் பிரித்தானிய மகாராணியின் கைகளைக் குலுக்கவில்லை. ஆனால் அப்படியான படம் ஒன்றை இலங்கை தயாரித்து வெளியே விட்டுள்ளது.

இப் புகைப்படத்தை நீங்கள் நன்கு உற்றுநோக்கினால் தெரியும். முதலாவது புகைப்படத்தில் பித்தானிய இராணியுடன் கைகுலுக்கும் வெள்ளை இனத்தவரின் கால்களைப் பாருங்கள். அவர் சப்பாத்து படும் இடத்தின் கீழ் 3 கோடுகள்(காப்பெட்டில்) கம்பளத்தில் நேரகா உள்ளது. அதேபோல 3வது படமான மகிந்தர் கை குலுக்கும் படத்தில் உள்ள அவரது காலைப் பாருங்கள், அங்கே கம்பளத்தில் உள்ள அந்த 3 கோடுகளும் விலகிக் காணப்படுகின்றன. அத்தோடு மட்டுமல்லாது இராணிக்கு முன்னதாக ஒரு நபர் நின்றுகொண்டு இருக்கிறார். ஆனால் மகிந்தர் இராணிக்கு கை கொடுப்பபதாகச் சொல்லப்படும் படத்தில் அவரைக் காணவில்லை. இப்படியான ஈனத் தனமான காரியங்களில் இலங்கை அரசு இறங்கியுள்ளது என்றால் எவரும் நம்புவார்களா ?

இப் புகைப்படத்தை அதிர்வு இணையம் லண்டனில் உள்ள பக்கிங்ஹம் மாளிகைக்கு அனுப்பியுள்ளது. பிரித்தானிய மகாராணியின் உத்தியோகபூர்வ வாசல்ஸ்தலத்துக்கு இப் புகைப்படத்தை நாம் அனுப்பி இப்படி இரு சம்பவம் நடந்ததா இல்லையா என உறுதிசெய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளோம். அவர்கள் தரும் பதிலையும் நாம் அதிர்வு இணையத்தில் பின்னர் சேர்க்க இருக்கிறோம் என்பதனையும் இங்கே அறியத்தர விரும்புகிறோம். பிரித்தானிய மகாராணிக்கு மகிந்தரின் சித்து விளையாட்டுக்கள் கொஞ்சம் தெரியட்டும்.


Geen opmerkingen:

Een reactie posten