சொல்லொன்று செயலொன்று பக்கசார்பே அதிர்வு!!
இணையங்களே சேஷ்டை விடாதீர்கள்: இமெட்டவின் பாச்சல் !
இணைய ஊடகங்களும் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களும் முதலில் தங்களைத் திருத்திக் கொள்ளட்டும். அதன்பின் சமுதாயத்தை திருத்திக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார் யாழ்.மாவட்ட அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார். விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தின் ஏற்பாட்டில் பால்நிலை கற்கைநெறியைப் பூர்த்தி செய்தவர்களுக்குச் சான்றிதழ் வழங்கும் வைபவம் கடந்த 5 திகதி யாழ்.பல்கலைக் கழகம் கைலாசபதி அரங்கில் இடம் பெற்றது. இந்தநிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஊடகங்கள் மக்களின் பிரச்சினைகளை எடுத்துக் கூறித் தீர்வு கண்டு கொடுப்பவை. அதனால் நாம் சொல்வதைக் கவனமாகச் செவி மடுத்து ஊடகங்கள் எழுதவேண்டும். சொல்லாத விடயங்களைத் திரிபுபடுத்துவதும் எழுதுவதும் ஊடகங்களுக்கு அழகல்ல. ஊடகங்கள் அவமானப்படக் கூடாது என்பதற்காகவே நான் இதனைக் கூறுகிறேன். என்று அவர் சாடியுள்ளார். சமீபத்தில் பெருந்தொகையான நகைகள் சகிதம் அதிகாரிகளைச் சந்தித்த இவரை அதிர்வு இணையம் புகைப்பட ஆதாரத்தோடு வெளியிட்டிருந்தது. இதனை அடுத்து அவர் அதிர்வு ஆசிரியருடன் தொடர்புகொண்டு தகாத வார்த்தைகளில் திட்டித் தீர்த்தார். தாம் கலாச்சார நிகழ்வுக்குச் செல்லும் வழியிலேயே அதிகாரிகளைச் சந்தித்ததாகவும் அதனால் தான் பெரும் நகைகளை அணிந்திருந்ததாகவும் அவர் மேலும் கூறினார்.
யாழ்ப்பாணத்துக்கு வந்து பாருங்கள் பெண்கள் என்னை விட கூட நகைகளைப் போட்டுத் திரிகிறார்கள் என்று அவர் மேலும் கூறினார். ஆனால் யாழில் பாரிய நகைகளை அணியும் பெண்கள் எல்லோரும் அரசாங்க அதிபர் இல்லையே என நாம் கூறியபோது தொலைபேசியை அவர் துண்டித்துக்கொண்டார். இதனை அடுத்தே இவர் இணையங்களுக்கு பொதுவான எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார் போலும். இலங்கையில் சில இணையங்கள் தடைசெய்யப்படவேண்டும் என கொழும்பு வட்டாரங்கள் தெரிவித்துவரும் நிலையில் முதலில் அதிர்வு இணையத்தை தடைசெய்ய வேண்டும் என்ற கோரிக்கையை இவர் அரச தரப்புக்கு முன்வைத்துள்ளார் என எமது யாழ் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

Geen opmerkingen:
Een reactie posten