தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 12 november 2011

தங்கள் கருத்தை சுதந்திரமாக சொல்லும் இவர்கள் மற்றவரை எச்சரிப்பது மக்கள் ஏமாளிகள் என்பதாலா?? பிளான் போட்டுத்தான் போராடுறான்கள்!!

தேசியத்துக்கு எதிரான செயல்பாடுகள் உடைக்கப்படும் பரமேஸ்வரன் அறிக்கை !
12 November, 2011 by admin
[பிரித்தானியாவில் உண்ணாவிரதம் இருந்த பரமேஸ்வரன் அவர்கள் சமகாலத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் குழப்பங்களுக்கு சில விளக்கங்களோடு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.]

இன்று தோன்றியுள்ள இறுக்கமான காலகட்டத்தில் எதிரி மிக தந்திரமாக எமக்குள்ளேயே நடமாடத் தொடங்கியுள்ளான்.
அவன் எம்மை விட தேசியப் பற்றுள்ளவனாக தன்னை அடையாளப்பபடுத்திக்கொண்டு பல சந்தர்ப்பவாதிகளை தம்முடன் இணத்துக்கொண்டு செயற்படத் தொடங்கியுள்ளான். அவனது குறிக்கோள் புலம் பெயர் மக்களை பல குழு உடைத்துப்போடுவதுதான். தேசியத்திற்கு எதிராக செயற்படும் அனைவரும் மிக விரைவில் மக்கள் முன் நிறுத்தப்படுவார்கள் பல விடயங்களில் நாம் வெகு நாட்களாக பொறுமைகாத்து வருகின்றோம்.

ஆனால் துரோகங்கள் வெளிப்படையாக அரங்கேறுகின்றன. தெரிந்தும் தெரியாமலும் தேசத்தின் ஒற்றுமைக்கு எதிராக நிற்பவர்கள் அனைவரும் ஒதுங்கிக்கொள்ளுமாறு வேண்டப்படுகின்றீர்கள். கால ஓட்டத்தில் அனைவருடைய முகங்களும் வெளிச்சத்திற்கு வரும் அப்போது அவமானப்பட்டு நிற்க வேண்டாம் என அறிவுறுத்துகின்றோம். பொய்கள் பல காலம் தாக்குப்பிடிக்க முடியாது உண்மைகள் உடைத்துக்கொண்டு வெளிவரும் நாட்கள் தொலைவில் இல்லை.
உண்மையான போட்டிகள் என்பது எதிரியை வீழ்த்துவதில்தான் இருக்க வேண்டும். தமிழர்கள் முளுவதும் பரந்து வாழும் அனைத்து நாடுகளிலும் எதிரி மாற்றத்தை விரும்புகின்றான். அதை நிறைவேற்ற பலர் தெரியாமலும் சிலர் தெரிந்தும் களம் இறங்கியுள்ளார்கள். அவன் விரும்பும் மாற்றத்தை நிறைவேற்றினால் அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்தும் எதிரி தப்பிவிடுவான். எம்மை வைத்தே எமது கண்னை குத்த எதிரி தீர்மானித்து விட்டான்.
யார் யாரே விட்ட பிழைகளை சாதகமாக்கிக்கொண்டு உலகெங்கிலும் எமது தேசியத் தலைவரால் வளர்த்தெடுக்கப்பட் கட்டமைப்பை அனைத்து நாடுகளிலும் உடைத்தெரிய எதிரி வெறிகொண்டு வலைவீசுகின்றான்.

எதிரி மிகச்சரியாக கணக்குப்போட்டு எவனை விலைக்கு வாங்க வேண்டும் எவனை அடித்து வழிக்கு கொண்டுவர வேண்டும் என்பது பல துரோகிகள் ஊடாக அறிந்து வைத்துள்ளான். அவைகள் அப்பட்டமாக அரங்கேற்றப்படுகின்றன. செயற்பாட்டாளர்கள் பிழை விட்டிருந்தால்?! நன்றாக அறிந்துகொள்ளுங்கள் பிழைகள் என்றும் திருத்தக்கூடியவைகள். ஆனால் எதிரியின் வஞ்சக வலைக்குள் விழுந்து துரோகிகளாகி விடாதீர்கள் வீழ்ந்துபோனால் காலம் என்றும் உங்களை மன்னிக்காது.
தமிழர்களின் பொது எதிரியாக சிங்களத்தை வீழ்த்த இன்று தேசியம் பேசுபவர்களிடம் ஏதாவது தொலைநோக்கு அல்லது குறுகிய நோக்கு திட்டங்கள் உண்டா? இனி ஜனநாயகம் இனி எல்லாம் வெளிப்படை என ஒக்காலமிடும் இவர்களிடம் எதிரிக்கு எதிரான வெளிப்படையான திட்டம் என்ன? எதிரியை அழிக்க, குற்றவாளிக் கூண்டில் ஏற்ற இவர்களிடம் உள்ள திட்டங்கள் என்னென்ன? எவருக்காவது தெரியுமா? கணக்கு, அதற்கு இருக்கா கணக்கு, இதற்கு இருக்கா கணக்கு!.

மக்களிடம் பணம் சேகரித்தேன் விடுதலைப்புலிகளுக்கு கடந்தகாலங்களில் பணம் ஒரு ரூபாய் அனுப்பினதாக ஒப்புக்கொண்டாலும் அவன் நாளை சிறைதான் செல்ல வேண்டும், பணம் என்றால் பிணம் கூட எழும்பி வரும் என எதிரியின் கணக்கு அதனாலேயே செயற்பாட்டாளர்கள் மீது பண மோசடி என அவனது திட்டத்தை யார் யார் ஊடாகவே செயற்படுத்த முனைகின்றான்.
ஒரு நாட்டில் ஒரு செயற்பாட்டாளர்கள் அல்லது இருவர் என்றால் சிரிது யோசிக்கலாம் ஆனால் சொல்லி வைத்தாற் போல் உலகின் அனைத்து நாடுகளிலும் ஒரே பாணியையே கையாளப்படுகின்றது. கணக்கு கேள் காட்ட மாட்டார்கள் காரணம் பணம் விடுதலைப்புலிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது, கணக்கு காட்டினால் சிறை காட்டாவிட்டால் துரோகி பணத்தை அடித்துவிட்டான் என ஓரங்கட்டிவிடாலம் இதுதான் இதுவேதான் எதிரியின் தந்திரமாக கணக்கு மக்களே பல ஆண்டுகள் கடந்த பின்பே எதிரியின் சூட்சுமத்தை புரிந்துகொள்ள முடியும் எவ்வளவு சொன்னாலும் சில விடயங்கள் மட்டும் விளங்கவே விளங்காது.

இறுதியாக மக்களே சற்று நிறுத்தி ஆழமாக உங்களுக்குள்ளேயே அக்கேள்விகளை கேளுங்கள். குழப்பி விடுவதற்கு பலர் வருவார்கள் அவதானமாக இருங்கள். அழுத்தமாக கூறுவதானால் பழைய செயற்பாட்டாளர்களுக்கு உதவி செய்யாவிட்டாலும் புதிதாக எவரையும் அனுமதிக்காதீர்கள், ஆதரிக்காதீர்கள் அதுவே நீங்கள் தேசியத்திற்கு செய்யும் நன்மை. யார் உண்மையாக வேலைத்திட்டங்களுடன் வருகின்றார்கள் என மட்டும் பாருங்கள் எதிரிக்கு வெளிப்படையாக திமிராக எவன் சவால் விடுகின்றார்கள் என மட்டும் பாருங்கள் அத்திட்டங்களுக்கு மட்டும் முளுமையாக அறிந்துகொண்டு உதவி செய்யுங்கள்.
தமிழீழ விடுதலைப்புலிகள் தலைமைச் செயலகம் என்பது தேசியத் தலைவரின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த செயலகமே. அதை வேறு பெயர்களில் எவரும் பயன்படுத்த அனுமதிக்காதீர்கள். அப்படி பயன்படுத்துபவர்களை தேசத்திற்கு எதிரானவர்களான மட்டுமே பாருங்கள். மேலும் பல ஆதாரங்களுடன் உங்கள் முன் விரைவில் வருவேன்.

நன்றி

என்றும் உங்களுடன்

சு.பரமேஸ்வரன்
11/11/2011

Geen opmerkingen:

Een reactie posten