தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 9 november 2011

இலங்கையின் குத்தாட்டம்: இதைப்போல ஒரு சட்டத்தை எங்கையும் பார்க்க முடியாது !

உலக நாடுகளில் எங்கும் கேள்விப்படாத சட்டம் ஒன்று தற்போது இலங்கையில் போட்டிருக்கினம். அதுதான் மீடியா சட்டம். அதாவது ஏதாவது ஒரு ஊடகம் இலங்கையைப் பற்றி எழுதுது எண்டால் உடனே அவர்கள் இலங்கை ஊடக நிலையத்தோடு தொடர்புகொண்டு தங்களைப் பதிவுசெய்ய வேண்டுமாம். இது ஒன்றும் உள்நாட்டு ஊடகங்களுக்கு மட்டும் தான் என்று நினைக்கவேண்டாம். அனைத்து வெளிநாட்டு ஊடகங்களுக்கும் இது பொருந்துமாம். அதாவது இனிமேல்பட்டு இலங்கை குறித்து ஏதாவது ஒரு ஊடகம் தகவல் வெளியிட்டால் அது முன்கூட்டியே இலங்கை அரசிடம் பதியப்பட்டு இருக்கவேண்டும் என்கிறது இலங்கை அரசு. அதற்கென்ன பதியுஞ்சு போட்டு நடத்துவோம் என்று சிலர் நினைக்கலாம். அங்க தான் மாப்பு வைச்சிருங்காங்க ஆப்பு !

இலங்கை அரசு நிரப்பச் சொல்லும் படிவம் கீளே உள்ளது. அதனைப் பாருங்கள். அதில் மொத்தம் 8 கேள்விகள் இருக்கு. அதில் 4, 5, 7 மற்றும் 8 ம் கேள்விகள் மிக எடக்கு முடக்கானவை. அப்படிக்கூடச் சொல்லமுடியாது. ஒரு ஊடகம் எங்கிருந்து இயங்குகிறது அதன் எழுத்தாளட் யார் ? அவர் பெயர் விலாசம் எங்கிருந்து அப்டேட் செய்கிறார். அவர் கணணியின் இன்ரர்நெட் வழங்குனரின் ரகசியக் குறியீடுகள் மற்றும் ஐ.பி முகவரி என்று அனைத்தையும் இலங்கை அரசு கோரியுள்ளது. அதாவது பிரித்தானியா அமெரிக்கா போன்ற நாடுகளில் இயங்கிவரும் வேற்றின இணையங்களிடம் கூட அந் நாட்டரசுகள் இவ்வாறு கேட்ப்பது இல்லை. ஏன் இன்னும் சொல்லப்போனால் அமெரிக்காவுக்கு எதிராக இயங்கிவரும் விக்கி லீக்ஸுக்கு கூட இவ்வளவு நெருக்கடிகள் இருக்கவில்லை. ஆனால் இன்றைய நிலையில் புலம் பெயர் தமிழ் ஊடகங்களை இலங்கை அரசு வெளிப்படையாகவே அச்சுறுத்துகிறது.

இவர்கள் அச்சுறுத்தல் எவ்வாறு அமைந்திருக்கிறது என்று பார்ப்போம்: அதாவது இவர்கள் சொல்கிறார்கள் ஊடகத்தை நத்துபவர்கள் தங்களிடம் பதியவேண்டும் என்று, அதற்கான 8 கேள்விகளுக்கும் விடைகொடுக்கவேண்டும், பின்னர் நான் இலங்கை அரசுக்கும் அரச அதிகாரிகளுக்கும் எதிராக எழுதமாட்டேன் என்று கடிதம் ஒன்றும் எழுதித் தருமாறு தனிப்பட்ட முறையில் வற்புறுத்துகின்றராம். அப்படி என்றால் மட்டுமே இலங்கையில் உங்கள் இணையங்கள் தடைசெய்யப்படாமல் இருக்கும் என்று இலங்கை அரசு வெளிப்படையாகவே கூறியிருக்கிறது. புலம்பெயர் நாடுகளில் உள்ள பல ஊடகங்கள் குழம்பிப்போய் உள்ளார்கள். அதாவது அனைவரும் புரிந்துகொள்ளவேண்டியது ஒன்றுதான். வெளிநாடுகளில் இயங்கும் தமிழ் ஊடகங்களை(இணையங்களை) இலங்கை அரசால் தடைசெய்ய முடியாது. மிஞ்சிப்போனால் அவர்கள் அதனை இலங்கையில் தடைசெய்யலாம். அவ்வளவுதான்.

எனவே இவர்கள் பூச்சாண்டிக்கு எந்தத் தமிழ் இணையங்களும் பயப்பிடத் தேவையில்லை. அதுமட்டுமல்ல தமிழ்நெட் போன்ற ஆங்கில ஊடகங்களை இலங்கை அரசு ஏற்கனவே இலங்கையில் தடைசெய்து தான் வைத்துள்ளது. அவ்வாறு தடைசெய்யப்பட்ட இணையங்களை சிறிய பொறிமுறை ஒன்றைப் பாவித்தால் நிச்சயம் இலங்கையில் பார்வையிடலாம். அதுவும் பாதுகாப்பாகப் பார்வையிடலாம். இப் பொறிமுறையை விரைவில் நாம் அறிமுகப்படுத்தி அதனை நாம் ஈழத்தில் உள்ள எம் உறவுகளுக்கும் புரியவைக்கவேண்டும். அப்படி என்றால் ஈழத்தில் இருக்கும் அனைவரும் தடைசெய்யப்பட்ட எந்த ஒரு தமிழ் இணையத்தையும் பார்க்க முடியும். அரசு எதனை மறைக்க முற்படுகிறதோ அதனை புரிந்துகொள்ள முடியும்.

ஈழத்தில் உள்ள போர் நினைவுகளை அழித்தார்கள் ! மாவீரர் துயிலும் இல்லங்கை அழித்தார்கள் ! சிலைகளை உடைத்தார்கள் ! ஈழத்தில் ஒரு விடுதலைப் போர் நடந்ததா என இனிவரும் சந்ததிகள் கேட்க்கும் அளவுக்கு பல காரியங்களைச் செய்யும் இவர்கள் இறுதியாக புலம்பெயர் மக்களையும் ஈழத்து மக்களையும் பிரிக்கும் ஒரு நடவடிக்கையாகவும், ஈழத்து மக்களுக்கு சில செய்திகள் சென்றடையாமல் தடுப்பதற்காக புலம்பெயர் தேசிய இணையங்களை இலங்கையில் முடக்கவும் தற்போது நடவடிக்கைகளை எடுத்துவருகின்றனர். இலங்கையில் இன்னமும் பல ஆபாசப்பட வலையமைப்புகளும் செக்ஸ் உணர்வுகளைத் தூண்டும் இணையங்களும் தடைசெய்யப்படாமல் இருக்கும்போது, புலம்பெயர் நாட்டு இணையங்களை மட்டும் இலங்கை அரசு தடைசெய்ய இவ்வளவு பிரயத்தனத்தை ஏன் காட்டவேண்டும் ? இப்ப புரிகிறதா மேட்டார் ?

Geen opmerkingen:

Een reactie posten