தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 15 november 2011

பிரபாகரன் பயங்கரமானவராக இருக்கலாம்: ஆனால் அவர் இடையூறு செய்யவில்லை !

15 November, 2011 by admin
தான் பிரதம நீதியசராகப் பதவி வகித்த போது வடக்கில் நீதிமன்றங்களை அமைக்கும் திட்டத்துக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தடைகளை ஏற்படுத்தவில்லை என்று முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என். சில்வா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா, திருகோணமலை ஆகிய இடங்களில் தான் அந்தக் காலங்களில் நீதிமன்றங்களை நிறுவியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பிரபாகரன் பயங்கரமானவராக இருக்கலாம். ஆனால் அவர் எந்த இடைஞ்சலையும் செய்யவில்லை. சண்டை இடம்பெற்றுக் கொண்டிருந்த காலத்தில் யாழ்ப்பாணத்தில் புதிய நீதிமன்றங்களுக்கு அடிக்கல்லை நாட்ட முடிந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். மற்றும் வன்னியிலும் கூட நீதிமன்றங்களை திறக்க புலிகள் அனுமதித்திருந்தனர் என அவர் தெரிவித்துள்ளார். கடந்த சில காலங்களாகவே முந் நாள் பிரதம நீதியரசர் சரத் என். சில்வா அரசாங்கத்துக்கு எதிரான பல கருத்துக்களை கூறிவருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Geen opmerkingen:

Een reactie posten