தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 21 november 2011

இதயச்சந்தி​ரன் மீது சேறடிக்கும் ஐ.பி.சீ வானொலி !

உண்மைகள் எப்பொழுதுமே அசௌகரியமானவையாகவும் கசப்பானவையாகவும்தான் இருக்கும் என்பார்கள். அதைத்தான் ibc யின் இந்த அறிவிப்பாளர் அனுபவிக்கின்றாரோ? முகமூடிகளைக் கிழிப்பவர்கள் எனத் தம்மைத் தாமே கூறிக்கொள்பவர்களின் முகமூடிகள் கிழியும்பொழுது, இந்த முகமூடிகள் கிழியும் மனிதர்கள் என்ன செய்வார்களெனில் உண்மை கூறுபவர்களின் மேல் சேறடித்து தம்மை குற்றமற்றவர்களாக்க முயற்சிப்பார்கள். இதுதான் சம்பந்தப்பட்ட IBC அறிவிப்பாளர் விடயத்திலும் நடக்கிறது. ஒரு தனிப்பட்ட மனிதரை விமர்சிப்பதே தப்பு. அதிலும் ஒரு ஊடகவியலாளராக இருந்துகொண்டே இன்னொரு சக ஊடகவியலாலரை, அதுவும் அவர் பெயரைச் சொல்லி விமர்சிப்பதென்பது மன்னிக்கவே முடியாத, அசிங்கமான செயல். இப்படிப்பட்ட அவதூறான செய்கைகள் மூலம இந்த அறிவிப்பாலரெல்லாம் தன்னை ஒரு ஊடகவியலாளர் என்று அழைப்பதற்கே தகுதியற்றவராகிறார்..

கிறிஸ்துவுக்கு முன் கிறிஸ்துவுக்குப் பின் என்று அழைப்பதுபோல் IBC யையும் 2009 இக்கு முன் 2009 இக்குப் பின் என நாம் பிரித்துப் பார்க்க வேண்டியுள்ளது. தமிழ்த் தேசிய வளர்ச்சிக்காக தேசிய உணர்வுள்ளவர்களால் வளர்க்கப்பட்டதுதான் இந்த IBC. ஆனால் முள்ளிவாய்க்காலின் பின் இது தேசியத்தைப் புறம் தள்ளிவிட்டு தன் வளர்ச்சிக்காக மட்டும் அந்த " தேசியம்" எனும் சொல்லை பயன்படுத்தி மக்களை ஏமாற்றும் ஒரு ஊடகமாக மாறியுள்ளது என்பதுதான் உண்மை. இதை IBC அடிக்கடி கூறும் பாஷையிலேயே கூறுவதானால் இப்படிப்பட்ட தேச விரோத சக்திகள் குறித்து மக்கள் நாம் மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும்.

"தொழில் நுட்ப வளர்ச்சியை நாம் நமது விடுதலைக்காகப் பயன்படுத்துவதை விட்டுவிட்டு ஒருவரை ஒருவர் தாக்குவதற்குப் பயன்படுத்தக் கூடாது" ..இவை அந்தக் குறிப்பிட்ட அறிவிப்பாளரின் திரு வாயிலிருந்து உதிர்ந்த அறி( வில்லா) வுரைகள்.. இப்படிக் கூறிக் கூறியே ஒரு தனிமனிதனை, அதுவும் ஒரு சக ஊடகவியலாளரைத் தாக்கும் செயலென்பது உங்கள் பாணியில் விடுதலைக்குப் பயன்படுத்தும் செயலோ? ஒரு நிமிடமல்ல, இரு நிமிடங்களல்ல.. இரண்டு மணித்தியாலங்களாக ஒரு தனி மனிதனை அதுவும் அவர் பெயர் சொல்லித் தாக்குவதற்குத் தானா இந்த ஊடகத்தை நடத்துகின்றீர்களோ என்ற சந்தேகமே வருமளவிட்கிருந்தது அந்த அறிவிப்பாளரின் அட்டகாசம்..

இது தற்செயலாக நடந்த ஒரு விடயம் கூட இல்லை.. ஒரு தனிமனிதனைத் தாக்கவேண்டுமென்றே கங்கணம் கட்டி நடத்தப்பட்டதுதான் நேற்றைய நிகழ்ச்சி. எழுதி வைத்து கூறியதையே மூன்று தடவைகள் கூறினீர்கள்..அதை தாக்கப் பட்ட சம்பந்தப்பட்டவர் கேட்டிருப்பாரோ இல்லையோ மக்கள் நாம் கேட்டோம். நேற்றைய சம்பவம் எதைக் காட்டுகின்றது எனில் இந்த வானொலி நடாத்தப் படுவது மக்களுக்காக அல்ல. தமது சொந்தத் தேவைக்காக மட்டுமே. இப்படிப்பட்ட வசைபாடல்களையும் அவதூறு வீசுதளையும் உடனே நிறுத்துங்கள்.

அடிக்கடி அந்த அறிவிப்பாளர் கூறிய வசனம் " உண்மையான தமிழன், உண்மையான தமிழ் பேசும் தமிழன், உண்மையான தமிழ்த் தாய்க்குப் பிறந்த எந்த ஒரு தமிழனும் பாதை மாறி செல்ல மாட்டான். யாரையும் விமர்சிக்க மாட்டான்"..இதை நான் கூறவில்லை...ஆமாம்.. இவைகள் நேற்று வானொலியில் அந்த அறிவிப்பாளர் முழங்கிய வசனங்கள். அப்படியானால் அதே தமிழினத்தில் பிறந்த ஒருத்தியாகக் கேட்கிறேன். உண்மையானத் தமிழ்த் தாய்க்குப் பிறந்த எந்தத் தமிழனும் யாரையும் விமர்சிக்க மாட்டான் என்றால் இன்னொருவரை இரண்டுமணித்தியாலங்களாக விமர்சிப்பதைத் தவிர வேறு எதையும் செய்யாத உங்களை என்னவென்பது? எப்படி அழைப்பது? உண்மையான தமிழ்த் தாய்க்குப் பிறக்கவில்லை என்று ஒரு தமிழ்ப் பெண்ணாக நான் நிச்சயமாக கூறமாட்டேன்..

நாம் எல்லோருமே நல்ல தாய்க்குப் பிறந்தவர்கள்தான்.. அதில் சந்தேகமே வேண்டாம். வாய் இருக்கின்றது, சொற்கள் இருக்கின்றன என்பதற்காக கண்டதையும் சொல்லி வைக்கக் கூடாது.. ஊடகம் இருக்கின்றது என்பதற்காக ஊடக தர்மம் மீறி செயல் படக் கூடாது.. இதுதான் உங்கள் அகராதியில் ஊடகதர்மத்திட்கு வரைவிளக்கணமெனில் பிழையான அகராதியை வைத்திருக்கின்றீர்கள். அந்த அகராதியை மாற்றி விட்டு நல்ல அகராதி ஒன்றை வாங்குங்கள்... ஊடகத்தின் பணி எதுவோ அதை மட்டும் பாருங்கள்.. தனி மனிதரைத் தாக்குவதை உடனே நிறுத்துங்கள். " ஊருக்குதான் உபதேசம் உனக்கும் எனக்குமல்ல" என்பது போல் நடக்கவே கூடாது.

அடிக்கடி மக்கள் என்கிறீர்கள், நம் மண் என்கிறீர்கள், மாவீரர் என்கிறீர்கள், தேசியம் என்கிறீர்கள், தலைவர் என்கிறீர்கள். இவைகளெல்லாம் உதட்டிலிருந்து வெறும் அங்கீகாரத்துக்காக வரும் சொற்களாக இருக்கக் கூடாது. தமிழர் நம்மைப் பொறுத்தவரை இவைகளெல்லாம் உன்னதமான சொற்கள்..உண்மையான உள்ளுணர்வுடன் உள்ளத்துளிருந்து மட்டும் வரவேண்டிய சொற்கள்...அதைப் பேசுவதற்கு நன்றாக இருக்குதே என்று மேடைப் பேச்சு போல் பேசிவிட்டுச் செல்லாதீர்கள். ஏனெனில் 2009 இல் திலீபன் வாரத்தில் இதே அறிவிப்பாளர் போட்ட கூத்து என்னவென்பதை நான் இங்கே ஆதாரத்துடன் நிருபிக்கேவேண்டிய சூழ்நிலையை இவரே உருவாக்கியுள்ளார்.

இவரைப் பொறுத்தவரை திலீபனின் தியாகம் என்பது தியாகம் எனும் வெறும் சொல்லால் மட்டும் வரையறுக்கப் படுகின்றது. உணர்வுபூர்வமாக எதுவும் கிடையாது. உயிர்த் தியாகம் என்பது தமிழிலுள்ள ஆயிரம் சொற்களில் ஓன்று.. அப்படித்தான் இவர் நினைக்கிறார் போலும்.. செப்டம்பர் 2009,23 ஆம் திகதி இதே அறிவிப்பாளர் திலீபனைப் பற்றிய ஒரு நிகழ்ச்சியை நடத்தினார்.. அந்த வாரத்தையே திலீபன் வாரமாக பிரகடனப் படுத்தினார்கள்..தேசியப் பாடல்களையும் போட்டு தனது குரலையும் கூடிய அளவுக்கு சோகமாகவே வைத்து இவர் நடாத்திய விதத்தைப் பாராட்டவே வேண்டும்.. ஏனெனில் அவ்வளவும் நடிப்பு.. ஏன் நடிப்பு என்பதைக் கூறினால் நீங்கள் அவர் மேல் கோபமே படுவீர்கள். ஆமாம்... திலீபன் வாரம் எனப் பிரகடனப் படுத்திவிட்டு திலீபன் நினைவாக அரை மணித்தியால நிகழ்ச்சி ஒன்றையும் நடத்திய அடுத்த நிமிடம் இந்த உண்மையான தமிழ் உணர்வுள்ள நபர் என்ன செய்தார் என்றால் குதூகலமான ஒரு நிகழ்ச்சி..

மக்களுடன் கலந்துரையாடினார்.. துள்ளும் குதூகலக் குரலுடன் என்ன கதைத்தார்? எதைப் பற்றிக் கதைத்தார்? திலீபனைப் பற்றி என்றா நினைக்கிறீர்கள்? அதுதான் இல்லை. புதிதாக வந்த திரைப் படத்தைப் பற்றி. அதுவும் முள்ளிவாய்க்கால் அவலம் நடந்து ஐந்து மாதங்கள் கூட இல்லை. இவர் திரைக் கூத்துப் பற்றிக் கூத்தடிக்கின்றார். இந்தப் படம் பார்த்தீர்களா?, அந்தப் படம் பார்த்தீர்களா?, அந்த SCENE நல்லா இருக்கு இந்த SCENE நல்லா இருக்கு...இதுதான் இவர் பேசியது...இவர்களால் எப்படி இப்படி வேஷம் போட முடிகிறது என மனம் நொந்தேன்..இதைக் கேட்டு நான் வேதனைப் பட்டதைப் பார்க்கப் பொறுக்காத என் சகோதரம் உடனடியாக IBC இக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பினார். அதன் COPY இத்துடன் இணைத்துள்ளேன். அதற்கு அவர் அனுப்பிய பதிலும் இணைக்கப்படுகிறது.

அவர் தமிங்கிலத்தில் எழுதியதன் தமிழாக்கம் இதுதான்

" வணக்கம். நான் யாத்திரா. உங்களின் மின்னஞ்சல் படித்தன்.. நன்றி..சில விடயங்களை நீங்கள் சொல்லும்பொழுதுதான் திருத்திக் கொள்ள முடியும். நிகழ்ச்சி செய்யும்பொழுது அந்தத் தவறு எங்களுக்கு தெரியாது. அதனால் உங்கள் அறிவுரை நல்லது, நன்றி". இதுதான் அவர் எழுதிய பதில்..

இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால் இரண்டு வருடங்களின் பின்பும் நீங்கள் இன்னும் உங்களைத் திருத்திக் கொள்ளவில்லை. இன்னும் அதே தவறிழைக்கும் அறிவிப்பாளர்தான். அதாவது உண்மையான உணர்வுகளற்ற வெறும் உதட்டளவிலான வார்த்தைகளை அள்ளிவீசும் அதே அறிவிப்பாளர்.. உங்களையெல்லாம் பொறுத்தவரை மக்களென்பதும், மாவீரமென்பதும், மண்ணெண்பதும், தேசியமென்பதும், தலைவநென்பதும் வெறும் மக்களை வசியப்படுத்தும் மந்திர சொற்கள். மீண்டும் தப்பிழைக்கின்றீர்கள். திருத்திக் கொள்ளுங்கள். இலட்சக் கணக்காக அங்கே காவு கொள்ளப்பட்ட மக்களின் உயிர்களையும் நம் விடுதலைக்காக மட்டும் தம் இன்னுயிரை ஈந்து மண்ணின் விடுதலைக்காக இன்னும் காத்திருக்கும் மாவீர செல்வங்களையும் உங்கள் சுய முன்னேற்றங்களுக்காகப் பயன்படுத்தாதீர்கள்...நிகழ்ச்சி செய்யும்பொழுது அந்தத் தவறு தெரியாது என நீங்களே உங்கள் கை பட எழுதி இருக்கிறீர்கள்...அதே போல் ஒரு கேவலமான இன்னொரு தவறிழைத்திருக்கிரீர்..குழுக்களிடையில் சிண்டு முடித்துவிடும் வேலைகளை நிறுத்துங்கள். உண்மையான உணர்வுடன் செயற்படுங்கள். இலையேல் மக்களை விட்டு தூர விலகி நில்லுங்கள். அல்லது மக்களே உங்களை விலத்திவிடுவார்கள்..

IBC யை விட்டு விலகிய அத்தனை அறிவிப்பாளர்களும் உங்களுக்கு நல்லாசி வழங்குவதாக கூறியமைக்கு நன்றி. அவர்களைப் பார்த்தாவது கற்றுக்கொள்ளுங்கள்.ஏனெனில் ஒரு உண்மையான ஊடகவியலாளர் அதைத்தான் செய்வர். அதுதான் ஊடக தர்மம் என்பது.. ஆசி வழங்க வேண்டும்.. தேவையற்ற பொய்யான அவதூறுகள் தனி நபரின் மீது அள்ளிவீசுவது ஊடகதர்மம் அல்ல...காய்க்கும் மரம்தான் கல்லடிபடும் என அடிக்கடி கூறி உங்களை நீங்களே காய்க்கும் மரம் போல் காட்ட முனைந்து அந்த ஊடகவியலாலர்மேல் அடிக்கடி கற்களை வீசுவதன் மூலம் இங்கே காய்த்து குலுங்கும் மரம் அவர்தான் என்பதையும் நீங்கள் வெறும் பட்டமரம் என்பதையும் நிரூபித்திருக்கின்றீர்கள். அதாவது வடிவேலுவின் பாணியில் சொன்னால் " காய்க்கும் ஆனா காய்க்காது"..உங்கள் செயற்பாடுகளுக்கு "யாளரா" போடவில்லை என்பதற்காக தனிபட்டவர்மேல் தேவையற்ற வசை பாடாதீர். உங்கள் அங்கீகாரத்துக்காக மற்றவர்கள் மேல் சேறு பூசாதீர். முறையான செயற்பாடுகள் மூலம் முன்னேறப் பாருங்கள்...அப்பொழுது ஒவ்வொருவரினதும் ஆசீர்வாதமும் உங்களுக்குக் கிட்டும். நாடு கடந்தவர்களும் சரி நாடு கடக்காதவர்களும் சரி, தலைமைப் பதவி தேடி யாரும் அலையாதீர். சிங்களத்துக்கு விலை போகாதீர். நாட்டுக்குள்ளே பேச்சு வார்த்தைகள் எனக் கூறி மக்களின் உரிமைகளை விற்காதீர்கள். தனிப்பட்டோரின் சுயநலச் செயற்பாடுகளினால் நம் இனமே அழிந்துவிடும் என்பதை மக்கள் உணர்ந்து கொள்ளாத முட்டாள்களல்ல.

நன்றி..
கௌரி


"குற்றமே காக்க பொருளாகக் குற்றமே
அற்றம் தரூஉம் பகை."--குறள் 434

"வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும்"--குறள் 435

Geen opmerkingen:

Een reactie posten