தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 2 november 2011

லங்கா ஈ நியூஸ் முடக்கப்பட்டமை குறித்து அமெரிக்கா அதிருப்தி


[ புதன்கிழமை, 02 நவம்பர் 2011, 08:51.19 AM GMT ]
லங்கா ஈ நியூஸ் இணைய தளம் முடக்கப்பட்ட சம்பவம் குறித்த அமெரிக்கா அதிருப்தி வெளியிட்டுள்ளது.
தனிப்பட்ட ஓர் ஊடக நிறுவனத்தின் மீதான அடக்குமுறைக்காக அமெரிக்கா குரல்கொடுக்கவில்லை என அந்நாட்டு தூதரகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
எனினும், ஊடக சுதந்திரம் ஜனநாயக விழுமியங்களின் பிரதான காரணிகளில் ஒன்று என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அந்த வகையில் செய்தி இணைய ஊடகங்களின் மீது அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்ட ரீதியாக இலங்கையில் இயங்கி வரும் சகல இணைய தளங்களையும் பார்வையிடும் மக்களின் உரிமையை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
லங்கா ஈ நியூஸ் இணைய தளம் இலங்கை அரசாங்கத்தையும், குறிப்பாக ஜனாதிபதி மற்றும் அவரது குடும்பத்தாரையும் கடுமையான விமர்சனம் செய்து செய்திகளை வெளியிட்டு வரும் ஓர் ஊடகமாக கருதப்படுகின்றது.

Geen opmerkingen:

Een reactie posten