தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 3 november 2011

கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை"-சம்பந்தன்- பான் கீ மூன் சந்திப்பு!

சம்பந்தன்- பான் கீ மூன் சந்திப்பு - கடைசிநேரத்தில் கைவிடப்பட்டது ஏன்?

[ Thursday, 03 November 2011, 05:06.47 AM. ]
ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூனுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் இடையில் நேற்றுமுன்தினம் நடைபெறவிருந்த சந்திப்பு கடைசி நேரத்தில் ரத்துச் செய்யப்பட்டதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
நேற்றுமுன்தினம் நியுயோர்க்கில் ஐ.நா தலைமையகத்தில் இந்தச் சந்திப்பு நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

பான் கீ மூனுடனான சந்திப்பு ரத்துச் செய்யப்பட்டதால், ஐ.நா பொதுச்செயலரின் அரசியல் விவகாரச் செயலர் லைன் பாஸ்கோ, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களைச் சந்தித்துப் பேசியுள்ளார்.

இந்தச் சந்திப்பின் போது போருக்குப் பிந்திய மீள்குடியமர்வு, சிறிலங்காவின் தற்போதைய நிலைமைகள் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் எடுத்துக் கூறியுள்ளனர்.

அத்துடன் ஐ.நா பொதுச்செயலரிடம் கையளிப்பதற்காக சிறிலங்கா தொடர்பான அறிக்கை ஒன்றையும் அவரது அரசியல் விவகாரச் செயலர் லைன பாஸ்கோவிடம் கையளித்துள்ளதாகவும் கொழும்பு ஆங்கில நாளிதழ் தகவல் வெளியிட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூனுக்கும் இடையிலான சந்திப்பு அதிகாரபூர்வமற்ற வகையிலேயே ஒழுங்கு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

நேற்று முன்தினம் பான் கீ மூன் அதிகாரபூர்வமான சந்திப்புகளை மட்டும் நடத்தி விட்டு, ஒழுங்குபடுத்தப்பட்டிருந்த ஏனைய உள்ளக சந்திப்புகளை ரத்துச் செய்து விட்டு பிரான்ஸ் சென்றிருந்தார்.

அண்மையில் உள்நாட்டுப்போர் முடிவுக்கு வந்த லிபியாவுக்குச் செல்வதற்குச் செல்வதற்காக பிரான்ஸ் சென்றதாலேயே, நேற்றுமுன்தினம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருடனான சந்திப்பு உள்ளிட்ட பல உள்ளக சந்திப்புகளை பான் கீ மூன் கைவிட்டதாக நியுயோர்க் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் நேற்று லிபியத் தலைநகர் திரிப்பொலிக்கு திட்டமிடப்படாத திடீர் பயணம் ஒன்றை மேற்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Geen opmerkingen:

Een reactie posten