தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 3 november 2011

இதென்ன அதிர்வின் காமெடி டைம்மா

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் ஆழ்ந்த உறக்கத்தில் சரவணபவன் எம்.பி.!
03 November, 2011 by admin
யாழ்.மாவட்ட மற்றும் கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் கூட்டம் இணைத் தலைவர்களான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வடமாகாண ஆளுநர் சந்திரசிறி ஆகியோர் தலைமையில் செவ்வாய்க்கிழமை (01.11.2011) யாழ்.மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. இந்த அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரான ஈ. சரவணபவன், சி.சிறிதரன் மற்றும் ஜ.தே.க. யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் ஈபிடிபி நாடாளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்திரி அலன்ரின், வடமாகாண ஆளுநரின் செயலர், யாழ்.கிளிநொச்சி அரச அதிபர்கள், அரச அதிகாரிகள், திணைக்களத் தலைவர்கள் , பிரதேச செயலளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தான் பிரதிநிதித்துவப்படுத்தும் கிளிநொச்சி மாவட்டத்தின் அபிவிருத்திகள் தொடர்பாகவும் மக்களின் தேவைகள் தொடர்பாகவும் அரச அதிகாரிகளிடம் கேள்விகளைக் கேட்டு அபிவிருத்தியின் குறைபாடுகளைச் சுட்டிக்காட்டி அவை நிவர்த்தி செய்யப்பட வேண்டும் என்பதில் மிக ஆர்வமாகவும் ஆரோக்கியமான கருத்துக்களைத் குறிப்பிட்டிருந்தார்.

ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்டத்தைப் பிரதி நிதித்துவப்படுத்தும் ஈ. சரவணபவன் தனக்கும் இந்தக் கூட்டத்திற்கு சம்மந்தமே இல்லாதவர் மாதிரி அமைதியாக இருந்தார். அத்தோடு இடைக்கிடையே தூங்கி விழுந்தார். அத்தோடு உள்ளுர் கைத் தொழில் அபிவிருத்தி தொடர்பாக ஆராயும் போது தூங்கி விழித்துக் கொண்ட சரவணபவன் சுன்னாகத்தில் அமைக்கப்படவுள்ள கைத் தொழில் பேட்டையில் தனக்கு முதலீடு செய்ய வாய்ப்புத் தரவில்லை என வடமாகாண ஆளுநரிடம் முறையிட்டும் உள்ளாரம்.




Geen opmerkingen:

Een reactie posten