தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 12 november 2011

விடுதலைப் புலிகளை ஒழிப்பதற்கே இந்தியா விரும்பியது : நோர்வே தெரிவிப்பு

தமிழீழ விடுதலைப் புலிகளை இல்லாது ஒழிப்பதற்கே இந்தியா விரும்பியதாக நோர்வே தெரிவித்துள்ளது.
நோர்வேயின் சமாதான முயற்சிகள் குறித்து மீளாய்வு அறிக்கை இன்று வெளியிடப்பட்டது.
இந்திய மத்திய அரசாங்கம் புலிகளை இல்லாதொழிப்பதற்கு இலங்கைக்கு உதவிகளை வழங்கியதாக மீளாய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக 2004ம் ஆண்டு மத்தியில் ஆட்சியை கைப்பற்றிய காங்கிரஸ் புலி விரோத கொள்கைகளை பின்பற்றியது.
பல்வேறு நிபுணர்கள் மற்றும் முக்கியஸ்தர்களிடம் கருத்துக்கள் கோரப்பட்டு இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
தமிழ் மக்களின் உரிமைகளுக்கு மதிப்பளிக்கப்பட வேண்டுமென வெளிப்படையாக காட்டிக் கொண்ட போதிலும், புலிகளுக்கு எதிரான போரின் போது இலங்கை அரசாங்கத்திற்கு இந்தியா எவ்வித அழுத்தங்களை பிரயோகிக்கவில்லை.
நோர்வே அரசாங்கம் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் அதிகளவில் நட்புறவு கொண்டிருந்ததாக இந்தியா பல தடவைகள் விமர்சனம் செய்திருந்தது.
நேரடியாக போருக்கு உதவிளை வழங்காத போதிலும் இந்தியா புலனாய்வு மற்றும் விமான ராடார்களை வழங்கியது.
இந்தியாவின் புலிகளுக்கு எதிரான நிலைப்பாடே இலங்கையை போருக்கு அதிளவில் உந்தியது.
பொதுமக்கள் உயிரிழப்புகளை வரையறுக்குமாறு சில சந்தர்ப்பங்களில் இந்தியா கோரிய போதிலும் போருக்கு தொடர்ச்சியாக ஆதரவளித்து வந்தது.
இறுதிக் கட்டப் போரின் புலிப் போராளிகள் சரணடைவதனை இலங்கை அரசாங்கமோ அல்லது இந்தியாவோ விரும்பவில்லை என நோர்வேயின் மீளாய்வு அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

Geen opmerkingen:

Een reactie posten