தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 10 november 2011

பாரிஸ் - லாசப்பலில் தேசவிரோதிகளால் மாவீரர் நாள் அறிவொப்பொட்டிகள் கிழிப்பு ! மக்கள் கொந்தளிப்பு

பிரான்சில் தமிழர் வர்த்தக மையமான லாசப்பல் பகுதியில் புதன்கிழமை இனந்தெரியாத விரோதிகளால் மாவீரர் நாள் அறிவொப்பொட்டிகள் கிழிக்கப்பட்டுள்ளன
தமிழர் வர்த்தக நிலையங்களுக்குள் அத்துமீறி புகுந்த இந்தக் கும்பல் மாவீரர் நாள் அறிவொப்பொட்டிகளை கிழித்ததோடு எச்சரித்தும் உளள்ளனர்.

இச்செயல் குறித்து மக்கள் தங்களது கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.
வர்த்தக நிலையங்களுக்குள் புகுந்து அத்துமீறிய இச்செயல் குறித்து பிரென்சுக் காவல்துறையிடம் முறையிடுவதற்கு சில வர்த்தகர்கள் எண்ணியுள்ளனர்.
தமிழர் தாயகத்தில் மாவீரர் கல்லறைகள் சிங்கள் காடையர்களால் அழிக்கப்பட்டுவரும் நிலையில் அந்த மாவீரர்களை நினைவேந்தும் மாவீரர் நாள் நிகழ்வுக்கான அறிவொப்பொட்டிகள் கிழிக்கப்பட்டமை சிங்கள காடையர்களின் செயலுக்கு ஒப்பானதென தேசிய செயற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை கடந்த ஞாயிற்றுக்கிழமையும் தமிழர் போராட்டத்தை பலவீனப்படுத்தும் நோக்கிலான கையெடொன்றும் தமிழர் வர்த்தக பகுதியில் இனந்தெரியா தேசவிரோத சக்திகளால் விநியோகிக்கப்பட்டிருந்தமை பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தை சிதைக்கும் நோக்கில் எழுதப்பட்டிருந்த குறித்த கையேடு சிங்கள புலனாய்வுக்கு கைக்கூலிகளால் விநியோகிக்கப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகின்றது.
மாவீரர் நாள் நெருங்கி வரும் நிலையில் மக்களை குழப்பும் இத்தகைய செயற்பாடுகள் தேசவிரோத சக்திகளால் தொடர்ந்தும் மேற்கொள்ளப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Geen opmerkingen:

Een reactie posten