தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தர் கலந்து கொள்ளும் நிகழ்வில் கலந்து கொண்டு அவருடன் அமர்ந்து உணவு உண்பதற்கு கனடா வாழ் புலம்பெயர் மக்கள் தலா 100 டொலர் நிதி செலுத்தவேண்டும் எனவும் பிரித்தானியா வாழ் புலம்பெயர் மக்கள் தலா 50 பவுண்ஸ் நிதியும் செலுத்த வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டிருக்கின்றது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது,அமெரிக்காவின் உயர் மட்ட அழைப்பினை அடுத்து அமெரிக்காவிற்கான பயணத்தினை மேற்கொண்டிருந்த கூட்டமைப்பினரில் இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா, சுமந்திரன் ஆகியோர் கனடாவிற்கான பயணத்தினை மேற்கொண்டிருந்தனர். பேச்சாளர் சுரேஸ் பிறேமச்சந்திரனுக்கான அனுமதியினை கனேடிய உயர்ஸ்தானிகரகம் வழங்கவில்லை அது வேறு விடையம். சரி மேட்டருக்கு வருவோம் !
கனடா செல்லும் கூட்டமைப்பினருக்கான இராப் போசனத்திற்கான அழைப்பினை கனடா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கிளை என்ற பெயரிலான அமைப்பு விடுத்திருக்கின்றது. இந்த அமைப்பினால் கனடா வாழ் புலம்பெயர் மக்கள் 600 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதாகவும், நிகழ்வில் கலந்து கொள்வோர் தலா நூறு டொலர்களை செலுத்த வேண்டும் என்றும் அழைப்பிதழலில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. அதேவேளை எதிர்வரும் 6ம் திகதி பிரித்தானியாவிற்கான பயணத்தினை மேற்கொள்ளவுள்ள கூட்டமைப்பினருக்கான விருந்துபசார நிகழ்வில் பங்கு கொள்ளவுள்ளவர்கள் தலா 50 பவுண்ஸ்களைச் செலுத்த வேண்டும் என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்னளர்.
அல்லல்படும் மக்களுக்கு கைகொடுப்போம் என்று அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டிருக்கின்ற போதிலும் அங்கு சேர்க்கப்படும் நிதி எங்கு சென்று சேரும் என்பது யாருக்கும் தெரிவதற்கு வாய்ப்பில்லை. கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்காக கனடாவில் சேர்க்கப்பட்ட நிதி தொடர்பிலான கணக்கறிக்கை இதுவரையில் வெளியிடப்பட்டிருக்கவில்லை. அதேபோல கடந்த தேர்தல்களுக்காக தாம் சேகரித்து அனுப்பிய நிதி தொடர்பில் லண்டன் கூட்டமைப்புக் கிளையினர் லண்டனுக்கான பயணத்தினை மேற்கொண்டிருந்த கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனிடம் கேள்வி எழுப்பிய போது, அவ்வாறான நிதி தொடர்பில் தமக்கு எதுவுமே தெரியாது என்று சிறீதரன் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
அது எல்லாம் போக சம்பந்தன் ஐயாவைக் காணவேண்டும் என்றால் 50.00 பவுன்ஸ் போதும் என்ற நிலை தோன்றியுள்ளது
Geen opmerkingen:
Een reactie posten