தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 24 november 2011

பிரபாகரனை கொலை செய்ய உத்தரவிட்டார் ரஜீவ்காந்தி (அவலங்களின் அத்தியாயங்கள்- 8) –நிராஜ் டேவிட்

இப்படி தவறாக எழுதுபவர்களாலும் நிஜத்தை ஏற்காத புலிகளாலும் தமிழர் இலங்கையிலும் இந்தியாவிலும் மட்டுமல்லாமல் உலகம் பூராவும் எமாளிகளாக்கப்பட்டு தவறான பாதைக்கு மாற்றப்படுகின்றனர்.தன்னை விட பெரியவன் எவன் என்பவன் தமிழன்,அடி விழுந்தாலே பணிவான்.நிராஜ் போன்றோர் வரலாறுகளை பாழாக்குவதுடன் இந்திய ராணுவத்தை வென்றதாக பகிடி விட்டு அதன் காரணமாக புலிகளை தலைக்கனம் கொள்ளவைத்து தமிழர் அழிவுக்கு நேரடி காரணமாயினர்.இவர்கள் தங்கள் குடும்பங்களுடன் சுவிசில் பிச்சைக்காசிலும் கள்ளவேலை செய்தும் பிழைப்பை பெருக்கியபடி இலங்கை  புலிகளை உலகப்பயங்கரவாதிகள் ஆக்கினர்.இதெல்லாம் வெளிநாட்டில் தங்கள் வறட்டுப் பெருமை பேசவே.இன்று அழிவின் பின் இத்தனை பொய்களுடன் இப்படி எழுதி யார் குடும்பத்தை அழிக்கப் போகிறாறோ!!இந்திய ராணுவம் கட்டளைக்கு கீழ்ப் படிந்து நடக்கும் சிறந்த படை என்பது உண்மையெனில் ஓய்வு பெற்ற ராணுவம் தன்னால் வழிநடாத்தப்பட்டவர்களை கேவலப்படுத்தியது பொருந்தவில்லையே!!கட்டளைகளை  நிறைவேற்ற வேண்டிய அவர் எப்படி உத்தரவை மறுத்தாராம்??பிரேமதாசா இந்திய ராணுவத்தை இருக்க சொல்லியிருந்தால் புலிகள் வெற்றி எப்படி கிடைத்திருக்கும் என்பதை நாமும் பார்த்திருக்கலாம்,இருந்திருந்தால் புலிகளும் ஆதரவுகளும் அழிந்திருக்க மக்கள் சிங்களவனுக்கு அடிமை ஆயிரார்.
 
[ புதன்கிழமை, 23 நவம்பர் 2011, 10:15.25 PM GMT ]
யாழ் குடாவைக் கைப்பற்றுவதற்கென்று இந்தியப் படையினர் மேற்கொண்ட ஒப்பரேஷன் பவான் இராணுவ நடவடிக்கை (Operation Pavan) 45 நாட்கள் வரை தொடர்ந்தது.
பலாலி காங்கேசன் துறை பண்டத்தரிப்பு யாழ் கோட்டை போன்ற இடங்களில் இருந்தும் மற்றும் விமானத் தரையிறக்கம் கடல் மூலமான தரையிறக்கம் என்று பல முனைகளில் இருந்தும் யாழ் குடாவைக் கைப்பற்றும் அந்த நடவடிக்கை மிகவும் மூர்க்கமாக மேற்கொள்ளப்பட்டிருந்தது.
நான்கு நாட்களில் நிறைவு பெற்றுவிடும் என்று எதிர்பார்த்து ஆரம்பிக்கப்பட்ட இந்த நடவடிக்கை புலிகளின் கடுமையான எதிர்ப்பு காரணமாக 45 நாட்கள் வரை நீடித்தது.
இலங்கையின் சரித்திரத்திலேயே அதுவரை இடம்பெற்றிராதவாறு 35 நாட்டகள் தொடர்ச்சியாக ஊரடங்கு உத்தரவை பிறப்பித்து விட்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இந்த 35 நாட்டகளும் மக்கள் வெளியே நடமாடுவதற்கு இந்தியப்படையினர் அனுமதிக்கவில்லை. தமது வீடுகளை விட்டு வெளியே வந்த அனைத்துப் பொது மக்களும் போராளிகளாகவே இந்தியப் படையினரின் கண்களுக்குத் தென்பட்டார்கள்.
அவர்கள் எந்த வயதினராக இருந்தாலும் சரி மூதாட்டியாக இருந்தாலும் சிறு குழந்தையாக இருந்தாலும் சரி வீட்டை விட்டு வெளியே வருபவர்கள் மரணதண்டனைக்கு உள்ளாக்கப்படவேண்டியவர்களே என்ற எண்ணத்தில்தான் இந்தியப்படையினர் செயற்பட்டார்கள்.
கண்களில் பட்டவர்களையெல்லாம் அவர்கள் சுட்டுத்தள்ளிக்கொண்டிருந்தார்கள்.
இந்தியப் படையினக்கு ஏற்பட்ட ஆரம்பகட்ட இழப்புக்களும் புலிகளின் தொடர்ச்சியான வெற்றிகளும் இப்படியான ஒரு மனநிலையை இந்தியப் படையினரிடம் ஏற்படுத்தியிருந்தாலும் வெளியில் நடமாடுபவர்கள் சட்டத்தை மீறியவர்கள் என்ற ஒரு எண்ணமும் இந்தியப் படையினரது மனங்களில் விதைக்கப்பட்டிருந்தது.
வெளியில் நடமாடுபவர்கள் சுடப்படவேண்டியவர்கள் என்றே இந்தியப் படையினர் நினைத்தார்கள். அவ்வாறு வெளியில் நடமாடுபவர்களைக் கொலை செய்யலாம் என்ற உத்தரவும் மேலதிகாரிகளினால் சாதாரண இந்தியப் படையினருக்கு வழங்கப்பட்டிருந்தது.
தொடர்ச்சியான 35 நாள் ஊரடங்குச் சட்டத்தை அப்பாவிப் பொதுமக்கள் எவ்வாறு தாங்கிக்கொள்வது என்றோ அவர்கள் உணவிற்கு எங்கே போவார்கள் என்றோ வருத்தம் வாதை ஏற்பட்டால் அவர்கள் என்ன செய்வார்கள் என்றோ இந்தியப் படையினர் துஞ்சற சிந்திக்கவேயில்லை.
அவர்கள் சிந்திக்கும் நிலையிலும் விடப்படவில்லை.
உத்தரவுகளை கண்களை மூடிக்கொண்டு கடைப்பிடிக்கும் வகையில்தான் இந்தியப் படையினர் பயிற்றப்பட்டிருந்தார்கள். இந்தியப்படையினரின் பயிற்சிகளின் போது மேலதிகாரிகளின் உத்தரவுகளை இயந்திரத்தனமாக பின்பற்றும் பயிற்சிகளையே இந்தியப்படையினர் அடிப்படையில் பெற்றிருந்தார்கள். அதனால் அந்த உத்தரவுகளுக்கு அமைய தமிழ் மக்கள் விடயத்தில் இந்தியப் படையினர் மிகவும் கொடுரமாகவே நடந்துகொள்ளத் தலைப்பட்டார்கள்.
இந்தியப் படையினரின் பயிற்சிகள்:
நான் இந்தியாவில் கல்விகற்றுக்கொண்டிருந்த போது நான் தங்கியிருந்த வீட்டின் முன்பாக இந்திய இராணுவத்தின் ஒரு பயிற்சி மையம் இருந்தது. இந்தியப் படையினர் இலங்கைக்கு வருவதற்கு முந்திய காலம் அது. கடைசியில் இந்தியப் படையினரே இலங்கைக்கு வந்து ஈழத்தை மீட்டுத் தருவார்கள் என்று அனேகமான ஈழத் தமிழர்களைப் போன்று நானும்; நினைத்துக்கொண்டிருந்த காலம். அதனால் இந்தியப் படையினர் அந்த பயிற்சி மையத்தில் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் அவர்கள் சிரிப்புக்கள் அவர்களது விளையாட்டுக்கள் அனைத்துமே எங்களுக்கு புளகாங்கிதத்தை ஏற்படுத்துவனவாகவே இருந்தன.
அங்கு இடம்பெறுகின்ற பயிற்சி நடவடிக்கைகளை நானும் என்னுடன் தங்கியிருந்த ஈழத் தமிழ்மானவர்கள் சிலரும் ஆவலுடன் அவதானித்து வருவது வளக்கம். பயிற்சியில் ஈடுபடும் இந்திய இராணுவத்தினர் ஒரு நிலத்தை பண்படுத்தி அழகான பூக்கண்றுகளை நட்டு சிறிது காலம் பராமரிப்பார்கள். திடீரென்று ஒரு நாள் அந்தப் பூக்கண்றுகளை முற்றாக அகற்றிவிட்டு அந்த இடத்தை இறுக்கமான தரையாக மாற்றி தார் ஊற்றி ஒரு தளமாக மாற்றுவர்கள். இரண்டு மூன்று நாட்களின் பின்னர் மறுபடியும் அந்த தளத்தை உடைத்து பதப்படுத்தி மீண்டும் பூக்கண்றுகளை நடுவார்கள். இவ்வாறு மாறிமாறி ஒரே இடத்தை வௌ;வேறு நிலைகளுக்கு கொண்டு செல்வார்கள். அதுவும் ஒரே குழுவினரே இந்தக் காரியங்களைத் தொடர்ந்து மேற்கொள்வார்கள்.
இந்திய இராணுவ வீரர்களின் இந்தச் செயல் எங்களுக்கு மிகுந்த ஆச்சரியத்தை தருவதாகவே இருக்கும். தாரிலும் சீமேந்திலும் தளம் அமைப்பதானால் பின்னர் எதற்காகப் பூக்கண்றுகளை நடவேண்டும்?. பூக்கண்றுகளை நடுவதானால் எதற்காக தரையை கெட்டியாக்கவேண்டும்? இதுபோன்ற பல கேள்விகள் எங்களிடையே உலாவந்தவண்ணமே இருக்கும்.
இந்தச் சந்தேகங்களுக்கு விடை கிடைக்கும் சந்தர்ப்பமும் எங்களுக்கு ஒரு நாள் கிடைத்தது. இந்தியப்படை வீரர்களைப் பயிற்றுவிக்கும் அந்த அதிகாரியுடன் கதைக்கும் சந்தர்ப்பம் திடீரென்று எங்களுக்குக் கிடைத்தபோது அந்த பயிற்சியின் காரணம் பற்றி நாம் கேட்டோம்.
அதற்குப் பதிலளித்த அந்த அதிகாரி "இது ஒரு முக்கியமான இராணுவப் பயிற்சி முறை. சாதாரண இராணுவ வீரர்கள் விழைவுகள் பற்றி எதுவுமே யோசிக்காது அவர்களுக்கு வழங்கப்படுகின்ற கட்டளைகளை மட்டுமே கடைப்பிடிக்கும் நிலைக்குத் தங்களை மாற்றிக்கொள்வதற்கான உளவியல் முறைப்பயிற்சியே அது. இராணுவ வீரர்கள் தமது மேலதிகாரிகளினால் வழங்கப்படும் எந்த ஒரு உத்தரவிற்கும் எதற்கும் யோசிக்காது கீழ்ப்படியும் ஒரு கட்டுப்பாட்டை பயிற்றுவிப்பதற்கே இதுபோன்ற பயிற்சிகள் அவர்களுக்கு வழங்கப்படுகின்றன.
இந்திய இராணுவத்தினர் அவர்களது சப்பாத்துக்களின் அடிப்பாகங்களைக்கூட பாலிஸ் செய்து மினுக்கிவைக்கவேண்டும். இது உத்தரவு. அப்படிப் பாலிஸ் செய்யப்பட்ட சம்பாத்துக்களை அணிந்து ஒரு அடி வைத்தாலேயே அதன் அடிப்பாகத்தில் பூசப்பட்டிருக்கும் பாலிஸ் முற்றாக அழிந்துவிடும். ஆனால் அதுபற்றி அந்த இராணுவ வீரன் சிந்திக்கக்கூடாது. கட்டளைகள் எப்படியானதாக இருந்தாலும் அவன் கீழ்ப்படிந்தேயாகவேண்டும்" என்று அங்கு மேற்கொள்ளப்பட்ட பயிற்சி முறைகளுக்கு அந்த உயரதிகாரி விளக்கம் அளித்தார்.
இந்திய சீன யுத்தத்தின் போது மேலிடத்தில் இருந்து சண்டை செய்யவேண்டாம் என்று கிடைத்த ஒரு தவறான உத்தரவிற்கு கீழ்ப்படிந்து நூற்றுக்கணக்கான இந்தியப்படை வீரர்கள் தங்கள் உயிர்களை மாய்த்துக்கொண்ட நிகழ்வையும் அவர் சுட்டிக்காண்பித்தார்.
ஆக இந்தியப் படைவீரர்கள் தமக்கு கிடைக்கும் கட்டளைகளின் அடிப்படையிலேயே எந்தக்காரியங்களையும் செய்யும் ஒரு தரப்பினர் என்பதில் சந்தேகம் இல்லை.
யாருடைய உத்தரவு?
அப்படியானால் 35 நாள் ஊரடங்குச் சட்ட காலத்தில் கண்களில் பட்ட பொதுமக்களையெல்லாம் சுட்டுத்தள்ளும்படியான நடவடிக்கையும் அவர்களுக்கு கிடைக்கப்பெற்ற உத்தரவுகளுக்கு அமையவே நடைபெற்றிருக்கின்றன என்பதில் எந்தவிதச் சந்தேகமும் இல்லை.
ஈழ மண்ணில் இந்தியப் படையினர் மேற்கொண்ட அனைத்து நடவடிக்கைகளையும் நேரடியாக நெறிப்படுத்திக்கொண்டிருந்தவர் என்ற வகையில் இந்தியாவின் பிரதமர் காலம் சென்ற ராஜீவ் காந்தி அவர்களே ஈழத் தமிழர்கள் மீது இந்திய ஜவான்கள் மேற்கொண்ட அனைத்துக் கொலைகளுக்கு பொறுப்பேற்கவேண்டும். ஏனெனில் இலங்கையில் இந்திய அமைதிகாக்கும் படையினர் மேற்கொண்ட நடவடிக்கைகள் அனைத்தும் அரசியல் ரீதியாக கிடைக்கப்பபெற்ற உத்தரவுகளுக்கு அமையவே மேற்கொள்ளப்பட்டதாக லெப்டினட் ஜெனரல் திபீந்தர் சிங் குறிப்பிட்டுள்ளார்.
ரஜீவ் காந்தி நெறிப்படுத்திய இராணுவ நடவடிக்கைகள்:
இந்தியப் படைனரது நடவடிக்கைகள் அனைத்தும் எவ்வாறு நெறிப்படுத்தப்பட்டன என்பது பற்றி இந்தியப் படைகளின் அதிகாரி லெப்டினட் ஜெனரல் திபீந்தர் சிங் அவர்கள் The IPKF in Sri Lanka என்ற தனது புத்தகத்தில் தெரிவித்திருந்தார்.
~~களமுனையில் சண்டையிட்டுக்கொண்டிருந்த ஒவ்வொரு பிரிகேட் படையணியும் டிவிசன் தலைமையகத்தினால் நெறிப்படுத்தப்பட்டுக்கொண்டிருந்தன. அந்த டிவிசன் தலைமையகங்கள் சென்னையிருந்த HQ OFC, IPKF என்ற அமைதிப்படைத் தலைமையகம்@ பூனேயில் இருந்த தென்பிராந்திய இராணுவத் தலைமையகம் (GQ Southern Command)@ மற்றும் டில்லியிலிருந்த இந்திய இராணுவத் தலைமையகம் (Army HQ) என்பனவற்றில் இருந்து உத்தரவுகளை பெற்றுச் செயற்பட்டன.
புது டில்லியில் இருந்த அரசியல் வட்டாரங்களும் இராணுவத் தலைமையகத்துடன் இணைந்து செயற்பட்டுக்கொண்டிருந்தது.
உள் விவகார அமைச்சர் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அமைச்சரவை செயலாளர் முப்படைத் தளபதிகளின் உதவியாளர்கள் RAW, NIB போன்றனவற்றின் பொறுப்பாளர்கள் தகவல் அதிகாரிகள் போன்றவர்களுடன் முக்கியமாக பிரதம மந்திரியின் அலுவலகம் எமது நடவடிக்கைகள் தொடர்பான நெறிப்படுத்தல்களில் நேரடி அங்கம் வகித்தன. தினமும் காலை மாலை இரண்டு தடவைகள் இவர்கள் கூடி ஆராய்ந்து இராணுவ நடவடிக்கைகள் தொடர்பான முடிவுகளை எடுப்பார்கள். இராணுவத்தினர் அடுத்ததாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான பணிப்புரைகளையும் வழங்குவார்கள். எமது நடவடிக்கைகள் தொடர்பான பத்திரிகையாளர் மாநாடுகளை வெளிவிவகார அமைச்சின் இணைச் செயலாளர் திரு பார்த்தசாரதி நடாத்தி வந்தார். அவரது இந்த நடவடிக்கைகள் எமக்கு மிகவும் உறு துணையாக இருந்தன.|| இவ்வாறு திபீந்தர் சிங் இந்தியப் படை தொடர்பாக எழுதியிருந்த புத்தகத்தில் குறிப்பிட்டிருந்தார்.
கள முனையில் நடைபெற்ற அனைத்து விபரங்களும் உயர்மட்டம் வரை உடனடியாகவே அனுப்பப்பட்டு வந்தன. அந்த உயர் மட்டம் என்பது பிரதமர் ராஜீவ் காந்தியின் நேரடி நெறிப்படுத்தலில் செயற்படுத்தப்பட்டுக் கொண்டிருந்த ஒரு குழுவாகும். ஆக மொத்தத்தில் ஈழ மண்ணில் இந்தியப் படையினரின் நடவடிக்கைகள் அனைத்துமே இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியினாலேயே நேரடியாக நெறிப்படுத்தப்பட்டுக்கொண்டிருந்தன.
ராஜீவின் மனநிலை:
புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு ஒரு பாடம் படிப்பித்தேயாகவேண்டும் என்ற வெறி இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியிடம் இருந்ததாக அப்பொழுது அவருடன் நெருங்கிப் பழகிய பலர் பின்னர் தெரிவித்திருந்தார்கள்.
இந்தியாவின் ஆட்சிப் பொறுப்பை புதிதாக ஏற்றிருந்த ராஜீவ் காந்தி ஒரு கௌரவம் மிக்க புரட்சித் தலைவராக உலகில் வலம் வர ஆரம்பித்திருந்த அந்தக் காலகட்டத்தில் விடுதலைப் புலிகளிடம் அடி வாங்குவது அவருக்கு பாரிய ஒரு கௌரவப் பிரச்சினையாகவே இருந்தது. அவர் சிறிலங்கா அரசுடன் செய்துகொண்டிருந்த சர்வதேசப் புகழ் வாய்ந்த ஒப்பந்தத்தை புலிகள் ஏற்கவில்லை என்பது அவரால் ஜீரனித்துக் கொள்ள முடியாத ஒன்றாக இருந்தது. இலங்கையில் அமைதி திரும்பப் பாடுபட்ட ராஜீவின் பெயர் அமைதிக்கான அடுத்த நோபல் பரிசுக்கு சிபாரிசு செய்யப்படவேண்டும் என்று இந்தியப் பத்திரிகைகள் கட்டம் கட்டிச் செய்தி வெளியிட்டுவருகையில் புலிகள் அவருக்கு ஒத்துழைக்காதது ராஜீவை கோபத்தின் உச்சத்திற்கே கொண்டு சென்றிருந்தது.
எல்லாவற்றிற்கும் மேலாக ராஜீவ் ஆட்சிக்கட்டில் அமர்ந்தவுடன் சுவீடனில் உள்ள போர்போஸ் ஆயுதக்கம்பணி போன்ற பாரிய ஆயுதக்கம்பனிகளிடம் இருந்து நவீன ஆயுதங்களைக் கொள்வனவு செய்து இந்தியாவை ஒரு வல்லரது ரேஞ்சுக்கு கோண்டு செல்லுவதாக பம்மாத்துக் காண்பித்துக்கொண்டிருந்த போது இலங்கையில் ஒரு சிறு போராளிக் குழுக்களிடம் இந்தியப் படை மரண அடி வாங்கிக்கொண்டிருப்பது ராஜீவிற்கு மிகவும் அவமானமாக இருந்தது. அதுவும் பாக்கிஸ்தான் சீனா போன்ற எதிரி நாடுகளை தனது இராணுவ பலத்தைக் கொண்டு இனிமேல் மிரட்ட முடியாத ஒரு சூழ்நிலை உருவாகிவிட்டது பற்றியும் அவருக்கு கவலையாக இருந்தது. இவை அனைத்திற்கும் காரணமான புலிகளை பழிதீர்க்கவேண்டும் என்ற வெறியில் இந்தியப் படை என்ன செய்தாவது புலிகளை ஒழித்துவிடவேண்டும் என்ற உத்தரவை இந்திய இராணுவத்திற்கு வழங்கியிருந்தார்.
பிரபாரணை கொல்லுங்கள்
அதுமாத்திரமல்ல இந்தியப் படைகளுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் சண்டைகள் ஆரம்பமாவதற்கு முன்னதாகவே விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை சுட்டுக்கொல்லவேண்டும் என்ற உத்தரவை தன்னிடம் ரஜீவ்காந்தி பிறப்பித்திருந்ததாக மேஜர் ஜெனரல் ஹரிக்கிரத்சிங் பின்நாட்களில் தெரிவித்திருந்தார். 1987 செப்டெம்பர் நடுப்பகுதியில் இந்தியப் படைக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நடைபெற்ற ஒரு பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளவென பலாலித் தளம் வரவிருந்த பிரபாகரனை சுட்டுக் கொல்லும்படியான உத்தரவை பிரதமர் ரஜீவ்காந்தி பிறப்பித்ததாகவும் தான் அந்த உத்தரவை ஏற்க மறுத்ததாகவும் பின்நாட்களில் அவர் எழுதிய சுயசரிதையில் ஹரிக்கிரத் சிங் தெரிவித்திருந்தார்.
(In September 1987, a political dialogue between the LLTE and an Indian delegation took place at Palaly and a peaceful solution seemed to be in sight. The creation of the [Interim Administration Council] was to be thrashed out. The date set for the meeting to be held at my headquarters at Palaly and chaired by Dixit, was 16-17 September 1987.”
“On the night of 14/15 September 1987, I received a telephone call from Dixit, directing me to arrest or shoot Pirabakaran when he came for the meeting. Telling Dixit that I would get back to him I placed a call to the [Overall Forces Commander]. Lt. Gen. Depinder Singh.”
“Lt. Gen. Depinder Singh directed me to tell Dixit that we, as an orthodox Army, did not shoot people in the back when they were coming for a meeting under the white flag. I then spoke to Dixit in Colombo and conveyed the message emphasizing that I would not obey his directive.”
“I pointed out that the LTTE supremo had been invited by the IPKF in order to find a solution to the problems in the implementation of the Accord. Dixit replied, ‘He Rajiv Gandhi has given these instructions to me and the Army should not drag its feet, and you as the GOC, IPKF will be responsible for it.’” )
ரஜீவ் காந்தியே பொறுப்பு
புலிகளிடம் தமக்கு ஏற்பட்டிருந்த ஆரம்ப தோல்விகளுக்கு பொதுமக்களின் உயிரிழப்புக்கள் பற்றி இந்தியப் படைகள் அதிகம் அக்கறைப்பட்டதே காரணம் என்று இந்தியப் படை அதிகாரிகள் பின்நாட்களின் சப்பைக்கட்டு கட்டியிருந்தார்கள்.
அதேவேளை என்ன விலை கொடுத்தாலும் பறவாயில்லை. பொதுமக்கள் இழப்பு ஏற்பட்டாலும் பறவாயில்லை. புலிகளை வெற்றிகொண்டுவிடவேண்டும்: அதுவும் உடனடியாக அதைச் செய்யவேண்டும் என்று ராஜீவ் உத்தரவு பிறப்பிறப்பித்திருந்ததையும் பின்நாட்களில் அவர்கள் ஊடகங்களுக்கு ஒப்புகொண்டிருந்தார்கள
ஈழத்தமிழர்களைக் கொல்வதற்கு ராஜீவ் காந்தி உத்தரவு பிறப்பித்தார்.
அதனை இத்திய இராணுவத்தினர் கடைப்பிடித்தார்கள்.
எனவே ஈழத் தமிழர்கள் மீதான இந்தியப் படைகளின் படுகொலைகளுக்கு இந்திய முன்னாள் பிரதமர் ரஜீவ் காந்தி பொறுப்பேற்றேயாகவேண்டும்.
உரும்பிராயில் ஓடிய இரத்த ஆறு
சரி. இனி கள முனைக்குச் செல்வேம்.
உரும்பிராய் வடக்கு பிரதேசத்தினூடாக இந்தியப் படையின் யுத்த தாங்கிகள் முன்நகர அதன் மறைவில் காலாட் படைப்பிரிவு ஒன்று முன்னேறிக்கொண்டிருந்தது.
ஈழத் தமிழர்களின் படுகொலைகளின் அத்தியாயம் ஒன்றை இரத்தத்தால் எழுதுவதற்காக இந்திய ஜவான்கள் விரைந்துகொண்டிருந்தார்கள்.
தொடரும்..
nirajdavid@bluewin.ch

Geen opmerkingen:

Een reactie posten