தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 3 november 2011

பத்திரிகா தர்மம் நடுநிலையாக நின்று அனைவரின் கருத்துக்களையும் பக்கசார்பற்று மக்களுக்கு தெரியப்படுத்துவதே -இதை அறியாத அதிர்வின் கருத்து இது!!

போர்குற்றச்சாட்டைக் கைவிட பேரங்கள் ஆரம்பமாகியுள்ளது ?
03 November, 2011 by admin
போர்க்குற்றச்சாட்டுக்களை கைவிடுவதற்கான பேரங்கள், சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கின்றது. மக்களிடையே அது தொடர்பிலான கருத்து திணிப்புக்களும் முனைப்புப் பெற்றிருக்கின்றன, போர்க்குற்றங்களைத் தூக்கிப்பிடித்து எந்தப்பிரயோசனமும் அற்றதென்ற வாதங்களை இவர்கள் முன்னிறுத்தத் தொடங்கியுள்ளனர், பெரும்பாலும் புலம்பெயர் நாடுகளில் அவியாத பருப்பினை உள்ளூரில் அவித்து விட இந்தத்தரப்புகள், முற்பட்டுள்ளன. தற்போது இலங்கையில் உள்ள முத்த ரோ அதிகாரி வழுதி என்பவரால் உப்புச்சப்பற்ற இணையம் ஒன்றிக்கு ஏழுதப்பட்ட போர்க்குற்றங்களை கைவிடுவதற்கான கருத்து திணிப்புக் கட்டுரையை வெற்றிகரமாக யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் உதயன், தினக்குரல் நாளிதழ்கள் வெளிட்டுள்ளன. எனினும் யாழ்.தினக்குரல் ஆசிரியர் பீடம் இதற்கு உடன்பட்டிராத நிலையில் ரோவின் இரண்டாம் கட்ட அதிகாரியான ந.வித்தியாதரன் (இவரையெல்லாம் மூத்த ஊடகவியலாளர் என அடையாளப்படுத்தி செத்துப்போன ஊடகவியலாளர்களை கொச்சைப்படுத்த வேண்டாமே) தனது சாம பேத தண்டங்களைப் பிரயோகித்து அக்கட்டுரையை வரவழைத்திருக்கின்றார்.

வழுதி யார் என்பது பலரும் அறிந்ததே நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதான வலது கரமான இம்முன்னாள்போராளி இப்போதும் இலங்கை அரசின் மதிப்பிற்குரிய விருந்தாளி, எந்நேரமும் அரச மரியாதையுடன் இலங்கை வந்து திரும்ப அவரால் மட்டும் முடிகின்றது. அமெரிக்க ஆதரவுப் பின்னணியைக் கொண்டவர் என தன்மை அடையாளப்படுத்தி முள்ளிவாய்க்காலுக்கு கப்பல் வருகிறது, கெலி வருகிறதென கயிறு விழுங்கக்கொடுத்த புண்ணியவான்களில் இவரது பங்கு மிகப் பெரியது. ஆனாலும் அவர் இந்திய உளவுப்பிரிவான ரோவினது மூத்த அதிகாரி என்பதை கண்டுகொள்ள நம்மவர்களுக்கு சிறிது காலம் எடுத்தேயிருந்தது.

தற்போது இவரது பிரதான பணி இந்தியாவுக்கு ஆள் பிடித்துக் கொடுப்பது மட்டுமே முன்னைய காலம் வரை பிரபாகரனுக்குப் பின்னதாக உங்களைத்தான் தலைவராக்கப்போகிறோம் என பலரை குழிக்குள் அனுப்பி வைத்தவர்கள் இப்போது சம்மந்தனுக்குப் பிறகு என தலைப்பாகை சூட புறப்பட்டிருக்கின்றார்கள், சுரேஷ், சுமந்திரன், வித்தியாதரன் என அப்பட்டியில் நீண்டே செல்கின்றது. இவ்வாறு கனவு காண்பவர்களை வலை வீசி இடம்சேர்க்கும் பணியை(மாமா வேலைதான்) வழுதி திறம்படவே செய்து வருகின்றார். முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்னர் ஓய்ந்திருக்கும், ஓதுங்கியிருக்கும், புத்திஜீவிகள், ஊடகவியலாளர்கள் மற்றும் ஆதரவாளர்களை இலக்குவைத்தே அவரது நடவடிக்கை அமைந்துள்ளது. இலங்கையின் எப்பகுதிகளிற்கும் போய் வர அனுமதிக்கப்பட்டிருக்கும் அவர் எவ்வாறு நாடுகடந்த தமிழீழ அரசு கும்பலின் முக்கியஸ்த்தராக இருக்க முடியும்? இந்த மர்மம் புரியவேயில்லை, அதிலும் கூட கடந்த காலங்களில் புலிகள் முன்னெடுத்த அதே உத்திகளை முன்னாள் போராளியான அவர் விசுவாசமாகவே முன்னெடுத்து வருகின்றார், தமது கருத்துக்களை இணையங்கள் ஊடாக பரப்புவது பின்னர் அவற்றை இணையங்களில் இருந்து பெற்றதாக நாளிதழ்களில் பிரசுரிக்க நிர்ப்பந்திப்பது பெரும்பாலான ஊடகவியலாளர்கள், தெரிந்து வைத்துள்ள ஒன்றே.

கடந்தகாலங்களில், தமிழ்தேசியத்தை தனது தலையில் கட்டிவைத்துக் கொண்டிருப்பதாக தேர்தல் காலங்களில் காட்டிக்கொண்ட உதயன் நாளிதழ் ஆசிரியபீடம், இப்போது புரளத்தொடங்கியுள்ளது. யுத்த நெருக்குவார காலங்களில் பணியாற்றிய குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய ஆசிரியபீடம் தற்போது களைத்தே போயுள்ளது. பலர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர், அல்லது உதயனை விட்டு விலகியுள்ளனர், தற்போதைய ஆசிரியரோ உப்புச்சப்பற்ற அந்த இணையத்தின் முக்கிய புள்ளிகளில் ஒருவர். அவ்விணையமே வழுதியின் கீதா உபதேசங்களை வெளிக்கொண்டு வந்தும் உள்ளது. இந்தியாவுக்கு வழுதியால் அழைத்துச் செல்லப்பட்டு ஞான உபதேசம் வழங்கப்பட்டவர்களில் வித்தியாதரன் முன்னின்று செயற்பட்டு வருகின்றார், நடந்து முடிந்த உள்ளுராட்சி சபைத்தேர்தலில் கொழும்பு மாநகரசபையில் மனோகணேசனுக்கு குழிபறிக்க வித்தியாதரன் பட்டபாடு கொஞ்ச நஞ்சமல்ல என்கின்றார் நாளிதழ் ஒன்றின் செய்தியாசிரியர், தினக்குரல் நாளிதழ் வீரகேசரியினால் கபளீகரம் செய்யப்பட்டுள்ள நிலையில் தமிழ் அச்சு ஊடகங்களில் கொழும்பு, இந்தியா மற்றும் இலங்கை ஆகிய அரசுகளுக்கு இயைவான கருத்துக்களை கொண்டுவர இப்போது வித்தியாதரனால் முடிகின்றது.

அதிலும் இந்திய அரசின் நிகழ்ச்சி நிரல் பிரகாரமே வீரகேசரி நிர்வாகம் உள்ளதால் வித்தியாதரனின் நிலைப்பாட்டுக்கு வீரகேசரி நிர்வாகம் என்றும் முரண்டு பிடிக்கப்போவதில்லை,
ஏற்கனவே உதயன் மற்றும் சுடரொளி நாளிதழ்களின் உரிமையாளதும் தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான சரவணபவன் அரசுடன் இணைந்துபோகும் சமரசத்திற்கு வந்து விட்டார், வியாபர ரீதியான பாதிப்பை கருதி பகிரங்க ஆதரவை அவர் வெளியிட்டிருக்கவில்லை, கேகலிய ரம்புக்வெல ஆரம்பித்து வைத்த சமரசத்தைத் தொடர்ந்து அரச விளம்பரங்கள் கிட்டத் தொடங்கி விட்டன. தானே கேள்வி தானே பதில் என பாதுகாப்பு அமைச்சின் நேர்முக நேர்வும் தொடர்ந்து வெளியிட்டாயிற்று( அவர் கோபித்துக் கொள்ளாதிருக்கும் வகையில் எடுக்கப்பட்ட கேள்விகள் தனியான ஊடக பாரம்பரியம்) இப்போது வழுதியின் ஏற்பாட்டினில் ஞானோபதேசம் கிடைத்திருப்பதால் எல்லாம் வெற்றிகரமாக முடிவுக்கு வந்துவிட்டது.
இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் பிரகாரம், உருவான மாகாண சபையினில் தமது எடுபிடிகளையே முதலமைச்சர் ஆக்க இந்தியா மீண்டும் முனைப்புக் கொண்டுள்ளது.

ஏற்கனவே வரதராஜப்பெருமாளை பொம்மை முதலமைச்சராக்கி பிசுபிசுத்துப்போன தனது முயற்சிகளை மீண்டும் சிக்கிய கைகளில் எடுத்துக் கொண்டுள்ளது. ஏற்கனவே கிழக்கினில் செல்லாக்காசான பிள்ளையானை கொண்டுவந்ததுபோல வடக்கிற்கும் கொண்டு வர முற்படுகின்றார்கள், வீசப்படப்போகின்ற எச்சில் துண்டுகளுக்காக வித்தியாதரன் முதல் சுமந்திரன் வரை பெரியதொரு அணி இப்போதே கடிபடத்தொடங்கியுள்ளது. போர்க்குற்றச்சாட்டுக்களை கைவிடச்சொல்லி நிற்கும் ந.வித்தியாதரன் முதல் எஸ்.பி.சாமி ஈறாகவும், சம்மந்தன் முதல் சரவணபவன் வரையுமாக போரால் இழந்தது ஏதும் இல்லை. சிலவேளை யுத்தத்தை விற்று வயிறு வளர்த்த அவர்களுக்கு வருமான வீழ்ச்சி ஏற்பட்டிருக்கலாம், யுத்தத்தையோ புலிகளையோ காட்டி இனிமேலும் வயிறு வளர்க்க முடியாத நிலையில் அவர்கள் புதிய சந்தைகளுக்காக அல்லாடுகிறார்கள், வித்தியாதரனோ, சாமி அல்லது சரவணபவனோ யுத்தத்தில் இழந்தது ஏதுமில்லை, உயிர் இழந்த நாற்பதாயிரம் போரளிகள், 3லட்சம் மக்கள் காணாமல்போனார் என எவருமே அவர்களுக்கு சொந்தமானவர்களோ குடும்ப அங்கத்தவர்களோ இல்லை, அதனால் போர்க்குற்றம் நிவாரணம் எவையுமே அவர்களுக்கு கிட்டப்போவதில்லை, செத்துப்போன சக ஊடகவியலாளர்கள், ஊடகப்பணியாளர்களது குடும்பங்களை எட்டிப்பார்த்திராத இக்கும்பல்கள் மக்களுக்காக கதைப்பார்கள் என எதிர்பார்க்க முடியாதே.

தானே அனுப்பிவைத்த இந்திய காங்கிரஸ் கட்சிப்பிரமுகர் சுதர்சன நாச்சியப்பனின் செவ்வியை பிரசுரித்து பாவ விமோசனம் தேடும் இவர்கள், அண்ணன் எப்போது மடிவான் திண்ணை எப்போது காலியாகும் என காத்திருந்தவர்களே.....

Geen opmerkingen:

Een reactie posten