தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 27 november 2011

மாவீரர் நாள் 2011 டென்மார்க்கில் கேர்ணிங் கொள்பேக் நகரங்களிலுள்ள பிரமாண்டமான மண்டபங்களில் நடாத்தப்பட்டன

மாவீரர் நாள் டென்மார்க்கில் கேர்ணிங் கொள்பேக் நகரங்களிலுள்ள பிரமாண்டமான மண்டபங்களில் நவம்பர் 27ம் நாளான்று நடாத்தப்பட்டன. எங்கள் தேசத்தின் விடுதலைக்காக தங்கள் இன் உயிர்களை தியாகம் செய்த மாவீரர்களை நினைவு கூரும் நிகழ்வு பொதுச்சுடரேற்றத்துடன் ஆரம்பமானது.
ஆயிரமாயிரமாய் மாவீரர்களின் குருதியில் போற்றியகாவிய நாயகர்களின்
கொடியாகிய தமிழீழத்தேசியக்கொடி ஏற்றி வைக்கப்பட்டது எதிர்வரும் மாவீரர் நாளில் தமிழீழத் தனியரசு ஏற்போம் என்ற உறுதிமொழியுடன் மாவீரர்களின் பெற்றோர்கள்; நண்பரகள்; உறவினர்கள் காவிய நாயகர்களின் கல்லறைக்கு ஈகைச்சுடரேற்றி அகவணக்கம் செலுத்தினர்கள்.
இதனைத் தொடர்ந்து மாவீரர் கானங்கள் நடனங்கள் நாடகங்கள் என நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்றன. சிறப்புரையாற்றிய பத்திரிகையாளர் கனகரவி முன்பு நாங்கள் எப்படி பணியாற்றினோமோ அதே போல் தொடர்ந்தும் எங்கள் பணியை ஆற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார்.
காலம் எம்மை கடந்தும் செல்லலாம்; கண்ணீர் சிந்தி கரைந்தும் நிற்கலாம். ஆனால் ஒரு நாள் வெல்வது உறுதி அதனை நெஞ்சினில் எழுதி எங்கள் மண்ணை நிட்சயம் மீட்போம் என்ற நம்பிக்கையுடன் மக்கள் வீடு திரும்பினர்.

Geen opmerkingen:

Een reactie posten