தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 6 november 2011

சீமானால் அமெரிக்க தேசிய பாதுகாப்புக்கு ஆபத்தாம்: அம்பலமாகும் அமெரிக்காவின் பதில் !

அமெரிக்காவில் நடக்கும் "தமிழர் சங்கமம்" என்ற மாநாட்டிற்குச் சென்ற உணர்வாளர் சீமான் அவர்களை அமெரிக்கா திருப்பி அனுப்பியுள்ளது. இம் மாநாட்டிற்குச் செல்வதற்காக சீமான் அவர்கள் முறையாக அமெரிக்க தூதரகத்தில் விசாவுக்கு விண்ணப்பித்துள்ளார். பின்னர் அவருக்கு அமெரிக்கா விசா வழங்கியுள்ளது. அவர் கடந்த சனிக்கிழமை அன்று அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் உள்ள சர்வதேச விமான நிலையத்துக்குச் சென்றுள்ளார். அங்கே அவரை தடுத்த குடிவரவு அதிகாரிகள் அவரை அமெரிக்காவுக்குள் விடமுடியாது என்று கூறியுள்ளனர். அப்படியாயின் ஏன் என்கு முதலில் விசாவைத் தந்தீர்கள் என சீமான் அவர்கள் கேட்டபோது பதில் எதுவும் கூறாத அவர்கள். உங்களை நாட்டிற்குள் விட்டால் அமெரிக்க தேசிய பாதுகாப்புக்கு அது அச்சுறுத்தலாக அமையலாம் என்று கூறியுள்ளனர்.

ஆச்சரியமாக இருக்கிறதா ? பின்லேடன் , தலபான் மற்றும் அல் கைடா தீவிரவாதிகள் எல்லாம் போய் இப்போது அரசியல் கட்சியாக இயங்கிவரும் நாம் தமிழர் கட்சியின் தலைவர் கூட அமெரிக்காவுக்கு அச்சுறுத்தாலக இருக்கிறதாம் ! என்ன ஒரு வேடிக்கை ! தொடர்ந்து பேசிய குடிவரவு அதிகாரிகள் நீங்கள் விடுதலைப் புலிகளோடு நெருக்கம் கொண்டவர் என்றும் அதனால் உங்களை அமெரிக்காவுக்குள் அனுமதிக்க முடியாது என்றும் கூறியுள்ளனர். கடந்த மாதம் உலகத் தமிழர் பேரவையின்(GTF) தலைவர் இமானுவேல் அடிகளார் அவர்களை இந்தியா திருப்பி அனுப்பியது. தற்போது சீமான் அவர்களை அமெரிக்கா திருப்பி அனுப்புகிறது. அரசியல் கட்சி சேர்ந்தவர்களையும் செயல்பாட்டாளர்களையும் இந் நாடுகள் இரண்டும் மாறி மாறி திருப்பி அனுப்புகிறார்களே உண்மையாகப் போர் குற்றம் புரிந்த மகிந்த ராஜபக்ஷவை இவர்கள் எவ்வாறு வரவேற்க்கிறார்கள் ?

போர் குற்றம் புரிந்து இன அழிப்புச் செய்யத் சிங்களவர்கள் நிம்மதியாப் பல நாடுகளுக்குச் சென்றுவரும் நிலையில் தமிழர்களுக்கு மட்டும் ஏன் இந்த நிலை ? சீமான் என்ன அமெரிக்க பாதுகாப்பு வலையைப்பை உடைத்துவிடுவாரா என்ன ? இல்லை பென்டகனைத் தகர்த்துவிடுவாரா ? ஏன் இந்தப் பாகுபாடு. இன அழிப்பு தொடர்பாக மேடையில் பேசச் சென்ற அவரை ஜனநாயக நாடு என்று தம்மைத் தாமே கூறிவரும் அமெரிக்கா எவ்வாறு தடுக்கிறது. இலங்கையில் பேச்சுத் சுதந்திரம் இல்லை ஊடகச் சுதந்திரம் இல்லை என வாய் கிளியக் கத்திவரும் அமெரிக்கா தற்போது செய்துள்ள செயலானது வெட்க்கப்படவேண்டிய விடையமாகும். புலிகளை அழித்துவிட்டோம் அவர்கள் எவரும் உயிரோடு இல்லை என்று இலங்கை மார்தட்டினாலும் விடுதலைப் புலிகள் மீது உள்ள பயம் இன்னும் குறைந்ததாகத் தெரியவில்லை !

தமிழர்களுடைய பலம் அதுவாகத் தான இருக்கமுடியும் என்றால் உலகத் தமிழர்கள் அனைவரும் ஏன் புலிகளை தமது விடுதலைப் போராட்ட வீரர்களாக ஏற்றுகொண்டார்கள் என்பதனை இந்த நாடுகள் உணர்ந்திருக்கவேண்டும். ஒரு வகையில் அமெரிக்காவும் இந்தியாவும் தமக்கு இடையே பல தகவல்களைப் பரிமாறி ஒரு நேரான பாதையில் செயல்பட்டு வருகின்றனர் என்பது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. பிரிந்து கிடந்த பல தமிழ் கட்சிகளை இணைத்து தமிழ் தேசிய கூட்டமைப்பாக புலிகள் இயக்கமே ஒன்றுசேர்த்தது என்பது யாவரும் அறிந்தவிடையம். அதனை அழைத்து பேச்சுவார்ததை நடத்தும் அமெரிக்கா உணர்வாளர் சீமானை மட்டும் புலிகளோடு தொடர்புடையவராகப் பார்க்கிறது. அது சரி உணர்வாளர் சீமான் என்ன தமிழ் தேசிய கூட்டமைப்பு போல வளைந்துகொடுப்பாரா என்ன ? காரியம் ஆகாது என்றால் அமெரிக்க களட்டிவிடத் தானே பார்க்கும். இது ஒன்றும் புதிதல்லவே !

Geen opmerkingen:

Een reactie posten