தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 13 november 2011

பிரபாகரன் இராணுவ மேதையானாலும் சர்வதேச அரசியலில் கற்றுக்குட்டி! எரிக் சொல்ஹேய்ம்

[ ஞாயிற்றுக்கிழமை, 13 நவம்பர் 2011, 02:22.47 PM GMT ]

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் இராணுவ மேதையாக விளங்கிய போதிலும் சர்வதேச அரசியல் விவகாரத்தில் கற்றுக்குட்டி(அமெச்சூர்) என சொல்ஹேய்ம் தெரிவித்துள்ளார்.
அதே வேளை இந்தியப்பிராந்தியத்தில் இந்தியாவின் முக்கியத்துவத்தை 2006ஆம் ஆண்டில் மறைந்த, தமிழீழ விடுதலைப்புலிகளின் மதியுரைஞர் அன்டன் பாலசிங்கம் புரிந்து கொண்டிருந்ததாகவும் இந்தியாவுக்கெதிராக எதனையும் செய்ய முடியாது எனவும் செய்தால் அது பலனளிக்காது எனவும் அவர் கூறிச் சென்றதாகவும் சொல்ஹேய்ம் குறிப்பிட்டுள்ளார்.
 ராஜீவ்கொலையில் தமக்கு பங்கில்லை என விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனும் அவ்வமைப்பின் புலனாய்வுப் பிரிவுத் தலைவர் பொட்டு அம்மானும் பல மாதங்களாக கூறி வந்ததாக தன்னிடம் அன்டன் பாலசிங்கம் புகாரிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
“இதில் தமக்குப் பங்கில்லை என அன்டன் பாலசிங்கத்தை அவர்கள் நம்பவைக்க முயற்சித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளதுடன் அன்டன் பாலசிங்கம் அதனை நம்பவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
எரிக் சொல்ஹேய்ம் பிரபாகரனை 2001ஆம் ஆண்டு முதல் 10 தடவைகள் சந்தித்தமை குறிப்பிடத்தக்கது.

Geen opmerkingen:

Een reactie posten