ஆண்டு 1975 முதலாம் பகுதி
1975 களில் இலண்டனில் இருந்த இரத்தினசபாபதி, ஏற்கனவே ‘ஈழவர் இடர்தீர’ என்ற
புத்தகத்தையும் வெளியிட்டிருந்தார். அப்பொழுது இலண்டனில் இயங்கிவந்த General Union
of Palestinian Students (GUPS) உடன் தொடர்புகளை மேற்கொண்டிருந்ததுடன், அதன்
மாதிரியாக (GUES) என்ற மாணவர் அமைப்பையும் இவர் உருவாக்கியும்
இருந்தார்.தமிழாராய்ச்சி தொடக்க நாளான தை 3ஆம் நாளின் ஒரு வருட நிறைவன்று
(03.01.1975), அதிகாரபூர்வமாக ‘ஈரோஸ்’ என்ற அமைப்பு இரத்தினசபாபதியால்
உருவாக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுமிருந்தது.
கடந்தவருடம் சிவகுமாரனின் மரணத்துக்குப் பின்னர்…
‘இளைஞர் பேரவையில்’ இருந்து பிரிந்த ஒருபகுதி இளைஞர்கள் தம்மை ”ஈழ விடுதலை இயக்கம்”
(ELO) என அடையாளப்படுத்தியபடி, கூட்டணித்தலைமையை பகிரங்கமாக நிராகரித்து அதை
பிற்போக்குத் தலைமையெனக் கண்டித்தனர். இளைஞர் பேரவையில் இருந்து பிரிந்த தீவிரவாத
இளைஞர்களுக்குள் இவர்களே முதன்முதலில் ”சோசலிச தமிழீழம்” என்ற கருத்தை முன்வைத்து
கூட்டணியினரை பகிரங்கமாக மக்கள்முன் அம்பலப்படுத்த முற்பட்ட முதலாவது விழிப்புணர்வு
இளைஞர் சக்தியாகும்!
இவர்களுக்குச் சரியான தலைமைத்துவ வழிகாட்டல் இல்லாமையாலும், சுலபமான கூட்டணியின்
ஊடுருவலாலும், இவ்விளைஞர்களின் துடிப்பான வருகை வரலாற்றில் அழிந்து சிதைந்து போனது.
தேசிய இன முரண்பாடு தொடர்பாக இக்காலத்தில் தொழிற்பட்ட ‘இடதுசாரிகள்’ யதார்த்தத்தில்
பிற்போக்குக்கு எதிரான இளைஞர்களை உள்வாங்கத் தவறி இருந்தனர். மறுபுறத்தில் இடதுசாரி
அமைப்பிலிருந்த பல வாலிபர்கள் இப்போராட்டத்தால் உள்வாங்கப்பட்டிருந்தனர் என்பதும்
மறுதலையான நடைமுறையாகவே இருந்தது…..
இவ்வருடத்தின் ஆரம்ப நாட்களில் இளைஞர் பேரவையின் முக்கிய நபர்களாகக் கருத்தப்பட்ட
‘மாவை’, ‘காசியானந்தன்’ …. போன்றவர்கள் கொழும்புச்சிறையில் இருந்தனர்.
காங்கேசன்துறை இடைக்காலத் தேர்தலை முன்னிட்டு கொழும்பிலிருக்கும் சிறைக்கைதிகளை
விடுவிக்குமாறு கூட்டணி அரசிடம் ஓர் கோரிக்கையை முன்வைத்தது.
இத்தேர்தலில் கூட்டணி தந்தை செல்வாவை எதிர்த்து தமது ‘கூட்டுமுன்னணி’ கம்யூனிசக்
கட்சியின் வி.பொன்னம்பலம் நிற்பதும், ‘தீண்டாமை ஒழிப்பு வெகுஜன முன்னணி’ யின்
மாவிட்டபுரம் கோவில் பிரவேசத்தின் (ஆலயப்பிரவேசத்தின்) போது எதிரணியில் நின்ற
முக்கிய ‘தமிழ்காங்கிரஸ்’ பிரமுகர்களும், இப்பொழுது கூட்டணியுடன் ஓரணிக்குள்
பக்கபலமாக வந்திருந்தனர்.
இவ்வேளையில்…
கொழும்புச் சிறையில் இருந்த கூட்டணியினரின் அதிமுக்கியமான ‘பொறுக்கி எடுக்கப்பட்ட’
ஆதரவு இளைஞர்களை, அரசு இவ் இடைக்காலத் தேர்தலுக்கு முன் விடுதலையும்
செய்திருந்தது…. (இது நெருங்கிவரும் அணிசேரா மாநாட்டையும் கருத்தில் கொண்டு
செயலாற்றியும் இருந்தது)
விடுதலை செய்யப்பட்ட இந்த இளைஞர்களுக்கு….
இதுவரைகால வரலாற்றில் நடக்காத, சிவகுமாரனின் மரணத்தின் பின் அறிமுகமான,
‘இரத்தத்திலகமிடும்’ நடைமுறை> ”சிறைமீண்ட செம்மல்கள்” என்ற கோசத்தோடும், அன்றைய
இளைஞர் பேரவையால், கூட்டணியின் சால்வை போர்த்து, இரத்தத்திலகமிட்டு வரவேற்புப்
‘படையல்’ வரலாற்றில் நாடகமாக நடந்தும் முடிந்தது…..
இந்தக்கூத்துக்கள் நடப்பதற்கு முதல்…
இளைஞர் பேரவைக்குள், கூட்டணிக்கு எதிரான இளைஞர் பிரிவு – மற்றும்
வி.பொன்னம்பலத்தின் கருத்தை எதிர்க்கும் (மாவை மற்றும் காசி போன்றோரின் )
வெற்றிடத்தை ஈடுசெய்யும் முகமாக….
சந்ததியார் போன்ற பேச்சுத்திறன் மற்றும் இயங்கும் திறன் கொண்ட சக்திகளை, கூட்டணி
முன்னுக்குத் தள்ளியது!
காங்கேசன்துறை இடைக்காலத் தேர்தலின் இறுதிநாட் கூட்டத்தின் போது….
சந்ததியார் தனது தலைமையில் நூற்றுக்கணக்கான இளைஞர்களை அழைத்துக்கொண்டு உரும்பிராய்
வேம்பன் மயானத்துக்கு (கால்நடையாக), சிவகுமாரனின் மயானக்கல்லறைக்குச் சென்றனர்.
அங்கு சத்தியப்பிரமாணம் எடுத்தபிறகு இவ்விளைஞர்கள் கால்நடையாகவே ‘முற்றவெளி’
இறுதிக்கூட்டத்துக்குச் சென்றும் இருந்தனர்.
இவர்களின் இந்த நடவடிக்கையை வழிமறித்த அரச இயந்திரப் பொலீசார், இவ்வூர்வலம்
பொதுமக்களின் நடமாட்டத்துக்கு இடைஞ்சலாக இருப்பதாக வாதாடினர். ”கையில்
காசில்லாததால், இறுதிக்கூட்டத்துக்கு தாம் நடந்து செல்வதாக” சந்ததியார் வாதிட்டார்…
விலகிய பொலீசார், அமீருடன் தொடர்புகொண்டதை அடுத்து, அமீரின் வருகை அங்கு
சாத்தியமானது. இதையடுத்து அமீரால் வீதியில் சென்ற வாகனத்தில் இவ் இளைஞர்கள் ஏற்றி
அனுப்பப்பட்டனர்.
‘பொதுமக்களின் நடமாட்டத்துக்கு இடைஞ்சல் இல்லாதவாறு’ தேர்தல் பிரச்சார நடைமுறைகள்
நடைபெறவேண்டும் என்பது சட்டமாகவே இருந்தது!..
தேர்தலுக்கு நாலுநாள் முன்னதாகவே இருந்த சுதந்திரதினத்துக்கு முன்னர்..
கூட்டணியினர், சதந்திரதினத்தன்று, ”பாராளுமன்றத்தில் தனிநாட்டுக் கோரிக்கையை
பிரேரணையாகக் கொண்டுவருவதற்றகு முன்னறிவித்தல் கொடுத்ததாக ‘கூட்டணி’ அறிவித்தும்
இருந்தது!
இந்தக்காலத்தில்.. ‘எரிமலை’ என்ற பத்திரிகை ”தமிழீழக் கோரிக்கையை” ஜனரஞ்சகப்படும்
முயற்சியில் பெரும் பங்கெடுத்திருந்தது.
இக்காலத்தில் இலண்டனில் இருந்த ”ஈழ விடுதலை முன்னணியினர்” இவ்வாறு தமது
‘ஈழவிடுதலை’ என்ற இலண்டன் வெளியீட்டில் வெளிப்படுத்தியும் இருந்தனர். மேலும்
அவர்கள் அவ் வெளியீட்டில் வெளிவந்த ”ஈழத் தமிழினமே” என்ற தொடரில் வரும் –
”உழுத்ததூண்கள் உடைக்கப்படவேண்டும்” என்ற பகுதித் தலையங்கத்தின் கீழ் பின்வருமாறு
எழுதியிருந்தனர்.
”ஈழத் தமிழினமே! ஈழ விடுதலை என்னும் இந்த இயக்கத்தில் வயதான அறிவாளிகள் யாரும்
இல்லை, பெரிய பட்டதாரிகள் இல்லை, இளைஞர்கள்தானே இருக்கிறார்கள் என்று கூட
உன்வாயில் இருந்து சில சமயங்களில் ஊமைக்குற்றச்சாட்டுக்கள் வெளிவந்திருக்கின்றனவே!
இயக்க நடவடிக்கைளையும் இயக்க அங்கத்தவர்கள் யார் யார் என்பது பற்றியும்,
இயக்கத்தின் நோக்கத்தைச் சிரமேற் கொண்டு எத்தனை வயதிலும் அறிவிலும் நிறைந்த
பெரியவர்கள் உண்மையாக உழைக்கின்றார்கள் என்பதைப் பற்றியும் அறியாமல் வம்புபேச
நினைக்கிறாயே!! சரி….”
(தொடர்ந்து முழுமையாக வாசிக்க: ‘ஈழ விடுதலை’ நான்காம் (04) பக்கம். இணையத்
தொடர்புகளுக்கு:- ‘தமிழ் தேசிய ஆவணச்சுவடிகள்’
http://www.tamilarangam.net/document/EelaViduthalai/eela01.pdf)
கூட்டணியின் கோரிக்கைக்காக விடுதலை செய்யப்பட்ட ‘காசி’ , ‘மாவை’ போன்றோருக்கு
வெளியே இன்னும் விடுதலையாகாமல், பொ.சத்தியசீலன், பொ.திசைவீரசிங்கம்,
என்.அமரசிங்கம், ஞா.ஞானசேகரம், பி.நடேசானந்தம் போன்றவர்களை அடையாளப்படுத்தி, இவ்
இளைஞர்பேரவையினரை விடுதலை செய்யக் கோரும்படி கூட்டணியினரை வலியுறுத்தும்
எதிர்ப்பிரச்சாரத்தில் இலண்டனில் ஒரு பகுதியினர் ஈடுபட்டனர்.
இக்கோரிக்கைகள் பலம் பெறும் முன்னரே செல்வா இத்தேர்தலில் வெற்றி பெற்றும்
இருந்தார்.
இத்தேர்தலுக்கு முன்னர் ஓராண்டு நினைவுக்கான பொதுமக்கள் தமது உறவினர்களின் படுகொலை
நினைவாக (தமிழாராய்ச்சி -74) செவ்வரத்தம் பூக்களை இன்று கற்றூண் இருக்கும் இடத்தில்
பரவி வைத்து அன்று சுயமாகவே அஞ்சலியைச் செலுத்தி இருந்ததும் இங்கு
குறிப்பிடத்தக்கது.
கூட்டணி தந்தை செல்வாவின் வெற்றியை அடுத்து ‘சிறைமீண்ட செம்மல்’ காசியானந்தன்,
தமிழீழத்தில் சாதிபேதங்களையும், தீண்டாமையையும், மத – பிரதேச வேறுபாடுகளையும்
தகர்த்தெறிந்து தமிழினத்தின் ஒருமைப்பாட்டை உறுதிப்படுத்துவதற்காக தமிழீழம்
அடங்கிலும் பாதயாத்திரை செல்ல இருப்பதாக செய்திகளை மேற்குலக இளஞர்களைக் குறிவைத்து
வெளியிட்டும் இருந்தார்.
தொடரும்…
ரூபன்
தொலைக்காட்சி
தொலைக்காட்சி
vrijdag 5 november 2010
ஐயாவின் பதிவுகளும்-எனது பின்னூட்ட முரண்களும்…06-ரூபன்
ஆண்டு 1974 இரண்டாம் பகுதி
சிவகுமாரன் மிகத்துணிவுள்ளவனாகவும், உணர்ச்சிக் கொந்தளிப்புள்ளவனாகவும் இருந்தான்.
தமிழாராய்ச்சி மாநாட்டில் நடந்த அனர்த்தத்தால் ஆவேசத்துடன் வீடு
திரும்பியிருந்தான். அந்தச் சாமவேளையிலும் இரண்டு குண்டுகளுடன் சந்திரசேகராவைத்
தேடி யாழ் நகருக்கு வருகிறான்.சந்திரசேகரா 40 விசேட கலகம் அடக்கும் பொலீசாரை
கொழும்பிலிருந்து வரவழைத்து, கூட்டத்தை இறுதியில் கண்ணீர்புகை, குண்டாந்தடிகள்
உதவியுடன் கலைத்திருந்தார். இவரின் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் 9 பேர்
பலியானதால் சிவகுமாரன் இவரை பழிதீர்க்கத் துடித்தான்.
நகரில் எவரையும் காணததால் சிவகுமாரன் நல்லூர் அருளம்பலத்தின் வீட்டுப்பக்கமாக
வந்தான். அங்கே இரு பொலீசார் காவலுக்கு நின்றனர். அவர்கள் மீது சிவகுமாரன் குண்டை
வீசினான். பொலீசார் உயிர் தப்பியபோதும் அவர்களின் கால்கள் பேய்ந்திருந்தது.
சிவகுமாரனுக்கு ஆத்திரம் இன்னும் அடங்கிவிடவில்லை. சந்திரசேகராவை எப்படியும்
கொல்லுவதில் மிகத்தீவிரமாக இருந்தான்.
தமிழாராய்ச்சி மாநாட்டில் நடந்த அனர்த்தத்துக்கு துரையப்பாவே காரணம் என்றும், அவர்
கொல்லப்படவேண்டும் என்றும் கூட்டணியினர் ‘துரோகப் பட்டியலால்’ இளைஞர்களுக்கு
ஏவியபோதும், சிவகுமாரனின் முதலிலக்கு சந்திரசேகராவாகவே காணப்பட்டது.
கள்ளமாக நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட ஜனார்தனனை பேசவைக்க முடியாமற் போன
வெப்பியாரமும் சிவகுமாரனைப் பாதித்திருந்தது. இறுதிசம்பவங்களுக்கு முதல் நாள்
ஜனார்த்தனன் யாழ் கூட்டணிக் காரியாலத்தில் இருப்பதாக பொலீசாருக்குத் தகவல்
கிடைத்திருந்தது. அடுத்து சந்திரசேகராவும், நாணயக்காராவும் கூட்டணியின் காரியாலயமான
2ஆம் குறுக்குத் தெருவுக்கு விரைந்தனர். காரியாலயத்தில் அமீரும், ஜனார்த்தனனும்
பேசிக்கொண்டிருந்தனர்.
ஆயினும் சந்திரசேகரா அவரைக் கைது செய்யவில்லை. சட்டவிரோதமாக நாட்டுக்குள் வந்த
ஒருவரை பொலீசார் கைதுசெய்யாமல், நாளைக்குக் கூட்டத்தில் பேசவேண்டாம் என்றும்,
பார்வையாளராகப் பங்குபற்றிவிட்டு செல்லுமாறும் இது கட்டளையுமல்ல வேண்டுகோள் என்றும்
கூறிவிட்டு, மாநாட்டுக்கு வாழ்த்தும் தெரிவித்து விட்டுச்சென்றிருந்தார்.
இவ்வாறான ஒரு பின்னணியில் தான் சிவகுமாரன் சந்திரசேகராவைத் தீர்த்துக் கட்டுவது
கூட்டணிக்கு தலைவலியாக இருந்தது. இப்பொழுது புதிதாக அருளம்பலத்தின்
வீட்டுக்காவலுக்கு நின்ற பொலீசாருக்கும் சிவகுமாரன் குண்டு வீசியிருந்தான்.
துரோகியல் பட்டியலுக்கு வெளியே சிவகுமாரன் தாக்குவது கூட்டணிக்குப் பிடிக்கவில்லை.
துரையப்பாவைக் கொல்லுவதே கூட்டணியின் இலக்காக இருந்தது.
இவ்வாறான சூழலில் சுதந்திரதினமும் வந்தது…
இந்த சுதந்திரதினத்தை தமிழாராய்ச்சி மாநாட்டின் பொலீசாரின் அடாவடித்தனத்துக்கு
எதிராக பிரமாண்டமான ஆர்ப்பாட்டமாக நடத்த கூட்டணியினரும் இளைஞர்களும் திட்டமிட்டனர்.
கட்டிடங்கள், மின்கம்பங்கள் என்று யாழ் நகர் கறுப்புக் கொடிகளால் நிறைந்து
காணப்பட்டது. பாடசாலை முழுவது மூடிக்கிடந்தன. முனியப்பர் கோவிலில் இருந்து
இளைஞர்களின் மாபெரும் ஆர்ப்பாட்ட ஊர்வலம் நடக்க இருந்தது. இன்று விடுமுறை நாளாக
இருந்ததால் மாணவர் வெள்ளம் முனியப்பர் கோவிலில் நிறைந்து வழிந்தது.
இந்த உணர்ச்சி பொங்கிய ஆர்ப்பாட்டத்தை அடுத்து பொலீசார் இளைஞர்களை மீண்டும்
கைதுசெய்யத் தொடங்கினர்.
சுதந்திர தினத்துக்கு முன்னதாக 29.01.74 அன்று சிறீமா – இந்திராகாந்தியுடன்
ஒப்பந்தம் செய்துவிட்டு நாடு திரும்பியும் இருந்தார். யாழ்ப்பாணத்தில் பல்கலைக்
கழகம் ஒன்றை இவ்வருடம் உருவாக்குவதற்கு அரசு உத்தேசித்தும் இருந்தது. இதைக் கூட்டணி
எதிர்த்தது. இதனால் இதன் திறப்புவிழாவை இலகுவாக்க தீவிரவாத வன்முறை இளைஞர்களை
பொலீசார் கைது செய்யவும் தொடங்கினர்.
மறுபுறத்தே சிவகுமாரன் சந்திரசேகராவை கொலைசெய்ய அலைந்து திரிகிறான்.
சந்திரசேகராவின் ஜுப்புக்கு தெல்லிப்பளையில் வைத்துக் குண்டு வீசுகிறான்.
இலக்குத்தவறி விடுகிறது. இதையடுத்து தந்தை செல்வா – சிவகுமாரைச் சந்தித்துப்
பேசுகிறார். இந்தியாவில் காந்திக்கு, சந்திரபோஸ் இருந்ததுபோல தமக்கு சிவகுமாரை
இருக்கும்படி வேண்டுகிறார். தமது நிகழ்ச்சி நிரலுக்குள் இயங்குமாறு கேட்டுக்
கொண்டார்.
சிவகுமாரனோ சந்திரசேகராவை கொல்லும் திட்டத்தில் இருந்து பின்வாங்க மறுத்தான்.
இம்முறை சந்திரசேகராவைக் கொல்ல அவரின் வீட்டுக்கு அருகில் இருந்த கோவிலில்
சிவகுமாரனும் அவனது நண்பர்களும் காத்து நின்றனர். சந்திரசேகரா ஜுப்பில் வருவதைக்
கண்ட சிவகுமாரன் ஜுப்பை மறித்தான். சாரதியின் கதவைத்திறந்து சந்திரசேகராவின்
நெற்றிக்கு நேரே கைத்துப்பாக்கியை வைத்துச் சுட்டான். துப்பாக்கியோ வெடிக்க
மறுத்தது. இதைக்கண்ட சக நண்பர்கள் ஓட்டமெடுக்கத் தொடங்கினர். சிவகுமாரன்
சந்திரசேகராவை ஜுப்பிலிருந்து இழுத்து விழுத்தி கத்தியால் குத்திக்கொலை செய்ய
முயன்ற இறுதி முயற்சியும் துணையின்றி கைவிட்டுவிட்டு சிவகுமாரனும் தப்பி ஒடினான்.
சிவகுமாரனின் இந்த துணிச்சல் மிகுந்த தாக்குதல் முயற்சியால் அரசு சிவகுமாரனை
வலைவீசி தேடியது. பல்கலைக்கழகத்தை திறப்பதற்கு சிறிமாவின் யாழ் வருகை பாதுகாப்பு
காரணங்களால் அடுத்தடுத்துப் பின்போடப்பட்டு வந்தது. இதனால் சிவகுமாரனை
சீக்கிரத்தில் கைதுசெய்வதற்கான அழுத்தங்களும், இதற்கான தீவிர முயற்சிகளும் அரசால்
முன்னெடுக்கப்பட்டன.
சிவகுமாரனின் ஊரான உரும்பிராயைச் சுற்றி பல நூற்றுக்கணக்கான பொலிசார்
சுற்றிவளைத்துத் தேடுதலில் ஈடுபட்டனர். சிவகுமாரன் உரும்பிராயில் உள்ள ஒரு
தோட்டத்திலும், மயிலிட்டியில் – ஊறணியிலும் தலைமறைவாகி இருந்தான். இவனுக்கு
கத்தோலிக்க குருமாரும் அன்று இதற்கு உதவினர்.
சிவகுமாரன் தலைமறைவு வாழ்க்கையில் இருந்து இந்தியா தப்பிச்செல்ல முடிவெடுத்தான்.
இதற்கான பண உதவியை கூட்டணியில் இருந்தவர்களிடமும், அவர்களின் ஆதரவாளரிடமும் பெற
முயற்சித்தான். அவர்கள் சாட்டுப்போக்குச் சொல்லி தட்டிக் கழித்து வந்தனர். இந்த
நிலையில் சிவகுமாரன் கொள்ளை ஒன்றின் ஊடாக பணத்தைப் பெற்று தப்பிச் செல்ல
முடிவெடுத்தான்.
05.06.74 புதன்கிழமை காலை….
மருதனாமடம் சந்தியில் காரொன்றைக் கடத்திய சிவகுமார் குழுவினர், கோப்பாய் கிராமிய
மக்கள் வங்கியை கொள்ளையிட முயன்றனர். இதேநேரம் கோப்பாயில் இருந்த பொலீஸ்
இன்ஸ்பெக்கடரான விஜயசுந்தராவுக்கு வங்கிக் கொள்ளை தொடர்பான தொலைபேசி தகவல் வந்தது.
விஜயசுந்தராவும் அவர் சகாக்களும் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அங்கே சிவகுமாரனை
அடையாளம் கண்டுவிட்ட விஜயசுந்தரா, சிவகுமாரனைக் கைதுசெய்து தனது கஸ்டடியில்
அடைக்குமாறு தமது பொலீஸ் சிப்பாய்களுக்குக் கட்டளையிட்டார்.
கடந்த வருடம் (73) நல்லூர் கோவில் திருவிழாவின் போது…
பெண்களிடம் அங்கச்சேட்டை விட்ட சிவில் பொலீஸ்காரரை சிவகுமாரன் தனியே
தாக்கியிருந்தான். இதனால் அவனைக் கைதுசெய்து கோப்பாய் பொலீஸ் நிலையத்தில்
அடைத்திருந்தனர். இதனால் விஜயசுந்தரா சிவகுமாரனை அடையாளம் கண்டிருந்தார்.
(இக்கைதின் போது பல பொதுமக்கள் சிவகுமாரனை விடுதலை செய்யும்படி மனுக்கொடுத்ததை
அடுத்து சிவகுமாரன் விடுவிக்கப்பட்டிருந்தான்.)
விஜயசுந்தராவின் கட்டளையை அடுத்து, சிவகுமாரன் விஜயசுந்தராவை நோக்கிச்
சுடத்தொடங்கினான். அவனிடம் இருந்த இரண்டு குண்டுகளையும் சுட்டான். இரண்டும்
இலக்குத் தவறிவிட்டது. சிவகுமாரனும், அவரது குழுவினரும் ஆளுக்கொரு பக்கமாக
ஒடத்தொடங்கினர். பொலீசார் ”கள்ளனைப் பிடியுங்கள்” என்று கத்தியபடி துரத்தினர். பலர்
சிவகுமாரனைப் பிடிக்க பின்னால் ஓடினர். சிவகுமாரன் ”நான்தான் சிவகுமாரன், என்னைப்
பிடிக்கவேண்டாம்” என்றதும் பொதுமக்கள் அதே இடத்தில் மலைத்துப்போய் நின்றனர்.
சிவகுமாரன் நீர்வேலி ‘பூதர்மடத்தடி’ யைத்தாண்டி, தோட்டவெளிகளை ஊடறுத்து தப்ப
முயற்சித்தான். தோட்டவெளியை ஊடறுத்து ஓடும்போது அங்கு வெட்டப்பட்டுக் கிடந்த
புகையிலை அடிக்கட்டை ஒன்று அவனின் காலைப் பதம்பார்த்துவிட்டது. தொடர்ந்து ஓடமுடியாத
சிவகுமாரன் அத்தோட்டத்தில் இருந்த சிறிய கொட்டில் ஒன்றுக்குள் பதுங்கிக் கொண்டான்.
தோட்டவெளிக்குள் இறங்கிய பொலீஸ் பட்டாளம், அங்கே பயிர்களுக்கு நீர் இறைத்த
வயதுமுதிர்ந்த விவசாயி ஒருவரைக் கண்டனர். அவரை விசாரித்ததில் சிவகுமாரன் என்று
அறிந்திராத அந்த வயதுமுதிர்ந்த விவசாயி அச்சிறிய கொட்டிலை சுட்டிக்காட்டவே
சிவகுமாரன் பொலீசாரால் சுற்றிவளைக்கப்பட்டான். சிவகுமாரனைக் கைதுசெய்ய முயன்றபோது,
அவன் நஞ்சை (சயனைட்) உட்கொண்டான்.
சிவகுமாரன் யாழ் பிரதான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, ஆஸ்பத்திரியைச் சுற்றி
பொலிஸ் காவலுடன் சிவகுமாரன் படுத்திருந்த கட்டிலுடன் விலங்கிடப்பட்ட நிலையில்
அனுமதிக்கப்பட்டிருந்தான். சிவகுமாரனின் தாயாரும், வைத்தியரான அவனது சகோதரனும்
அருகில் இருந்தனர். சிவகுமாரனை காப்பாற்றும் நம்பிக்கையுடன் வந்திருந்த சகோதரன்
சிவகுமாரனின் காதில் குசுகுசுத்தார். சிவகுமாரன் மருந்துகளை உண்ண மறுத்தான். இதை
அறிந்த தாயார் அழத்தொடங்கினார். சிவகுமாரனோ ”அம்மா அழவேண்டாம். உனதுமகன் இறந்தால்
இன்னும் ஆயிரம் சிவகுமாரன்கள் பிறப்பார்கள்!” என்று தேற்றினான். நேரம் சென்று
கொண்டிருந்தது. சிவகுமாரனின் விரல்கள் நீலமாகிக் கொண்டு வந்தது. அதைத் தாயிடம்
காட்டிய சிவகுமாரன் இன்னும் சிறிதுநேரத்தில் தான் இறந்துவிடுவேன் என்று கூறியபோது,
இந்தத்தாயின் இதயத்தை ஆயிரம் ஈட்டிகள் குத்துவது போல இருந்திருக்கும்…
05.06.74 புதன்கிழமை மாலை 5 மணி 30 நிமிடமளவில் சிவகுமாரனின் உயிரும் பிரிந்தது…….
”சிவகுமாரன் இறந்துவிட்டான்!”, ”திரவியம் இறந்துவிட்டான்!!” , ”தங்கம்
இறந்துவிட்டான்!!!” குடாநாட்டின் சந்துபொந்துகள் எங்கும் செய்திகள் பரவியது.
மதில்களும், கட்டிடங்களும், தார்வீதிகளும் சிவகுமாரனின் வாசகங்களால் எங்கும்
நிறைந்தது. யாழ்ப்பாணமே அழுதது. இளைஞர்கள் குமுறத் தொடங்கினர்.
சிவகுமாரனின் மரணவீட்டை கூட்டணியினரான அமிர்தலிங்கமும், நவரத்தினமும்,
செல்லத்துரையும் நடத்த முற்பட்டனர்.
சிவகுமாரனின் பூதவுடல் மரண விசாரணைக்குப் பின்பு பொலிஸ் பாதுகாப்புடன் அவரின்
இல்லத்துக்குக் கொண்டுவரப்பட்டது. மூன்று தினங்களாக 15 ஆயிரம் பொதுமக்களுக்கு மேல்
அஞ்சலி செலுத்தியிருந்தனர்.
7ம் திகதி காலை வடக்கிலிருந்த அனைத்துக் கடைகளும் பூட்டப்பட்டன. அன்று காலை
விடப்பட்ட வேண்டுகோளுக்கிணங்க எங்கும் தோரணங்களும் கறுப்புக் கொடிகளும்
கட்டப்பட்டன. இறுதி ஊர்வலம் அவன் இல்லத்தில் இருந்து ஆரம்பமானது. பூதவுடல்
வீடடிலிருந்து புறப்பட ஆயத்தமான போது: உணர்ச்சிவசப்பட்ட 7 இளைஞர்கள் முதலில் தமது
விரல்களை பிளேட்டினால் கீறி சிவகுமாரனின் நெற்றியில் வீரத்திலகமிட்டனர். இதைத்
தொடர்ந்து 100க்கு மேற்பட்ட இளைஞர்கள் இவ்வாறு இரத்தத்திலகமிட்டனர். இதன் பின்னர்
மைல் கணக்காக பொதுமக்கள் அந்த இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். பூதவுடல்
உரும்பிராய் பட்டினசபையிலும் தாழ்த்தப்பட்ட மக்களுக்குச் சொந்தமான சென். மைக்கல்
தேவாலயத்திலும், பொது அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
இறுதியாக பூதவுடல் உரும்பிராய் வேம்பன் மயானத்துக்கு எடுத்துவரப்பட்டு இங்கு
அஞ்சலிக்கூட்டம் நடைபெற்றது. கூட்டணி உறுப்பினரான அமிர்தலிங்கம் பேசுகையில்,
“சிவகுமாரன் தமிழ் மக்களுக்காக அளப்பரிய தியாகத்தைப் புரிந்துள்ளார். பிறப்புரிமையை
மீட்டு எடுப்பதற்காக அவர் கையாண்ட வன்முறை போராட்டத்தில் நான் வேறுபடுகிறேன்.
இருந்தபோதிலும் அவரது அர்ப்பணிப்பு உணர்வுக்கு தலைவணங்குகிறேன். அவரின்
வீரத்தியாகம் வீணாகாது. அவரது சாம்பலில் இருந்து பல்லாயிரக்கணக்கான வீரர்கள்
முளைப்பார்கள். அவரது சமாதியில் இருந்து தமிழ் ஈழம் எழும்பும்” என்று உணர்ச்சிமயமான
உரை நிகழ்த்தினார்.
இவ்வுரைகளை அடுத்து, அங்கு வந்திருந்த பெருந்தொகையான ஆண்களும் பெண்களும்
”சிவகுமாரனின் முகத்தை இறுதியாகப் பார்க்கவேண்டும்” என்று அழுகுரலில் கேட்டனர்.
அங்கு நின்றிருந்த வானின் மேல் ஏறி நவரத்தினமும், செல்லத்துரையும் சிவகுமாரனின்
பூதவுடலை கைத்தாங்கலாக உயர்த்திப் பிடித்தனர். மக்களின் அழுகுரல் மயானத்தில்
நின்றிருந்த அனைவரையும் கலங்கவைத்தது.
இறுதியாக, தந்தையார் சிவகுமாரனின் பூதவுடல் வைக்கப்பட்ட சிதைக்கு தீமூட்டினார். ..
சிவகுமாரனுக்கு கூட்டணியினரும், ‘மாவை’யின் தலைமையிலான இளைஞர் பேரவையினரும்,
”ஈழத்து பகத்சிங்”, என்றும் பட்டம் வழங்கினர்.
இவ்வருடமே அந்த வேம்பன் மயானத்தில் சிவகுமாரனுக்கான நினைவுக் கல்லறை கட்டப்பட்டது!
இதுவே ஈழப்போராட்டத்தில் கட்டப்பட்ட முதலாவது ‘மாவீரர் கல்லறை’.
சிவகுமாரனின் மரணம் அன்று வழக்கிலிருந்த சமூக நடைமுறைகளை, சுயமாகவே மக்களை
மீறவைத்தது.
1. இறந்த ஒருவரின் பூதவுடலுக்கு இரத்தத்திலகமிட்டு மரியாதை செலுத்தியது இதுவே முதல்
நிகழ்வாக இருந்தது.
2. யாழ் திருச்சபை வரலாற்றில், முதல் முதலாக வேறு மதத்தைச்சார்ந்தவரின் உடல்
தேவாலயத்தில் வைக்கப்பட்டு, ‘கோவில் புத்தகத்தில்’ பதியப்பட்டதும் இதுவே முதல்
தடவையாகும்.
3. சாதிபேதத்தைக் கடந்து தாழ்த்தப்பட்ட மக்கள் தமது அஞ்சலிக்காக கோரிய ஓர் உயர்சாதி
இளைஞனின் உடலாகவும் (மரணமாகவும்) இது இருந்தது.
4. பெண்களையும் மயானத்துக்குக் கூட்டிவந்த ஒரு மரணமாகவும் இதுவே வரலாற்றில் முதலாக
இருந்தது.
5. மயானத்தில் கல்லறையும் கட்டப்பட்ட மரணத்துக்குரியவனாக சிவகுமாரனின் மரணமே
வரலாற்றில் முதலாக நடந்தது.
ஐயாவுடனான முரண் -2
”அவரூடாக பிரான்சிஸ் அல்லது கி.பி.அரவிந்தனும் எமக்கு அறிமுகமாகிறார். ஜீவராஜா,
பிரான்சிஸ், சிவகுமார், மகேந்திரன் ஆகியோர் எமது இடத்திலிருந்தே கோப்பாய் வங்கிக்
கொள்ளையை மேற்கொள்ளப் போகிறார்கள்” என்று ஐயா எழுதியிருந்தார்.
அன்று குடாநாட்டில் ஒரு கீரோவாகவே சிவகுமாரன் பேசப்பட்டான். இந்தக் கீரோவே
இவர்களைத் தேடி வந்தபோது, ஏன் ஐயா போன்றவர்கள் இக் கீரோத்தனத்தால்
ஈர்க்கப்படவில்லை? பிரபாகரனே இக்காலத்தில் சிவகுமாரனைச் சந்திக்க
விரும்பியிருந்தார்! அப்பேற்பட்ட அன்றைய கிரோவை அவர் சந்திக்க தடையாக இருந்ததும்…
நீங்கள் இக்கீரோத்தனத்தால் தேடிவந்த போதும்… ஈர்க்கப்படாததுக்குமான காரணம்
ஒன்றுதானா?
கூட்டணியின் ‘துரோகிகள் பட்டியலுக்கு’ வெளியே அரசு இயந்திரப் பொலீசாரையும்
சிவகுமாரன் எதிர்க்க முற்பட்ட போக்குக்கும், கூட்டணிக், பிரபா, தங்கத்துரை
போன்றவர்களுக்கும் இருந்த முறிவுப்போக்கா அன்று இந்தக்கீரோத்தனம் உங்களை ஈர்க்காமல்
போனது?
…………………………………………………………….
சிவகுமாரனின் மரணத்தை அடுத்து, சிறிமா யாழ் வருவது திட்டமிடப்பட்டது…
சிவகுமாரனின் மரணத்தால் கொதித்துப் போயிருக்கும் இளைஞர்களை, யாழ் பல்கலைக்கழக
திறப்புக்கு எதிராக தூண்டத் திருப்பியது கூட்டணி அரசியல். இதைத் துரையப்பாவின்
துரோகத் திட்டமாகவும் காட்ட முற்பட்டது. 74ம் ஆண்டு ‘தாயகம்’ ஆனி இதழில் கைலாசபதி,
‘பரமன்’ என்ற புனைபெயரில் கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார்.
யாழில் உருவாகும் பல்கலைக்கழகம் விவசாயம் மற்றும் மீன்பிடித்துறையில் ஆய்வுகளையும்,
ஆராய்ச்சிகளையும் மேற்கொள்ளக்கூடிய வளாகமாக இது உருவாகி வளரவேண்டும் என்றும், அதன்
அவசியத்தையும் அவர் எழுதியும் இருந்தார்.
26.06.74 கச்சதீவு கையெழுத்தானதுடன், மனனாரின் மீன்பிடி மற்றும் தலைமன்னார் படகுச்
(கப்பல்) சேவை தொடர்பான பேச்சுவார்த்தைகளும் தொடங்கியிருந்தன.
சிவகுமாரனின் மரணம் பல இளைஞர் குழுக்களுக்குள்ளும் ஆயுதப் போராட்டத்தின் போக்கைத்
தீவிரப்படுத்தி இருந்தது. இநதப் பின்னணியில் யாழ் பல்கலைத் திறப்பு விழாவும்,
காங்கேசந்துறை இடைக்காலத் தேர்தலும் அறிவிக்கப்படுகிறது. காங்கேசன்துறை தொகுதியில்
தந்தை செல்வாவும், அவரை எதிர்த்து அளவெட்டி வி.பொன்னம்பலமும் (கம்யூ.கட்சி)
வேட்ப்பாளர்களாகப் போட்டியிட்டனர்.
பல்கலைக்கழகத் திறப்புக்கு எதிர்ப்பும், வி.பொன்னம்பலத்துக்கு எதிரான தேர்தல்
பிரச்சாரமும் ஒருங்கே சூடுபிடிக்கத் தொடங்கியது. வி. பொன்னம்பலத்தை வெருட்டவும்,
அவருக்கு இடைஞ்சலைக் கொடுக்கவும், அன்று அளவெட்டி பலநோக்குக் கூட்டுறவுச் சங்கம்
இளைஞர்களால் கொள்ளையிடப்பட்டது!
முதல் தடவையாக வெற்றிகரமாகக் 91 ஆயிரம் ரூபா கொள்ளையிடப்பட்ட சம்பவமாக இது
இருந்தது. இக்காலத்தில் 87 ஆயிரம் ரூபா தெல்லிப்பளை ப.நோ.கூ சங்கத்தில்
கொள்ளையிடப்பட்டதாகவும் பதிவுகள் கூறுகின்றன. இவை இரண்டும் நடந்தனவா? அல்லது
தெல்லிப்பளையா? அளவெட்டியா? சரி என்பதற்கான ஆதாரங்கள் இன்னும் சரியாக
வெளிவந்திருக்கவில்லை.
இந்தியாவில் அப்பொழுதிருந்த ‘ஈழத்து சந்திரபோஸ்’ என்று அழைக்கப்பட்ட
இராசரத்தினத்தின் இவ்வாண்டு ‘டயறி’யில் பின்வருமாறு எழுதப்பட்டிருந்தது.
புதன் 04, செப்டம்பர் -74
‘‘தாமிரபருணி புதிய புலிகள் என்னும் பெயரை உருவாக்கி கொடுத்தேன். அதன் உள்ளாக்க
கருத்தையும் விளக்கித் தங்கத்திடம் கூறினேன். அவரும் அதை மகிழ்ச்சியுடன்
ஏற்றுக்கொண்டார். இது ஒரு புதிய சகாப்தம். கம்பெனிப் பிரயாணத்துக்குரிய முதலாவது
வண்டியில் நானும் திரு. கமுரும் ஏறி வந்தோம். திரு கஜன் என்னைச் சந்தித்தார்.”
வியாழன் 05, செப்டம்பர் – 74
” கடையிலே தங்கியிருந்தேன். எங்களது முதலாவது டுரிஸ் பஸ் இன்று அதிகாலை 5-00
மணிக்கு புறப்பட்டுச் சென்றது. டி . என் . டி ( T.N.T ) க்குரிய உறுதிப்
பிரமாணத்தையும் குறிப்புக்களையும் வரைந்தேன்.”
ஐயாவின் தகவலின் (பதிவுகளின்) படியும் இவரே புதிய தமிழ் புலிகள் (ரி . என் . ரி)
என்ற யெரை செட்டிக்கும், பிரபாவுக்கும் உருவாக்கிக் கொடுத்ததாகவும்
உறுதிப்படுத்தியிருந்தார்!)
சிறிமா ஒக்டோபர் மாதம் 06 ஆம் திகதி யாழ் பல்கலைக் கழகத்தை திறந்து வைப்பார்
என்றும் அறிவிக்கப்பட்டது. இதனால் ஒட்டோபர் 3 ம் திகதி புதன் கிழமை, தீவிரவாத
இளைஞர்களும் கூட்டணியினரும் இணைந்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.
இதன்பின்னர் சிறிமாவின் யாழ் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும்படி, பலாலி – யாழ்
வீதிகளுக்கு அருகிலிருந்த மக்களையும், பாடசாலை மாணவர்களையும் கூட்டணியினரும்
இளைஞரும் கேட்டிருந்தனர்.
சனி 06, ஒக்டோபர் – 74
காலை நேரம், பலாலி – யாழ் வீதி இரு மரங்கிலும், மக்களும் பாடசாலை மாணவர்களும்
அணிவகுத்து நின்றனர். அன்று மழை இலேசாகத் தூறிக்கொண்டிருந்தது. தார்வீதியில்
சிறிமாவின் வரவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து வெண்கட்டியால் எழுதப்பட்ட வாசகங்கள்
நனைந்து கொண்டிருந்தது. கறுப்புக் கொடிகளும், குடைகளும் மக்களின் கைகளில்
காணப்பட்டது. ஆங்காங்கே சில மேடைகளில் சிலர் எதிப்பாகப் பேசிக்கொண்டிருந்தனர்.
சிறிமாவின் வாகனம் இராணுவ அணிவகுப்புடன் பலாலி விமானநிலையத்திலிரு வந்து
கொண்டிருந்தது. மழை பெய்துகொண்டிருந்ததாலும் பாதுகாப்புக்காரணத்தினாலும் வேகமாகவே
அவ்வாகனம் சென்றது.
காங்கேசன்துறை பொலீஸ் நிலையத்தின் முன்பாக நிறுத்திவைக்கப்படிந்த ஜுப்புக்குக்
குண்டு வீசப்பட்டது. துரையப்பாவின் சிறிமாவுக்கான நகரசபை மரியாதையைக் குழப்பும்
நோக்குடன் மற்றொரு குண்டு, யாழ் புகையிரத நிலையத்துக்கு அருகில் வைக்கப்பட்டது.
இதேபோல யாழ் பஸ்தரிப்பு நிலையத்திலும் குண்டு வெடிக்க வைக்கப்பட்டது. இதேபோல
சிறிமாவுக்கு மொழிபெயர்ப்பாளராகக் கலந்துகொண்ட கம்யூனிச கட்சிஉறுப்பினரின்
வீட்டுக்கும் குண்டு வீசி எச்சரிக்கப்பட்டது. மற்றும் யாழ் பல்கலைக்கழகத்தின்
முதலாவது தலைவராக (வேந்தராக) பதவி ஏற்ற க.கைலாசபதியின் யாழ் வீட்டுக்கும் குண்டு
வீசப்பட்டது. ஒரு சில பஸ்சும் கொழுத்தப்பட்டது. இதில் எவருக்கும் உயிர்ச்சேதம்
ஏற்பட்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கூட்டணியினரின் தூண்டுதலிலும் வழிகாட்டலிலும் புதிய புலிகளின் செட்டியும்,
பிரபாகரனும் இணைந்து இத்தாக்குதலை நடத்தியிருந்தனர். இவ் வன்முறைச் சம்பவங்களின்
பின் பல தீவிரவாத இளைஞர்கள் பலரும் கைதாகத் தொடங்கினர்.
கண்ணாடியின் உட்கொலைக்குப் பின்னர் பிரபாகரனும், செட்டியும் இணைந்து நடத்திய
கொள்ளை, வன்முறைச் சம்பவங்களாக இவைகள் கருதப்படுகின்றன.
யாழ் பல்கலைக்கழகத் திறப்புவிழாவை அடுத்து துரையப்பா ”பெண்களைக்
கூட்டிக்கொடுத்தார்” என்ற பழியோடும், அவருக்கு இயற்கை மரணம் இல்லை என்றும்,
”சிங்களப் பொலீஸ் நாய்கள்” என்றும் சூடான மேடைப்பேச்சுக்களுடன் அடுத்தவருடத்
காங்கேசன்துறைத் தேர்தலுக்கான ஆரவாரங்களுடன் அடுத்த வருடமும் பிறக்கிறது…
தொடரும்….

ஜயாவின் பதிவுகளும்-எனது பின்னூட்ட முரண்களும்…05- ரூபன்
1974 ஆம் ஆண்டு புதுவருடத்தைத் தொடர்ந்து, வடக்கே நான்காவது தமிழாராய்ச்சி
மாநாட்டுக்கான ஆரவாரங்கள் ஆரம்பமாகியிருந்தது. வடக்கே தென்னோலைத் தோரணங்களும்,
வாழைமரங்களும், மின் அலங்காரங்களும், சப்பறங்களும், அலங்கார வளைவுகளுமாக யாழ்நகரம்
விழாக்கோலம் கொள்ளத் தொடங்கியது.இவ் ஆரவாரங்கள் இப் புத்தாண்டையடுத்து ஆரம்பமாகி
இருப்பினும், மாநாட்டுக்கான முயற்சிகள் 70 களின் தேர்தலுக்கு முன்னரே
தொடங்கப்பட்டும் இருந்தது. 22-1-70-இல் யாழ் – வீரசிங்கம் மண்டபத்தில் இந்த
மாநாட்டையொட்டி முன்னைநாள் மலேசியப் பல்கலைக்கழக இந்தியத் துறைப் பேராசிரியரும்,
அனைத்துலகத் தமிழாராய்ச்சி மன்ற இணைச்செயலாளரும், “தமிழாராய்ச்சி ஏடு” (Journal of
Tamil Studies ) ஆசிரியருமான அறிஞர் தனிநாயகம் அடிகள் கருத்தரங்கு ஒன்றை நடத்த
இருந்தார்.
இக்கருத்தரங்குக்கு முதல்நாள் ”நான்காவது தமிழாராய்ச்சி மாநாடு – நமது
பொறுப்புக்கள் யாவை?” என்ற கட்டுரை (21-1-70 இல்) ‘ஈழநாடு’ பத்திரிகையில்
வெளிவந்திருந்தது.
இக்கட்டுரை அன்று தமிழாராய்ச்சி மாநாட்டின் பொறுப்பை ‘நறுக்’கென்று
சொல்லியிருந்தது. ‘இதிகாசங்கள், புராணங்களின் அடிப்படையில் ஆய்வுகளைச் செய்வதைவிட,
இன்றைய யதார்த்த நிலையிலிருந்து இவ்வாராட்சி மாநாட்டை நடத்தும்படி’ இது
கோரியிருந்தது. இக்கட்டுரை சிங்கள தமிழ் புத்திஜுவிகளை, கல்விமான்களை
கவர்ந்துமிருந்தது. மாநாட்டுக் குழுவினர் இக்கட்டுரையின் கருத்தை
ஏற்றுக்கொண்டதுடன், மூன்றாவது தமிழாராய்ச்சி குழுவுக்கும் (பிரான்ஸ்) இதை
அனுப்புவது எனத் தீர்மானித்தனர். இக்கட்டுரை பின்னர் புத்தகமாக வெளிவந்துமிருந்தது.
தமிழ்மொழியைப் பேசுகின்ற முதலிரு மாநாடுகளையும் நடத்திய ஆசியநாடுகளில், அந்நாட்டு
அரச தலைவர்களே இம்மாநாட்டைத் தொடங்கி வைத்தனர். இதனால் சிறீமாவோ பண்டாரநாயக்கா
இம்மாநாட்டைத் தொடங்கி வைக்கவேண்டும் என்ற பிரச்சனை ‘தேர்தலின் (70) பின்னர் தரகு
அரசியல்களுக்கு இடையே பலத்த முரண்பாடாக மாறத் தொடங்கியும் இருந்தது.
72 இல் புதிய அரசியல் அமைப்பை அடுத்து இப்பிரச்சனை முறுகல் நிலையை எட்டியிருந்தது.
”பிரதமர் சிறிமாவை மாநாட்டுக்கு அழைப்பதன் மூலம் சர்வதேச பிரதிநிதிகள் முன்னிலையில்
அவர் கவுரவிக்கப்படுவது முரண்பாடாக அமையும்” என்று இளைய தீவிரவாத தலைமுறையினரும்,
தீவிரவாத இளைஞர்களுக்கான அரசியல் போக்காக இதைப் புடம்போட்டுக் காட்டும்,
வணிகத்தரகுகளின் கபடம் நிறைந்த ‘தரகுப் போட்டியின்’ பழிவாங்கும் அரசியலாக இம்மாநாடு
கையாளப்பட்டது!
இம் முரண்பாடானது முற்போக்காளரை அனைத்துலக தமிழாராய்ச்சி மன்றத்தின் – இலங்கைக்
கிளையில் இருந்து வெளியேறவும், இம்மாநாட்டை பகிஸ்கரிக்க முற்படவும் வைத்தது.
அனைத்துலக தழிழாராய்ச்சி மன்றத்தின் இலங்கைக் கிளையின் தலைவர் டாக்டர் எச்.டபிள்யூ.
தம்பையா தனது தலைமைப்பதவியைத் துறந்திருந்தார். டாக்டர் எச். டபிள்யூ. தம்பையா,
கோலாலம்பூர் மாநாட்டிற்கு இலங்கைக் குழுவுக்குத் தலைமை வகித்துச் சென்றவர். இவர்
அப்பொழுது இலங்கை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக இருந்தார்.
1972 ஆம் ஆண்டிலேயே இலங்கைக் கிளையின் ‘மாநாட்டுக்கான’ பொதுக்கூட்டம்
பம்பலப்பிட்டி மிலாகிரிய அவெனியூவிலுள்ள ‘சாந்தம்’ மனையிலே கூடுவதற்கு முன்பே….
வணிக, தொழிற்துறைத் தரகுமுகாம்களின் நலன்சார்ந்த இரு முகாமைத்துவக் கட்சிகள்,
இக்கிளைக்குள்ளேயே உருவாகியிருந்தன. ஆளுங்கட்சி தொழிற்துறை தரகுநலன் சார்பாக
கொண்டுவர இருந்த புதிய யாப்பு ஆவணம் பற்றியும், அவர்கள் பதவியில் வைக்க இருந்த
முகாமைக் குழுவினர் பற்றியும், அக்கட்சியினைச் சேராத -வணிகத்தரப்பு நலன் சார்ந்த –
வட்டங்களுக்குப் பொதுக்கூட்டத்தின் முன்பே தமது ஆளுமையைக் கொண்டுவர திட்டமிட்டனர்.
இதனால் ஆளுங்கட்சி தரப்பு எதிர்பாராத அளவுக்குத் தமிழறிஞரும் தமிழபிமானிகளும்,
இளைஞர் ஆதரவுகளும், பெருந்திரளாகப் பொதுக்கூட்டத்திற்கு எழுந்தருளியிருந்தார்கள்.
அந்தக் கூட்டத்திலே ஆளுங்கட்சியினர் கொண்டு வந்த யாப்பாவணம் பல்வேறு திருத்தங்கள்
மூலம் புதிய வடிவம் பெற்றமையும் அவர்கள் முன்வைத்த முகாமைக்குழு உறுப்பினருக்குப்
பலத்த போட்டி ஏற்பட்டு அவர்கள் தோல்வியுற்றனர். அன்று முதல் தொடர்ந்து பல
மாதங்களாகத் தமிழர் வட்டாரங்களிலே ‘இந்த வெற்றி’ தீவிரவாத இளைஞர் மட்டத்திலும் அதன்
மேய்ப்பர்களாலும் சிலாகித்துப் பேசப்பட்டன.
இந்தக் கூட்டம், இலங்கை அனைத்துலகத் தமிழாராய்ச்சி மன்றக் கிளைக்குப் புதியதொரு
முகாமைச்சபையை உருவாகியது. இச்சபைக்கு கோலாலம்பூர் மாநாட்டில், தமிழாராய்ச்சி
மன்றத்தின் துணைத்தலவர்களில் ஒருவராக அங்கு நியமனம் பெற்றிருந்தார்! தம்பையா
கம்யூனிஸ்டுகளின் முற்போக்கு சங்கத்தினரின் கருத்தை ஆதரித்தவர். ஆயினும், அவரை
-இக்கூட்டத்தில்- இலங்கைக் கிளையின் முகாமைக்குழுவின் தலைவராகப் பிரேரித்த போது
யாருமே மறுப்புத் தெரிவித்திருக்கவில்லை. ”அரசுடன் ஒத்தூதும் இடதுசாரிகளை அநுமதிக்க
இடம் வைக்கக்கூடாது!” என்று வணிகத்தரகுப்பக்கம் ‘துணிந்தவர்களும்’, ஆமோதித்தனர்.
1973 அக்டோபர் ஆரம்பம் வரை அடுத்தடுத்து நடைபெற்ற முகாமைக்குழுக் கூட்டங்களில்,
எச்.டபிள்யூ.தம்பையா அவர்கள், ஒரு வருடத்துக்கு மேலாக மாநாட்டினைக் ”கொழும்பிலே
வைக்கவேண்டும்” என்று வலியுறுத்தி வந்தார்.
1973-10-02 ஆம் திகதி ‘தமிழ் இளைஞர்களை’ (ஏனைய அரசியல் போக்கைச் சார்ந்த கைதிகளை
அல்ல!) விடுதலை செய்யக் கோரி வடக்குக் கிழக்கில் பூரணகர்த்தால் நிகழ்த்தப்பட்டு,
கைதிகள் விடுவிக்கப்படத் தொடங்கியபோது மூன்றாவதுநாள் நடத்தப்பட்ட முகாமைக்குழுக்
கூட்டத்தில் தம்பையாவைப் பார்த்து ”தலைமைப் பதவியினைத் துறக்கும்படி ” வணிகத்தரகு
சார்பினர் முகத்திற்கு முன்னே கேட்டனர். அவரும் உடனே தனது பதவியை துறந்திருந்தார்.
இவரும் பதிலுக்கு, இந்தக் ”கவரிமான்”களிடம் தான் நன்கொடையாக வழங்கிய பணத்தைத்
திருப்பித் தரும்படி கேட்டும் கொண்டார்.
இதையடுத்து 1973-10-05 ம் திகதி பேராசிரியர் சு.வித்தியானந்தனை தலைவராகவும்,
கட்டடக்கலை வரைஞர் துரைராஜாவை செயலாளராகவும், கோ.மகாதேவாவை பொருளாளராகவும் கொண்டு
புதிய இம் ‘மாநாட்டுக்குழு’ அமைக்கப்பட்டது. இதன்பின் பாதுகாப்பமைச்சர் லக்ஷ்மண்
ஜெயக்கொடியின் அழைப்பினை ஏற்றுத் தலைவர் (பேராசிரியர் சு. வித்தியானந்தன்)
தனியனாகவே அமைச்சரைச் சந்தித்தார். இதன்போது அமைச்சர் மூன்று அம்சக்கோரிக்கையை
முன்வைத்தார்.
1. மாநாடு கொழும்பிலே நடத்த வேண்டும்; மாநாட்டிற்கு பண்டாரநாயக்க மண்டபத்திலே
எவ்விதமான கட்டணமும் இன்றி இலவசமாகத் தரப்படும்.
2. பிரதமர் சிறிமா மாநாட்டினை ஆரம்பித்து வைக்கவேண்டும்.
3. அமைச்சர் செல்லையா குமாரசூரியர் வரவேற்புரை ஆற்றவேண்டும். மாநாட்டில் கலந்து
கொள்ள இருந்தவர்களுக்கு அரசின் செலவில் தங்கும் வசதியும் உணவு வசதிகளும்
முன்வைக்கப்பட்டன.
”தலைவர் முதல் அம்சத்தினையே மறுத்து விட்டார், அதனால் பேச்சுகே இடமில்லாமற்
போய்விட்டது.” என தீவிரவாத இளைஞர்களை உசுப்பேத்தி மகிழ்ந்தனர். (மேற்படி
முரண்பாடுகளே புதிய தலைமையை உருவாக்கியது என்பது இங்கு சுவாரசியமானது. பிரான்சில்
-70இல்- நடந்த மாநாட்டில் இலங்கைக் கிளை சார்பாக பேராசிரியர் சு. வித்தியானந்தன்,
கலாநிதி க. கைலாசபதி, ஜனாப் எஸ். எம். கமாலுதீன் எனும் மூவரும் பிரதிநிதிகளாக
கலந்துகொண்டனர் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.)
இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் (இ.மு.எ.ச.) ஜக்கிய முன்னணி அரசு 1970இலே
தோன்றியபோது மீண்டும் தழைத்தோங்கியது. அதேவேளை அமைச்சர் செல்லையா குமாரசூரியர்
தமிழ் சம்பந்தமான விடயங்களுக்கான அரசின் பிரதான ஆலோசகராகவும் இருந்தார். இந்தக்
கட்டத்திலே கே.சி.தங்கராசா குழுவினரை ஓரங்கட்டும் முகமாக ”அரச ஆசிகளோடு வலம் வந்து
கொண்டிருந்தவர்களை முகாமைச் சபையிலே சேர்த்துத் தமிழாராய்ச்சி மாநாட்டினை நடாத்த
முடிவு கட்டுகின்றனர்.” என இவர்கள் இளைஞர்களை இனவாதமாகத் தனிமைப்படுத்தினர். (இவ் –
இ.மு.எ.ச- முக்கியஸ்தர்களே பின்னாளில் புலித்தேசியத்தின் பீரங்கிகளாக இருந்தனர்
என்பது முரண்நகையாகும். இவை பற்றி அக்கால நிகழ்வுகளுடன் ஆராய்வோம்.)
இவை அனைத்தும் 73ஆம் ஆண்டு கால்இறுதிஆண்டில் நடந்து கொண்டிருக்கின்றன.
இக்காலத்தில் தெற்கிலே, 71 கிளர்ச்சியில் கைது செய்யப்பட்ட யே.வி.பி
உறுப்பினர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கும்படியும், அவர்களை புனர்வாழ்வு மற்றும்
இயல்பு பொதுவாழ்க்கையில் இணைக்கும்படியும், கொல்லப்பட்ட யே.வி.பி உறுப்பினர்களின்
குடுப்பத்தினருக்கு நட்டஈடு வழங்கும்படியும், யுத்தக்குற்றங்கள் மற்றும் மனிதஉரிமை
மீறல்கள் உரியபடி விசாரிக்கப்பட வேண்டுமெனவும் சிங்கள மக்களின் வலியுறுத்தல்கள்
அமைப்புருவாக மேலெழுந்திருந்தன.
இந்நெருக்குதலின் விளைவும், மாநாட்டில் வெளிநாட்டவர்களின் பங்குபற்றுதலும்,
நெருங்கிவரும் ‘சிறிமா – இந்திரா’ ஒப்பந்தத்தையும் அரசு கணக்கில் கொண்டு அரசு:- ஒரு
தொகுதி கைதிகளை 73 இறுதி மாதங்களில் விடுதலை செய்தது.
யே.வி.பியின் முக்கிய தலைவர்கள் மற்றும் இக்கிளர்ச்சியில் முக்கிய பங்கெடுத்தவர்கள்
புறநீங்கலாக, ஏனையோர் விடுதலை செய்யப்பட்டனர். கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் சண் உட்பட,
இலங்கை திராவிடக் கழக உறுப்பினர், தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்க உறுப்பினர்கள்
(கே.டானியல் உட்பட), தமிழ் தீவிரவாத இளைஞர்களில் குட்டிமணி தவிர – ஏனையோர் அனைவரும்
விடுதலை செய்யப்பட்டிருந்தனர்.
அரசு தலைநகரில் மாநாட்டை நடத்தி, அதற்கு ஒத்துழைப்பை வழங்கி – திறந்துவைத்து –
‘நல்லபிள்ளைத் தரகாக’ தனது முரண்பாட்டை மாற்ற அரசு காய்களை நகர்த்தியது.
யாழ்.வீரசிங்கம் மண்டபம் உட்பட, யாழ்.மேயரின் நிர்வாகத்தின் கீழிருந்த முற்றவெளி
அரங்கமும், அரச பாடசாலை மற்றும் பொதுமண்டபங்களும் மாநாட்டு குழுவுக்கு
புத்தாண்டுக்கு முன் மறுக்கப்பட்டது.
இச்சதுரங்க விளையாட்டுக்கு எதிர்க் காய் நகர்த்தலாக, குடாநாட்டு திரைப்பட
மாளிகையின் உரிமையாளர்கள் பேரம்பலத்தின் கடிதமூலமான வேண்டுகோளை ஏற்று ”1974 தை 3
ஆம் திகதி முதல் 9 ஆம் திகதிவரை நான்காம் தமிழாராய்ச்சி மாநாடு கண்டிப்பாக
யாழ்நகரில் இடம்பெறும் என” இலவசமாக விளம்பரப்படுத்தப்பட்டது. இதையடுத்து கரையோர
கடல் கண்காணிப்பை வழமைக்கு அதிகமாக அரசு அதிகரித்தது. (இந்தியாவில் இருந்து
மாநாட்டுக்கு பேச்சாளர்கள் கடத்தப்படுவதைத் தடுக்க)
இந்த நேரத்தில் குட்டிமணி வெடிமருந்து ‘சக்கைகளை’ ஏற்றி வள்ளத்தில், இலங்கைக்கு
கடத்திவர முற்பட்டார். இவ்வள்ளம் கடற்படையினரின் கண்ணில் ஏத்துப்படவே, குட்டிமணி
இந்தியாவை நோக்கி ஒடி தப்பித்த வேளை இந்தியக் கரையில் வைத்து கைதுசெய்யப்பட்டார்.
பின்னர் இவர் (கருணாநிதி அரசால்) இலங்கை அரசிடம் ஒப்படைக்கப்பட்டார்.
இந்த நிகழ்வுக்குப் பின்னர் தான் கைதிகளை விடுதலை செய்யக்கோரி வடக்குக் கிழக்கில்
பூரணகர்த்தால் நிகழ்த்தப்பட்டது (02-10-73).
இந்த நிகழ்வுகளை அடுத்து…..
1973 ஜப்பசியில் சம்பத்தரிசியார் கல்லூரியில் நடந்த உதைபந்தாட்ட விளையாட்டுப்
போட்டியின் போது, இராணுவத்துக்கும் குருநகர் மக்களுக்கும் இடையில் நடந்த தகராறைத்
தொடர்ந்து….
சேந்தாங்குளம் சந்தியில் சங்கானை சங்கரத்தைக்காரர் ஒருவருக்குச் சொந்தமான காரொன்றை
இராணுவத்தினர் தீயிட்டுக் கொழுத்தியிருந்தனர். மேற்படி தகராறைச் சாட்டாக வைத்து,
சேந்தாங்குளத்தில் இருந்து வல்வை வரையான கரையோரப் பாதையோரக் (ஏ – 40) கடைகளை
கொள்ளையிட்டும், இவ்வீதியால் வருவோர் போவோரை ஆங்காங்கே தாக்கியும் அரச பொலீசார்
அட்டகாசம் செய்துமிருந்தனர்.
1973 நவம்பரில் மலையகப் பகுதியில் யூஎன்பி மற்றும் தொண்டமான், தமிழரசுக் கட்சியின்
ஒத்துழைப்புடன் ”மக்கள் வெற்றிகரமாக நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்தில்”, விடுதலை
செய்யப்பட்டு வெளியே வந்திருந்த 10 தீவிரவாத இளைஞர்கள் இதில் கலந்து கொள்ள மலையகம்
சென்றனர். இதில் ஒருவர் சிவகுமாரன் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இப்பின்னணியில் தான் 1974 ஆம் ஆண்டும் பிறந்தது.
(ஆண்டு 1974 முதலாம் பகுதி)
வருடப்பிறப்பு அன்றே அரசு, நான்காவது தமிழாராய்ச்சி மாநாட்டை யாழில்
நடாத்துவதற்கும், அதற்கான மண்டபங்களுக்கான அனுமதியையும் வழங்கியது. இதையடுத்து
யாழ்ப்பாணம் விழாக்கோலம் கொள்ளவும் தொடங்கியது.
மாநாட்டின் ஆய்வின் அமர்வுகள் வீரசிங்கம் மண்டபத்திலும், யாழ்.’றிம்மர் கோல்’ இலும்
நடந்தன. இதன் கலைநிகழ்ச்சிகள் யாழ் திறந்தவெளியரங்கிலும், சுண்டுக்குளி மகளிர்
கல்லூரி மண்டபத்தில் மாலைவேளைகளில் தமிழர் பண்பாட்டுப் ‘பொருட்காட்சி’ யும்
நடைபெற்று வந்தன. இப்பொருட்காட்சியின் போது, சாலை இளந்திரையனைத் தலைவராகவும்,
குரும்பசிட்டி இரா. கனகரத்தினத்தை (இவர் ஒரு ஆவணத் தொகுப்பாளர்) செயலாளராகவும்
கொண்டு ‘உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கம்’ என்ற ஒன்றை சாலை இளந்திரையனால்
முன்மொழிந்தும் உருவாக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இம்மாநாட்டுக் காலத்தில் வருகை தந்திருந்த (அரசினால் பலருக்கு அனுமதி
-வெளிநாட்டவருக்கு – மறுக்கப்பட்டிருந்தது!) அறிஞர்களுக்கு ஒரு விருந்துபசாரத்தை
யாழ் நகரசபை சார்பாக துரையப்பா இறுதிநாள் வழங்க அழைப்பு விடுத்திருந்தார்.
இவ்வழைப்பை நிராகரிக்கும் படி ‘கூட்டணி’யினரும், தீவிரவாத இளைஞர்களும் ‘கவரிமான்’
என்ற துண்டுப்பிரசுரம் மூலமாகக் கோரியிருந்தனர்.
நான்காவது தமிழாராய்ச்சி மாநாட்டில் ‘அரசியல்வாதிகள்’ உரையாற்றுவதை அரசு
மறுத்திருந்தது. இருப்பினும் ”உலகத் தமிழர் இளைஞர் பேரவையின்” தலைவர் டாக்டர்
ஜனார்தனனை, தீவிரவாத இளைஞர்கள் கள்ளமாகக் கடத்தி (வள்ளத்தில்) நாட்டுக்குள்
கொண்டுவந்திருந்தனர். இது குட்டிமணியின் கைதுக்கு முன்னர், இரகசியமாக நடந்தது.
இறுதிநாளான வழியனுப்பு விழாவான 10-01-74 ஆன அன்று ” சென்னையில் இருந்து தலைவர்
டாக்டர் ஜனார்தனன் கலந்துகொள்வார் ” எனக் கூட்டணி பிரச்சாரப்படுத்தியும் இருந்தது.
ஆனால் தை 3ஆம் நாள் தொடக்கம் 9ஆம் நாளுக்கு பின்னர் மாநாட்டுக்கான அனுமதிகள் அரசால்
மறுக்கப்பட்டிருந்தது.
10ஆம் திகதி வழியனுப்பும் மாலை விழாவுக்கான அனுமதியை ஏ.ரி.துரையப்பாவிடம் இருந்து
கடிதம் மூலமாக வேண்டவேண்டிய நிலை வணிகத் தமிழ் தரகுகளுக்கு உருவானது. 09ஆம்
திகதிவரை அனுமதிக்கப்பட்ட திறந்த வெளியரங்கு, ‘றொலெக்ஸ்’ ஒளி-ஒலி அமைப்பினர்
பாவனைக்கும், சப்பறம் மற்றும் மாநாட்டின் இறுதிநாள் நிகழ்ச்சியை அனுபவிக்கவும்
அனுமதிக்கப்பட்டிருந்தது.
இறுதிநாட்களில் தனது ‘விருந்துபசாரத்தை’ நிராகரித்த மாநாட்டு குழுவினரின் நடைமுறையை
அடுத்து, துரையப்பா குடாநாட்டுக்கு வெளியே சென்றிருந்தார்.
இந்த முரண்பாட்டுச் சிக்கலுக்கு இடையில், கூட்டணியினர் ‘ஊர்தி ஊர்வலங்களை’ திறந்த
வெளியரங்கில் நிறைப்பதன் ஊடாக, 10ஆம் திகதியை வீரசிங்கம் மண்டபத்தின் இறுதிநாளை
வெளியே – திறந்த விளையாட்டு அரங்குக்கு நகர்த்துவதும் – வில்லங்க கிரிமினல் வக்கில்
மூளையை பாவிக்கத் தொடங்கியது. (ஜனார்த்தனனை முற்றவெளியில் பெரும் சனத்திரள்
மத்தியில் பேசவைப்பது சாத்தியமென்ற கிரிமினல் திட்டத்தைத் தீட்டினர்)
மாநாட்டு குழுவினர் ‘சனநெருசலைச்’ சுட்டிக்காட்டி, வெளியரங்குக்கு நகர்வதற்கான
அனுமதியை பொலீசாரிடம் கோரினர். பொலீசார் மாநாட்டு மண்டபத்தின் வெளிச் சுவருக்கு
வெயியே அனுமதியை மறுத்தனர். இதனால், வீரசிங்கம் மண்டபத்தின்- திறந்த வெளியை-
நோக்கிய முன்வாசலுக்கு பிரச்சார மேடையை நகர்த்துவதற்கு மட்டும் பொலீசார்
அனுமதித்தனர்.
இந்த நிலையை அடுத்து ‘ஊர்திகள் திறந்தவெளியை நோக்கி நகரத் தொடங்கின.
நல்லூர் சங்கிலியன் சிலையில் இருந்து புறப்பட்ட பிரமாண்டமான ‘ஊர்தி’ ஊர்வலம்
பொலீசாரால் தடுக்கப்பட்டது. இவ்வூர்தி ஊர்வலத்துக்கு சிவகுமாரன் தலைமை தாங்கினான்.
பொலிசாருக்கும் _சிவகுமாரனுக்குமான வாக்குவாதம் முற்றியது. ” முப்படை வரினும்
ஊர்வலம் தொடரும்” என சிவகுமாரன் முழங்கினான். இறுதியாக அமைதியாக ஊர்வலத்தை நடத்த
பொலீசார் அனுமதி அளித்தனர். டாக்டர் ஜனார்தனன் இவ்வூர்வலத்துக்குள் மறைத்து அழைத்து
வரப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வூர்வலம் யாழ் – ஆஸ்பத்திரி வீதியில், ‘உணர்ச்சிக் கோசத்துடன்’ கடந்தபோது,
தெருவிளக்கு மின்கம்ப வயருடன் ஊர்தி மோதியதால் ஏந்பட்ட ‘மின் ஒழுக்கில்’
ஊர்வலத்தில் இருந்த இருவர் இஸ்தலத்திலேயே மரணமாகினர்.
இவ் மின்விபத்தையடுத்து யாழ் மின்சாரசபை, யாழ்நகருக்கான மின்சாரத்தைத் துண்டித்தது.
இவ்விபத்தையும், இதில் பலியாகிப் போனவர்களின் குடும்ப நிவாரணம், மற்றும் தமதுபக்கக்
கவலையீனம், தவறுகளை எதிர்கொள்ளத் திராணியற்ற, வணிகத்தரகுக் கும்பல் கூட்டணியும்
இதன் தீவிரவாத இளைஞர் சக்திகளும் இச்சம்பவத்தை வரலாற்றில் மூடிமறைத்தனர். இதற்கு
மேலாக இச்சம்பவத்தால் யாழ்நகரம் இருளில் மூழ்கியதை ”துரையப்பாவின் திட்டமிட்ட சதிச்
செயல்!” எனவும், துரையப்பாவின் மீது பழியைப் போட்டனர்.
இறுதிநாள் நிகழ்வின் இறுதிப் பேச்சாளரான, தமிழ்நாட்டைச் சேர்ந்த பேராசிரியர்
நயினார் முகமது பேசிக் கொண்டிருந்தார். நேரம் இரவு 10:30 ஜ தாண்டியும் விட்டது.
இரவு 10:30 வரைக்குமே இவர்கள் அனுமதியைப் பெற்றும் இருந்தனர். பொலீசார்
நேரத்துக்குள் விழாவை முடிக்கும்படியும் அழுத்தம் கொடுத்தனர்.
நேரம் கடந்துகொண்டு சென்றது.
கூட்டத்தில் இருந்த ஒருபகுதி சனம் ”பேச்சைத் தொடரவிடு!” என ஆவேசமாக குரல்
எழுப்பியது. சில கணத்துக்குள் இரு தரப்பு தரகுகளின் கவுரவ கனவுகளுக்குள் பல
பொதுமக்களின் பெறுமதிமிக்க உயிர்களின் மீதான விபரீத விளையாட்டு பணயமானது.
முகமதுவின் பேச்சை அடுத்து ஜனார்தனனை பேசவைப்பது, கூட்டணியினரினதும், தீவிரவாத
இளைஞர்களினதும் சவாலாக இருந்தது. ஜனார்த்தன் பேசுவதைத் தடைசெய்வதும், அவரை
கைதுசெய்வதும் அரச பொலீசார் தரப்பு சவாலாக இருந்தது.
இறுதி நேரத்தில்… இதுபற்றிய தெளிவான நேர்மையான, உண்மையான தகவல்கள் இதுவரை
வெளியாகவில்லை!…
இந்த இருதரப்பு நலன்களுக்குள்ளும் 09 பேர் இறந்திருந்தனர். 09 பேரும் மின்சாரம்
தாக்கியும் கிணற்றுக்குள் தவறிவிழுந்தும் இறந்திருந்தனர்.
இவ் இறுதிநாள் நிகழ்வில் உயிர் நீர்த்தவர்களின் விபரம்:
01. சின்னத்தம்பி நந்தகுமார் – மாணவன் (14)
02. வேலுப்பிள்ளை கேசவராஜன் – மாணவன்(15)
03. இராசதுரை சிவானந்தம் – மாணவன் (21)
04. பரம்சோதி சரவணபவன் (26)
05. இராஜன் தேவரட்ணம் (26)
06. வைத்தியநாதன் யோகநாதன் (32)
07. ஜோன்பிடலிஸ் சிக்மறிங்கம் – ஆசிரியர் (52)
08. புலேந்திரன் அருளப்பு – தொழிலாளி (53)
09. சின்னத்துரை பொன்னுத்துரை – ஆயுள்வேத வைத்தியர் (56)
இதற்குமுன்னர் ஊர்வலத்தில் உயிர்நீர்த்த இருவரின் விபரங்களும் இதுவரை
வெளியாகவில்லை! அல்லது எனது தேடலுக்குக் கிடைக்கப்பெறவில்லை!
இறுதிநேர நிகழ்வுகள் தொடர்பாக ஒரு பத்திரிகையாளர் மாநாடு நடத்தப்பட்டது. (17-01-74)
இதில் துரையப்பா தனது தரப்பு நியாயத்தை முன்வைத்தார்.
இவ் இறுதிநேர அனர்த்தங்கள் தொடர்பான விசாரணை அரசால் நடத்த முயற்சிக்கப்பட்டது.
இதில் முதல் கட்டமாக இவ் நிகழ்ச்சியை புகைப்படம் பிடித்த, பலாலிவிமான நிலையத்துக்கு
அருகில் இயங்கிய செய்தித்தாள் பத்திரிகையாளரான கைலைநாதனின் புகைப்படம் அனைத்தையும்
அரச பொலிசார் கைப்பற்றினர்.
விசாரணையின் தொடக்கத்தில்…
இறுதி நிமிடங்களில், பொலிசார் தீர்த்த ‘மேல்வெடி’ காரணமாக மின்கம்பவயர் அறுந்து
மின்னொழுக்கு நிகழ்ந்ததாக, மாநாட்டு தரப்பினர் வாதிட்டனர். அரச பொலீஸ் தரப்பினர்
இதை மறுத்தனர். ஏற்கனவே நிகழ்ந்த மின்னொழுக்கால் ”சம்பவம் நிகழும் வரை” யாழ்
நகருக்கான மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்ததாக, ( ஏற்கனவே நிழந்த மின் விபத்து
காரணமாக) மின்சாரசபை ஊழியர் தமக்கு வாக்குமூலம் அழித்திருப்பதாக பொலீஸ்தரப்பு
அறிவித்தது.
இதனால் முற்றவெளியில் இயங்கிய, ‘றொலெக்ஸ்’ நிறுவனத்தினர் விசாரணைக்கு
அழைக்கப்பட்டனர்.
விசாரணைகள் ஒத்துழைப்பின்றி சீர்கெட்டன. இருதரப்பினரும் தமது மக்கள் விரோத செயல்களை
மறைப்பதற்கு, இனக்குரோதத்தை இழுத்துப் போர்க்க முற்பட்டனர்.
இவ் இழுபறியை அடுத்து….
ஒரு பாதிரியாரை முதன்மைப்படுத்தி, கூட்டணி முக்கியஸ்தர் ஒருவரின் சுண்டுக்குழி
வீட்டை தலைமையகமாகக் கொண்டு ‘சுயாதீன விசாரணையை’ மாநாட்டு தரப்பு கோரியது. இதை அரசு
கண்டும் காணாமலும் அசட்டை செய்தது.
இவ்வாறு இரண்டு தரப்பு மக்கள் விரோதச்செயல்களும் வரலாற்றில் புதைந்து,
(புதைக்கப்பட்டுப்) போனது.
இறுதிநிகழ்வில் ஜனார்த்தனன் ஒரு பாதிரியாரின் உடையில் மண்டபத்தில் இருந்து
தப்பியிருந்தார். ஜனார்த்தனனை கைதில் இருந்து தடுப்பதற்காகவே, இவரைச் சுற்றிய
தீவிரவாத இளைஞர்கள், கற்கள் மற்றும் வெற்றுப் போத்தலால் பொலீசாரைத் தாக்கத்
தொடங்கினர்.
(ஆனால் ஜனார்த்தனன் இலங்கையில் வந்து இறங்கியதும், அவர் இந்தியா தப்பி போகும்
வரைக்கும் இவர் மீது எந்த ‘கீறலும்’ இலங்கை – இந்திய அரசால்’-
நிகழ்த்தப்படப்படவில்லை, அல்லது நிகழ்த்தப்படப் போவதில்லை! என்பதை வாசகர் நேயர்கள்
விளங்கிக் கொள்ள வேண்டும்!)
ஜனார்த்தனனை அப்புறப்படுத்திய சிவகுமாரன் குறூப்பினர், முற்றவெளியில் சிதறிக்கிடந்த
‘செருப்புக்கள்’ உடல்களை அகற்றிய பின்னர், விரத்தியுடன் வீடு திரும்புகின்றான்.
மாநாட்டு சப்பவத்தின் பின்னர், ‘கூட்டணியின் அரசியலைப் பொறுத்தவரை’ சிவகுமாரன்
இனி.. ஒரு பிரளயம்!…..
(74ஆம் ஆண்டின் பகுதி -2- இனித் தொடரும்..)
- ரூபன் -

ஐயாவின் பதிவுகளும்,எனது பின்னூட்ட முரண்களும்..04- ரூபன்
அக்காலத்தில் “ஏரிக்கரைப் பத்திரிகை” நிறுவனத்தின் “தினகரன் விழா”வானது வருடம்
தோறும் வடக்கில் நடந்து வந்தது. பல களியாட்ட விழாவை இது நடத்திய போதும்,
“மாட்டுவண்டிச் சவாரிப் போட்டி” எப்பொழுதும் களைகட்டும் நிகழ்ச்சியாக இருந்து
வந்தது.ஏரிக்கரை நிறுவனம் (Lakehouse) பத்திரிகையாக மாறியபின் (மாற்றப்பட்ட பின்),
நடாத்தப்பட்ட “மாட்டுச்சவாரி” களியாட்ட விழா” வை பெற்றோல் குண்டுவீசி அன்றைய
தீவிரவாத இளைஞர்கள் குழப்பினர். இதுவே நேரடியான அரசுக்கு எதிரான தீவிரவாத
இளைஞர்களின் வன்முறை சார்ந்த “முதலாவது” நடவடிக்கையாகும்!
1970 ஆம் ஆண்டு யூலை மாதம் 19ம் நாள், இலங்கையைக் “குடியரசாக” மாற்றுவதற்கு,
“புதிய அரசியல் நிர்ணய சபையை” சிறீமாவோ பண்டாரநாயக்கா கொண்டுவந்தார். செல்வா
தலைமையில் தமிழர் பிரதிநிதிகளும் இதில் கலந்து கொண்டனர். ஒற்றை ஆட்சிக்குப் பதிலாக
“சமஸ்டி” ஆட்சியையும், பௌத்தம் அரசு மதம் என்பதற்றுப் பதிலாக – மதசார்பற்ற –
குடியரசு “தமிழும் – சிங்களமும் ஆட்சிமொழி” என்று இவர்கள் சபையில் தாக்குதல்
செய்தனர்.
இதைத் தொடர்ந்து பாராளுமன்ற பாதையில் நம்பிக்கை இழந்த உள்ளுர் மற்றும் வெளிநாட்டுத்
தீவிரவாத இளைஞர்கள்: (பாராளுமன்ற பாதையை நிராகரித்தவர்கள் – “ரீ.எல்.ஓ” (TLO)
மற்றும், இன்னோர் பிரிவினரான “இலண்டன் பிரிவினர்” “ஈ.எல்.ஓ” (ELO) வை உருவாக்கினர்.
ஆண்டு 1971….
71ம் ஆண்டு சுதந்திரதினத்தை முன்னிட்டு சிவகுமாரன், துரையப்பா வீட்டின் மீது
பெற்றோல் குண்டை வீசினான். ..
.
இக்குண்டுவீச்சு நடந்த பின்னர்…
மூன்று நாட்களின் பின்னர்… (1971 .02 . 07)….
“தமிழர் ஐக்கிய முன்னணி”க்கான கூட்டம், பிரபாகரனின் பெரியப்பா முறையான
கணேசமூர்த்தியின் பெருமளவான முயற்சியால், இதே நாளில் வல்வெட்டித்துறையில் “ஐக்கிய
முன்னணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது!” செல்வாவைத் தலைவராகவும், கணேசமூர்த்தி –
காசியானந்தன் ஆகிய இருவரையும் செயலாளராவும் கொண்டு - முறையே கதிரவேற்பிள்ளை, ரி.
திருநாவுக்கரசு, ஏ.குமரகுரு ஆகியவர்களை நிர்வாக அங்கத்தவர்களாகக் கொண்டு இம்
முன்னணி உருவாக்கப்பட்டது.
இதை அடுத்து சிவகுமாரன் துரையப்பாவின் காருக்குக் குண்டு வைத்தான்…
இலக்குத் தவறிய குண்டையடுத்து, இரண்டாவது நாளாள (1971.03.13) ஆகிய அன்று
ரோகணவிஜயவீரா கைது செய்யப்பட்டார். இதையடுத்து 1971.04.05 ஜே.வி.பி தாக்குதலில்
இறங்கியது….
ரோகணவிஜயவீராவை விடுவிப்பதற்கான யாழ். கோட்டைத் தாக்குதல் “பாஸ்கா-71″ திருவிழாவை
அடுத்து நடந்தது. அப்போது திருநெல்வேலி மின்சார நிலையத்தில் குண்டொன்றை
வெடிக்கவைத்து, பிரபல எழுத்தாளரும் “தீண்டான்மை ஒழிப்பு வெகுஜன இயக்கத்தின்”
முன்னணி உறுப்பினருமான கே. டானியலை பொய்க்குற்றம் சாட்டி பொலீசில் மாட்டிவிட்டனர்
எதிர்த் தரப்பினர்.
இக்காலகட்டத்தில் தாழ்த்தப்பட்ட மக்களின் மீது பல வகையான காழ்ப்புணர்ச்சி கொண்ட
காட்டிக் கொடுப்புக்களும், அவைகளிடம் அமைப்புருவாக்கும் நிகழ்ச்சிகளும் திட்டமிட்டு
முறியடிக்கப்பட்டு வந்தன. வன்னியில் நீர்ப்பாசனத்துறை பொறியியலாளராகக் கடமையாற்றிய
யேசுரட்ணம் என்பவர் மக்களை மேம்படுத்தும் பணியை மேற்கொண்டிருந்தார். இவர் யாழ்.
சாதிவெறியர்களால் தூற்றிக் கேலி செய்யப்பட்டதுடன், கொலைப் பயமுறுத்தலாக இவரது
வீட்டுக்குக் குண்டுவீசி எச்சரித்தனர்.
ஜே.வி.பியினது கிளர்ச்சியை அடுத்து, அதனுடன் இணைந்து மலையகம் உள்ளிட்ட மாபெரும்
மேதினத்தை நடத்தத் திட்டமிட்ட இலங்கைத் திராவிட முன்னேற்றக் கழகத்தினரும்
தடைசெய்யப்பட்டனர். காட்டிக் கொடுப்பினூடாக, அமைப்புருவாகி வந்த தீண்டாமை ஒழிப்பு
வெகுஜன முன்னணியின் முன்னணி உறுப்பினர் பலரும் கைதுசெய்யப்பட்டனர். ஜேவிபி மற்றும்
திராவிட முன்னேற்ற கழக உறுப்பினரின் கைதையடுத்து, எஞ்சிய திராவிட உறுப்பினர்கள்
“தமிழர் ஐக்கிய முன்னணி”க்கு சார்பாக சாய்ந்தனர். இத்துடன் திராவிடக் கழகம்
செயலிழந்தது.
“தமிழர் ஐக்கிய முன்னணி”க்கு ஆதரவு வழங்கிய திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து
வந்தவர்களும், குறிப்பாக சுயாட்சிக் கழக நவரத்தினம் போன்றவர்களால், தழிழரசுக்
கட்சியினர் புதிய அரசியல் நிர்ணய சபையிலிருந்து வெளியேறவேண்டும் என்ற கருத்தைப்
பலமாக முன்வைத்தனர். இவ்வழுத்தத்தால் இவர்கள் நிர்ணய சபையிலிருந்து வெளியேறினர்.
72ம் ஆண்டு சுதந்திர தினத்தை அடுத்து…
அரசில் அங்கம் வகித்த தொழில்துறை தரகர்கள் மீது (தமிழ்) செறிவான கொலை மிரட்டல்களை
தீவிரவாத இளைஞர்கள் மேற் கொண்டனர். இக்காலத்தில் சிவகுமாரனின் துணையுடன் இலங்கை
மன்னனைத் தலைவராகக் கொண்டு, சாம்.தம்பிமுத்துவை செயலாளராகக் கொண்டு “ஈழத்தமிழர்
இளைஞர் இயக்கம்” ஆரம்பிக்கப்பட்டது.
யாழ். முனியப்பர் கோவிலில் “இலங்கை அரசுடன் போராடுவதற்கு எல்லாத் தமிழ் தலைவர்களும்
ஒன்றுபட வேண்டுமென்று” கோசத்தை முன்வைத்து, ஓர் அடையாள உண்ணாவிரதத்தை
முன்னெடுத்தனர். இவ் உண்ணாவிரதத்தின் போது தீவுப்பகுதிப் பாராளுமன்ற உறுப்பினர் –
கா.பொ. இரத்தினமும், உடுப்பிட்டி தமிழ் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்
மு.சிவசிதம்பரமும் வருகை தந்திருந்தனர்.
இணைப்பாட்சியிலா? ஒற்றை ஆட்சியிலா? அல்லது “தமிழீழத்திலா?” என்ற கேள்வியை இவர்கள்
கேட்டனர். “யாழ் நகரசபை மேயர் பதவியை கைப்பற்றுவதற்காக “தமிழரசுக் கட்சியும்”,
“தமிழக்; காங்கிரஸ் கட்சியும்” கூட்டணி அமைத்துப் போட்டியிட்டனவே… “ஏன் தமிழர்களின்
நலனுக்காக இணைய முடியாது”(?) என இவ்விளைஞர்கள் கேள்வி எழுப்பினர்.
இடையில்…
ஏற்கனவே 71, செப்ரம்பரில்… பிரதியமைச்சர் சோமவீர சந்திரசிறி – யின் காரின் மீது
சிவகுமாரன் குண்டு வீசியிருந்தான்! தீவிரவாத இளைஞர்களால் அன்று தயாரிக்கப்பட்ட
“துரோகியல் பட்டியலில்” தமிழ் தொழிற்துறை தரகர்களின் பெயர்கள் மட்டுமே இடம்
பெற்றிருந்தது. இதற்குள்தான் இவர்களின் போராட்டத்தை மட்டுப்படுத்தினர். சிவகுமாரன்
இப்பட்டியலுக்கு வெளியேயும் தாக்குதல் நடத்தியதால், ஏனைய குழுவினரிடம் முரண்பட்ட
போக்கும் காணப்பட்டது.
1972ம் ஆண்டு மே மாதம் 22ம் திகதி புதிய அரசியல் அமைப்பை சிறிமாவின் கூட்டு முன்னணி
அரசு கொண்டுவர திட்டமிட்டிருந்தது.
இவ் அரசியலமைப்பை எரிக்கும் இயக்கத்தை தமிழர் கூட்டணியினர் கோரினர். இளைஞர்கள்
தீவிரமாக இதில் பங்கெடுத்தனர். மே 16ம் திகதி துண்டுப் பிரசுரங்கள், சுவரொட்டிகள்,
போன்றவற்றை இளைஞர்கள் ஒட்டி 22ம் திகதி அரசியல் அமைப்பை எரிக்கும் கோரிக்கையை
வெளிப்படுத்தினர். இதனால் ஆத்திரமடைந்த அரசு, அன்றே ஊரங்குச் சட்டத்தைப்
பிறப்பித்து துண்டுப்பிரசுரங்களை வெளியிட்ட, ஒட்டிய இளைஞர்களைக் கைது செய்தது.
மே 22ம் திகதி 19 தமிழ் எம்பிக்களில் 15 பேரும், இளைஞர்களும் இணைந்து, வண்ணார்பண்ணை
நாவலர் ஆச்சிரமத்தில் அவ் அரசியல்யாப்பை எரித்தனர். இதே தினத்தன்று துரோகியல்
பட்டியலில் இரண்டாவது இடத்திலிருந்த குமாரசூரியரை சுட்டுக்கொல்ல முயன்றதாக பொலீஸ்
தரப்புக் குற்றம் சாட்டியது. இதில் ஒரு வேடிக்கையான விசயமும் இருக்கிறது. நாவலரை
தமிழ் தேசிய தலைவராகவும், அவரது உடமைகளை தமிழ்த் தேசிய சொத்தாகவும் அரசு
அறிவித்துப் பாதுகாக்க வேண்டுமென்று குமாரசூரியர் அரசிடம் கோரிக்கையை வைத்து, தமிழ்
தேசிய சொத்தாக அரசு ஏற்றுக் கொண்டதே அந்த விடயமாகும்.
அரசியல் யாப்பை எரித்து மூன்று நாட்களுக்குள் 43 மாணவர் பேரவை உறுப்பினர் உட்பட
எல்லாமாக 72 பேரை அரசு கைது செய்திருந்தது. இக்கைதில் இருந்து தப்பி இந்தியா சென்ற
செட்டியும், பிரபாகரனும் “ஈழத்தின் சந்திரபோஸ்” என்று அழைக்கப்பட்ட இராசரத்தினத்தை
சந்தித்து “புதிய தமிழ் புலிகளை” உருவாக்கினர். செட்டி என்பவர், எம்.பி
ஆலாலசுந்தரம் மற்றும் தர்மலிங்கத்தின் செல்வாக்கின் கீழ் இருந்த இளைஞர்களில்
துடிப்பான இளைஞன் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐயாவின் சில கருத்துக்களை வாசகர்களின் சிந்தனைக்காக கீழே தருகிறேன்…
“செட்டியைப் பற்றை எமக்கு அப்போது பெரிதாகத் தெரிந்திருக்கவில்லை ஆனால் அவர்
எம்மைப் பற்றி அறிந்து கொண்டு எமது ஊருக்கு எம்மைத் தேடி வருகிறார். எமது ஆதரவைக்
கோருகிறார். அப்போது செட்டியும் ரத்னகுமாரும் அங்கு வருகின்றனர்.
அங்கு வந்தவர்கள் இலங்கை அரச படைகளுக்கு எதிராகப் போராடுவதற்குத் துப்பாக்கி தேவை
என்றும், அது சாத்தியமாவதற்கு ஆயுதங்கள் தேவை என்றும் கூறுகின்றனர். செட்டி அந்த
நோக்கத்திற்காக தெல்லிப்பளை பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்திலிருந்து ஒரு லட்ச
ரூபாய்களைக் கொள்ளையிடுகிறார். அந்தக் கொள்ளைப் பணத்துடன் படகு மூலமாக அவர்
இந்தியாவிற்குச் செல்கிறார்.” (ஐயாவின் பாகம் இரண்டு)
ஆணைக்கோட்டை சுந்தரதாஸ் வீட்டின் மீது குண்டுவீசிய அதேநாள்!
நல்லூர் அருளம்பலத்தின் நெருங்கிய சகாவும், நல்லூர் வீசிச் செயமனுமாக இருந்த
குமரகுலசிங்கத்தை கொலை செய்ய செட்டியின் தலைமையிலான புதிய புலிகள் திட்டமிட்டனர்.
கோப்பாயில் “ரக்ஸ்சி” ஒன்றை மறித்துக் கடத்திய செட்டியின் தலைமையிலான குழுவினர்,
குமரகுலசிங்கத்தின் வீட்டுக்குள் புகுந்து அவர்மீது துப்பாக்கிப் பிரயோகத்தை
மேற்கொண்டனர். இதில் காயங்களுடன் செயமன் தப்பியிருந்தார். தாக்குதலை முடித்துத்
தப்பிய செட்டி குழுவினர், காரைவிட்டு இறங்கித் தப்பிய போது அதன் “ரக்ஸ்சி” சாரதியான
உலகநாதனை செட்டி சுட்டுக் கொன்றுவிட்டே எல்லோரும் தப்பியிருந்தனர். இதுவே
திட்டமிட்டு தேடிச்சென்று தொழிற்துறைத் தரகுகளை அழிக்கும் முதலாவது அமைப்பு
நடவடிக்கையாகும். இதில் பிரபாகரனும், கண்ணாடியும் சம்மந்தப்பட்டிருக்கவில்லை என்பது
குறிப்பிடத்தக்கது.
புதிய அரசியல் அமைப்புமுறை உருவாக்கப்பட்ட பின், தொழிற்துறைத் தரகுகளை கொல்லுவதைத்
தவிர வேறு அரசியல் வர்க்க நலன் மாற்று (தமிழ்) வணிகத் தரகுகளுக்கு
இருந்திருக்கவில்லை! 1865 இல் உருவாக்கப்பட்ட பிரித்தானிய முறையிலான உள்ளுராட்சி
அமைப்பு முறை 72 வரை நடைமுறையில் இருந்தது. 1938ல் கிராம மட்டத்திலான உள்ளுர்ப்
பரிபாலனம் வாக்குரிமையோடு மாற்றத்தைக் கண்டது. சர்வசன வாக்குரிமையை அடுத்து,
உள்ளுர் அரசியல் முகாமைத்துவத்தில் மக்கள் பங்களிப்புத் திறந்து விடப்பட்டது. 1930
களிலும், 1940களிலும் மாநகரசபைகள், பட்டினசபைகள், நகரசபைகள், கிராமசபைகள் உள்ளிட்ட
நான்கு சபைகளைக் கொண்ட உள்ளுராட்சி இலாக்கா இயங்கி வந்தது.
அதிகாரப் பரவலாக்கமும் சட்ட நிர்வாக அதிகாரங்களைப் பரவலாக்கும் முறை, 9 மாகாணங்களாக
மறுசீரமைக்கப்பட்டது. நகர்ப்புறங்களின் உள்ளுராட்சி அமைப்பு முறை, 12 மாநகர
சபைகளையும், 38 நகரசபைகளையும் கொண்ட பிரதேச சபைகளாகவும் இயங்கின. 1947ம் ஆண்டின்
29ஆவது இலக்க மாநகரசபை சட்டத்துக்கும், 1939ஆம் ஆண்டின் 61ஆவது இலக்க நகரசபை
சட்டதிட்டத்துக்கும் அமைவாகவே இயங்கி வந்தன.
இலங்கை சுதந்திரமடைந்த(?) 1948ம் ஆண்டுக்குப் பின்னர்…
அரசியல் அதிகாரப்பரவலாக்கலும், பன்முகப்படுத்தலும் 9 மாகாணத்துக்குமான அரசு
அதிபர்களால் முன்னெடுக்கப்பட்டது. இந்த முறை “கச்சேரி முறை” என்று பேசப்பட்டது.
பின்பு இது “மாவட்ட பரிபாலனம்” என மாற்றமடைந்தது. இந்த அரசு அதிபர்கள்
கொழும்பிலுள்ள தலைமை அலுவலகங்களுக்கு ஊடாகவே இயங்கினர். அரசாங்க அதிபர் உள்நாட்டு
அலுவல்கள் அமைச்சுக்கு மட்டுமே பொறுப்பாக இருந்தார்.
மாவட்ட சபைகள் 1968ல் முன்வைக்கப்பட்ட போதிலும், 1972 இல் சிறிமாவின்
கூட்டுமுன்னணியால் கொண்டுவரப்பட்ட “புதிய அரசியல் அமைப்பின்” மாவட்ட அரசியல்
அதிகாரமும், பன்முகப்படுத்தப்பட்ட அபிவிருத்தி (வரவு செலவு) திட்டமும்,
“பன்முகப்படுத்தப்பட்ட அரசியல் அமைப்பை” ஏற்படுத்தவில்லை! இது யதார்த்தத்தில் ஆளும்
கட்சியின் அரசியலலை ஒருமுகப்படுத்துவதையே உச்சநிலைக்குக் கொண்டு வந்தது. ஒவ்வொரு
மாவட்டத்திலும் ஆளும் அரசியல் தலைமைத்துவத்தை பிரதிபண்னும், ஏனைய மத்திய வணிகத்துறை
அரசியல்வாதிகளை ஓரங்கட்டும் ஓர் அபிவிருத்தி தொழிற்றுறை தரகு நடவடிக்கையாகவே இது
அமைந்தது.
அதாவது பிரிட்டீசாரின் இருப்பில் இருந்து வந்த “கச்சேரி” அதிகாரமுறைக்கு புறம்பாக,
நேரடியான அபிவிருத்தியில் பங்கேற்கும் தொழிற்துறைத் தரகுகள், மக்களிடம் இலகுவாக
செல்வாக்குப் பெறும், அரசில் இருக்கும் கட்சியின் நேரடி முகவர்களின் அதிகாரம்
அபிவிருத்தி நடவடிக்கையால் “அரசியல் செல்வாக்காகப்” பெருகுவது தொழிற்துறை தரகின்
தேவையாக இருந்தது. இதற்கு இவர்கள் பன்முகப்படுத்தப்பட்ட அரசியல் அதிகாரம் எனப்
பெயரிட்டனர். இவ் அரசியல் செல்வாக்கால் உருவான துரையப்பா “துரோகப்பாவாகவும்”,
குமாரசூரியர் துரோகியாகவும்” துரோகியல் பட்டியல் உருவாகியது!” (வணிகத் தரகுகளால்).
ஆனால் “கச்சேரி” முறைக்குள் இலாபங்களைப் பெற்றுவந்த தமிழ் வணிகத்தரகுகள் தமிழ்
தொழிற்துறை புதிய தரகுகளை துரோகிகளாகக் காட்டி (அழித்து) தமிழ் பகுதிகளில்,
வணிகத்தரகை மட்டுமே வைக்க நினைத்தனர். “வணிகத் தரகே” தமிழ் மக்களுக்கான விடுதலை
என்றும், இதுவே தேசிய விடுதலைக்கான போக்கு என்றும் (சிறுபான்மையின் விடுதலை
தொடர்பாக) இன ரீதியாக தமது வர்க்க நலனை நியாயப்படுத்தினர்.
செட்டியின் “புதிய தமிழ் புலிகளின்” தாக்குதலுக்கு அடுத்தநாள், மட்டக்களப்பில்
தமிழர் கூட்டணியின் கூட்டம் கூட்டப்பட்டது. இதைத் தொடர்ந்து மட்டக்களப்பு இராஜன்
செல்வநாயம் மற்றும் வட்டுக்கோட்டை எம்பி ஏ.தியாராஜா மீது அடுத்தடுத்து கொலைகள்
ஏவப்பட்டது.
இதை அடுத்து ஒரு கிழமையின் பின்னர். (1972.06.25) செல்வா, தர்மலிங்கம்,
சிவசிதம்பரம், அமிர்தலிங்கம், செல்லச்சாமி, மணிசேகரம், தங்கத்துரை கொண்ட 7- பேர்
குழு “தமிழர் கூட்டணியாக” புனரமைக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து பிரபாகரனின் செயல் தீவிரமடைந்தது. 1972.08.27 இன்று புதிய
விளையாட்டு அரங்கில் நடந்த “காணிவேல்” நிகழ்ச்சியில் துரையப்பா பங்குபற்றுவதாக
இருந்த தருணத்தில் புதிய புலிகளின் பிரபா குண்டொன்றை வெடிக்கவைத்தார். அதே நாளில்
யாழில் நடத்திய கொள்ளை ஒன்றிலும் தோல்வியுற்றார்.
1972.09.11 அன்று கூட்டம் ஒன்றில் இருந்து திரும்பிய எம்.பி சுப்பிரமணியத்தின்
காரின் மீது தீவிரவாத இளைஞர் குண்டை வீசினர். மீண்டும் 17ம் திகதி பிரபாகரனால்
துரையப்பா விளையாட்டு அரங்கில் குண்டு வைக்கப்பட்டது.
1972.10.03 பாராளுமன்றத்தில் செல்வாவின் வாக்குமூலம் “இனித் தமிழர்களைக் கடவுள்தான்
காப்பாற்ற வேண்டும்”
1973ம் ஆண்டு… மாணவர் பேரவை உட்பட 40 இளைஞர்களைக் கொண்ட “இளைஞர் பேரவை”யை கூட்டணி
உருவாக்கியது. இதைத் தொடர்ந்து மாங்குளத்தில் குமாரசூரியர், மற்றும் அருளம்பலம்,
துரையப்பாவின் மீது கொலை முயற்சிகள் தொடரப்பட்டன.
73 சுதந்திர தினத்தன்று சிவகுமாரன் அருளம்பலம் ஏற்றிய இலங்கைக் கொடியை இறக்கிக்
கிழித்தெறிந்தான். இதேநாள் உரும்பிராயில் நால்வர் பஸ்சை எரித்ததற்காக கைது
செய்யப்பட்டனர்.
(இது ஒரு வைப்பகப்படம். இதில் காணப்படும் “பஸ்சின்” நம்பர் எந்த “லைனுக்கு” உரியது
என்று சி.ரி.பி யில் வேலை செய்தவர்கள் யாராவது உறுதிப்படுத்தினால் நல்லது. இது 764
“லைனுக்கு” உரியதா?)
1973.10.12 சிறையிலிருக்கும் இளைஞர்களை விடுவிக்கக் கூறி உண்ணாவிரதம்
நடத்தப்பட்டது. இக்காலகட்டத்தில் கண்ணாடி பத்மநாதன் உட்பட சிலர் அநுராதபுரம்
சிறையிலிருந்து தப்பியிருந்தனர். இளைஞர்களை விடுதலைச் செய்யக் கோரி 1973.10.02
வடக்குக் கிழக்கில் பூரணகர்த்தால் நடந்தது.
செட்டியும் இக்காலத்தில் விடுதலை செய்யப்பட்டிருந்தார்…
இனி.. கால ஒழுங்கில் ஐயாவுடனான முரண்பாடு 01..
“அனுராதபுரம் சிறையிலிருந்து தப்பி, செட்டி, கண்ணாடி பத்மநாதன், சிவராசா,
ரத்னகுமார் ஆகிய நால்வரும் காடுகள் வழியாக வந்து கொண்டிருந்த வேளையில் அவர்களிடையே
ஒரு வாக்குவாதம் ஏற்படுகிறது. அதெல்லாம் அரசியல் விவாதமா என்ன? செட்டி இன்னும்
கொள்ளையடித்துப் பணம் சேர்க்க வேண்டும் என்ற வகையில் நடந்து கொள்ள அதைப் பத்மநாதன்
எதிர்த்திருக்கிறார். இதனால் அவர் காட்டிக்கொடுக்கலாம் என்ற பயத்தில் பத்மனாதனை
ஏனைய மூவரும் செட்டியின் வழிநடத்தலில் காட்டுக்குள்ளேயே கொன்று போட்டுவிட்டு,
அங்கேயே பிணமாக்கி எரித்துவிட்டு வந்திருக்கின்றனர்”. என இப்பொழுது ஐயா
பதிவிட்டிருக்கிறார்.
நாம் தமிழ் மக்கள் ஜனநாயக முன்னணியிலும், என்.எல்.எவ்.ரீ (ஜயா அதன் மத்திய குழு
உறுப்பினர்) யில் இருந்தவேளை “கண்ணாடியை பிரபாகரன் படுத்த பாயில் வைத்து சுட்டுக்
கொன்றதாக” அவ் அமைப்புக்களால் எமக்கு கூறப்பட்டது. இது எமது அமைப்பில் மட்டுமே
கூறப்பட்ட செய்தியல்ல. கிட்டத்தட்ட எல்லா விடுதலை அமைப்பிலும் இவ்வாறான பிரச்சாரம்
செய்யப்பட்டிருந்தது. புலிகளால் நடத்தப்பட்ட ஒவ்வொரு சகோதரப் படுகொலைகளின் போதும்,
இப் பிரச்சாரம் மேலெழுந்ததைக் பின்னரும் காணக்கூடியதாக இருந்தது.
இங்கே முரண்பாடு செட்டி சுட்டாரா? பிரபா சுட்டாரா? என்பதல்ல, ஏன் அன்று
கீழணிகளுக்கு பிரபா படுத்த பாயில் சுட்டதாகவும், இன்று அது செட்டியின் வேலை என்றும்
கூறப்படுவதும்தான் இங்கு முக்கியம். இன்று ஐயா சொல்வதே நிஜமாக இருந்தால், அன்று ஏன்
பிரபாவின் மீது இந்த வீண் பழியைப் போட்டார்கள்?
இல்லை என்றால் 40 வருடப் போராட்டத்தில் தொடர்ச்சியாக பிரபா நின்றுபிடித்து, இன்று
முள்ளிவாய்க்காலில் அழிந்துபோன “பச்சாத்தாபத்தில்” இவை எழுதப்படுகிறதா?

ஜயாவின் பதிவுகளும், எனது பின்னூட்டமுரண்களும்…03- ரூபன்
1970 ஆம் ஆண்டு சிறீமாவின் கூட்டுமுன்னணி அரசில் அங்கம் வகித்த ‘இடதுசாரிகள்’ என்று
தம்மைக் கூறிக் கொண்ட தொழிற்துறைத் தரகுகள் உட்பட அனைவரும்: ” இதோ, சோசலிசம்
பிறந்துவிட்டது! என்று பீற்றத் தொடங்கினர்….
தொழிற்துறைத் தரகுக்கும், வணிகத்தரகுக்கும் இடையிலான முரண்பாட்டில்: தொழிற்துறைத்
தரகு முதலாளித்துவம் ‘புதிய அரசியல் நிர்ணய சபையை’ , அதன் புதிய அரசியல் அமைப்பை,
பன்முக அபிவிருத்தித் திட்டத்தை ‘சோசலிசமாகக்’ காட்ட முற்பட்டது…1951ம் ஆண்டு முதல்
சிறுகைத்தொழிலிலேயே கவனம் செலுத்துவதாகவும், பாரிய ஏகாதிபத்திய நிதிநிறுவன
உதவிகளைப் பெற முடியாது, அதன் கட்டளைக்கு வணிகக் தரகுகள் பணிந்தன. இதனால் நாட்டின்
சமூகப் பொருளாதார வளர்ச்சி, முதலாளித்துவத்துக்கு முந்திய உற்பத்தி உறவுக்குள்ளேயே
சிக்கிச் தவித்தன.
இதன் மொத்த விளைவு, நாட்டின் 78 சதவீதமான சனத்தொகையினர் விவசாயத்திலே தங்கியிருக்க
நிர்பந்திக்கப்பட்டனர். ஆயினும் இவ் விவசாயத்துறை மரபுரீதியான பின்தங்கிய
உற்பத்திமுறையையும், சிற்றுடமை விவசாயத்தையுமே கொண்டு இருந்தது.
பெருகிவந்த சமூதாய தேவைகளுக்கு ஈடு கொடுக்க முடியாத, இப் பின்தங்கிய
உற்பத்திமுறையின் காரணமாகஇ 1963 இல் (அரச தகவல்களின் படி) 4 இலட்சம் உபரிச்
சனத்தொகை, இத் தொழிலில் இருந்து தூக்கி வீசப்பட்டது!
இது 70 களில் 7 இலட்சத்து 92 ஆயிரமாக இது பெருகி இருந்தது…
இச்சிக்கலான காலகட்டத்தில் தான்…
இலங்கை முழுவதும் குட்டிபூர்சுவா மாணவ, இளைஞர்களின் ஆயுதப்போராட்டம் முனைப்புப்
பெற்றது. 1971 ஏப்பிரலில் சிங்கள குட்டிபூர்சுவா இளைஞர் கிளர்ச்சி தெற்கிலே
வெடித்திருந்தது. வடக்குக் கிழக்கிலே தரப்படுத்தலுக்கு எதிரான ‘தமிழீழக் கோரிக்கை’
குட்டிபூர்சுவா மாணவ, இளைஞர் கிளர்ச்சியும் வெடித்தது.
இலங்கையில் ஆட்சிக்கு வந்த சிங்களத்தரகு முதலாளித்துவப் பிரிவினரான யூஎன்பியினரும்,
எஸ்எல்எவ்பி யினரும் முறையே வணிகத்துறை, தொழிற்துறைப் பிரிவுகளை பிரதிநிதித்துவம்
செய்து வந்தனர்.
இத்தரகுமுதலாளித்துவ எடுபிடி சேவக ஆட்சியால் நாட்டின் முழு உழைக்கும் பிரிவினரும்
ஒடுக்கப்பட்டனர். சிங்கள தேசிய இனம் உட்பட அனைத்து தேசிய (இன) பிரிவினரும்
ஒடுக்கப்பட்டதோடு, அவர்களின் சுயநிர்ணய உரிமை மறுக்கப்படுவது இவர்களது பிரச்சனையாக
ஒருபோதும் இருந்ததுமில்லை இருக்கப்போவதுமில்லை. இவர்கள் தங்களின் மானம்கெட்ட
தரகுக்காக சுயநிர்ணய உரிமையை (மறைமுகமாகத் தமிழ் தரகுகள்) மறுத்துக் கொண்டே தமது
பிரிவின் அதிகார பங்குப் போட்டிப் பிரச்சனைக்காகவே ஒருவரை ஒருவர் எதிர்த்துப்
போராடினர்.
(செல்வா செவ்வாய் மலர்ந்து சொல்கிறார்!)
இங்கே ஒரு விடயத்தை நாம் தெளிவாகப் பார்க்க வேண்டும்.
தமிழரசுக் கட்சியின் தோற்றம், தமிழ் மக்களின் உரிமைக்கான உதயமா? என்பதே அது!
தமிழரசுக் கட்சி ஏதோ ”மலையக மக்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டதற்கு எதிராக தமிழ்க்
காங்கிரசில் இருந்து செல்வநாயகம் போன்றவர்கள் பிரிந்து உருவாக்கினார்கள்” என்று,
இன்றும் வரலாற்றைத் திரித்துப் புரட்டிக்கொண்டே இருக்கிறார்கள்.
உண்மையில் 1949ம் ஆண்டு, தமிழ் – சிங்கள வணிகத்தரகினருக்கு இடையிலான உறவைப்
பேணிக்கொள்ளும் கொள்கை தொடர்பான முரண்பாடே தமிழரசுக் கட்சியின் தோற்றமாகும்.
ஜீ.ஜீ.பொன்னம்பலம் போன்றவர்கள் சிங்கள வணிகத் தரகுமுதலாளித்துவத்தின் ஏகபோகத்துடன்
கூடிப்போய் தமது வர்க்கநலன்களை பெறுவது என்று ”இணைப்பாட்சி” யை முன்வைத்தனர்.
முரண்பட்ட செல்வா தரப்பினர், சிங்கள வணிகத்தரகுடன் உறவுகளைப் பேணிக் கொள்வதோடு,
தமிழ் மக்களை தன் சமூக அடிப்படையாக மாற்றி அவர்களின் பின்புலத்தில் தங்கியிருந்து
அதிகளவு அதிகாரங்களைப் போராடிப் பெறுவது என்ற ”சமஸ்டி” போக்கை முன்வைத்தனர். அதாவது
‘மத்தியில் கூட்டாட்சியும் மாநிலத்தில் சுயாட்சியும்.’
இவர்களுடைய இந்தப் பிரச்சனையும் சரி, இதற்கான தீர்வாக உருவாக்கப்பட்ட தமிழரசுக்
கட்சியும் சரி தமிழ் வணிகத்தரகு வர்க்கத்தின் நலன்கள் சம்பந்தப்பட்டவையே ஒழிய,
சிறுபான்மை மக்களாகிய வடக்கு -கிழக்கு வாழ் தமிழ் மக்களதோ அல்லது மலையக மக்களது
உரிமைக்கானதோ அல்ல! சிங்கள வணிகத் தரகுமுதலாளித்துவத்தின் அதிகாரத்தை ஏகபோகமாக
மாற்றிக் கொள்வதற்கும், தமிழ் வணிகத்தரகு முதலாளித்துவத்தின் நலனை எவ்வாறு
காத்துக்கொள்வது என்ற கொள்கை முரண்பாடே ‘தமிழரசுக் கட்சி’யின் தோற்றம்.
தமிழரசுக்கட்சி உருவாகிய காலத்தில் (1949) இருந்து 1955ம் ஆண்டு வரையான யூஎன்பியின்
ஆட்சிக் காலத்தில் இக்கட்சியானது மலையக மக்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டதற்கு
எதிராக ஒரு துரும்புப் போராட்டத்தைத் தன்னும் நடத்தியிருக்கவில்லை. தொழிற்துறைத்
தரகுடனான பண்டா -செல்வா ஒப்பந்தத்தின் மூலம் தமக்கு ஏதாவது அற்ப சலுகைகள்
கிடைக்கும் என்ற ஆசையில், பண்டாவின் வேண்டுகோளுக்கு இணங்க மலையக மக்களின்
வாக்குரிமைக் கோரிக்கையை கைவிட்டனர். இதன் பின்னர் வரலாறு முழுவதும் இக்கோரிக்கையை
அவர்கள் எழுப்பவே இல்லை.
குறிப்பாக சிறுபான்மை இன மக்களின் மீதான ஒடுக்குமுறையைப் பொறுத்த வரையில்….
இவ்விரு தரகுப்பிரிவினரும் ஒரு தொடரான அஞ்சல் ஓட்ட முறைப்படி இனரீதியான
ஒடுக்குமுறையைத் தொடர்ந்தனர். ஒடுக்கப்பட்ட சிறுபான்மை மக்களைப் பிரதிநிதித்துவம்
செய்வதாகக் கூறிக்கொண்ட தலைமைகள், அவர்கள் முன்னெடுத்த போராட்டங்கள் உண்மையில்
சிறுபான்மை மக்களின் நலன்களை அடைவதற்காக நடத்தப்பட்டவை அல்ல!
‘பண்ட ஏற்றுமதி இறக்குமதி கட்டுப்பாட்டுக் கொள்கை’ மற்றும் ‘பெரும் தோட்டங்கள்
தேசிய மயமாக்கல்’, புதிய அரசியல் அமைப்புச் சீர்திருத்தங்கள் போன்றவை தொழிற்துறை
தரகுமுதலாளித்துவ வர்க்க நலன்களுக்காகக் கொண்டுவரப்பட்டன. இதனால் வணிகக்
கட்டுப்பாட்டுக் கொள்கையால் பாதிப்படைந்த சிறுபான்மை இனங்களைப் பிரதிநிதித்துவம்
செய்துவந்த வணிகத்தரகுமுதலாளித்துவம் தமது வணிகநலன்களைப் பாதுகாத்துக் கொள்ள
நடத்தப்பட்ட போராட்டங்களே இவைகளாகும்.
தமிழ் வணிகத்தலைமைகள் தமது வர்க்க நண்பர்களான யூஎன்பி வணிகத்தரகு அ+ட்சிக்கு
வரும்போது எந்தப் போராட்டத்தையும் நடத்தாது ஓய்வெடுத்து வந்ததை நீங்கள் காணலாம்.
யூஎன்பியின் பொருளாதாரக் கொள்கைகள் வணிகத் தரகுமுதலாளித்துவ நலன்களுக்கு வாய்ப்பான
சூழலாக அமைந்ததால், தமது வர்க்கநலன்களை பெற்றுக் கொள்ளவும், சிங்கள வணிகத்தரகு
முதலாளிகளுடனான வர்க்க ஜக்கியத்தைப் பேணிப் பாதுகாக்கவும் இவர்கள் தமிழ் மக்களையும்
அவர்களது உரிமைக்கான போராட்டத்தையும் கைவிட்டே வந்தனர்.
இவ்வாறு தமிழரசுக் கட்சியால் உருவாக்கப்பட்ட ‘புலிப்படை’ பின்னர் யூஎன்பி
ஆட்சிக்காலத்தில் உதிர்ந்து போனது. 70களில் கூட்டுமுன்னணி ஆட்சியில்…
‘புதிய தமிழ் புலிகளாக’ இது புதிப்பிக்கப்பட்டன….
தரப்படுத்தலுக்கு எதிரான போராட்டத்தில் தமிழரசுக் கட்சி வடக்கு ஆசிரியர்களினதும்,
அதிபர்களினதும் மனுக்களை அனுப்பும் போராட்டத்தை முன்னெடுத்தது. இச்சந்தர்ப்பத்தில்
சத்தியசீலனின் தலைமையில் சுயாதீனமான மாணவர் போராட்டம் வீதிக்கு வந்ததும், அது
பெரும் இளைஞர் ஆதரவாக மாறியபோது, அதிகாரத்தில் இருந்த தமிழ் வணிகத் தரகு
முதலாளித்துவம், ‘தமிழ் மக்களை தன் சமூக அடிப்படையாக மாற்றி அவர்களின்
பின்புலத்தில் தங்கியிருந்து அதிகளவு அதிகாரங்களைப் போராடிப் பெறுவது என்ற’ தமது
சமூக அதிகார வர்க்க அடிப்படையை மேலும் தக்கவைத்துக் கொள்ள, இப்போராட்டத்தை பத்தியம்
போட நினைத்தது.
உண்மையில் தரப்படுத்தல் தமிழரசுக் கட்சிக்கு ஒரு பிரச்சனையாக, தமது வர்க்க நலன்
பிரச்சனையாக இருக்கவில்லை! புதிய அரசியல் அமைப்பே இவர்களின் வர்க்கம் சார்ந்த
பெரும் பிரச்சனையாக இருந்தது. இது நடைமுறைக்கு வந்தபோதே ‘புதிய தமிழ் புலிகளும்’
உருவாக்கப்பட்டது என்பதே கால வரலாற்றின் செய்தியாகும்.
புதிய நிர்ணயசபை!
இனி புதிய அரசியல் அமைப்பின் பின்னான ‘புதிய புலிகளின்’ தோற்றமும் அதன்பின்னான
அரசியலும், ஜயாவுடனான முரண்களும்…
தொடரும்..

ஜயாவின் பதிவுகளும்,எனது பின்னூட்ட முரண்களும்…02- ரூபன்
முதலில் இந்த முரண்பாடுகள் ஏன் என்னுள் எழுகிறது? என்பதைச் சொல்லி விடுகிறேன்…
ஜயா எழுதும் பதிவுகள் நடக்கும் போது சிறுவர்களாக இருந்தோம். பாடசாலையில்
இச்சம்பவங்களைப் பேசிப் பேசி மகிழ்ந்தோம் . ஆனாலும் இது எம்மைப் பாதித்தது.
உணர்ச்சி வசப்பட்டோம். இந்தத் ‘திறில்’ இளைஞர்களைத் பார்த்து விடுவதற்கு தேடித்
தேடி அலைந்தோம். அவர்களைப் பார்க்கவே முடியவில்லை.
நாம் அவர்களைப் பார்த்தபோது, இந்தச் சம்பவப் பதிவுகள் அவர்களிடம் விவாதப்
பொருளாகவேஇருந்தது. நாம் சந்தித்த அண்ணன்மார்கள், இது தேசியவிடுதலைப் போராட்டமே
அல்ல! எனச் சொன்னார்கள். எமக்கு அப்பொழுது பெரும் குழப்பமாகவே இருந்தது.
இச்சம்பவங்களின் விளைவு எந்த அரசியலில் இருந்து பிறக்கிறது என்று அவர்கள்
விவரித்தார்கள். அதைப் புரிந்து கொள்வதற்கும் சில காலங்கள் சென்றது..
இந்தச் சம்பவங்களின் ஊடாகவும் எமக்கு ஓர் அரசியலை அவர்கள் போதித்தார்கள். அந்த
அண்ணன்மார்களில் ஜயாவும் ஒருவராக இருந்தார்! இவ்வாறு அரசியலோடு கற்ற இந்த வரலாறு
இன்று அரசியல் அற்று (மறைமுகமான அரசியல் தேவையாக) வெறும் சம்பவங்களாகப்
பதியப்படுகிறது.
நாம் கற்ற அரசியலும் உருப்படியாக எதையும் செய்துவிடவில்லைத் தான்! பல்வேறு அரசியல்
போக்கைப் பேசிக் கொண்டு, போராடி வந்த இந்த வரலாறு நெடுகலும் முரண்பாடுகள்
கொலைகளாலேயே தீர்க்கப்பட்டுள்ளது. முரண்பாடுகள் எழுவதையோ இப்பொழுதும் நாம்
விரும்பத் தயாரில்லை. முரண்பாடுகள் இருந்ததையே அழித்துவிடும் வரலாற்றுப் போக்கே
எம்மிடம் இறுதியாக எஞ்சிக் காணப்பட்டது. நடந்து முடிந்த மனிதக் கொலைகளை இவர்தான்
செய்தார் அவர்தான் செய்தார் என்று சொல்லி விட்டு, சும்மா கடந்து செல்லப்
பார்க்கிறோம். ஈழப் போராட்டத்தின் எல்லா அரசியல் போக்கின் பக்கங்களிலும் (தனிமனிதப்
படுகொலையை விமர்சித்த அமைப்புக்களிலும் கூட) இந்தக் கொலைகள் நிகழ்ந்தனவே ஏன்? இந்த
முரண்களும், தற்பொழுது பதியப்படும் பதிவுகளின் புதிய முரண்பாடுகளும் தான் எனக்குள்
முரண்பாடாக எழுகிறது…
நான் எழுதுவது வரலாறோ அல்லது வரலாற்றுக் குறிப்போ அல்ல! இவர்களிடம் கற்ற,
எழுதப்பட்ட, பதியப்பட்ட வரலாற்றுக்களின் ஊடாக எழுகின்ற முராண்பாடுகளே!! (ஏனெனில்
எமது வரலாறு மக்களிடம் இருந்து, மக்கள் பங்களிப்பாக எழவில்லை! )
இனி, ஜயாவின் பதிவுகளிலுள்ள முரண்பாட்டை எழுதுவதிலுள்ள பிரச்சினை…
ஜயாவின் பதிவுகளின் சம்பவங்கள் ஒழுங்கான கால அடுக்கில் எழுதப்படவில்லை.
முன்னுக்குப் பின்னாக எழுதி இருப்பதாலும், ஒரு பதிவில் ஏற்படும் முரண் வேறு
பதிவுகளிலும் தொற்றி நிற்பதனால் ஒரு தனிப் பதிவாக எடுத்து எனது முரணைச் சொல்ல
முடியவில்லை.
அதனால் இதில் ஏற்படும் முரண்களை கால ஒழுங்கில் தொகுத்து அதன் பின்னால் உள்ள
அரசியலையும், அன்றைய சமூக நிலவரங்களையும் அதன் விளைவான சம்பவங்களையும் அதன்
முரண்களையும் சொல்லுவது தவிர்க்க முடியாததாகிறது.
இந்த வடிவத்திலேயே இதை எழுதுகிறேன். இதில் வாசகருக்கு மேலும் சிரமம் (ஏனெனில் எனது
முதற்கட்டுரையின் வடிவம், வாசகர்கள் விளங்கிக் கொள்ள கடினமாகவே இருந்ததாகச்
சொன்னார்கள்.) இருப்பின் புதிய வடிவத்தை அவர்களின் சிரமத்துக்கான காரணத்தில்
இருந்து காணமுயல்கிறேன்…
அடுத்து ஜயாவின் பதிவின் முரணுக்குள் செல்கிறேன்…
எனது முதலாவது கட்டுரையில்…ஆக, பிரபாகரனுக்குச் ‘செட்டி’ அறிமுகமாக முன்னரே, செட்டி
ஐஜயர் ஆட்களுடன் தொடர்பில் இருந்தார். ஆதாரம்: ( ”எம்முடன் தங்கியிருந்த செட்டியும்
இந்தியா செல்கிறார். அவ்வேளையில் செட்டி பிரபாகரனைச் சந்திக்கிறார்”. – (பதிவு:
இரண்டில்)
ஜயாவின் இதுவரையான கருத்தின் படி…
துரையப்பாவின் கொலையையே ‘புதிய தமிழ் புலிகளின்’ முதலாவது நடவடிக்கையாகக்
காட்டியுள்ளார். ( இது புலிகளால் வெளியிடப்பட்ட பழைய வரலாறுதான்!) இதற்கு முன்னர்
‘புதிய தமிழ் புலிகளின்’ எந்த நடவடிக்கையையும் (அதன் பெயரில்) இவர் பதியவில்லை,
ஏன்? கொலைகளையும், கொள்ளைகளையும், இப்பொழுதும் தனிமனிதனுடையதாக காட்டவே
விரும்புகிறோம். இது ஓர் அமைப்பினது ( ஓர் அரசியலினதும்) செயல் என்றும், அது
தோன்றியதற்கான அரசியல் சமூகப் பின்புலங்களை பகுத்தாராய நாம் விரும்பவில்லை என்பது
தான் பொருள்!
இதனால் பிரபாகரன் இதற்கு முன்னர் இயங்கவில்லையா? என்ற கேள்வி எழுகிறது.
கண்ணாடி கொல்லப்பட்டது, புதிய புலிகளின் தோற்றத்தின் பின் இல்லையா?
இந்தக் குழுவுக்கும் தமக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்று சொன்னால்…
தனி ஒருவராகத் தேடிவந்த பிரபாகரனை வைத்துக் கொண்டு, புதிய தமிழ் புலிகளின் பெயரை,
‘தமிழீழ விடுதலைப் புலிகளாக’ எப்படி நீங்கள் மாற்றினீர்கள்? ஏன் அந்தத்தேவை?
நீங்கள் வேறுபெயரில் இயங்கியதாக வெளிப்படுத்தி இருக்கவும் இல்லை, புதிய தமிழ்
புலிகளுக்கு முன்னரே செட்டி உங்களுடன் தங்கி இருந்தார். துரையப்பாவின் கொலைக்கு
பின் உங்களைச் சந்தித்த பிரபாகரன் என்ற ஒருவரின் ‘பனரை’ ஏன் நீங்கள் பாவித்தீர்கள்?
செட்டியும், பிரபாகரனும் தான் புதிய தமிழ் புலிகளாக, 72 இல் இருந்து துரையப்பாவின்
கொலை முடியும் வரை இயங்கினார்களா?
இந்த முரண்பாடுகளில் தொடக்கத்தில் இருந்து வாசகர்களுக்கு பூடகத்தைத் திறந்து நான்
வாசித்துக் கேட்டு, கற்று அறிந்ததை இங்கே முன் வைக்கிறேன்…. (இதில்
முரண்பாடுகளும், ஆதாரங்களும் வரவேற்கத் தக்கது)
………………………….
1972 ஆம் ஆண்டு யூன் மாதத்தில் ‘தமிழ் புதிய புலிகள் ‘ என்ற அமைப்பு உருவாகியது.
இப்பெயரை இராஜரட்ணம் என்பவரின் போதனையிலும், ஆலோசனையின் அடிப்படையிலும்
உருவாக்கப்பட்டதாக ஜயாவின் பதிவும் உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த இராஜரட்ணம் என்பவர் ஓர் எழுதுவினைஞராக (அரசாங்க) இருந்தவர். தமிழரசுக்
கட்சியில் அமீரைத் தலைவராகக் கொண்ட ‘வாலிபர் முன்னணி’யில் தீவிரமாக இயங்கியவர்.
இக்காலத்தில் இவரை வாலிபமுன்னணியினர் ‘ஈழத்தின் சந்திரபோஸ்’ என்று பட்டம் சூட்டி
அழைத்தனர். அவ்வளவுக்கு இவர் தீவிர செயற்பாட்டாளராக இருந்தவர். பின்னர் இவர்
சென்னையில் 75ம் ஆண்டு இயற்கை மரணமடைந்தார்.
இவர்போல தனிநாட்டுக் கோரிக்கையில் ஆர்வமும் தீவிரமும் கொண்ட ‘திருமலை நடராஜன்’ 57
ம் ஆண்டு இலங்கைப் பொலீசால் சுட்டுக் கொல்லப்பட்டார். (1957 தேசிய தினத்தை
எதிர்த்தபோது) இவரே முதல் பலி!
அரசினது இப்படுகொலையின் பாதிப்பு இளைஞர்களுக்கிடையே பிரிவினைக் கோரிக்கைக்கு மேலும்
உந்துதலைக் கொடுத்தது!
1962 ஆம் ஆண்டு முன்னெடுக்கப்பட்ட இராணுவச் சதியை முடியடித்த சிறிமாவின் அரசு, 1962
– 07 -22 நள்ளிரவில் இருந்து ‘அவசரகாலச் சட்டத்தை’ப் பிறப்பித்தது. இதைத் தொடர்ந்து
பலர் தலைமறைவாகினர். இக்காலகட்டத்தில் தென்னிந்தியாவில் இயங்கிய ‘நாம் தமிழர்’
இயக்கத்தின் தலைவர் ஆதித்தனார், தமிழகம், இலங்கை, பர்மா, மலேசியா, சிங்கப்பூர்
உட்பட்ட நாடுகளைக் கொண்ட (தமிழ் இராச்சிய கொள்ளையைக் கொண்ட) தனிநாட்டு கோரிக்கையை
முன்வைத்திருந்தார்.
இவ் இராணுவச் சதியைத் தொடர்ந்து, இலங்கையில் இயங்கிய இலங்கை திராவிட முன்னேற்ற
கழகமும் தடைக்குள்ளானது.
இக்காலகட்டத்தில் தமிழரசுக் கட்சியில் இருந்த இராஜரட்ணம் போன்ற தீவிரவாத
இளைஞர்களைத் தக்கவைக்க ‘புலிப்படை’ என்ற இரகசிய அமைப்பை (தமிழரசுக் கட்சிக்குள்
இரகசியமாக) உருவாக்கினர். இக்காலத்தில் சட்டக் கல்லூரியில் உருவான ‘மாணவர் மன்ற’
தில் இருந்த இளைஞர்களைக் கொண்டு அமீர் சில துண்டுப்பிரசுரங்களை வெளியிட்டார்.
இவர்களைப் போல இன்னும் ஒருவரான கே.சிவஞானசுந்தரம் என்பவரும் அன்று இருந்தார்.
தமிழரசுக் கட்சியால் மலையகத்தில் உருவாக்கப்பட்ட ‘இலங்கைத் தொழிலாளர் கழகத்துக்கு’
இவரே தலைவராகவும் இருந்தார். இவர் பின்னர் இந்திய ”அமைதிப்படை” காலத்தில், இந்திய
இராணுவத்துடன் சேர்ந்து இயங்கிய இராணுவக் குழுக்களால் சுட்டுக்
கொல்லப்பட்டிருந்தார் (ஈ.பி.ஆர்.எல். எவ் இன் ‘மண்டையன் குழு’வால் -1988).
தனிநாட்டுக் கோரிக்கையை முதன் முதலாக முன்வைத்தவர்களில் ஒருவரான நவரத்தினம்
(எம்.பி), தமிழரசுக் கட்சியில் இருந்து பிரிந்து 1969 களில் ‘சுயாட்சி கழக’த்தை
உருவாக்கினார். இவரின் பிரிவின் போது தமிழரசுக்கட்சியின் வாலிபர் முன்னணியும்
உடைந்தது. சுயாட்சிக் கழகத்தை ஆதரித்த இளைஞர்கள் தம்மை ‘தமிழ் தாய் இயக்கம்’ என
அழைத்தனர்.
இப்பிரிவின் பின்னர் பலவீனமான வாலிபர்முன்னணியிலிருந்தும், உதிரியாக இருந்த
இளைஞர்களில் பலரும் நாட்டைவிட்டு வெளியேறத் தொடங்கினர். இக்காலத்தில் நடந்த
தாழ்த்தப்பட்ட மக்களின் போராட்டமும், குடியுரிமை மற்றும் குடியிருப்புப்
போராட்டமும் நடந்தது. இதன் எதிர்முனையில் இருந்த தமிழரசுக் கட்சியின், வாலிப
முன்னணியில் இருந்த தீவிரவாத போக்குக்கொண்டோரும் மற்றும் பலரும் வெளியேறினர்.
தமிழரசுக் கட்சியின் கடிதத்துடனும், கள்ள ‘றிசல்ச் சீற்’றுடனும் இவர்கள்
வெளியேறினர்….
தமிழரசுக் கட்சிக்கு வெயியே, எஞ்சியிருந்த ஏனைய இளைஞர் சக்தியிடம் இருந்து
‘தமிழீழக் கோரிக்கைக்கான’ கருக்கட்டலும் அதற்கான கோரிக்கைகளும் வெளிப்பட்டன.
1970இல் சிறிமாவின் கூட்டு முன்னணி ஆட்சிக்கு வந்தது…
1970ம் ஆண்டு, ஓகஸ்ட் 16ம் நாள் தமிழ் நூல்கள் செய்தித்தாள்கள் தடை, இலங்கை
வானொலிக்கு இந்திய புதிய பாடல்கள் படங்கள் கட்டுப்பாடு, வெளிநாட்டுக் கல்விக்குத்
தடை, தரப்படுத்தல், புதிய அரசியல் கொள்கை, மட்டுப்படுத்தப்பட்ட ஏற்றுமதி
இறக்குமதிக் கொள்கை, பன்முகப்படுத்தப்பட்ட அபிவிருத்தி, புதிய காணிக் கொள்கை…
போன்றவை கொண்டு வரப்பட்டது.
இதனால் தமிழ் நகர்ப்புற மக்கள் முதலில் பாதிக்கப்பட்டார்கள்.
இதில் தரப்படுத்தலின் எதிரொலி வெளிப்படையாக போராட்டமாக வெடித்தது…
இந்தத் தரப்படுத்தலுக்கு எதிராக சுயாதீனமாக, சத்தியசீலனின் தலைமையில் ‘
மாணவர்பேரவை’ உருவாகி – தமிழீழக் கோசத்துடன்- போராட்டம் வெடித்தது!
( இந்தப் பின்னணியில் தமிழ் அதிகார வர்க்கத்தின் அக்கால அரசியல் தேவைகளின்
முன்னோட்டம்…)
- 70 பதுகளில் இருந்து ஆறுவருடங்கள் நடந்த ஆட்சியில்…. (1970 -1976 – சுருக்கம்)
அரசில் இருந்த சிங்கள தொழிற்துறைத் தரகு முதாலாளித்துவ வர்க்கம் மற்றும் இதன்
தெழில் தரகில் பங்கெடுத்த புதிய மற்றும் கட்சிதாவிய பழைய வணிகத்தரகர்களுக்கும்:
எதிராக – சிங்கள, தமிழ் வணிகத்தரகர்கள் ஒன்று சேர்ந்தனர்.
ஜே.ஆர் இன் யூஎன்பியும் – மலையகத் தொண்டாவும் சேர்ந்து, மலையகத்திலும் –
தென்னிலங்கையிலும் போராட்டத்தை நடத்தினர். வடகிழக்கில் தமிழ் வணிகத் தரகுகள்
தமக்குள் கூட்டுப்போட்டு (‘தமிழர் கூட்டணி’) வடகிழக்கில், புதிய மற்றும் கட்சிதாவிய
(தமது கட்சிகளில் இருந்து பிரிந்த ) வணிகத் தரகர்களை ‘துரோகிகள்’ எனப்
பட்டியலிட்டனர். சிறிமாவின் புதிய அரசியல் அமைப்பை தமது வர்க்கத் தேவைக்காக
முன்னின்று எதிர்த்து, இந்த மாணவர் இளைஞர்களை அணிவகுக்க முயன்றனர்.
அரசுக்கு எதிரான குட்டிபூர்சுவா மாணவ, இளைஞர்களின் போராட்டத்தை அவர்களின் தமிழீழம்
என்னும் கனவை, – இனவாதம் என்னும் கூரிய கத்தியின் முனையில் – எலுமிச்சம் பழமாகக்
குத்தி , தமக்கு எதிரான வடகிழக்கு தொழிற்துறை தரகர்களை வேட்டையாடச் சொன்னார்கள்.
”தமிழர்களின் ஒற்றுமையைக் கெடுக்கவேண்டாம்” என்று இளைஞர்களுக்கு இடையிலும்,
”துரோகிகளை” நோக்கியும் எச்சரித்து உசுப்பிவிட்டனர். ” தம்பிமார் படிக்க வேண்டும்”
என்று தம் காலைச் சுற்றிவர வைத்தனர். ”மார்க்சியத்தில் மனந்தோய்ந்தவன்” என்று,
இளைஞர்களுக்கிடையிலான அரசியல் முரண்பாட்டை ‘துரோகமாக’ ஏமாற்றினர். ”நான் இளைஞனாக
இருந்த காலத்தில்” … என்று கூறிக் கூறியே ”அமீர் அண்ணா” ஆகினார். இப்படியே
குட்டிபூர்சுவா வர்க்க தமிழீழக் கோரிக்கையை, தமிழ் வணிக தரகுமுதலாளித்துவம்
”தளபதியாக” கையில் எடுத்தது.
வணிகத்தரகுகளின் கூட்டான ‘தமிழர் கூட்டணி’ இளைஞர்களின் வளர்ந்துவரும் ‘விடுதலை’
என்ற வேட்கையைக் கட்டுப்படுத்த முடியாமல், தம் கூட்டை ‘தமிழர் விடுதலைக் கூட்டணி’
என மாற்றி ‘வட்டுக்கோட்டைக்குள்’ இவர்களைச் சுற்றிச்சுற்றி வர வைத்தனர்.
76 வட்டுக்கோட்டையில் நிறைவேற்றிய தீர்மானத்தில் ஒன்று….
- 1977 இல் பொதுத்தேர்தல் திட்டமிட்டபடி வரவிருக்கிறது. ”இந்தமுறைத் தேர்தல்
தமிழீழத்துக்கான சர்வஜன வாக்கெடுப்பு” -
77 தேர்தல் விஞ்ஞாபனம் இப்படிச் சொல்லுது…
” எதிர்வரும் பொதுத் தேர்தலில் இந்நாட்டில் தமிழ் பேசும் மக்கள் பாரம்பரியமாக
வாழும் தொடர்பான பிரதேசம் முழுவதையும்( ?! ) உள்ளடக்கியதான சுதந்திர இறைமையுள்ள,
மதசார்பற்ற சமதர்ம தமிழீழ அரசை நிறுவுவதற்கு தமிழ்த்தேசிய இனத்தின் கட்டளையைத்
தமிழர் கூட்டணி நாடி நிற்கிறது. ”
குட்டிபூர்சுவா வர்க்கம் விதைத்து முன்னெடுத்துச் சென்ற காவிய தனியரசுப்
பிரச்சாரத்தை, தமிழ் வணிகத்தரகு முதலாளித்துவம் அறுவடை செய்ய நினைத்தது. நினைத்தபடி
வெற்றியும் கண்டது. இந்த வணிகத்தரகின் வெற்றிக்கும், அதைத் தக்கவைப்பதுக்குமான
‘சதுரங்க ஆட்டத்தின்’ காய் நகர்த்தலின் அரசியல் விளைவால் பிறந்ததே – ஜயா எழுதிய
சம்பவங்கள்!
தமிழீழக் கோரிக்கையை பாராளுமன்ற சமஸ்டிக் கோரிக்கையாக்கி கையகப்படுத்தியது இந்த
வணிகதரகு முதலாளித்துவம்.
ஆனால், அன்று தமிழ் மக்களின் தேசிய (இன) பிரச்சனைக்கான: ‘தமிழீழக் கோரிக்கை’ சுய
பொருளாதாரத்தில் அடிவேர் கொண்டு, முழுச் சமுதாயத்தினதும் (இலங்கை முழுவதற்கும்)
நாளாந்த ஜீவாதாரங்களை முழுமையாக நிறைவு செய்து நிற்கின்ற உரிமையைக் கோரும் அரசியல்
கோரிக்கையாகும்!
மலையக மக்களின் வாக்குரிமை பறிக்கப்பட்ட போது ‘தமிழரசுக் கட்சிக்கு’ இருந்த தீர்க்க
தரிசனம், வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் போது, கொட்டாவி ஆகிப்போய்விட்டது!…..
இளைஞர்களின் சுயாதீனமான போராட்ட உணர்வை உணர்ச்சி ஊட்டி, தமது தரகு வர்க்கத் தேவைகளை
எப்படிப் பூர்த்தி செய்ய முனைந்தனர் எனவும், இந்த விளையாட்டின் அரசியல் –
சமூகநிலவரங்களின் உண்மைகளில் இருந்து ஜயாவின் பதிவிலுள்ள சம்பவங்களின் முரண்களை
விரிவாகப் பார்ப்போம்….

ஜயாவின் பதிவுகளும் எனது பின்னூட்ட முரண்களும் 01-ரூபன்
எனது பின்னூட்டங்கள் தொடக்கத்தில் இருந்து….
ஜயாவின் கருத்துப்படி:-
”அனுராதபுரம் சிறையிலிருந்து தப்பி, செட்டி, கண்ணாடி பத்மநாதன், சிவராசா,
ரத்னகுமார் ஆகிய நால்வரும் காடுகள் வழியாக வந்து கொண்டிருந்த வேளையில் அவர்களிடையே
ஒரு வாக்குவாதம் ஏற்படுகிறது. அதெல்லாம் அரசியல் விவாதமா என்ன? செட்டி இன்னும்
கொள்ளையடித்துப் பணம் சேர்க்க வேண்டும் என்ற வகையில் நடந்து கொள்ள அதைப் பத்மநாதன்
எதிர்த்திருக்கிறார். இதனால் அவர் காட்டிக்கொடுக்கலாம் என்ற பயத்தில் பத்மனாதனை
ஏனைய மூவரும் செட்டியின் வழிநடத்தலில் காட்டுக்குள்ளேயே கொன்று போட்டுவிட்டு,
அங்கேயே பிணமாக்கி எரித்துவிட்டு வந்திருக்கின்றனர்”.இதன் பின்னர் ஜயாவின் பதினொரு
பதிவுகளிலும்: ‘சிவராசா, ரத்னகுமார்’ ஆகிய இருவரும் வரவேயில்லை!
கண்ணாடி பத்மநாதன் தேடப்படுவதாக ஜயாவின் பதிவு இதுவரை சுட்டிக்காட்டவும் இல்லை!
அனுராதபுரம் சிறையிலிருந்து கண்ணாடி பத்மநாதனுடன் தப்பிய செட்டி, (ஜயாவின்
பதிவின்படி..) இதற்குப் பின்னர் பலமுறை கைதுசெய்யப்பட்டுள்ளார். இறுதியாக
காங்கேசன்துறை இடைத்தேர்தலின் போது: தந்தை செல்வாவை எதிர்த்து (வீ, பீ) என
அழைக்கப்படும் அளவெட்டி வி. பொன்னம்பலம் போட்டியிட்டிருந்தார். இப்போட்டி உண்மையில்
அன்று சூடாகத்தான் இருந்தது! (இதை யாரும் மறுக்க முடியாது) வி. பொன்னம்பலத்தை
வெருட்டவும், அவருக்கு இடைஞ்சலைக் கொடுக்கவும், அன்று அளவவெட்டி பலநோக்கு
கூட்டுறவுச் சங்கம் இளைஞர்களால் கொள்ளையிடப்பட்டது!
இக்கொள்ளைச் சம்பவத்தின் பின்னரே ‘செட்டி’ இறுதியாகக் கைது செய்யப்பட்டார். (இதை
செட்டிதான் செய்தாரா? என்பதற்கான ஆதாரபூர்வமான தகவல்கள் இதுவரை இல்லை!
இவரது மரணத்துக்கு முன்னர் இவர் கைதுசெய்யப்பட்ட இறுதிச் சம்பவம் இதுவாக இருந்தது.!
ஜயாவின் கருத்துப்படி:-
” கண்ணாடி பத்மநாதன் சற்று வேறுபட்டவர். அவர் இதற்கு முன்னதாக குற்றச் செயல்களில்
ஈடுபட்ட குற்றவாளியல்ல. வானொலி திருத்தும் கடைவைத்து நடத்தி வந்தவர். கண்ணாடி
பத்மநாதன் கொலைகளுக்காகக் கைது செய்யப்படவில்லை. அரசியல் எதிர்ப்புப்
போராட்டங்களுக்காக கைதானவர். குற்றச் செயல்களிலிருந்து விடுதலைப் போராட்டத்தை
ஆரம்பிப்பதை இவர் எதிர்த்திருக்கலாம். இவர் சகோதரப் படுகொலைகளைக் கூட எதிர்த்தவர்
என்று நான் அறிந்திருக்கிறேன். பூநகரிக் காட்டுக்குள் நிகழ்ந்த இந்தக் கோரம்
இன்றுவரை தொடர்ந்து கொண்டிருக்கிறது என்பது தமிழினத்தின் சாபக்கேடு.
இந்தக் கொலை தொடர்பாகப் பிரபாகரனிடம் நான் கேட்டபோது கண்ணாடி பத்மநாதன்
காட்டிக்கொடுக்கலாம் என்ற பயத்தின் அடிப்படையிலேயே கொன்றதாகத் தன்னிடம் செட்டி
சொன்னதாக எனக்குச் சொன்னார்.”
(இது தொடர்பாக எனது கருத்தை இப்போதைக்குத் தவிர்க்கிறேன்…) மன்னிக்கவும். – ஆதாரம்
கிடைக்கும் வரை தர்மயுத்தம் தொடரும்…
ஜயாவின் முதலாம்பாகத்தின் படி….
இவ்வேளையிலெல்லாம் நான் ஒரு ஆதரவாளர் மட்டத்திலான செயற்பாடுகளையே மேற்கொண்டேன்”.
அதே வேளை வட்டுக்கோட்டை எம்.பீ ஆகவிருந்த அரச ஆதரவாளரான தியாகராஜா என்பவரைக் கொலை
செய்ய முயற்சித்த ஜீவராஜா என்பவர் தீவிரமாகத் தேடப்படுகிறார். (1972.06.07
வட்டுக்கோட்டை தியாகராசா கொலை முயற்சி: கூட்டுமுன்னணி அரசாங்கத்தின் ஆதரவாளரும்,
வட்டுக்கோட்டை எம்.பியுமான ஏ.தியாகராஜா கொழும்புக்கு புறப்பட்ட வேளையில்
சுடப்பட்டார். குண்டுக்கு வழிதவறி அற்புதமாகத் தப்பிப் பிழைத்துவிட்டார். – இது
எனது செய்திக் குறிப்பில் இருந்து…)
”
அவர் எமது ஊரான புன்னாலைக் கட்டுவனுக்குத் தலைமறைவாகும் நோக்கத்தோடு வருகிறார்.
அப்போது நானும் குலம் என்பவரும் அவருக்கு பாதுகாப்பு ஏற்படுகளைச் மேற்கொண்டு
தலைமறைவாக வாழ்வதற்கு உதவிபுரிகின்றோம். கிராமத்திற்குக் கிராமம் பொலிசாரும்,
உளவாளிகளும் தமிழ் உணர்வாளர்களை வேட்டையாடித்திரிநத் அந்தக் காலகட்டம்
எதிர்ப்புணர்வும், வீரமும் நிறைந்த உற்சாகமான வாழ்க்கைப்பகுதி.”
”அவரூடாக பிரான்சிஸ் அல்லது கி.பி.அரவிந்தனும் எமக்கு அறிமுகமாகிறார். ஜீவராஜா,
பிரான்சிஸ், சிவகுமார், மகேந்திரன் ஆகியோர் எமது இடத்திலிருந்தே கோப்பாய் வங்கிக்
கொள்ளையை மேற்கொள்ளப் போகிறார்கள்” (1974 06 05)
இது எனது குறிப்பு -
(இது உண்மையா?) ஜயாவிடம் ஒரு கேள்வி (சிவகுமாரன் உங்களுடன் இருந்தானா? இதை
உறுதிப்படுத்த ஏதாவது ஆதாரம் உண்டா? வந்து செல்வது, உங்களின் பாதுகாப்பில் இருப்பது
என்று அர்த்தமாகாது!?
(அப்படியாயின் வங்கிக் கொள்ளையை பொலீசுக்கு அறிவித்தது யார்? சிவகுமாரனின் வங்கிக்
கொள்ளைக்கு முன், சிவகுமாரனுடன் தந்தை செல்வாவே ஓர் இரவு இவனுடன் பேசியிருந்தார்.
(இதற்குச் சாட்சி வாமதேவன் அவன் இன்று உயிருடன் இல்லை.) இதற்கு ஆரையும் வறுத்து
வைத்துக் கட்ட முடியாதுதான். ஆனால் இவனது கொள்ளை முயற்சியில் பொலீஸ் புகுந்தது
நிஜமான வரலாறு தானே!
எப்படி?
இதற்கும் நிஜமான பதிலை வரலாறு சொல்லும்…
.
எனது முரண்—
2003 ம் ஆண்டுவரை ‘ பிரான்சிஸ் அல்லது கி.பி.அரவிந்தனும் . ஜீவராஜா, பிரான்சிஸ்,
மகேந்திரன் ஆகியோர் ‘ சிவகுமார் பற்றி அலட்டிக்கொண்டதே இல்லை! ஏன் ஜயாவும் இதுவரை
அலட்டிக் கொள்ளவிலை!!
(2003 இல்) பொங்குதமிழோடு சிவகுமாரனை ‘தேசிய மாணவ தலைவனாக’ புலிகள் வெளியே
கவுரவித்து கொண்டுவந்தனர். இதற்குப்பின் துள்ளிய கொட்டைப்பாக்குகள் தான் இவர்கள்
எல்லாம்…
இது இருக்கட்டும்…..
”இந்தக் கொள்ளையின் போது பொலீசாருடன் ஏற்பட்ட போராட்டத்தில் சிவகுமாரன் சயனைட்
வில்லைகளை அருந்தித் தற்கொலை செய்துகொள்கிறார். ஜீவராஜா கைது செய்யப்படுகிறார்.
பிரான்சிஸ் தப்பிவந்து விடுகிறார்.
இதே வேளை செட்டி, பத்மநாதன், (என்னால் இவர் கவனப்படுத்தப் படுத்தப்படுகிறார்)
சிவராசா, ரத்னகுமார் ஆகிய நால்வரும் அனுராதபுரம் சிறைச்சாலையிலிருந்து
தப்பிவருகிறார்கள். அந்த நேரத்தில் இலங்கை அரச அமைச்சர்களை வரவேற்று அழைத்து வந்த
அருளம்பலம் என்பவரின் ஆதரவாளரான குமாரகுலசிங்கம் என்பவரைக் கொலைசெய்ததன்
அடிப்படையிலேயே செட்டி உட்பட்ட இவர்கள் கைது செய்யப்பட்டனர். செட்டியை பொறுத்தவரை
எதிர்ப்புப் போராட்ட, வன்முறைப் போராட்ட உணர்வுகளுக்கு அப்பால் தனிப்பட்ட குற்றச்
செயல்களில் ஈடுபாடுள்ளவராகவே காணப்பட்டார். பல தனிப்பட்ட திருட்டுக் குற்றச்
செயல்களுக்காகத் தேடப்பட்டவர். அரசியலுக்கும் செட்டிக்கும் ஆழமான தொடர்புகள் ஏதும்
இருந்ததில்லை. அவர் சிறுவயதாக இருக்கும் போதே சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு
அனுப்பப்பட்டவர். அரசியல் தொடர்பு என்பது வெறும் தற்செயல் நிகழ்வே.”
1974.06.05 கோப்பாய் வங்கிக் கொள்ளை முயற்சியில் சிவகுமாரன் சுற்றி வளைக்கப்பட்டு
பிடிபட்டபோது ‘சயனைட்’ அருந்தி தற்கொலை செய்து கொண்டான். இது நிஜம்!….
மீண்டும் தொடர்கிறேன்…
மறுகாலை…
ரூபன்
04.04.10
மீண்டும் தொடர்கிறேன்
…
”
அரசியலுக்கும் செட்டிக்கும் ஆழமான தொடர்புகள் ஏதும் இருந்ததில்லை. அவர் சிறுவயதாக
இருக்கும் போதே சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பப்பட்டவர். அரசியல் தொடர்பு
என்பது வெறும் தற்செயல் நிகழ்வே.”
என்றெழுதும் ஜயா
, ( பாகம் மூன்றில்)
”
வெறுமனே தூய இராணுவக் குழு ஒன்றையும் அதற்கான ஒழுங்குமுறைகளையும் உருவமைத்துக்
கொண்டிருந்த காலகட்டத்தில் இவற்றையெல்லாம் பகுப்பாய்வுக்கு உட்படுத்துவதற்கு
எமக்குத் தெரிந்திருக்கவில்லை. உலகில் வெற்றி கொண்ட போராட்டங்களெல்லாம், மக்கள்
அமைப்புக்க்களை உருவாக்குவதிலும்,கட்சியை உருவாக்குவதிலும், அவற்றிலிருந்து
கெரில்லா இராணுவ அமைப்புக்களைக் கட்டியமைப்பது குறித்தும் தான் நாம் பின்னர்
கேள்வியுற்றோம்.
இதற்கு மாறாக, இராணுவ அமைப்பைக் உருவாக்கிக் கொள்வதைப் பற்றிச் சிந்தித்த எமக்கு,
நாமும் எமது போராளிகளும் மட்டுமே மக்கள். அதிலிருந்து வெளியிலிருப்போரோ,
விலகிச்செல்வோரோ, யாராகவும் இருக்கலாம்; எதிரியாகவோ, எதிரியின் நண்பனாகவோ,
துரோகியாகவோ யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். இவ்வாறு தலைகீழாக ஆரம்பித்த எமது
அரசியலை வழி நடத்தவோ, எம்மோடு விவாதிக்கவோ, அரசியல் குறித்துப் பேசவோ யாரும் இல்ல”
இப்படித்தான் தமது நிலையை வெளிப்படுத்தி இருந்தார்.
(இது இப்படி இருக்க இதன் பின்னுள்ள அரசியலை விமர்சிப்பது, இப்போது எனது நோக்கமல்ல:
ஜயாவுக்கு எழுதிய பின்னூட்டத்தைத் தெளிவுபடுத்திவிட்டு பின்னர் இதனைப் பார்ப்போம்.)
அடுத்து,
”சிறுவனாக இருந்த பிரபாகரன் குடியரசு தினத்தை ஒட்டி ஒரு அரச பேரூந்து ஒன்றை
எரிப்பதற்கு முயற்சித்துத் தப்பித்ததால் அவரும் தேடப்படும் நிலைக்குத்
தள்ளப்படுகிறார். அப்போதெல்லாம் பிரபாகரனுக்கு பதினாறு அல்லது பதினேழு வயது தான்
நிரம்பியிருக்கும். பிரபாகரன் கடத்தல் தொழிலில் ஈடுபடவில்லையாயினும அரச எதிர்ப்பு
விவகாரங்களில் குட்டிமணி, தங்கத்துரையுடன் தொடர்புகளைப் பேணிக்கொள்கிறார்.
குறிப்பாக தமிழ் நாட்டிற்கான போக்குவரத்து வசதிகளுக்காக பிரபாகரன் மட்டுமல்ல
அனைத்து அரச எதிர்ப்பாளர்களும் குட்டிமணி, தங்கத்துரை போன்றோரைச்
சார்ந்திருக்கவேண்டய நிலையே ஏற்பட்டது.
தேடப்படும் நிலையில் குட்டிமணியைச் சந்தித்து அவருடன் பிரபாகரன் தமிழ் நாட்டிற்குத்
தப்பிவருகிறார். இதேவேளை எம்முடன் தங்கியிருந்த செட்டியும் இந்தியா செல்கிறார்.
அவ்வேளையில் செட்டி பிரபாகரனைச் சந்திக்கிறார்.
பிரபாகரனைப் பொறுத்தவரை முழுநேரமாக அரச எதிர்ப்பு வன்முறை அரசியலில் ஈடுபட வேண்டும்
என்ற கருத்தை குட்டிமணி, தங்கத்துரையிடம் முன்வைக்க அவர்கள் கடத்தல் தொழிலைத்
தொடர்ந்தவண்ணமிருந்னர். இவ்வேளையில் செட்டியும் ஆயுதம் வாங்கி இலங்கை அரசிற்கு
எதிரான தாக்குதல்களில் ஈடுபட வேண்டும் என்ற கருத்தை முன்வைக்கிறார். அவ்வேளையில்
தான் பிரபாகரன் செட்டியுடன் இணைந்து செயற்படும் முடிபிற்கு வருகிறார்.
சுமார் பதினெட்டுவயதாகும் போது தம்பி என்று அழைக்கப்பட்ட பிரபாகரன் இம்முடிபை
எடுக்கிறார். (இது என்னால் அழுத்தம் கொடுக்கப்பட்டது!)
ஆக, பிரபாகரனுக்குச் ‘செட்டி’ அறிமுகமாக முன்னரே, செட்டி ஐஜயர் ஆட்களுடன் தொடர்பில்
இருந்தார். ஆதாரம்: ( ”எம்முடன் தங்கியிருந்த செட்டியும் இந்தியா செல்கிறார்.
அவ்வேளையில் செட்டி பிரபாகரனைச் சந்திக்கிறார்”. – (பதிவு: இரண்டில்)
மேலும்
, இதே பதிவில்…
”அவ்வேளையில் உலகத் தமிழர் பேரவையைச் சார்ந்த ஜனார்த்தனனின் தொடர்பு பிரபாகரனிற்கு
ஏற்படுகிறது.
இதே வேளை தமிழ்நாட்டில் தங்கியிருந்த தமிழரசுக் கட்சியைச் சார்ந்த ராஜரட்ணம்
என்பவரின் தொடர்பு பிரபாகரனுக்கு ஏற்படுகிறது. குடியரசு தின எதிர்ப்புப்
போராட்டங்களின் போதான வன்முறை நிகழ்வுகளில் தேடப்பட்டவர்களுள் ராஜரட்ணமும் ஒருவர்.
அவர்தான் பிரபாகரனுக்கு கரிகால் சோழன், புலிக் கொடி போன்ற சரித்திர நிகழ்வுகளைப்
போதிக்கிறார். அவர் தான் இந்த அடிப்படைகளிலிருந்த தமிழ் புதிய புலிகள் என்ற பெயரை
முன்வைத்து அமைப்பொன்றை உருவாக்க வேண்டும் என்றும் ஆலோசனை வழங்குகிறார். பிரபாகரன்
இந்த ஆலோசனைகளால் ஆட்கொள்ளப்படுகிறார.
இதன் பின்னர் பிரபாகரன் இலங்கைக்கு செட்டியுடன் திரும்பவந்து அரசியல் நடவடிக்கைகளில
ஈடுபடத் தீர்மானிக்கிறார். இதனை தங்கத்துரை குட்டிமணியிடம் கூறியபோது, அவர்கள்
செட்டி கொள்ளைக்காரன், கிரிமினல் நடவடிக்கைகளில் ஈடுபடுபவர் அவருடன் தொடர்புகளை
வைத்திருக்க வேண்டாம் என அறிவுறுத்துகின்றனர. ஆனால், பிரபாகரனோ அவர்கள் தொடர்ந்து
கடத்தல் தொழிலில் ஈடுபடுவதற்காகவே இவ்வாறு நியாயப்படுத்துகின்றனர் என்று கூறி
செட்டியுடன் நாடு திரும்புகிறார். இலங்கைக்கு வந்த பிரபாகரன் சிலரைச்
சேர்த்துக்கொண்டு யாழ்ப்பாண மேயராகவிருந்த துரையப்பாவைக் கொலைசெய்யவேண்டும் என்ற
நோக்கத்தில் செயற்படுகிறார் (குறிப்பாக: ”அவர் (ராஜரட்ணம்) தான் இந்த
அடிப்படைகளிலிருந்த தமிழ் புதிய புலிகள் என்ற பெயரை முன்வைத்து அமைப்பொன்றை
உருவாக்க வேண்டும் என்றும் ஆலோசனை வழங்குகிறார்.
இந்த இராஜரட்ணம் யார் என்பதை ‘எழுதப்படாத வரலாறு’ என்ற புத்தகத்தை ஒரு முறை
படித்தால் இலேசாகப் புரியும்….
இது ஒருபுறமிருக்க, இந்தியாவில் இருந்து செட்டியுடன் திரும்பிய பிரபா …” யாழ்ப்பாண
மேயராகவிருந்த துரையப்பாவைக் கொலைசெய்யவேண்டும் என்ற நோக்கத்தில் செயற்படுகிறார் ”
இதற்கு முதல் ‘புதிய தமிழ் புலிகள்’ இயங்கவில்லை என்பது ஜயாவின் விவாதமாக
இருக்கவில்லைiயா

Abonneren op:
Posts (Atom)