எனது பின்னூட்டங்கள் தொடக்கத்தில் இருந்து….
ஜயாவின் கருத்துப்படி:-
”அனுராதபுரம் சிறையிலிருந்து தப்பி, செட்டி, கண்ணாடி பத்மநாதன், சிவராசா,
ரத்னகுமார் ஆகிய நால்வரும் காடுகள் வழியாக வந்து கொண்டிருந்த வேளையில் அவர்களிடையே
ஒரு வாக்குவாதம் ஏற்படுகிறது. அதெல்லாம் அரசியல் விவாதமா என்ன? செட்டி இன்னும்
கொள்ளையடித்துப் பணம் சேர்க்க வேண்டும் என்ற வகையில் நடந்து கொள்ள அதைப் பத்மநாதன்
எதிர்த்திருக்கிறார். இதனால் அவர் காட்டிக்கொடுக்கலாம் என்ற பயத்தில் பத்மனாதனை
ஏனைய மூவரும் செட்டியின் வழிநடத்தலில் காட்டுக்குள்ளேயே கொன்று போட்டுவிட்டு,
அங்கேயே பிணமாக்கி எரித்துவிட்டு வந்திருக்கின்றனர்”.இதன் பின்னர் ஜயாவின் பதினொரு
பதிவுகளிலும்: ‘சிவராசா, ரத்னகுமார்’ ஆகிய இருவரும் வரவேயில்லை!
கண்ணாடி பத்மநாதன் தேடப்படுவதாக ஜயாவின் பதிவு இதுவரை சுட்டிக்காட்டவும் இல்லை!
அனுராதபுரம் சிறையிலிருந்து கண்ணாடி பத்மநாதனுடன் தப்பிய செட்டி, (ஜயாவின்
பதிவின்படி..) இதற்குப் பின்னர் பலமுறை கைதுசெய்யப்பட்டுள்ளார். இறுதியாக
காங்கேசன்துறை இடைத்தேர்தலின் போது: தந்தை செல்வாவை எதிர்த்து (வீ, பீ) என
அழைக்கப்படும் அளவெட்டி வி. பொன்னம்பலம் போட்டியிட்டிருந்தார். இப்போட்டி உண்மையில்
அன்று சூடாகத்தான் இருந்தது! (இதை யாரும் மறுக்க முடியாது) வி. பொன்னம்பலத்தை
வெருட்டவும், அவருக்கு இடைஞ்சலைக் கொடுக்கவும், அன்று அளவவெட்டி பலநோக்கு
கூட்டுறவுச் சங்கம் இளைஞர்களால் கொள்ளையிடப்பட்டது!
இக்கொள்ளைச் சம்பவத்தின் பின்னரே ‘செட்டி’ இறுதியாகக் கைது செய்யப்பட்டார். (இதை
செட்டிதான் செய்தாரா? என்பதற்கான ஆதாரபூர்வமான தகவல்கள் இதுவரை இல்லை!
இவரது மரணத்துக்கு முன்னர் இவர் கைதுசெய்யப்பட்ட இறுதிச் சம்பவம் இதுவாக இருந்தது.!
ஜயாவின் கருத்துப்படி:-
” கண்ணாடி பத்மநாதன் சற்று வேறுபட்டவர். அவர் இதற்கு முன்னதாக குற்றச் செயல்களில்
ஈடுபட்ட குற்றவாளியல்ல. வானொலி திருத்தும் கடைவைத்து நடத்தி வந்தவர். கண்ணாடி
பத்மநாதன் கொலைகளுக்காகக் கைது செய்யப்படவில்லை. அரசியல் எதிர்ப்புப்
போராட்டங்களுக்காக கைதானவர். குற்றச் செயல்களிலிருந்து விடுதலைப் போராட்டத்தை
ஆரம்பிப்பதை இவர் எதிர்த்திருக்கலாம். இவர் சகோதரப் படுகொலைகளைக் கூட எதிர்த்தவர்
என்று நான் அறிந்திருக்கிறேன். பூநகரிக் காட்டுக்குள் நிகழ்ந்த இந்தக் கோரம்
இன்றுவரை தொடர்ந்து கொண்டிருக்கிறது என்பது தமிழினத்தின் சாபக்கேடு.
இந்தக் கொலை தொடர்பாகப் பிரபாகரனிடம் நான் கேட்டபோது கண்ணாடி பத்மநாதன்
காட்டிக்கொடுக்கலாம் என்ற பயத்தின் அடிப்படையிலேயே கொன்றதாகத் தன்னிடம் செட்டி
சொன்னதாக எனக்குச் சொன்னார்.”
(இது தொடர்பாக எனது கருத்தை இப்போதைக்குத் தவிர்க்கிறேன்…) மன்னிக்கவும். – ஆதாரம்
கிடைக்கும் வரை தர்மயுத்தம் தொடரும்…
ஜயாவின் முதலாம்பாகத்தின் படி….
இவ்வேளையிலெல்லாம் நான் ஒரு ஆதரவாளர் மட்டத்திலான செயற்பாடுகளையே மேற்கொண்டேன்”.
அதே வேளை வட்டுக்கோட்டை எம்.பீ ஆகவிருந்த அரச ஆதரவாளரான தியாகராஜா என்பவரைக் கொலை
செய்ய முயற்சித்த ஜீவராஜா என்பவர் தீவிரமாகத் தேடப்படுகிறார். (1972.06.07
வட்டுக்கோட்டை தியாகராசா கொலை முயற்சி: கூட்டுமுன்னணி அரசாங்கத்தின் ஆதரவாளரும்,
வட்டுக்கோட்டை எம்.பியுமான ஏ.தியாகராஜா கொழும்புக்கு புறப்பட்ட வேளையில்
சுடப்பட்டார். குண்டுக்கு வழிதவறி அற்புதமாகத் தப்பிப் பிழைத்துவிட்டார். – இது
எனது செய்திக் குறிப்பில் இருந்து…)
”
அவர் எமது ஊரான புன்னாலைக் கட்டுவனுக்குத் தலைமறைவாகும் நோக்கத்தோடு வருகிறார்.
அப்போது நானும் குலம் என்பவரும் அவருக்கு பாதுகாப்பு ஏற்படுகளைச் மேற்கொண்டு
தலைமறைவாக வாழ்வதற்கு உதவிபுரிகின்றோம். கிராமத்திற்குக் கிராமம் பொலிசாரும்,
உளவாளிகளும் தமிழ் உணர்வாளர்களை வேட்டையாடித்திரிநத் அந்தக் காலகட்டம்
எதிர்ப்புணர்வும், வீரமும் நிறைந்த உற்சாகமான வாழ்க்கைப்பகுதி.”
”அவரூடாக பிரான்சிஸ் அல்லது கி.பி.அரவிந்தனும் எமக்கு அறிமுகமாகிறார். ஜீவராஜா,
பிரான்சிஸ், சிவகுமார், மகேந்திரன் ஆகியோர் எமது இடத்திலிருந்தே கோப்பாய் வங்கிக்
கொள்ளையை மேற்கொள்ளப் போகிறார்கள்” (1974 06 05)
இது எனது குறிப்பு -
(இது உண்மையா?) ஜயாவிடம் ஒரு கேள்வி (சிவகுமாரன் உங்களுடன் இருந்தானா? இதை
உறுதிப்படுத்த ஏதாவது ஆதாரம் உண்டா? வந்து செல்வது, உங்களின் பாதுகாப்பில் இருப்பது
என்று அர்த்தமாகாது!?
(அப்படியாயின் வங்கிக் கொள்ளையை பொலீசுக்கு அறிவித்தது யார்? சிவகுமாரனின் வங்கிக்
கொள்ளைக்கு முன், சிவகுமாரனுடன் தந்தை செல்வாவே ஓர் இரவு இவனுடன் பேசியிருந்தார்.
(இதற்குச் சாட்சி வாமதேவன் அவன் இன்று உயிருடன் இல்லை.) இதற்கு ஆரையும் வறுத்து
வைத்துக் கட்ட முடியாதுதான். ஆனால் இவனது கொள்ளை முயற்சியில் பொலீஸ் புகுந்தது
நிஜமான வரலாறு தானே!
எப்படி?
இதற்கும் நிஜமான பதிலை வரலாறு சொல்லும்…
.
எனது முரண்—
2003 ம் ஆண்டுவரை ‘ பிரான்சிஸ் அல்லது கி.பி.அரவிந்தனும் . ஜீவராஜா, பிரான்சிஸ்,
மகேந்திரன் ஆகியோர் ‘ சிவகுமார் பற்றி அலட்டிக்கொண்டதே இல்லை! ஏன் ஜயாவும் இதுவரை
அலட்டிக் கொள்ளவிலை!!
(2003 இல்) பொங்குதமிழோடு சிவகுமாரனை ‘தேசிய மாணவ தலைவனாக’ புலிகள் வெளியே
கவுரவித்து கொண்டுவந்தனர். இதற்குப்பின் துள்ளிய கொட்டைப்பாக்குகள் தான் இவர்கள்
எல்லாம்…
இது இருக்கட்டும்…..
”இந்தக் கொள்ளையின் போது பொலீசாருடன் ஏற்பட்ட போராட்டத்தில் சிவகுமாரன் சயனைட்
வில்லைகளை அருந்தித் தற்கொலை செய்துகொள்கிறார். ஜீவராஜா கைது செய்யப்படுகிறார்.
பிரான்சிஸ் தப்பிவந்து விடுகிறார்.
இதே வேளை செட்டி, பத்மநாதன், (என்னால் இவர் கவனப்படுத்தப் படுத்தப்படுகிறார்)
சிவராசா, ரத்னகுமார் ஆகிய நால்வரும் அனுராதபுரம் சிறைச்சாலையிலிருந்து
தப்பிவருகிறார்கள். அந்த நேரத்தில் இலங்கை அரச அமைச்சர்களை வரவேற்று அழைத்து வந்த
அருளம்பலம் என்பவரின் ஆதரவாளரான குமாரகுலசிங்கம் என்பவரைக் கொலைசெய்ததன்
அடிப்படையிலேயே செட்டி உட்பட்ட இவர்கள் கைது செய்யப்பட்டனர். செட்டியை பொறுத்தவரை
எதிர்ப்புப் போராட்ட, வன்முறைப் போராட்ட உணர்வுகளுக்கு அப்பால் தனிப்பட்ட குற்றச்
செயல்களில் ஈடுபாடுள்ளவராகவே காணப்பட்டார். பல தனிப்பட்ட திருட்டுக் குற்றச்
செயல்களுக்காகத் தேடப்பட்டவர். அரசியலுக்கும் செட்டிக்கும் ஆழமான தொடர்புகள் ஏதும்
இருந்ததில்லை. அவர் சிறுவயதாக இருக்கும் போதே சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு
அனுப்பப்பட்டவர். அரசியல் தொடர்பு என்பது வெறும் தற்செயல் நிகழ்வே.”
1974.06.05 கோப்பாய் வங்கிக் கொள்ளை முயற்சியில் சிவகுமாரன் சுற்றி வளைக்கப்பட்டு
பிடிபட்டபோது ‘சயனைட்’ அருந்தி தற்கொலை செய்து கொண்டான். இது நிஜம்!….
மீண்டும் தொடர்கிறேன்…
மறுகாலை…
ரூபன்
04.04.10
மீண்டும் தொடர்கிறேன்
…
”
அரசியலுக்கும் செட்டிக்கும் ஆழமான தொடர்புகள் ஏதும் இருந்ததில்லை. அவர் சிறுவயதாக
இருக்கும் போதே சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பப்பட்டவர். அரசியல் தொடர்பு
என்பது வெறும் தற்செயல் நிகழ்வே.”
என்றெழுதும் ஜயா
, ( பாகம் மூன்றில்)
”
வெறுமனே தூய இராணுவக் குழு ஒன்றையும் அதற்கான ஒழுங்குமுறைகளையும் உருவமைத்துக்
கொண்டிருந்த காலகட்டத்தில் இவற்றையெல்லாம் பகுப்பாய்வுக்கு உட்படுத்துவதற்கு
எமக்குத் தெரிந்திருக்கவில்லை. உலகில் வெற்றி கொண்ட போராட்டங்களெல்லாம், மக்கள்
அமைப்புக்க்களை உருவாக்குவதிலும்,கட்சியை உருவாக்குவதிலும், அவற்றிலிருந்து
கெரில்லா இராணுவ அமைப்புக்களைக் கட்டியமைப்பது குறித்தும் தான் நாம் பின்னர்
கேள்வியுற்றோம்.
இதற்கு மாறாக, இராணுவ அமைப்பைக் உருவாக்கிக் கொள்வதைப் பற்றிச் சிந்தித்த எமக்கு,
நாமும் எமது போராளிகளும் மட்டுமே மக்கள். அதிலிருந்து வெளியிலிருப்போரோ,
விலகிச்செல்வோரோ, யாராகவும் இருக்கலாம்; எதிரியாகவோ, எதிரியின் நண்பனாகவோ,
துரோகியாகவோ யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். இவ்வாறு தலைகீழாக ஆரம்பித்த எமது
அரசியலை வழி நடத்தவோ, எம்மோடு விவாதிக்கவோ, அரசியல் குறித்துப் பேசவோ யாரும் இல்ல”
இப்படித்தான் தமது நிலையை வெளிப்படுத்தி இருந்தார்.
(இது இப்படி இருக்க இதன் பின்னுள்ள அரசியலை விமர்சிப்பது, இப்போது எனது நோக்கமல்ல:
ஜயாவுக்கு எழுதிய பின்னூட்டத்தைத் தெளிவுபடுத்திவிட்டு பின்னர் இதனைப் பார்ப்போம்.)
அடுத்து,
”சிறுவனாக இருந்த பிரபாகரன் குடியரசு தினத்தை ஒட்டி ஒரு அரச பேரூந்து ஒன்றை
எரிப்பதற்கு முயற்சித்துத் தப்பித்ததால் அவரும் தேடப்படும் நிலைக்குத்
தள்ளப்படுகிறார். அப்போதெல்லாம் பிரபாகரனுக்கு பதினாறு அல்லது பதினேழு வயது தான்
நிரம்பியிருக்கும். பிரபாகரன் கடத்தல் தொழிலில் ஈடுபடவில்லையாயினும அரச எதிர்ப்பு
விவகாரங்களில் குட்டிமணி, தங்கத்துரையுடன் தொடர்புகளைப் பேணிக்கொள்கிறார்.
குறிப்பாக தமிழ் நாட்டிற்கான போக்குவரத்து வசதிகளுக்காக பிரபாகரன் மட்டுமல்ல
அனைத்து அரச எதிர்ப்பாளர்களும் குட்டிமணி, தங்கத்துரை போன்றோரைச்
சார்ந்திருக்கவேண்டய நிலையே ஏற்பட்டது.
தேடப்படும் நிலையில் குட்டிமணியைச் சந்தித்து அவருடன் பிரபாகரன் தமிழ் நாட்டிற்குத்
தப்பிவருகிறார். இதேவேளை எம்முடன் தங்கியிருந்த செட்டியும் இந்தியா செல்கிறார்.
அவ்வேளையில் செட்டி பிரபாகரனைச் சந்திக்கிறார்.
பிரபாகரனைப் பொறுத்தவரை முழுநேரமாக அரச எதிர்ப்பு வன்முறை அரசியலில் ஈடுபட வேண்டும்
என்ற கருத்தை குட்டிமணி, தங்கத்துரையிடம் முன்வைக்க அவர்கள் கடத்தல் தொழிலைத்
தொடர்ந்தவண்ணமிருந்னர். இவ்வேளையில் செட்டியும் ஆயுதம் வாங்கி இலங்கை அரசிற்கு
எதிரான தாக்குதல்களில் ஈடுபட வேண்டும் என்ற கருத்தை முன்வைக்கிறார். அவ்வேளையில்
தான் பிரபாகரன் செட்டியுடன் இணைந்து செயற்படும் முடிபிற்கு வருகிறார்.
சுமார் பதினெட்டுவயதாகும் போது தம்பி என்று அழைக்கப்பட்ட பிரபாகரன் இம்முடிபை
எடுக்கிறார். (இது என்னால் அழுத்தம் கொடுக்கப்பட்டது!)
ஆக, பிரபாகரனுக்குச் ‘செட்டி’ அறிமுகமாக முன்னரே, செட்டி ஐஜயர் ஆட்களுடன் தொடர்பில்
இருந்தார். ஆதாரம்: ( ”எம்முடன் தங்கியிருந்த செட்டியும் இந்தியா செல்கிறார்.
அவ்வேளையில் செட்டி பிரபாகரனைச் சந்திக்கிறார்”. – (பதிவு: இரண்டில்)
மேலும்
, இதே பதிவில்…
”அவ்வேளையில் உலகத் தமிழர் பேரவையைச் சார்ந்த ஜனார்த்தனனின் தொடர்பு பிரபாகரனிற்கு
ஏற்படுகிறது.
இதே வேளை தமிழ்நாட்டில் தங்கியிருந்த தமிழரசுக் கட்சியைச் சார்ந்த ராஜரட்ணம்
என்பவரின் தொடர்பு பிரபாகரனுக்கு ஏற்படுகிறது. குடியரசு தின எதிர்ப்புப்
போராட்டங்களின் போதான வன்முறை நிகழ்வுகளில் தேடப்பட்டவர்களுள் ராஜரட்ணமும் ஒருவர்.
அவர்தான் பிரபாகரனுக்கு கரிகால் சோழன், புலிக் கொடி போன்ற சரித்திர நிகழ்வுகளைப்
போதிக்கிறார். அவர் தான் இந்த அடிப்படைகளிலிருந்த தமிழ் புதிய புலிகள் என்ற பெயரை
முன்வைத்து அமைப்பொன்றை உருவாக்க வேண்டும் என்றும் ஆலோசனை வழங்குகிறார். பிரபாகரன்
இந்த ஆலோசனைகளால் ஆட்கொள்ளப்படுகிறார.
இதன் பின்னர் பிரபாகரன் இலங்கைக்கு செட்டியுடன் திரும்பவந்து அரசியல் நடவடிக்கைகளில
ஈடுபடத் தீர்மானிக்கிறார். இதனை தங்கத்துரை குட்டிமணியிடம் கூறியபோது, அவர்கள்
செட்டி கொள்ளைக்காரன், கிரிமினல் நடவடிக்கைகளில் ஈடுபடுபவர் அவருடன் தொடர்புகளை
வைத்திருக்க வேண்டாம் என அறிவுறுத்துகின்றனர. ஆனால், பிரபாகரனோ அவர்கள் தொடர்ந்து
கடத்தல் தொழிலில் ஈடுபடுவதற்காகவே இவ்வாறு நியாயப்படுத்துகின்றனர் என்று கூறி
செட்டியுடன் நாடு திரும்புகிறார். இலங்கைக்கு வந்த பிரபாகரன் சிலரைச்
சேர்த்துக்கொண்டு யாழ்ப்பாண மேயராகவிருந்த துரையப்பாவைக் கொலைசெய்யவேண்டும் என்ற
நோக்கத்தில் செயற்படுகிறார் (குறிப்பாக: ”அவர் (ராஜரட்ணம்) தான் இந்த
அடிப்படைகளிலிருந்த தமிழ் புதிய புலிகள் என்ற பெயரை முன்வைத்து அமைப்பொன்றை
உருவாக்க வேண்டும் என்றும் ஆலோசனை வழங்குகிறார்.
இந்த இராஜரட்ணம் யார் என்பதை ‘எழுதப்படாத வரலாறு’ என்ற புத்தகத்தை ஒரு முறை
படித்தால் இலேசாகப் புரியும்….
இது ஒருபுறமிருக்க, இந்தியாவில் இருந்து செட்டியுடன் திரும்பிய பிரபா …” யாழ்ப்பாண
மேயராகவிருந்த துரையப்பாவைக் கொலைசெய்யவேண்டும் என்ற நோக்கத்தில் செயற்படுகிறார் ”
இதற்கு முதல் ‘புதிய தமிழ் புலிகள்’ இயங்கவில்லை என்பது ஜயாவின் விவாதமாக
இருக்கவில்லைiயா
தொடரும்…
ரூபன்
Geen opmerkingen:
Een reactie posten