தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 24 november 2010

நிராஜ் டேவிட்டின் உண்மையின் தரிசனம் 20-24

காலம் கடந்து ஞானம் பெற்ற நிராஜ் டேவிட் தமிழ் மக்களுக்கு இயக்கம் விட்ட பிழைகளை விழக்குவதை விட்டுவிட்டு இலங்கை ராணுவத்திடம்  புலிகள் வடமாராட்சியை இழந்து மக்களுக்கு கூட சொல்லாமல் இந்தியாவுக்கு வள்ள மேறிய நிலையில் இலங்கை அரசு,சிங்களக்கட்சிகளின் எதிர்ப்பின் மத்தியில் ஒப்பரேசன் பூமாலை  மூலம் இலங்கை அரசை பணியவைத்து வடக்கு கிழக்கிணைந்த மாநிலத்தை  அறுநூறு புலிப்போராளிகள் இழப்புடன் கிடைக்கச்செய்த இந்தியாவை சொந்த நலனுக்காக மக்களையும் பகையாக்கி,தீராத விரோதியாக்கி இறுதியில் எல்லாவற்றையும் இழந்து சொந்த நாட்டிலே அடிமை,அகதி வாழ்வை உண்டாக்கித்தந்த புலிகளுக்காக இன்று குறை கூறி,அதை உண்மையின் தரிசனம் என்ற பெயரிலும் தமிழரை அழிக்க ஆரம்பத்திலிருந்தே உதவியதும் பலதீனத்து  மக்களை கொன்றுகுவிக்கும் கொடூரமானவர்களுமான இஸ்ரவேலரிடமிருந்து தமிழர் அதை
கற்றுக் கொள்ளவேண்டுமேன்பதையும் உபதேசிக்கிறார்.இவர் சுவிஸ் நாட்டில் பாதுகாப்பாக இருக்கின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
போருக்குப்பயந்து ஆரம்பத்திலோடியவர்களும் இன்று வீரம் பேசும் அந்நிய நாட்டில் வாழ்வுரிமை பெற்ற பெற்றவர்களில் இவரும் ஒருவரா என்பதுதான் தெளிவில்லை!! பக்கசார்பு ,இஸ்ரேலிடம் ஆலோசனை பெறும் நிராஜ் டேவிட்


உதாரணம்:
இந்தியா மேற்கொண்ட கீழ்த்தரமான பிரசாரங்கள் - உண்மையின் தரிசனம்- பாகம்-24 (வீடியோ)
[ புதன்கிழமை, 24 நவம்பர் 2010, 03:59.13 AM GMT +05:30 ]

திலீபனின் உண்ணா விரதப்போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது, இந்தியா மிகவும் கேவலமான, பிற்போக்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தது. திலீபனின் போராட்டத்தையும், அவனது தியாகத்தையும் கொச்சைப்படுத்தும்படியான பலவித நடவடிக்கைகளில் இந்தியா இறங்கியிருந்தது.

இந்திய அரசின் உத்தியோகபூர்வ வானொலி சேவையான அகில இந்திய வானொலி  (ALL INDIA RADIO),  திலீபனின் உண்ணாவிரதத்தை கொச்சைப்படுத்தும் படியான செய்திகளை தொடர்ந்து வெளியிட்டு வந்தது.
திலீபனைப் பற்றியும், புலிகளின் தலைவரைப் பற்றியும் தவறான கருத்துக்களை தமிழ் நாட்டு மக்கள் மத்தியில் பரப்பும் முயற்சியில், அது முழுமூச்சுடன் இறங்கியிருந்தது. மகாத்மா காந்தியும் உண்ணாவிரதம் இருந்தவர்தான். ஆனால் அவர் தனது சகாக்களை உண்ணாவிரதம் இருக்கும்படி கூறவில்லை.
மகாத்மாவே நேரடியாக உண்ணா விரதப் போராட்டத்தில் குதித்திருந்தார். ஆனால் புலிகளின் தலைவர் பிரபாகரனோ, தனது சகாக்களை உண்ணாவிரதம் இருக்கும்படி ஆணையிட்டுள்ளார்|| என்று அகில இந்திய வானொலி பிரச்சாரம் செய்தது.
அதேபோன்று, திலீபன் தொடர்பாக, மற்றொரு வதந்தியும் தமிழ் மக்கள் மத்தியில் திட்டமிட்டு பரப்பப்பட்டது. திலீபன் ஏற்கனவே நடைபெற்றிருந்த சண்டை ஒன்றில் காயம் அடைந்திருந்ததால், அவனது ஈரலில் ஒரு பகுதியும், மற்றய சில உள்ளுறுப்புக்களும் ஏற்கனவே வைத்திய சிகிட்சையின் போது அகற்றியெடுக்கப்பட்டுவிட்டன.
திலீபன் இன்னும் சில நாட்கள் மட்டுமே உயிர் வாழ முடியும். அதனால்தான் திலீபன் சாகும்வரையிலான உண்ணாவிரதத்தை துணிந்து மேற்கொண்டு வருவதாக| வதந்திகள் பரப்பப்பட்டன.(இந்தியப்படையுடன் ஈழத்திற்கு வந்திருந்த தமிழ் அமைப்புக்களின் உறுப்பினர்கள் இப்படியான வதந்திகளை மக்கள் மத்தியில் பரப்புவதில் அரும்பணியாற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.)
அதேபோன்று, திலிபன் மரணம் அடைந்த பின்பும், இந்தியாவின் சகபாடிகளால் மேலும் பல வதந்திகள் மக்கள் மத்தியில் பரப்பப்பட்டன. இறுதி நேரத்தில் திலீபன் தன்னைக் காப்பாற்றும்படி சக போராளிகளிடம் கெஞ்சியதாகவும், ஆனால், புலிகள் திலீபனை வலுக்கட்டாயமாக உண்ணாவிரதம் இருந்து சாகடித்ததாகவும் வதந்திகள் பரப்பப்பட்டன.
திலீபன் புலிகளால் விஷ ஊசி ஏற்றிக் கொல்லப்பட்டதாகவும் தமிழ் மக்கள் மத்தியில் இந்தியாவின் அடிவருடிகளால் வதந்திகள் பரப்பப்பட்டன. திலீபனின் போராட்டமானது, இந்தியா பற்றி தமிழ் மக்கள் மத்தியில் இருந்த மாயையை உடைந்திருந்தது. இதனைப் பொறுக்க முடியாத இந்தியாவின் உளவுப் பிரிவினரே, இதுபோன்ற வதந்திகளைப் பரப்புவதில் பிரதான பங்கு வகித்திருந்தார்கள்.
அவர்கள் தமது திட்டத்திற்கு இந்தியப் படைகளின் தயவில் தங்கியிருந்த தமிழ் அமைப்பின் உறுப்பினர்களையும், அவர்களின் குடும்பத்தினர்களையும் பயன்படுத்தினார்கள். ஆனால், இதுபோன்ற வதந்திகள் தமிழ் மக்கள் மத்தியில் எந்தவிதத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.
இதுபோன்ற வதந்திகள் தமிழ் மக்களை இந்தியாவிற்கு எதிராக மேலும் கோபம் கொள்ள வைத்ததுடன், திலீபன் மீது தாம் கொண்டிருந்த அன்பை மென்மேலும் அதிகரிக்கவும் செய்தது.
சண்டைகளின் போது விழுப்புண் அடைவது புலிகளுக்கு புதிதல்ல. இதை புலிகளுடன் தோளோடு தோள் நின்ற தமிழ் மக்கள் நன்கறிவார்கள்.
சுமார் ஆறு மாத காலத்திற்கு முன்னர் இடம்பெற்ற ஒரு சண்டையின் போது திலீபன் வயிற்றில் காயமடைந்திருந்தது உண்மைதான். ஆனால் நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் அளவிற்கு திலீபனுக்கு உடல்நிலை ஒன்றும் மோசமாக இருக்கவில்லை என்பதை, திலீபனின் வாழ்க்கையில் பின்னிப் பிணைந்திருந்த யாழ்ப்பாணத் தமிழ் மக்கள் நன்கறிவார்கள்.
இது பற்றித்தான் ஆராய்கின்றது இந்த வார உண்மையின் தரிசனம்
நிராஜ் டேவிட் nirajdavid@bluewin.ch




Geen opmerkingen:

Een reactie posten