தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 7 november 2010

நிராஜ் டேவிட்டின் உண்மையின் தரிசனம்

காலம் கடந்து ஞானம் பெற்ற நிராஜ் டேவிட் தமிழ் மக்களுக்கு இயக்கம் விட்ட பிழைகளை விழக்குவதை விட்டுவிட்டு இலங்கை ராணுவத்திடம்  புலிகள் வடமாராட்சியை இழந்து மக்களுக்கு கூட சொல்லாமல் இந்தியாவுக்கு வள்ள மேறிய நிலையில் இலங்கை அரசு,சிங்களக்கட்சிகளின் எதிர்ப்பின் மத்தியில் ஒப்பரேசன் பூமாலை  மூலம் இலங்கை அரசை பணியவைத்து வடக்கு கிழக்கிணைந்த மாநிலத்தை  அறுநூறு புலிப்போராளிகள் இழப்புடன் கிடைக்கச்செய்த இந்தியாவை சொந்த நலனுக்காக மக்களையும் பகையாக்கி,தீராத விரோதியாக்கி இறுதியில் எல்லாவற்றையும் இழந்து சொந்த நாட்டிலே அடிமை,அகதி வாழ்வை உண்டாக்கித்தந்த புலிகளுக்காக இன்று குறை கூறி,அதை உண்மையின் தரிசனம் என்ற பெயரிலும் தமிழரை அழிக்க ஆரம்பத்திலிருந்தே உதவியதும் பலதீனத்து  மக்களை கொன்றுகுவிக்கும் கொடூரமானவர்களுமான இஸ்ரவேலரிடமிருந்து தமிழர் அதை
கற்றுக் கொள்ளவேண்டுமேன்பதையும் உபதேசிக்கிறார்.இவர் சுவிஸ் நாட்டில் பாதுகாப்பாக இருக்கின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
போருக்குப்பயந்து ஆரம்பத்திலோடியவர்களும் இன்று வீரம் பேசும் அந்நிய நாட்டில் வாழ்வுரிமை பெற்ற பெற்றவர்களில் இவரும் ஒருவரா என்பதுதான் தெளிவில்லை!! பக்கசார்பு ,இஸ்ரேலிடம் ஆலோசனை பெறும் நிராஜ் டேவிட்

உதாரணம்:ஆணவத்துடன் தீட்சித்தும் ஆவேசத்துடன் பிரபாகரனும் (உண்மையின் தரிசனம் பாகம்-22)
திலீபன் உண்ணாவிரதத்தை ஆரம்பித்து 8 வது நாள், இலங்கைக்கான இந்திய தூதுவர் ஜே.என்.தீட்ஷித் யாழ்ப்பாணம் வருகை தந்திருந்தார். திலீபனின் கோரிக்கைகள் பற்றிய தமது இறுதி முடிவை அறிவிப்பதற்காக அவர் யாழ்ப்பாணம் வருவதாகவும், திலீபனுக்கு சாதகமான முடிவையே அவர் வெளியிடுவார் என்றும் உள்ளுர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
திலீபனின் உண்ணா விரதத்தை முடித்துவைக்கும் நல்ல செய்தியையே இந்தியத் தூதுவர் அன்றைய தினம் கொண்டு வருவதாக தமிழ் மக்கள் பேசிக்கொண்டார்கள். ஆர்வத்துடன் காத்திருக்கவும் தலைப்பட்டார்கள்.
22.09.1987 அன்று பலாலி விமான நிலையத்தில் வந்திறங்கிய தீட்ஷித்தை புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் அவர்களும், அன்டன் பாலசிங்கமும் சென்று சந்தித்தார்கள்.
யாழ்ப்பாண மக்கள் நினைத்தது போன்று இந்தியத் தூதுவருடனான புலிகளின் சந்திப்பு ஒன்றும் சுமுகமான ஒன்றாக அமைந்திருக்கவில்லை.
தன்னைச் சந்திக்க வந்த புலிகளின் தலைவர்களுடன், இந்தியத் தூதுவர் மிகவும் ஆணவத்துடன் நடந்துகொண்டார். புலிகளை மிகவும் கடுமையாக விமர்சிக்கவும் தலைப்பட்டார்.
அன்றைய சந்திப்பின் போது, இந்தியத் தூதுவர் தீட்ஷித் மட்டும் திலீபன் மீது ஓரளவு அனுதாபம் கொண்டு செயற்பட்டிருந்தால், ஈழத்தமிழர் பிரச்சனையில் இந்தியாவின் பங்கு நிச்சயம் வேறொரு வடிவம் பெற்றிருக்கும்.
இந்தியாவிற்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையில் தீராத பகைக்கு வித்திட்டவர் என்று பின்னாட்களில் இந்தியப்படை அதிகாரிகளாலேயே விமர்சிக்கப்பட்ட தீட்ஷித், அன்று நடந்துகொண்ட விதம் புலிகளின் தலைவர் பிரபாகரனை மிகவும் ஆத்திரப்பட வைத்தது.
நிராஜ் டேவிட் nirajdavid@bluewin.ch

உண்மையின் தரிசனம்11

Geen opmerkingen:

Een reactie posten