கற்றுக் கொள்ளவேண்டுமேன்பதையும் உபதேசிக்கிறார்.இவர் சுவிஸ் நாட்டில் பாதுகாப்பாக இருக்கின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
போருக்குப்பயந்து ஆரம்பத்திலோடியவர்களும் இன்று வீரம் பேசும் அந்நிய நாட்டில் வாழ்வுரிமை பெற்ற பெற்றவர்களில் இவரும் ஒருவரா என்பதுதான் தெளிவில்லை!! பக்கசார்பு ,இஸ்ரேலிடம் ஆலோசனை பெறும் நிராஜ் டேவிட்
உதாரணம்:ஆணவத்துடன் தீட்சித்தும் ஆவேசத்துடன் பிரபாகரனும் (உண்மையின் தரிசனம் பாகம்-22)
திலீபன் உண்ணாவிரதத்தை ஆரம்பித்து 8 வது நாள், இலங்கைக்கான இந்திய தூதுவர் ஜே.என்.தீட்ஷித் யாழ்ப்பாணம் வருகை தந்திருந்தார். திலீபனின் கோரிக்கைகள் பற்றிய தமது இறுதி முடிவை அறிவிப்பதற்காக அவர் யாழ்ப்பாணம் வருவதாகவும், திலீபனுக்கு சாதகமான முடிவையே அவர் வெளியிடுவார் என்றும் உள்ளுர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. திலீபனின் உண்ணா விரதத்தை முடித்துவைக்கும் நல்ல செய்தியையே இந்தியத் தூதுவர் அன்றைய தினம் கொண்டு வருவதாக தமிழ் மக்கள் பேசிக்கொண்டார்கள். ஆர்வத்துடன் காத்திருக்கவும் தலைப்பட்டார்கள்.
22.09.1987 அன்று பலாலி விமான நிலையத்தில் வந்திறங்கிய தீட்ஷித்தை புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் அவர்களும், அன்டன் பாலசிங்கமும் சென்று சந்தித்தார்கள்.
யாழ்ப்பாண மக்கள் நினைத்தது போன்று இந்தியத் தூதுவருடனான புலிகளின் சந்திப்பு ஒன்றும் சுமுகமான ஒன்றாக அமைந்திருக்கவில்லை.
தன்னைச் சந்திக்க வந்த புலிகளின் தலைவர்களுடன், இந்தியத் தூதுவர் மிகவும் ஆணவத்துடன் நடந்துகொண்டார். புலிகளை மிகவும் கடுமையாக விமர்சிக்கவும் தலைப்பட்டார்.
அன்றைய சந்திப்பின் போது, இந்தியத் தூதுவர் தீட்ஷித் மட்டும் திலீபன் மீது ஓரளவு அனுதாபம் கொண்டு செயற்பட்டிருந்தால், ஈழத்தமிழர் பிரச்சனையில் இந்தியாவின் பங்கு நிச்சயம் வேறொரு வடிவம் பெற்றிருக்கும்.
இந்தியாவிற்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையில் தீராத பகைக்கு வித்திட்டவர் என்று பின்னாட்களில் இந்தியப்படை அதிகாரிகளாலேயே விமர்சிக்கப்பட்ட தீட்ஷித், அன்று நடந்துகொண்ட விதம் புலிகளின் தலைவர் பிரபாகரனை மிகவும் ஆத்திரப்பட வைத்தது.
நிராஜ் டேவிட் nirajdavid@bluewin.ch
ஆணவத்துடன் தீட்சித்தும் ஆவேசத்துடன் பிரபாகரனும் (உண்மையின் தரிசனம் பாகம்-22)
Geen opmerkingen:
Een reactie posten