தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 24 maart 2011

ஈழத் தமிழர்கள் இரக்கமற்ற வகையில் கொத்துக் கொத்தாகக் கொன்று குவிக்கப்பட்ட காலத்தில் ஜப்பான் மனித நாகரியத்துடன் நடந்து கொள்ளவில்லை

ஜப்பானில் ஏற்பட்ட பூகம்பமும், அதனைத் தொடர்ந்து உருவான ஆழிப் பேரலையும் ஜப்பானிய மக்களுக்குப் பெரும் அவலத்தைக் கொடுத்துள்ளன. இரண்டாவது உலகப் போருக்குப் பின்னர் ஜப்பான் எதிர்கொண்ட மிகப் பெரும் நெருக்கடி இது என ஜப்பானியப் பிரதமர் நஓற்றா கான் தெரிவித்ததிலிருந்து அழிவுகளின் அவலத்தைப் புரிந்து கொள்ளலாம்.

ஜப்பானிய மக்களின் துயரத்தில் நாமும் கலந்துகொண்டு, அவர்களுக்கு ஆறுதலும், தேறுதலும் வழங்க வேண்டியது ஒவ்வொரு மனிதரதும் கடமையாகவே உள்ளது. ஈழத் தமிழர்களும் தம்மாலான உதவிகளை வழங்கி ஜப்பானிய மக்களது நல்லெண்ணத்தையும், புரிந்துணர்வையும் பெற்றுக்கொள்வது அவசியம்.

ஆயினும், தமிழீழ மக்களது அழிவுகளிலும், அவலங்களிலும் ஜப்பான் வகித்த பாத்திரத்தை நாம் மறந்துவிட முடியாதவர்களாகவும் உள்ளோம். இறுதி யுத்த கால அழிவுகளைத் தடுத்து நிறுத்தும் வல்லமை ஜப்பானுக்கும் இருந்தது. ஈழத் தமிழர்கள் இரக்கமற்ற வகையில் கொத்துக் கொத்தாகக் கொன்று குவிக்கப்பட்ட காலத்தில் ஜப்பான் மனித நாகரியத்துடன் நடந்து கொள்ளவில்லை என்ற வேதனை ஒவ்வொரு ஈழத் தமிழனது நினைவையும் விட்டகல மறுக்கின்றது. ஆழிப் பெரும் துயரின்போது ஆதரவு வழங்கிய ஜப்பான், இறுதிப் போரின் காலத்தில் மௌனமாக இருந்து ஒரு இன அழிப்பு யுத்தத்தைத் தடுத்து நிறுத்தத் தவறியது என்பதை யாரும் மறுத்துக் கூற முடியாது. முள்ளிவாய்க்காலில் அழிக்கப்பட்ட ஆன்மாக்களுக்கும், அடக்கப்பட்ட தமிழர்களுக்கும் இது ஆண்டவன் வழங்கிய தண்டனை என்ற திருப்தியை வழங்கியிருக்கக் கூடும். இப்போது ஜப்பான் என்றால், எப்போது இந்தியா? என்ற எதிர்பார்ப்பையும் அவர்களுக்கு வழங்கியிருக்கும்.

சிங்கள தேசத்தைப் பொறுத்தவரை, பெரும் கொடையாளி நாடாக இருந்த ஜப்பானில் ஏற்பட்ட பேரழிவுகள் அதிர்ச்சிகரமானது. சிங்கள தேசத்திற்கு வழங்குவதாக ஒப்புக்கொண்ட நிதிகள் இன்னமும் சில காலத்திற்கு ஜப்பானால் கொடுக்க முடியாமல் போகலாம் என்பதால், ஜப்பானின் பேரழிவு சிங்கள அரசுக்குப் பெரும் பொருளாதார நெருக்கடியை உருவாக்கும் என்று நம்பலாம். வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு, உள்ளுர் விளை பொருட்களும் அழிவுக்குள்ளான நிலையில், ஜப்பானின் நிதி உதவிக்கும் வந்து சேர்ந்துள்ள ஆபத்து, சிங்கள தேசத்தை ஆட்டிப் படைக்கப் போகின்றது.

சிங்கள தேசத்தின் பொருளாதாரத் தாழ்வு நிலையைச் சாதகமாக்கிக்கொண்டு, இந்தியாவும் சீனாவும் இன்னமும் ஊன்றிக் கால்பதிக்கும் நில உருவாகும். அது, அழிவுகளுக்குள் வாழ எத்தனிக்கும் தமிழர்களை விடவும், சிங்கள மக்களுக்கு ஆபத்தும், அச்சுறுத்தலும் நிறைந்த கள நிலையை உருவாக்கப் போகின்றது. எனவே, புலம்பெயர் தமிழர்கள் இந்த சந்தர்ப்பத்தை விவேகமாகக் கையாள்வதன் மூலம் தமிழீழம் நோக்கிய பாதையை விரைவு படுத்தலாம்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் வெறும் அறிக்கைப் போரை நிறுத்திவிட்டு, ஆக்கபூர்வமான நகர்வுகளை மேற்கொள்ள வேண்டும். புலம்பெயர் தமிழர்களை குழுக்களாக்கி உடைக்கும் கட்சி அரசியலிலிருந்து விடுபட்டு, அனைத்துத் தமிழர்களுக்குமான ஜனநாயக அமைப்பாக, புலம்பெயர் தமிழர்களை ஒன்றிணைப்பதில்தான் தமிழீழ மக்களின் அடுத்த கட்ட வெற்றி தங்கியுள்ளது.

- கரிகாலன்
22 Mar 2011
 
 நொந்துபோயிருக்கையில் பழைய பிழைகளை சுட்டிக்காட்டுதல் அழகல்ல!!அதுவும் தமிழன் அப்படி செய்வது "வெந்த புண்ணில் வேலைப்பாச்சுதல்"என்ற பழமொழி சொன்ன முன்னோருக்கு செய்யும் துரோகம்!!

dinsdag 22 maart 2011

அமெரிக்கா காப்பாற்றும் என நம்பிய நடேசன்! சிரேஷ்ட ஊடகவியலாளர் வெளியிடும் அதிரடித் தகவல்கள்

இலங்கையின் வடபகுதியில் இடம்பெற்ற யுத்தத்தின் கடைசிக் காலகட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் பத்திரமாக வெளியேற்றப்படுவார்கள் என்று அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் உறுதியளித்திருந்ததாக அமெரிக்காவில் நிலைகொண்டிருந்த முன்னாள் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர் ஒருவர் தெரிவித்திருந்தார்.

அவர் இது பற்றி தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் நடேசனிடம் குறிப்பிட்டதாகவும், நடேசன் இது தொடர்பாக தன்னுடன் ஆலோசனை நடத்தியதாகவும் சிரேஷ்ட ஊடகவியலாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவதானமாகச் செயற்படுமாறு தான் நடேசனை அறிவுறுத்தியதாகவும் அந்த ஊடகவியலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமன்றி தனது பாதுகாப்புக்கு உத்தரவாதமளிக்கப்படும் பட்சத்தில் எந்த ஒரு சர்வதேச விசாரணையிலும் இது குறித்து சத்தியக்கடதாசி ஒன்றை சமர்ப்பிக்கவும் தயார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

2007 முதல் 2009 வரையான காலப்பகுதியில் அமெரிக்கப் பாதுகாப்புத் திணைக்களத்தில் ஆசிய பசுபிக் விவகாரங்களுக்குப் பொறுப்பான பேராசிரியர் ஜேம்ஸ் கிளாட்டின் சிந்தனையாளர் வட்டத்தில் இணைந்து பணியாற்றியவரே இந்த முன்னாள் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர் என்றும் நடேசன் தன்னிடம் கூறியதாக இந்த ஊடகவியலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஜோன் லீ என்டர்ஸன் என்பவர் பேராசிரியர் ஜேம்ஸ் கிளாட்டை இலங்கையின் நெருங்கிய நண்பர் என்று அண்மையில் நிஙுயோர்க் டைம்ஸ் பத்திரிகையில் எழுதியுள்ள ஒரு கட்டுரையில் தெரிவித்துள்ளார். மே மாதம் 16ம் திகதி நோர்வேயில் உள்ள ஒரு பல்கலைக்கழகப் பேராசிரியரோடு நடேசன் தொடர்பு கொண்டுள்ளார்.

இந்த வெளியேற்றத் திட்டம் பற்றி அவரிடம் விசாரித்துள்ளார். தங்களைக் காப்பாற்ற கப்பல் ஏதும் வருகின்றதா என்றும் வினவியுள்ளார்.

பதிலுக்கு அந்த நோர்வே பேராசிரியர் இலங்கை நேரப்படி நள்ளிரவில் கொழும்பிலுள்ள நோர்வேத் தூதரகத்தை தொடர்பு கொண்டுள்ளார். இத்தகைய ஏற்பாடுகள் பற்றி தங்களுக்கு எதுவும் தெரியாது என்று இவருக்கு கொழும்பிலுள்ள பதில் தூதுவர் தெரிவித்துள்ளார்.

பின்னர் இது பற்றி நோர்வே தூதுவரின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. அவர் அது குறித்து கொழும்பில் இருந்த அப்போதைய அமெரிக்கத் தூதுவர் ரொபர்ட் ஓ பிளேக்கை தொடர்பு கொண்டுள்ளார். அதன் பிறகே இவ்வாறான திட்டங்கள் எதுவும் இல்லை என்பது ஊர்ஜிதமாகியுள்ளது.

நடேசனால் குறிப்பிடப்பட்டுள்ள முன்னாள்தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர் அண்மையில் இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ளார்.

அரசியல் கட்சியொன்றை தொடங்குவது சம்பந்தமாக இவர் இந்திய பாதுகாப்பு வட்டாரங்களுடன் கலந்துரையாடியுள்ளார், என்று கொழும்பு வட்டாரங்களில் இருந்து தெரிய வந்துள்ளது
21 Mar 2011

woensdag 16 maart 2011

பிரான்ஸில் இலங்கை தமிழர்கள் அதிகமாக வாழும் பரிஸ் புறநகரப்பகுதியான லாகூர்நோவில் தமிழ் குழுக்களுக்கிடையில் மோதலில்

(வீடியோ இணைப்பு)

எங்கு சென்றாலும் இவர்கள் திருந்தப்போவதுமில்லை,
ஒன்றுபடப்போவதுமில்லை,இவர்களிடம் நாட்டை கொடுத்தால் தமிழனின் கதி!!

vrijdag 4 maart 2011

அதிசய புலிக் குழந்தை! (காணொளி, பட இணைப்பு)

இன்று உலகில் நாம் கற்பனை செய்து பார்க்க முடியாத விடயங்களே நடைபெறுகின்றன. பாகிஸ்தானில் உள்ள கஷ்டபிரதேசமான கிலிஜிட்டில் 2010 ஆம் ஆண்டு பிறந்துள்ள இக்குழந்தையானது புலியினுடைய முகத்தோற்றத்தை கொண்டமைந்துள்ளது.

மற்றும் இந்த குழந்தையின் உடம்பில் சிவப்பு வரிகளும் காணப்படுகின்றன. மரபணுவில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவே இவ்வாறு பிறந்துள்ளது என டாக்டர்கள் தெரிவிக்கின்றனர்.

Harlequin-type Ichthyosis என்ற மிகவும் அரிதான தோல் நோயே இந்த குழந்தைக்கு ஏற்பட்டுள்ளது என குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள் தெரிவித்தனர்.

donderdag 17 februari 2011