தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 11 november 2010

பின்பு அந்த இரகசியத்தை எந்திரன் பெற்றுக் கொண்டது......

இதைப் பார்ப்பதாயின் 70 களில் இருந்து பார்க்கவேண்டும்... எமக்குத் தலமை தாங்கியவர்கள் உண்மையைப் பொய்யென்று  பொய்யை உண்மை என்றும் சொல்லும் சட்டத்தரணிக்ளே .இவர்களின் அரசியல் எடுபடவில்லை.

70  பது களில் முக்கிய தலைவர்கள் (கள்ளர்கள்) இடது சாரிகளிடம் தோத்தார்கள். ஜீ.ஜீ பொன்னம்பலம், அமிர்தலிங்கம் , அட்ங்காத் தமிழன்  சுந்தரலிங்கம் ..  இன்னும் பலர்.இடது சாரிகள் தமிழ் மக்கள் மத்தியிலும் , உழைக்கும் மக்கள் மத்தியிலும் நன்றாகக் கால் பதித்து விட்டார்கள்.

துரையப்பா போன்றவர்கள் யாழ்ப்பானத்தில் பெரும் அபிவிருத்தி செய்தார்கள் . எச்சாமம் புகினும் நிச்சாமக் கண்கள் நீறாகப் பூத்திருக்கும் என்று நிச்சாமப் போராட்டம் போன்ற விடுதலைப் போராட்டங்களை இடது சாரிகள் ஊக்குவித்தார்கள்.

அமிர்தலிங்கம் பாராளுமன்றத்தில் சொன்னார் நிச்சாமத்தில் குட்டி வியட்னாம் உருவாகி விட்டது என்று..

இடதுசாரிகள் மத்தியில் ஆயுதம் தரித்தவர்களும் இருந்தார்கள் .

இந்த நேரத்தில் தரப் படுத்தல் சட்டம் வந்தது....அந்தச் சட்டத்தால் தான் யாழ்ப்பாணம் தவிர்ந்த மற்றைய  தமிழ் மாவட்டங்களான , மன்னர், கிளிநொச்சி , வவுனியா , முல்லைத்தீவு , திரிகோண்மலை, மூதூர் , அம்பாறை , மட்டக்களப்பு போன்ற இடங்களில் இருந்தும் மலையகத்தில் இருந்தும் முதல் முதலாகத் தமிழர்கள் பல்கலைக் கழகம் சென்றார்கள் .

முதல் முதலாகத் தமிழர்கள் பல்கலைக் கழகம் சென்றார்கள் .

5% மாத்திரமே இனரீதியான தரப் படுத்தல். இதனால் யாழ்ப்பாண இளைஞர்கள் பாதிக்கப் பட்டார்கள் . ஏனைய இடத்துத் தமிழ் இளைஞர்கள் லாபம் அடைந்தார்கள் .

10 ம் வகுப்புச் சித்தியடையாதவனும் தான் தரப்படுத்தலால் பாதிக்கப் பட்டதாக நம்பும் படி தமிழ் தலைவர்கள் (கள்ளர்கள்) பிரச்சாரம் செய்தார்கள்.

இடது சாரிகளில் உள்ள சாதாரண எந்திரன்களை(ஆயுத இளைஞர்களை) முறியடிக்க இவர்களுக்கு- (தமிழ் பொய்சொல்லும் தலைவர்களுக்கு) இளைஞர்கள் தேவைப் பட்டார்கள்.நல்ல எந்திரனை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டார்கள்.

உருவாகிய எந்திரனில் இவர்களுக்குப் பிடித்தது மாவீரன் பிரபாகரனே. இவர்கள் துரையப்பாவைத் துரோகியென்று சொல்ல சுட்டு விட்டே வந்தான் அந்த எந்திரன்.இவர்கள் தங்கள் வீடுகளில் வைத்தே Recharge பண்ணினார்கள். யோகேஸ்வரன் காப்பி கொடுத்தது...

இடது சாரிகளை முறியடிக்கக் கள்ளர் எல்லோரும் வட்டுக் கொட்டையில் கூட்டுச் சேர்ந்தார்கள். அது தான் சாத்தியப் படாத தமிழீழப் பிரகடனம். அப்பொழுது இடதுசாரிகளி தலைவன் சண்முகதாசன் சுண்ணாகக் கூட்டத்தில்  கேட்டார் . எவ்வறு தமிழீழம் சாத்தியம் என்று .

அதற்கு அமிர்தலிங்கம் அது எல்லாம் இரகசியம் , வெளியில் சொல்ல முடியாது என்றார் .பின்பு அந்த இரக்சியத்தை எந்திரன் பெற்றுக் கொண்டது...

ஆரம்பத்தில் பல எந்திரன்களுக்குள் போட்டி இருந்தாலும் , கள்ளர்கள் வளர்த்த எந்திரன் தான் வென்றது...

எந்திரன்கள் நன்றாகதான் போய்க்கோன்டு இருதது .... அதன் பிழைகள் சாதாரண மக்களுக்கு விளங்கவில்லை.

CIA Istrael சிவப்புக் காட்டு வைக்கு மட்டும் சாதாரண மக்களை எமாற்றிச்சுது .. அதற்குப் பிறகு இந்தியாவுடன் முரண் பட்டிட்டுது.. எந்திரனுக்கு விளங்கவில்லை கரண்டை நிப்பாட்டுகிறது இந்தியா தான் என்று ...இதற்குப் பிறகு எல்லருக்கும் தெரியும் தானே ...

கடைசி நேரத்தில் சிவபுக்காட்டுக்கு புரோகிராம் பண்ணினதுகள் புலன் பெயர்ந்ததுகள் தான் மன்னிக்கவும் புலம்பெயர்ந்த தமிழர்தான். அது தான் அப்ப்டிப் போச்சுது....

பி.கு.
இப்பொழுது முகப்புத்தகத்தில் வியாபாரம் போற இரண்டு விடயங்கள் காதலைப் பற்றிக் கதைக்கிறதும் , துரோகிகளைப் பற்றிக் கதைக்கிறதும் தான். கள்ளர்கள் வழிவந்த நாங்கள் எப்படி உண்மையைக் கதைக்கலாம் . அந்த மாவீரனுக்கு என்ன நடந்த என்ற உண்மையைத் தன்னும் கதைபார்களா ?
ஒருவிரலால் துரோகியச் சுட்டிக்காட்டும் பொழுது மூன்றுவிரல்கள் எம்மைச் சுட்டிக் காட்டும் என்பதை மறப்போம்...துரோகிகள் உள்ளமட்டும தான் எங்கடை வியாபாரம் நன்றாகப் போகும்....


பத்மநாதன் நல்லையா

நான் இந்தியாவின் நண்பன்,நம் தமிழனே நம்மை கொன்று குவித்தான்.நாம் சிங்களவனிடம் ஏமாந்துவிட்டோம் என்று அன்றைய படித்த தலைவர்களில் இருந்து இன்றைய மேதகு வரை கூறிவிட்டார்கள்.ஆகவே ஏமாளிகளான எமக்கு எம்மைத்திருத்தி அறிவாளிகள் ஆக்குவதே இப்போதைக்கு சிறந்த வழி,அதைவிட்டு நண்பர்களையும் பலவான்களையும் எதிரிகளாக்கின் தமிழினமே அழிந்துவிடும்.நன்ம்மிடையே ஒரு அழகான முதுமொழியுண்டு"தனக்குப்பின்தான் தானமும் தர்மமும்",இந்திய பாதுகாப்பின் பின்தான் தமிழனுக்கு உதவி,கிடைத்ததை சரியான முறையில் பயன்படுத்துபவனே புத்திசாலி,நாங்கள்!???

ஈழ விடுதலைப் போரும், புலிகளின் தாக்கமும்-கை.அறிவழகனின் நீண்ட கட்டுக்கதையும் எனது குறுகிய பதிலும்!

வரலாற்றின் பாதையில் தமிழினம் என்கிற முந்தைய கட்டுரைக்கு எதிர்பார்த்ததைப் போலவே முதல் மூன்று பகுதிக்கு கணிசமான ஆதரவும், கடைசிப் பகுதிக்குக் கணிசமான எதிர்ப்பும் நண்பர்களிடம் இருந்து கிடைத்தது, புலிகளின் எல்லாவிதமான செயல்பாடுகளுக்கும் ஆதரவளிக்கும் மனநிலையிலோ அல்லது துதி பாடும் மனநிலையிலோ அந்தக் கட்டுரை எழுதப்படவில்லை, எல்லா நிலைகளிலும் புலிகளின் சில முரண்பாடுகளை எனது கட்டுரைகளில் நான் சுட்டிக் காட்டியே வந்திருக்கிறேன், மேலும் புலிகளின் இயக்கம் மிகப்பெரிய தோல்வியைச் சந்தித்த பிறகு என்றில்லாமல், புலிகள் மிகப்பெரிய வெற்றிகளை ஈட்டி வந்த காலகட்டங்களிலும் அவர்களின் சில குறிப்பிட்ட தவறுகளை நான் சுட்டிக் காட்டி எழுதி இருப்பதை தொடர்ச்சியாக எனது எழுத்துக்களைப் படிப்பவர்கள் அறிவார்கள் என்று நம்புகிறேன், இருப்பினும் கடந்த கட்டுரையில் நான் குறிப்பிட்ட புலிகள் இயக்கம் மற்றும் அதன் தலைமை குறித்த எனது கருத்துக்களில் இருந்து நான் பின் வங்கப் போவதில்லை, ஏனெனில் அத்தகைய ஒரு பின்வாங்களைத் தமிழர்களிடம் உருவாக்கி விடுவதற்கும், தமிழர்களை அவர்களின் தீவிரமான போராட்டங்களில் இருந்து வழுவ வைப்பதற்கும் சிங்களமும் சரி, இந்திய தேசியத்தின் ஆளுமைகளும் சரி பல்வேறு உளவியல் சிதைப்புத் திட்டங்களை வைத்திருக்கின்றன, இன்னமும் தொடர்ச்சியான ஒரு உளவியல் போரை நடத்தி தமிழ்த் தேசியச் சிந்தனைகளை அதன் அடித்தளத்தை அழிக்க நடக்கும் முயற்சியில் நான் சிக்கிக் கொள்வதை ஒரு போதும் விரும்பவில்லை. மாறாகப் புலிகள் இயக்கம் கடந்த முப்பது ஆண்டுகளுக்கு மேலாகக் கட்டி எழுப்பி இருக்கும் தனித்தமிழ் தேசியச் சிந்தனைகளின் மூலத்திலிருந்தே இழந்த பல்வேறு போராட வடிவங்களைத் திரும்பப் பெற முடியும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

புலிகளின் தீவிரமான போராட்ட காலங்களில் மட்டுமன்றி, சிங்களம் பெருவெற்றி பெற்றிருக்கும் இன்றைய காலகட்டம் வரை அவர்களை நோக்கிப் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் வைக்கப்பட்டிருக்கின்றன, அவற்றில் சில குற்றச்சாட்டுக்களுக்குப் பதில் அளிக்கவும், அந்தக் குற்றச்சாட்டுகளின் அடிநாதமாக விளங்கும் பேரினவாதம் மற்றும் முதலாளித்துவப் பொருளாதாரம் போன்றவற்றைத் தகர்க்கவும் தமிழர்களுக்குத் தேவை இருக்கிறது, அந்தத் தேவையின் இலக்கு நோக்கிய ஒரு பயணமாகவே இந்தக் கட்டுரையை நான் நோக்குகிறேன், இதைப் படிக்கும் அல்லது விமர்சனம் செய்யும் யாவரும் அதே நோக்கோடு இருக்க வேண்டும் என்கிற அவசியம் ஒரு போதும் இல்லை, மனிதர்களின் மனநிலையைப் போலவே பொதுவான பல முரண்பாடுகளை எல்லாக் கருத்தியலும் கொண்டிருக்கும் என்கிற அடிப்படையை நாம் உணரும் போது அது தெளிவாகும்.

இனி குற்றச்சாட்டுகளுக்கு வருவோம்:

குற்றச்சாட்டு ஒன்று:

புலிகள் எப்போதும் அமெரிக்க ஆதரவு மனநிலை கொண்டவர்கள் என்கிற ஒரு குற்றச்சாட்டு பல்வேறு சூழல்களில் அவ்வியக்கத்தின் மீது வைக்கப்படுகிறது.

இந்தக் குற்றச்சாட்டுக்குப் பதில் அளிக்க வேண்டுமென்றால் முதலில் நாம் அமெரிக்காவின் ஆசியக் கொள்கை மற்றும் ஏகாதிபத்தியச் சிந்தனைகளில் இருந்து துவங்க வேண்டும், அமெரிக்காவுக்கும் புலிகளுக்கும் அல்லது தமிழர்களுக்குமான தொடர்பு என்பது இந்திய தேசியத்தின் எழுச்சியை மையமாகக் கொண்டே இருந்து வந்திருக்கிறது, ஆசிய மண்டலத்தின் மனித வளம், இயற்கை வளம் மற்றும் நுகர்வுக்கான சந்தையைக் கைப்பற்றுவதும், ஆசிய நாடுகளின் மீது தனது மேலாதிக்கத்தை நிலை நிறுத்துவதும் அமெரிக்காவின் நீண்ட காலக் கனவு மட்டுமன்றி ஒரு நிலையான கொள்கையாகவும் இருந்து வருகிறது, உழைப்பைக் கொள்ளையிட்டுத் தனது மூலதனத்தைப் பெருக்கிக் கொள்ளும் வாய்ப்பாடு இத்தகைய ஒரு ஆசியக் கொள்கையில் தான் ஒளிந்து கிடக்கிறது என்பதை அமெரிக்கா நீண்ட காலமாக அறிந்து வைத்திருக்கிறது, அத்தகைய ஒரு கொள்கையை என்ன விலை கொடுத்தேனும் செயல்படுத்துவதற்கு அமெரிக்கா தொடர்ந்து முயற்சிகள் செய்து வருவதை உலக வரலாற்றைக் கூர்ந்து கவனிக்கும் யாரும் எளிதில் புரிந்து கொள்ள இயலும்.

ஆசிய மண்டலத்தை அமெரிக்கா முழுமையாகக் கைப்பற்றிக் கொள்வதற்கு சோவியத் யூனியன் ஒரு மிகப்பெரிய தடையாக நீண்ட காலம் இருந்தது, இந்தியாவில், நேருவின் காலத்தில் துவங்கி இந்திராவின் காலம் வரை இந்திய யூனியன் சோசலிசக் கொள்கைகளை ஓரளவு முன்னகர்த்தி வந்ததே சோவியத் யூனியனுடன் இந்தியா மிகுந்த இணக்கமாகவும், நட்புடனும் இருந்ததற்கான காரணம். சோவியத் யூனியன், அமெரிக்கக் கனவுகளுக்கு ஒரு மிகப்பெரிய மாற்றாகவும், முதலாளித்துவப் பொருளாதாரத்திற்கு சிம்ம சொப்பனமாகவும் இருந்து வந்தது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கைகளைக் கட்டிப் போட்டது மட்டுமன்றி ஆசிய மண்டலத்தின் மிகப்பெரிய நாடுகளைத் தன கைப்பிடிக்குள் கொண்டு வர இயலாமல் தடுக்கவும் செய்தது, பிறகு நிகழ்ந்த அரசியல் மாற்றங்கள், சோவியத் யூனியனின் வீழ்ச்சி போன்ற காரணிகள் அமெரிக்காவின் ஆசியக் கைப்பற்றல் கனவுகளை மீண்டும் துளிர் விடச் செய்தது. சோவியத் யூனியனின் வீழ்ச்சி உலக முதலாளித்துவத்தின் வெற்றியாக மட்டுமன்றிப் பொது உடைமைத் தத்துவத்தை ஏற்று நடைமுறைப்படுத்திய நாடுகளுக்கான பாடமாகவும் மாறியது.

அமெரிக்காவின் சோவியத் யூனியனுக்கு எதிரான தொடர்ச்சியான எல்லைப்புறத் தீவிரவாத ஆதரிப்பும், சோவியத் யூனியனின் மூலதன இழப்பும் அதன் பொது உடைமை சார்ந்த பொருளாதாரத்தை முடக்கியது மட்டுமன்றி, கூட்டுப் பண்ணை விவசாய முறைகளில் தொடர்ச்சியாக நடந்து வந்த குழப்பமான பகிர்வுகளும் அதன் வீழ்ச்சிக்கு வழி அமைத்தது, ஒரு புறம் வெளிநாடுகளில் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட போர்த் தளவாடக் கருவிகள் அதன் பொருளாதாரச் சூழலை நிலை குலைய வைத்தது என்றால் இன்னொரு புறம் தனி மனித உழைப்புக்கு நிகரான பொருள் மதிப்பீட்டில் சோவியத் யூனியனின் கூட்டுப் பண்ணை விவசாயத் திட்டம் குளறுபடி செய்தது, உழைப்புக்கு நிகரான மதிப்பீடு செய்யப்பட வேண்டிய பொருள் பகிர்வு ஒட்டுமொத்த விளைச்சலின் அடிப்படையில் பகிர்வு செய்யப்பட்ட போது தகுதியற்றவர்கள் பயனடையும் மறைமுக முதலாளித்துவப் பொருளாதாரம் கூட்டுப் பண்ணைகளுக்குள் எட்டிப் பார்த்தது, கடும் உழைப்பை வழங்கிய உழைக்கும் மக்கள் சோர்வு நிலையை எட்டினார்கள். தொடர் எல்லைப்புறக் குழப்பங்களால் பாதுகாப்பு குறித்த அதிக கவனம் செலுத்தும் நிலைக்கும், போர்க்கருவிகளை கண்மூடித்தனமாக இறக்குமதி செய்யும் நிலைக்கும் சோவியத் யூனியனின் அரசுகள் அழுத்தம் பெற்றன, அந்த நேரத்தில் போர்க்கருவிகள் உற்பத்தியில் தனது கவனத்தைக் குவிக்க வேண்டிய சோவியத் யூனியன் அதை விடுத்து பல்வேறு முதலாளித்துவ நாடுகளிடம் இருந்து இறக்குமதி செய்தது அதன் பணவீக்க விகிதத்தை உயர்வடையச் செய்தது, தொடர்ந்து வீழ்ச்சியடைந்த பொருளாதாரச் சூழலைச் சமயம் பார்த்துக் காத்திருந்த அமெரிக்க முதலாளித்துவக் கனவுகள் சோவியத் யூனியனின் கட்டமைப்புக்குள் கொல்லைப் புறமாக நுழையத் துவங்கியது, தனது நீண்ட காலப் பனிப் போரில் அமெரிக்கா வெற்றி அடையும் வாய்ப்பு எளிதில் கிடைத்தது.

தொடர்ந்து நிகழ்ந்த மாற்றங்கள் ஆசிய நாடுகளில் பலவற்றை சோவியத் யூனியனிடம் இருந்து தனிமைப்படுத்தி முதலாளித்துவத்தின் தலைமைப் பீடமான அமெரிக்காவின் காலடிகளை நோக்கிப் பயணம் செய்ய வைத்தது. ஆசிய மண்டலத்தின் மிகப்பெரிய நாடுகளான சீனாவையும், இந்தியாவையும் எப்போதும் குழப்பத்தில் ஆழ்த்த அமெரிக்க அரசுகள் தீவிர கவனம் செலுத்தத் துவங்கின, இந்திரா காந்தியின் மறைவுக்குப் பின்னர் நிலவிய அரசியல் குழப்ப நிலையும், ராஜீவ் காந்தியின் திறந்த பொருளாதாரச் சிந்தனைகளும், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கனவுகளுக்கு இந்தியாவில் பாதை அமைத்துக் கொடுத்தன, அரசியல் அறிவும், தெளிந்த கொள்கைகளும் இல்லாத ராஜீவ் காந்தி வெளியுறவுக் கொள்கைகள் மற்றும் பொருளாதாரக் கொள்கைகளில் முன்பிருந்த சோவியத் யூனியன் சார்பு நிலைப்பாட்டில் இருந்து முற்றிலும் ஒரு வேறுபட்ட பாதையில் பயணிக்கத் துவங்கினார், அந்தப் பாதை உலக முதலாளித்துவக் கனவுகளின் பாதையாக இருந்தது.

சீனாவில் நிகழ்ந்த மாணவர் புரட்சியின் பின்னணியில் அமெரிக்க உளவுத் துறையின் கணிசமான பங்காற்றலும் இருந்தது நினைவு கூறத்தக்கது. சீன மாணவர்களிடம் மறைமுகமாக அறிமுகம் செய்யப்பட்ட முழுமையான சுதந்திர மனநிலை சீனக் கம்யூனிசத்தின் அடிப்படையை ஆட்டம் காண வைக்கும் அளவுக்குத் தீவிரத் தன்மையோடு இருந்தது.தன்னிச்சையான நுகர்வுக் கலாச்சாரம், முறைகளற்ற, வரம்பில்லாத பாலுறவுச் சுதந்திரம் போன்றவற்றை கடுமையான ஒழுங்குடன் நெறிமுறைப்படுத்தப்பட்ட சீனாவின் கம்யூனிசச் சார்பு மனநிலை எதிர்கொண்டு தாக்கமடைந்ததே சீன மாணவர் போராட்டத்தின் அடிப்படைக் காரணமாக இருந்தது, சீனம் உறுதி, கடும் இழப்பு மற்றும் மாற்றி அமைக்கப்பட்ட கொள்கைகள் மூலம் தனது   அரசியல் நிலைத்தன்மையை உறுதி செய்து கொண்டது, சோவியத் யூனியனில் நிகழ்ந்த தவறுகளைத் தன்னளவில் மட்டுப்படுத்தி முழுமையான நுகர்வுக் கலாச்சாரத்தில் இருந்து முழுமையான உற்பத்தி மனநிலைக்கு தனது பொருளாதாரக் கொள்கைகளை வடிவமைத்துக் கொண்டது. சந்தைப்படுத்தலில் தனது தொழில் நுட்ப அறிவையும், மனித வளத்தையும் பயன்படுத்தி மூலதனத்தைப் பெருக்கும் வழிகளில் சீனா தொடர்ந்து கவனம் செலுத்தியது, சீனாவின் பல்வேறு நிலைப்பாடுகள் முரண்பட்டதாக இருப்பினும் நுகர்வு மனநிலையில் இருந்து விழிப்படைந்து உற்பத்தி மனநிலைக்கு தனது மக்களை அது வழிநடத்தியது.

சீனாவை முழுமையாக நெருங்க இயலாத அமெரிக்காவின் ஏகாதிபத்தியப் பயணம் இந்திய மனித வளத்தையும், அதன் அடித்தட்டு மக்களின் உழைப்பையும் கொள்ளையடிக்கும் வெகு நுட்பமான ஒரு உளவியல் போரை திறந்த சந்தைப் பொருளாதாரம் என்ற பெயரில் துவக்கியது. அமெரிக்க நிறுவனங்களில் அல்லது முதலாளித்துவச் சந்தைப் பொருளாதாரத்தில் ஊறித் திளைத்திருந்த பல்வேறு சுரண்டல் வர்க்க அறிவாளிகள் இந்திய அரசியல் மையங்களாகக் குடியேற்றப்பட்டார்கள், (இதில் இன்றைய பிரதமர் மன்மோகன் சிங்கில் இருந்து திட்டக் குழுத் தலைவர் அலுவாலியா வரையில் அடக்கம்).இந்திய யூனியனில் காணக் கிடைத்த பல்வேறு தேசிய முரண்பாடுகள் இந்த நேரத்தில் அமெரிக்காவின் துருப்புச் சீட்டுக்களாயின. காஷ்மீர் தேசிய இன எழுச்சியும், தமிழ் ஈழ விடுதலைப் போரும் அமெரிக்காவின் கருவிகளாகியது. தொடர்ந்து பாகிஸ்தான் உடனான நட்பு நிலைப்பாடும்,மக்களாட்சி அல்லாத ராணுவ ஆட்சியை அங்கு நிலையாக வைத்திருக்கும் திட்டமும் இந்திய எல்லைப் புறத்தை எப்போதும் கலவரத்தில் வைத்திருக்கும் என்பதில் தெளிவாக இருந்தது அமெரிக்கா. பாலுக்கும் காவல் பூனைக்கும் நண்பன் என்கிற அமெரிக்காவின் காஷ்மீர் நிலைப்பாடு குறித்து இந்திய அரசுகள் கவனம் செலுத்தவில்லை, மாறாக இந்திய தேசியத்தில் நடக்கும் சுரண்டல் மற்றும் பெரிய அளவிலான ஊழல்களை மறைக்கும் ஒரு கருவியாக பாகிஸ்தான் இந்திய ஆட்சியாளர்களுக்கு மாறிப் போனது. பாகிஸ்தானில் இருந்து செயல்படும் பல்வேறு அமைப்புகளுக்கு ஆயுதப் பயிற்சியும் கொள்கை ரீதியிலான மறைமுக ஆதரவும் அளிக்கும் உளவுத் திறனை அமெரிக்கா வளர்த்து எடுத்தது.

இந்திய தேசியம் வலுப்பெற்று வளர்ந்து ஒரு மிகப் பெரிய ஆற்றலாக உருவெடுப்பது சீனா தவிர்த்த அடுத்த மிகப் பெரிய சந்தையும் தன் கையை விட்டு நழுவிப் போகும் வாய்ப்பாக இருக்கக் கூடாது என்று அமெரிக்கா பல்வேறு திட்டங்களைத் தீட்டியது. மூன்றாம் உலக நாடுகளில் பல உலக வங்கியின் பிடியில் இருந்து வெளியேறித் தங்களுக்கான அடிப்படைப் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் வழியில் பயணம் செய்த போது இந்தியாவும் இன்னும் பல ஆசிய நாடுகளும் உலக வங்கியின் முழுமையான பிடிக்கும் கொண்டு வரப்பட்டார்கள், உலக வங்கி என்பதும், ஐக்கிய நாடுகள் அவை என்பதும் முதலாளித்துவ நாடுகளின் அதிகாரப்பூர்வ அமைப்புகள் என்பதை நாம் மறந்து போய் நீண்ட காலமாயிற்று. திறந்த சந்தைப் பொருளாதாரம் என்ற பெயரில் இந்தியப் பொருளாதாரத்தைக் கொள்ளையடிக்கத் துவங்கிய அமெரிக்கா மெல்ல மெல்ல இந்திய அரசுகளின் மேலாண்மை அதிகாரியாக உருமாற்றம் பெற்றது. (கடைசியாக இந்திய விவசாயியின் கைகளில் இருந்த பால் உற்பத்தி மற்றும் விற்பனை கூட சமீப அமெரிக்க அதிபரின் வருகைக்குப் பின்னர் அமைதியாகக் கைமாறிப் போனதை கைதட்டி வரவேற்றுக் கொண்டிருந்தார்கள் நமது பாராளுமன்ற உறுப்பினர்கள்.)

இலங்கைத் தீவில் காணப்படும் முரண்பாடுகளைத் தொடர்ந்து கையாள்வதில் இரட்டிப்புப் பயன் இருப்பதை அமெரிக்கா உணரத் துவங்கியது. விடுதலைப் புலிகளுக்கு ஆதரவளிப்பதும், அவர்களின் விடுதலைப் போரை மறைமுகமாக ஆதரிப்பதும் ஆசிய எல்லைகளுக்குள் தனது வலிமையை அதிகரிக்கச் செய்யும் என்று அமெரிக்கா நம்பியது. தமிழ்நாட்டின் உணர்வுகளோடு கலந்து கிடக்கும் இந்தப் போராட்டம் இந்திய தேசியத்தின் வலிமையைக் குலைக்க வழி வகை செய்யும் என்று அமெரிக்கா உணர்ந்திருந்தது. இப்படியான குழப்பநிலை, ஒரு நிலைத்தன்மையற்ற நெகிழ்வுடன் கூடிய பொருளாதார வல்லமையை இந்தியா மற்றும் இலங்கைக்குள் எப்போதும் வைத்திருக்க அமெரிக்காவின் நாட்டாமைகளுக்கு உதவி செய்தது. அதுமட்டுமன்றி இந்தியாவின் நிலைத்தன்மைக்கு சிக்கலை உண்டாக்கி நிகழும் அரசியல் குழப்பங்களின் மூலம் ஆசிய மண்டலத்தில் ஆதிக்கம் செலுத்தும் தனது மறைமுகத் திட்டங்களின் ஒரு பகுதியாக புலிகளை அமெரிக்கா ஒரு கால கட்டத்தில் ஆதரிக்கத் துவங்கியது. இருப்பினும் புலிகளின் அரசியல் ஆலோசகரும், அமைப்பைப் பல காலம் வழி நடத்தியவருமான ஆண்டன் பாலசிங்கம் இந்த மறைமுக அமெரிக்கத் திட்டத்தை எப்போதும் முறியடிப்பதில் கைதேர்ந்தவராக இருந்தார். அன்றைய காலகட்டத்தில் தனது இடது சாரிச் சிந்தனைகளை வைத்தே அவர் இயக்கத்தின் செயல்பாடுகளை முன்னகர்த்தினார். இடதுசாரி அரசியல் சார்புடைய ஒரு அரசியல் நெறிமுறையையே கோட்பாட்டு ரீதியாகக் கொண்டிருந்தார்கள் என்று நம்புவதற்கு ஆண்டன் பாலசிங்கத்தின் பல பதிவுகள் நமக்கு உதவி செய்யும், அவரது விடுதலை என்கிற கட்டுரைத் தொகுப்பில் இதற்கான சான்றுகள் இருக்கின்றன. ஆகவே அமெரிக்காவிடம் இருந்து கிடைக்கப்பெற்ற மறைமுக ஆதரவை புலிகள் தங்களின் பாதுகாப்புச் சூழலை வலிமைப்படுத்தவும், கொள்கைகளை நடைமுறைப்படுத்தவும் பயன்படுத்திக் கொண்டார்களே அன்றி ஒரு போதும் வெளிப்படையான அமெரிக்க ஆதரவு நிலையை அவர்கள் கொண்டிருக்கவில்லை.

அமெரிக்காவால் இரை கொடுத்து வளர்க்கப்பட்ட நச்சுப் பாம்புகளின் வரிசையில் புலிகள் எப்போதும் இடம் பெறவில்லை, மாறாகத் தன்னால் வளர்க்கப்பட்ட பல்வேறு ஆயுதப் போர் புரியும் இயக்கங்கள் தனக்கு எதிராகப் போனதை இரட்டைக் கோபுரத் தகர்ப்பின் போது புரிந்து கொண்ட அமெரிக்கா உடனடியாகத் தனது பாதுகாப்புக் கருதி புலிகளின் மீதான தடைகளைக் கடுமையாக்கியது. அதன் தீவிரவாத எதிர்ப்பு முழக்கத்தில் புலி ஆதரவும் மங்கத் துவங்கியது. மேலும் அமெரிக்காவின் சூழ்ச்சிகளுக்குப் பகடையாக மாறக் கிடைத்த எந்த ஒரு வாய்ப்பையும் புலிகள் பயன்படுத்தவில்லை, அவர்கள் தங்களின் இலக்கான "தனித் தமிழ் ஈழம்" என்ற நிலைப்பாட்டில் இருந்து வழுவாமல் இருந்து வந்ததையே இந்தக் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலாக என்னால் வழங்க முடியும். புலிகள் ஒருபோதும் அமெரிக்க ஆதரவாளர்களோ இல்லை எதிர்ப்பாளர்களோ இல்லை, ஒரு தேசிய இன விடுதலைப் போருக்கு என்ன தேவைகள் இருந்ததோ அவற்றை நிறைவு செய்து கொள்ளும் பணிகளையே புலிகள் எப்போதும் செய்து வந்தார்கள். அது அவர்களைப் பொறுத்த வரையிலும் குறிப்பிட்ட காலம் வரை சரியானதாகவும்  இருந்தது.

இரண்டாவது குற்றச்சாட்டு:

இடது சாரிச் சிந்தனையுள்ள மற்றும் தன்னிச்சையான பலவேறு வடக்கு கிழக்கு இலங்கையின் அரசியல் தலைவர்களைப் புலிகள் கொன்றொழித்தார்கள்.

இந்தக் குற்றச்சாட்டு எல்லா நேரங்களிலும் புலிகளின் மீது வைக்கப்படும் பொதுவான ஒரு குற்றச்சாட்டு, அவர்களை இலங்கை தவிர்த்து வேறு நாடுகளின் வெகுமக்களிடம் இருந்து விலகச் செய்த ஒன்றுமாகும், பல்வேறு காலகட்டங்களில் புலிகள் இத்தகைய கொலை நிகழ்வில் ஈடுபட்டதை வெளிப்படையான நேர்மையுடன் ஒப்புக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை, மாற்றுச் சிந்தனை கொண்ட மனிதர்களை அழித்தொழிப்பதே தீர்வு என்கிற நிலைப்பாடு எல்லா நிலைகளிலும் தவிர்க்கப்பட வேண்டியதும், எதிர்க்கப்பட வேண்டியதும் ஆகிறது. ஆனால், அறுபது ஆண்டுகளுக்கு மேலாக ஒரு கடும் போராட்ட வரலாற்றைத் தன்னகத்தே கொண்ட தமிழ்த் தேசிய விடுதலைப் போரின் தகவமைப்புகளில் இத்தகைய நிகழ்வுகளை நாம் வேறு சில கோணங்களிலும் ஆய்வு செய்ய வேண்டியிருக்கிறது.

புலிகளால் படுகொலை செய்யப்பட்டவர்கள் அந்தக் காலகட்டத்தில் ஒன்று சிங்களப் பேரினவாதத்திற்கு அடிவருடிகளாக இருந்தார்கள், அல்லது விடுதலைப் போரின் ஏதோ ஒரு முன்னெடுப்புக்குத் தடையாக இருந்தார்கள் என்பதை அறிய முடிகிறது. இப்படியான ஒரு சூழலில் திறந்த விவாதங்களை நோக்கியோ, அரவணைத்தலை நோக்கியோ அவர்கள் பயணம் செய்யாதது ஒட்டு மொத்த இயக்கத்தின் பின்னடைவாகப் பிந்தைய காலங்களில் மாறிப் போனது என்பதை மறுக்கவோ மறைக்கவோ விரும்புவது தவறான விளைவுகளையே உண்டாக்கும். மலையகத் தமிழர்களின் சமூக, அரசியல் மற்றும் பொருளாதார உயர்வுகளை நோக்கி அதிக கவனம் செய்யாதது புலிகளின் பரவலான நிலைத்தன்மைக்கு ஒரு காரணமாக அமைந்தது என்பதையும் இந்த இடத்தில் மறுப்பதற்கில்லை. இஸ்லாமியத் தமிழ்ச் சமூகத்திடம் இருந்து விலக்கம் பெற்ற புலிகளின் கொள்கைகள் அவர்களின் வெகுமக்கள் நெருக்கத்தைக் குலைய வைத்தது என்பதையும் இவ்விடத்தில் நினைவு கொள்ள வேண்டும், புலிகளின் மிக இறுக்கமான முடிவுகள் இணக்கமான சூழலில் இருந்து இஸ்லாமியத் தமிழர்களை வேறு ஒரு பாதைக்கு அழைத்துச் சென்றன, மொழி வாரித் தேசியம் என்ற புலிகளின் சிந்தனைகளில் இருந்து மாறுபட்டு அவர்கள் மதவழியிலான அடிப்படை நம்பிக்கைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க விழைந்ததும் இதற்கான மேலதிகக் காரணம் என்று கொள்ள இயலும். குறுகலான ஒரு நிலப்பரப்பில் நிகழும் ஒரு தேசிய இன விடுதலைப் போர் வேற்றுமைகளில் இணக்கம் காணத் தவறியது தமிழ்த் தேசிய விடுதலைப் போரில் ஒரு மிகப் பெரிய பாடமாக இருக்க வேண்டும். பல நேரங்களில் களை எடுப்பாகவும், சில நேரங்களில் தவறான குற்றங்களாகவும் நிகழ்ந்த எந்த மனிதப் படுகொலையையும் நியாயப்படுத்தவோ முட்டுக்கொடுக்கவோ விரும்பவில்லை, அதே நேரத்தில் இந்தக் குற்றச்சாட்டுகளுக்காக மட்டுமே புலிகள் இயக்கத்தை முற்றிலும் புறக்கணிக்க விரும்பும் பலர் விடுதலைப் போரின் எதிரிகளாகவும், பேரினவாத அடிமைகளாகவும் இருக்கிறார்கள் என்பது கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது.தமிழ்த் தேசிய எழுச்சியில் துவக்கம் பெறும் ஒரு புதிய அரசியல் மாதிரிக்கான சூழலை, உழைக்கும் மக்களின் விடுதலையை எதிர்க்கும் பல்வேறு தரப்புகளும் இத்தகைய ஒரு குற்றச்சாட்டின் பின்னால் ஒளிந்து இருப்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது.

குற்றச்சாட்டு மூன்று:

தமிழ் இளைஞர்களைப் புலிகள் தவறாக வழி நடத்தினார்கள் அல்லது அவர்களை அழிவுப் பாதைக்குக் கொண்டு சென்றார்கள்:

இந்தக் குற்றச்சாட்டின் மூளை இரண்டு தளங்களில் தொடர்ச்சியாக தனது பரப்புரைகளைச் செய்து கொண்டே இருக்கிறது, ஒன்று சிங்களப் பேரினவாதம், இன்னொன்று இந்தியப் முதலாளித்துவப் பார்ப்பனீயம், சிங்களப் பேரினமாவது பல நேரங்களில் இதனை ஒரு விடுதலைப் போராட்டம் என்று ஒப்புக் கொண்டு நேரடியாகப் போரிட்டது, ஆனால், இந்தியப் முதலாளித்துவப் பார்ப்பனீயம் இது போன்ற குற்றச்சாட்டுக்களால் தமிழ் தேசிய எழுச்சியை மைய நீரோட்டத்தில் இருந்து விலகச் செய்து வீழ்த்தி விடத் துடித்தது மட்டுமன்றி அதில் ஓரளவு வெற்றியும் பெற்றது, புலிகளின் கட்டுப்பாட்டில் மூன்றில் ஒரு பகுதி இலங்கை இருந்தபோதும் சரி, ஒரு அதிகாரப் பூர்வமற்ற ஆட்சியை தமிழீழம் என்னும் பெயரில் நடத்திய போதிலும் சரி, தமிழ் இளைஞர்களில் பலர் தன்னிச்சையாகத் தொழில் புரிந்தும், முடிவுகளை எடுத்தும் வந்திருக்கிறார்கள் என்பதை உணரும் போது இந்தக் குற்றச்சாட்டு வலுவிழக்கும், தன்னியல்பாக நிகழ்ந்த ஒரு பேரினவாத எதிர்ப்பு அரசியல் இயக்கமாகவே விடுதலைப் புலிகள் அமைப்பு இருந்தது என்பதை இறுதியாக நிகழ்ந்த போரின் போது வெளியேறிய எண்ணற்ற இளைஞர்களை வைத்து அடையாளம் காண முடியும், பேரினவாத அடக்குமுறையால் தோற்றம் கண்டு வளர்ந்த புலிகளின் இயக்கம் தமிழ் மக்களின் குரலாகவும், மாற்று அரசியல் இயக்கமாகவும் நீண்ட காலம் நிலை கொண்டிருந்தது.

பெண்களின் உடல் மீது நிகழ்த்தப்பட்ட சிங்களப் பேரின வன்முறை வெறியை, குழந்தைகளின் இருப்பின் மீது நிகழ்ந்த குருதி வெறியை, மொழியின், அறிவாற்றலின் மீது நிகழ்ந்த ஆத்திரத்தை அடிப்படையாகக் கொண்டே புலிகளின் இயக்கம் வளர்ந்தும், இயங்கியும் வந்தது என்பதை இலங்கையின் அரசியல் வரலாற்றை ஆய்வு நோக்கில் படிப்பவர்கள் அறிந்து கொள்ள முடியும். இதனை நேர்மையாகப் பதிவு செய்து வந்த சிங்கள ஊடகவியலாளர்களையே இவ்விடத்தில் நினைவு கூற வேண்டும்.பல்வேறு காலகட்டங்களில் தமிழீழ மக்களிடம் இருந்து பதிவு செய்யப்பட்ட குரலில், " பொடியன்கள் மட்டும் இல்லையென்றால், மானமிழந்த, மரியாதை இழந்த அடிமைகளாகவும், உயிர்ப்பிச்சை பெற்று வாழும் சோற்றுப் பிண்டங்களாகவும் மட்டுமே நாங்கள் வாழ்ந்திருக்க வேண்டும்" என்கிற உணர்வு மேலோங்கி இருப்பதை நம்மால் உணர முடியும். உலக அளவில் இன்று தமிழீழ மக்கள் விடுதலை உணர்வும், இனமான உணர்வும் அதிகம் கொண்டவர்கள் என்ற அடைமொழி புலிகள் இயக்கத்தால் உருவாக்கப்பட்டது என்பதைத் தீவிரப் புலி எதிர்ப்பாளர்களும் ஒப்புக் கொள்வார்கள் என்று நம்புகிறேன்.

ஏனைய குற்றச்சாட்டுகள்:

4) பிரபாகரன் வன்னியில் ஒரு அரசரைப் போல வாழ்ந்தார்.

5) புலிகள் இயக்கத்தினர் மக்களின் பணத்தில் சொகுசாக வாழ்ந்தார்கள்.

6) புலிகள் சிறுவர்களை வலிந்து இயக்கத்தில் சேர்க்க முயன்றார்கள்.

7) தாய்த்தமிழக அரசியல் வாதிகள் தமிழீழ விடுதலையைத் தங்கள் அரசியல் மற்றும்

    பொருளாதார லாபங்களுக்குப் பயன்படுத்தினார்கள்.

8) சமூகப் பொருளாதார மற்றும் அரசியல் வழிகளில் புலிகள் பார்வை அற்றவர்களாக

    இருந்தார்கள்.

முதல் குற்றச்சாட்டு, பேரினவாதத்தால் ஒடுக்குமுறைக்கு ஆளாக்கப்பட்டு, உரிமை மறுக்கப்பட்ட ஒரு மிகப் பழமையான தேசிய இனத்துக்கு அதன் விடுதலைப் போருக்குத் தலைமை ஏற்றதால் அவருக்குச் சக தமிழர்களால் சூடி மகிழப்படும் மகுடம், இந்தக் குற்றச்சாட்டை எதிர் கொள்வது என்பது ஒட்டு மொத்த விடுதலைப் புலிகளின் இயக்கத்தை, அவர்களின் விடுதலைப் போராட்டத்தை மட்டுமல்லாது தமிழீழம் என்கிற தனித் தமிழ் தேசியத்தின் மீது நம்பிக்கை கொண்டிருக்கிற எவரின் தலை மீதும் அள்ளிக் கொட்டப்படும் மண். போர்க்களத்திற்கு வந்த போதும் சரி, தனி மனித வாழ்க்கையிலும் சரி, பிரபாகரன் ஆடம்பரமான முதலாளித்துவ வாழ்க்கை முறையை  விரும்பி இருக்கவில்லை, சென்னையில் போராளிகளோடு ஒரு சிறிய அறையில் தங்கி இருந்த போதும் சரி, வன்னிக் காடுகளில் ஆயிரக்கணக்கான அணி வீரர்களோடு ஆட்சி செலுத்திய போதும் சரி, தனது முறை வரும் போது கடமைகளையும், பணிகளையும் ஏற்றுக் கொள்ளும் ஒரு எளிய மனிதனாகவே அவர் இருந்தார் என்பதற்கு ஏராளமான நேரடிச் சாட்சியங்கள் உண்டு. தனக்குக் கிடைக்கிற எல்லா வாய்ப்புகளும், வசதிகளும் எனது மக்களுக்கும் அவர்தம் குழந்தைகளுக்கும் கிடைக்க வேண்டும் எனபதில் பிரபாகரன் எப்போதும் தெளிவாகவும் உறுதியாகவும் இருந்தார். போர்க்களத்தில் இறந்து போன ஏனைய இளைஞர்களைப் போலவே  தனது மகனது உடலையும் அவர் கண்டார். வீடிழந்த, நாடிழந்த ஏனைய முதியவர்களைப் போலவே அவரது தாயும், தகப்பனும் மூட்டைகளைத் தூக்கிக் கொண்டு முகாம்களில் அடைக்கலம் ஆனார்கள். உலகின் எந்த ஒரு நாட்டிலும் அவர்களை ஏக வசதிகளோடும், செல்வச் செழிப்போடும் வாழ வைக்கும் தகுதி அவருக்கு இருந்தும் அவர் தனது எளிய வாழ்வை வாழ்ந்து காட்டியதில் உறுதி செய்தார். பிரபாகரனின் மீது வைக்கப்படும் இந்தக் குற்றச்சாட்டு தமிழினத்தின் சாபக்கேடு.

முதன் முதலாக தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி. ராமச்சந்திரன் இரண்டு கோடி ரூபாய்களை அவர் கைகளில் வழங்கிய போதில் இருந்தே அவருக்குக் கிடைத்த வாய்ப்பான ஆடம்பர வாழ்வை அவர் மறுதலித்தார், அந்தப் பணத்தைக் கொண்டு எத்தகைய ஆயுதங்களை வாங்கி எமது மக்களைக் காக்க முடியும் என்று சிந்தித்தவராகவே அவர் இருந்தார். தனி மனித ஒழுக்கம் குறித்த எந்த ஒரு குற்றச்சாட்டும் இல்லாத சமகால விடுதலைப் போராளிகளில் முதலிடம் பெறும் பிரபாகரனின் மீது வைக்கப்படும் ஆடம்பர வாழ்க்கைக் குற்றச்சாட்டு ஆதாரங்கள் ஏதுமற்ற வெற்றுக் கூச்சல் மட்டுமன்றித் தமிழர்களின் இழிந்த பண்புகளில் ஒன்றாகவும் வரலாற்றில் நிலைபெறும்.

வெளிநாடுகளில் தரகு வேலை செய்யப் புலிகளால் நியமிக்கப்பட்ட தரகர்கள் மற்றும் உறுப்பினர்களில் பலரே இத்தகைய ஆடம்பர, உல்லாச வாழ்க்கையை நோக்கித் திசை திரும்பி இருக்கிறார்களே ஒழியத் தங்கள் முப்பதாண்டு கால போர்க்கள வாழ்க்கையில் மக்களின் பாதுகாப்பான வாழ்க்கை என்கிற நோக்கத்துக்காகத் தங்கள் இளமையை, வாழ்நாட்களைப் பணயம் வைத்த போராளிகளுக்கு இப்படி ஒரு பழி தேவையானது தான், ஏனென்றால் இனி வரும் புதிய தலைமுறை அப்படியான ஒரு பழியை உண்மையென்று நம்பவும், அவர்களின் மீதான தோற்றப் பிழையை உண்டாக்கவும் அது வழிவகுக்கும் அல்லவா? உலக வரலாற்றில் தாங்கள் யாருக்காகப் போராடினார்களோ அவர்களாலேயே இத்தகைய இழிசொல்லுக்கு ஆளான ஆளான இயக்கமும், அதன் ஆயிரக்கணக்கான இளம் போராளிகளும் உண்மையில் பாவம் செய்தவர்கள், தங்கள் வாழ்க்கையை, போராட்டத்தை, இன்னுயிரை இழந்த புலிகளின் பெரும்பான்மையான இளைஞர்கள் வன்னிக் காடுகளில் உல்லாசமாக என்னையும், உங்களையும் போலவே வாழ்ந்து கொண்டிருந்த போதுதான் நச்சு வாயுக்களால் கொல்லப்பட்டார்கள் என்பதை நான் ஒப்புக் கொள்வதும், எனது கண்களை நானே குத்திக்  கொள்வதும் ஒன்றாகும்.

புலிகள் தங்கள் இயக்கத்தில் சிறுவர்களை வலிந்து சேர்க்க முயற்சி செய்தார்கள் என்கிற குற்றச்சாட்டில் ஓரளவு உண்மை இருக்கிறது, பேரினவாத அரசால் எந்த நேரத்திலும் தாக்குதலைச் சந்திக்க நேரிடுகிற ஒரு இனத்திற்கு இந்த ஆயுதப் பயிற்சியும், இயக்கச் செயல்பாடுகளும் தேவையானதாகவும், இன்றியமையாததாகவும் இருந்தது,  மக்கள் படை மாதிரியான ஆயுதப் பயிற்சியை ஒட்டு மொத்த மக்களுக்கும் வழங்கும் ஒரு விதமான நிகழ்வின் அடிப்படையில் அவர்கள் சிறுவர்களுக்கும், சிறுமிகளுக்கும் ஆயுதப் பயிற்சியைக் கட்டாயம் செய்து வழங்கினார்கள், ஒரு சில இடங்களில் பெற்றோரின் விருப்பம் இல்லாமல் சிறுவர்களை அவர்கள் இயக்கச் செயல்பாடுகளுக்குக் கொண்டு வந்தார்கள் என்கிற உண்மையும் இதற்கும் இருக்கிறது. முழுமையாக இந்தக் குற்றச்சாட்டை நியாயப்படுத்த முடியாதென்றாலும், சமூகம் எதிர் கொள்கிற துன்பங்களை அடிப்படையாகக் கொண்டே இத்தகைய குற்றச்சாட்டுகளை நாம் எதிர் கொள்ள முடியுமே தவிர முழுமையாக ஏனைய இடங்களின் வாழ்க்கைச் சூழலைப் பொருத்து அல்ல.

தாய்த்தமிழக அரசியல்வாதிகள் ஈழத் தமிழ்ப் போராட்டத்தைத் தங்கள் சுய நலனுக்குப் பயன்படுத்திக் கொண்டார்கள், கூடவே எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்களும் இந்தப் போராட்டத்தைத் தங்கள் சுய நலன்களுக்குப் பயன்படுத்தினார்கள் என்று பொதுவான ஒரு குற்றச்சாட்டு சுமத்தப்படுகிறது, இந்தக் குற்றச்சாட்டில் பகுதி உண்மையும், மிகுதி மிகையும் இருக்கிறது, இரண்டு பெரிய வெகுமக்களின் அரசியல் இயக்கங்களான திராவிட முன்னேற்றக் கழகமும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் (அதாவது அதன் தலைமைப் பொறுப்புகள்) ஈழத் தமிழர் போராட்டத்தை எப்போதும் தங்கள் நலன்களுக்குப் பயன்படுத்தினார்கள் என்பதை நான் ஒப்புக் கொள்கிறேன், பல்வேறு காலகட்டங்களில் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும், இன்றைய முதல்வருமான கருணாநிதி ஈழப் போராட்டத்தை தனது அரசியல் நலன்களுக்குப் பயன்படுத்தினார், இறுதிப் போர் நடந்து கொண்டிருந்த போது அவர் நடத்திய உண்ணாநிலை நாடகம் முழுக்க முழுக்க தேர்தலுக்காக அவரால் திட்டமிட்டு நடத்தப்பட்டது, போரைத் தவிர்க்க அவரிடம் இருந்த ஒரே ஆயுதமான நடுவண் அரசுக்கான ஆதரவை விலக்கிக் கொள்வதைப் பற்றி அவர் ஒரு போதும் சிந்திக்கவில்லை, வருமானம் தரக்கூடிய துறைகளைக் கேட்டுப் பெறுவதற்குப் பல முறை ஆதரவு விலக்க ஆயுதத்தைப் பயன்படுத்திய கருணாநிதி ஈழப் போரில் தனது சுய நலன்களை விலை பேசினார்.

மற்றொரு பெரிய அரசியல் கட்சியின் தலைவரான ஜெயலலிதா ஈழ மக்களின் விடுதலைப் போரை நேரடியாகவே தேர்தல் விலையாகக் கருதி மக்களிடம் ஈழம் பெற்றுத் தருவேன் என்று கூக்குரலிட்டார், படைகளை அனுப்பியேனும் ஈழம் பெறுவோம் என்று அவர் நாடாளுமன்றத் தேர்தலின் போது முழக்கமிட்டது நகைச்சுவையின் உச்சம். தேர்தல் முடிந்த பிறகு தன்னுடைய அறிக்கைகளில் ஒரு போதும் இத்தகைய முழக்கங்களை அவர் எழுப்பியது இல்லை, அரசியல் லாபங்களுக்காகவும், அதிகார மோகத்தினாலும் மட்டுமே அவர் ஈழப் போர் குறித்த முழக்கங்களை எழுப்பி வந்தார், அடிப்படையில் அவர் ஒருபோதும் ஈழப் போரையோ, ஈழ அரசியலையோ ஒரு பொருட்டாக நினைக்கவில்லை என்பதை தமிழ்நாட்டுக் குழந்தைகளும் அறிவார்கள்.

இவர்களைத் தவிர்த்து ஈழ மக்களுக்காகக் குரல் கொடுத்த எந்த ஒரு தமிழக அரசியல்வாதியும் அடைந்த பயன்களை விடவும் துன்பங்<><><><><>
கை.அறிவழகனின் நீண்ட கட்டுக்கதை

எனது குறுகிய பதில்
முதலில் போராட்ட வரலாறு பற்றி உங்களுக்கு முழுமையில்லை என்பதே என்னால் அறியப்பட்டது,உங்கள் தீர்ப்பு உங்கள் வாழ்க்கையில் வந்தாலே நீங்கள் அனுபவத்தில் அதை அறிவீர்கள்.நான் போராட்டத்தை 
அருகிலிருந்து பார்த்தவன்,முகாம் தாக்குதல்களை மாற்றியக்கங்கள் செய்தபோது காட்டிக்கொடுத்தவர்களையும் உதவுவதாக கூறி பின்னிருந் சுட்டவர்களையும்,பதவியாசையால் நண்பரை கொன்றவர்களையும் அறிவேன்.இங்கிலாந்தில் குடியுரிமை பெற்றவர் அமெரிக்காவை எதிர்ப்பதென்பது உங்கள் மூலமாக அறிந்ததில் மிக மகிழ்ச்சி,இன்று கூட அமெரிக்காவிலேயே நாடுகடந்த தமிழீழ அரசு இயங்குகிறது நீங்கள் அறியாமலிருக்க முடியாதது.அத்துடன் ஒபாமாவுக்கான தமிழர் பேரவைகள் கூட உள்ளன.எண்கள் கொள்கை சோசலிசம்,கம்யுனிசம் என்றால் அதன்படி நிற்பதே சிறப்பு!!நான் யாரையும் குற்றம் சொல்லவில்லை,சிலரின் சுயநலத்துக்கு நான் பலியானதை போல பலர் பலியாகினர்.எமது போராட்டத்தில் பலர் புகழ் சேர்த்து பொருள் பெருக்கினர் என்பதே உண்மை.இன்று அந்நிய நாட்டில் அகதிகளானோர் பெரும் பணக்காரர் என்பது சிறு உதாரணம்.வரலாறை அதாவது இலங்கைப்போராட்ட வரலாறை புலிகள் சார்பில் தினமணியில் சந்திரன் எழுதினர்,அதையாவது படியுங்கள்,அதில் இருந்தவர்களில் துரோகிகளான பலர் கொல்லப்பட்டனர்,த்ப்பியவரில் ஆரம்பகால உறுப்பினர் எழுதியதை,அடேல் எழுதியதை படித்துவிட்டு சொல்லுங்கள்.நன்றி!!
                                                                                     nisanth

zondag 7 november 2010

நிராஜ் டேவிட்டின் உண்மையின் தரிசனம்

காலம் கடந்து ஞானம் பெற்ற நிராஜ் டேவிட் தமிழ் மக்களுக்கு இயக்கம் விட்ட பிழைகளை விழக்குவதை விட்டுவிட்டு இலங்கை ராணுவத்திடம்  புலிகள் வடமாராட்சியை இழந்து மக்களுக்கு கூட சொல்லாமல் இந்தியாவுக்கு வள்ள மேறிய நிலையில் இலங்கை அரசு,சிங்களக்கட்சிகளின் எதிர்ப்பின் மத்தியில் ஒப்பரேசன் பூமாலை  மூலம் இலங்கை அரசை பணியவைத்து வடக்கு கிழக்கிணைந்த மாநிலத்தை  அறுநூறு புலிப்போராளிகள் இழப்புடன் கிடைக்கச்செய்த இந்தியாவை சொந்த நலனுக்காக மக்களையும் பகையாக்கி,தீராத விரோதியாக்கி இறுதியில் எல்லாவற்றையும் இழந்து சொந்த நாட்டிலே அடிமை,அகதி வாழ்வை உண்டாக்கித்தந்த புலிகளுக்காக இன்று குறை கூறி,அதை உண்மையின் தரிசனம் என்ற பெயரிலும் தமிழரை அழிக்க ஆரம்பத்திலிருந்தே உதவியதும் பலதீனத்து  மக்களை கொன்றுகுவிக்கும் கொடூரமானவர்களுமான இஸ்ரவேலரிடமிருந்து தமிழர் அதை
கற்றுக் கொள்ளவேண்டுமேன்பதையும் உபதேசிக்கிறார்.இவர் சுவிஸ் நாட்டில் பாதுகாப்பாக இருக்கின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
போருக்குப்பயந்து ஆரம்பத்திலோடியவர்களும் இன்று வீரம் பேசும் அந்நிய நாட்டில் வாழ்வுரிமை பெற்ற பெற்றவர்களில் இவரும் ஒருவரா என்பதுதான் தெளிவில்லை!! பக்கசார்பு ,இஸ்ரேலிடம் ஆலோசனை பெறும் நிராஜ் டேவிட்

உதாரணம்:ஆணவத்துடன் தீட்சித்தும் ஆவேசத்துடன் பிரபாகரனும் (உண்மையின் தரிசனம் பாகம்-22)
திலீபன் உண்ணாவிரதத்தை ஆரம்பித்து 8 வது நாள், இலங்கைக்கான இந்திய தூதுவர் ஜே.என்.தீட்ஷித் யாழ்ப்பாணம் வருகை தந்திருந்தார். திலீபனின் கோரிக்கைகள் பற்றிய தமது இறுதி முடிவை அறிவிப்பதற்காக அவர் யாழ்ப்பாணம் வருவதாகவும், திலீபனுக்கு சாதகமான முடிவையே அவர் வெளியிடுவார் என்றும் உள்ளுர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
திலீபனின் உண்ணா விரதத்தை முடித்துவைக்கும் நல்ல செய்தியையே இந்தியத் தூதுவர் அன்றைய தினம் கொண்டு வருவதாக தமிழ் மக்கள் பேசிக்கொண்டார்கள். ஆர்வத்துடன் காத்திருக்கவும் தலைப்பட்டார்கள்.
22.09.1987 அன்று பலாலி விமான நிலையத்தில் வந்திறங்கிய தீட்ஷித்தை புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் அவர்களும், அன்டன் பாலசிங்கமும் சென்று சந்தித்தார்கள்.
யாழ்ப்பாண மக்கள் நினைத்தது போன்று இந்தியத் தூதுவருடனான புலிகளின் சந்திப்பு ஒன்றும் சுமுகமான ஒன்றாக அமைந்திருக்கவில்லை.
தன்னைச் சந்திக்க வந்த புலிகளின் தலைவர்களுடன், இந்தியத் தூதுவர் மிகவும் ஆணவத்துடன் நடந்துகொண்டார். புலிகளை மிகவும் கடுமையாக விமர்சிக்கவும் தலைப்பட்டார்.
அன்றைய சந்திப்பின் போது, இந்தியத் தூதுவர் தீட்ஷித் மட்டும் திலீபன் மீது ஓரளவு அனுதாபம் கொண்டு செயற்பட்டிருந்தால், ஈழத்தமிழர் பிரச்சனையில் இந்தியாவின் பங்கு நிச்சயம் வேறொரு வடிவம் பெற்றிருக்கும்.
இந்தியாவிற்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையில் தீராத பகைக்கு வித்திட்டவர் என்று பின்னாட்களில் இந்தியப்படை அதிகாரிகளாலேயே விமர்சிக்கப்பட்ட தீட்ஷித், அன்று நடந்துகொண்ட விதம் புலிகளின் தலைவர் பிரபாகரனை மிகவும் ஆத்திரப்பட வைத்தது.
நிராஜ் டேவிட் nirajdavid@bluewin.ch

உண்மையின் தரிசனம்11

vrijdag 5 november 2010

தீபாவளி, தொல்லியல்

இப்பிரபஞ்சத்தில் நீரில் தோன்றிய உயிரினம் பரிணாம வளர்ச்சிப் படிகளைத் தாண்டி மண்ணில் மனிதனாகத் தடம் பதித்த காலம் முதல் இன்றைய கண்ணி யுகத்திற்கு இடைப்பட்ட மனித நாகரிக வளர்ச்சிப் படிமுறையின் நீண்ட வரலாற்றுப் பக்கங்களில் நம் மூதாதையர்களை  கொன்று குவித்த நிகழ்வுகள் தொடர்கதையாகிவிட்டன.

                 அந்தவகையில் தான் ஆதியில் தோன்றிய மனிதன் நாகரிக வளர்ச்சியடைந்து வருகின்ற போது அவனது தேவைகள் அதிகமாகத் தொடங்கின அவ்வாறு அதிகமாகின்ற வேளையில் அந்தத் தேவைகளை அவன் வாழும் சூழலில் பூர்த்தி செய்யமுடியாமல் போகவும், காலநிலை இடம் கொடுக்காது போகவும், அவன் தான் இருந்த இடத்தை விட்டு வேறு பிரதேசத்திற்கு அல்லது கண்டங்களுக்கு தொடர்ச்சியாக இடம்பெயரத் தொடங்கினான்.

                     தென்னிந்தியத் தீபகர்ப்பத்திற்கு புதிய மனிதன் முதலில் ஆபிரிக்காக் கண்டத்திலிந்தே வந்து சேர்ந்தான். இவன் ஆபிரிக்காவை விட்டுப் புறப்பட்ட காலம் இற்றைக்கு 85,000 ஆண்டுகள் முன்பு எனக் கணிக்கப்படுகிறது. இம் மனிதர்களின் இன்றைய வம்சாவழியினர் தென்னிந்தியாவின் நீலகிரி மலைச்சாரலிலும், கிழக்கிந்தியப் பகுதிகளிலும் வாழும் மலைச்சாதி மக்களாவார்கள். இலங்கையில் வாழும் வேடர்களும் இவர்களின் வம்சா வழியினரே. இவர்களைக் குறிக்கும் மரபணுக் குறியீடு M2 ஆகும்.

                  இதற்குப் பின்னர் இரு பெரிய மனிதப் புலப்பெயர்வுகள் மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து இன்றைய ஈரான் வழியாக இந்தியாவுக்கு நிகழ்ந்திருக்கின்றது. இது இற்றைக்கு 30,000 ஆண்டுகள் முன்பும், 10.000 ஆண்டுகள் முன்பும் நிகழ்ந்திருக்கின்றது என்பது தொல்மரபியல் மூலம் இன்று நிரூபணமாகின்றது.

           இவர்களே இன்றைய திராவிட இனத்தவர்களாவார்கள். இவர்களைக் அடையாளப்படுத்தும் மரபுக் குறியீடு M20 ஆகும்.(Spencer Walls : The Journey of Man (new York) 2002)  இதன் பின்னர் இ.மு 4000 – 3500 ஆண்டுக் காலத்தில் இந்தோ – ஆரியர்கள் இந்தியாவை வந்தடைந்தனர். இவர்களைக் குறிக்கும் மரபணுக் குறியீடு M 17 ஆகும். 

                     ஆகவே இவ்வாறு காலத்துக்குக் காலம் மனிதன் கண்டங்கள் தாண்டிப் புலம் பெயர்ந்தான். அந்த வகையில் தான் எம் ஆதிக்குடிகள் என்று சொல்லக் கூடிய ஒஸ்திரலோயிட் மக்கள் (இவர்கள் பேசிய மொழி முண்டா என அழைக்கப்படுகின்றது. இலங்கை என்பதற்கு முண்டா மொழியில் தான் தீவு என் அர்த்தப்படுகின்றது) ஆபிரிக்காக் கண்டத்திலிருந்து இந்தியா நோக்கி இற்றைக்கு 85,000 ஆண்டுகளுக்கு முன் வருகின்றான்.

               இவ்வாறு வந்தவன் இலங்கை வழியாக ஒஸ்திரேலியா நோக்கிச் செல்லுகின்றான். இவ்வாறு சென்றவர்களில் சில கூட்டம் கிட்டத்தட்ட 60,000 ஆண்டுகளுக்கு முன் மீண்டும் இலங்கை வழியே வந்து இந்தியாவில் குடி பெயருகின்றனர். இந்த இனத்தின் எச்சங்கள் இன்றும் தமிழகம் நீலகிரி மலையிலும் கிழக்கிந்தியப் பகுதிகளிலும் இலங்கையிலும் வாழும் வேடர்களாவார்கள். இதற்கு தொல்லியல் ஆதாரங்கள் பல இருக்கின்றன.

  அவ்வாறு வந்து வாழ்ந்த மனித இனம் (ஒஸ்திரலோயிட்) தாய்வழிச் சமூகத்தைச் சார்ந்தவர்களாகவே இருந்தார்கள். இந்த நேரத்தில் தான் கிட்டத்தட்ட இற்றைக்கு 4000 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவின் ஹைபர், போலன் கணவாய்களினூடாக இந்தியாவின் விந்திய மலைவரை வந்த ஆரியர்.
       அத்துடன் ஆரியர்களது கலாச்சாரமும், குமரிக்கண்டத்தில் வாழ்ந்த மக்களின் கலாச்சாரமும் வித்தியாசமாக இருந்தது. இதுவே உண்மை.

  ஏன் தமிழை, தமிழ் மண்ணை ஆழமாக நேசித்த ஒரு இனத்தை உயிராக சுவாசித்த மக்களை பயங்கரவாதிகள் என்ற பெயரில் கடந்தவருடம் முள்ளிவாய்க்காலில் அழித்தமை உங்களுக்கு ஞாபகம் இருக்கும் என நினைக்கின்றேன்.

 இதுபோல்த் தான் 18 ஆம் நூற்றாண்டுகளில் நியுஸ்லாந்தைக் கண்டுபிடித்த பிரித்தானியர் அங்கிருந்த ஒஸ்திரலோயிட் இனத்தை குரங்குகள் என அழித்த வரலாற்றை யாரும் மறக்க மாட்டார்கள். அது ஏன் அமெரிக்கா கண்டத்தைக் கண்டுபிடிக்கச் சென்று எல்சல்வடோர் என்ற தீவில் இறங்கிய கொலம்பஸ் கும்பல் அங்கிருந்த செவ்விந்தியர்களை எப்படிக் கற்பழித்துக் கொன்றனர். ஏன் அமெரிக்காவைக் கண்டுபிடித்த அமெரிக்க வெஸ்புஜி என்ன செய்தான். இதை வரலாறு மறக்காது. 


       மீசோ சோயிக் யுகம் (Mesozoic Era) எனப்படும் யுகத்தில் (இந்த மீசோ சோயிக் யுகத்தில் டிரையோசிக், ஜூராசிக், கிரிட்டேசியஸ், என்னும் மூன்று காலங்கள் அடங்கும்.) அதாவது இற்றைக்கு 6.5 கோடிகளுக்கு முன் வாழ்ந்த்தாக கருதப்படும் டைனோசர்களின் எச்சங்கள் கூட கண்டுபிடிக்கப்பட்டு 1842 இல் டைனோசர் என்ற இனம் வாழ்ந்ததாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. இதற்கு ஆதாரமாக அமைந்தவை அவற்றின் எலும்புக்கூடுகள் அல்ல எலும்புகள் உக்கிய பாறைப் படிமங்கள் தான்.
 அப்படி 6.5 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த டைனோசர்களின் பூர்வீகத்தையே தெளிவாக்க் கண்டறிய முடியும்.

ஏன் ஹோமோ சேப்பியன்ஸ் சேப்பியன்ஸ் என்ற மனித இனம் உருவானது ஆபிரிக்கா, மற்றும் குமரிக்கண்டத்தில் என்றும், அங்கேயே முதலாவது மனித நாகரீகம் உருவானதாகவும் கூறப்படுகின்றது.

ஆதிகாலத்தில் குமரிக்கண்டத்தில் இருந்து இந்தியா, இலங்கை வரை வாழ்ந்த மக்கள் கருமையான தோல் அமைப்பையும், திடகாத்திடமான உடலமைப்பையும் கொண்டிருந்தனர். இவர்கள் தான் நமது மூதாதையர்களான ஆதித் தமிழ்க்குடிகளே.
~~~ ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ஆனால் தீபாவளியை ஏன் தமிழர்கள் கொண்டாடுகிறார்கள் என்பது விளங்கவில்லை. தீபாவளியைப் பற்றி பல கதைகள் உண்டு. வடநாட்டவரைப் பொறுத்தளவில் (குஜராத்திகள், மார்வாரிகள்) தீபாவளி இலக்குமிக்கு உரிய நாள். அவர்களது புத்தாண்டின் தொடக்க நாள். வணிகர்கள் புதுக் கணக்கை அந்த நாளில்தான் தொடங்குகிறார்கள். வங்காளிகள் தீபாவளியை காளி அல்லது துர்க்கைக்குரிய நாளாகக் கொண்டாடுகிறார்கள். இன்னும் சில இனத்தவருக்கு தீபாவளி நாள் இராமன் வனவாசம் முடித்து அயோத்திக்குத் திரும்பிய நாள்.

தமழர்களைப் பொறுத்தளவில் தீபாவளி நாள் நரகாசுரன் என்ற அசுரன் கொல்லப்பட்ட நாள். இது என்கின்றோம்.  இதைப் பற்றிய புராணக் கதை என்ன சொல்கிறது?

நரகாசுரன் பூமாதேவியின் பிள்ளை. காமரூப நாட்டின் மன்னன். படைப்புக் கடவுளான பிரமாவை நோக்கி கடும் தவம் செய்து பல வரங்களைப் பெறுகிறான். அதன் பின் தேவர்களை அவன் துன்புறுத்துகிறான். துன்பத்தைப் பொறுக்க முடியாத தேவர்கள் வைகுண்டத்தில் திருமாலிடம் சென்று முறையிடுகிறார்கள். திருமால் வழக்கம் போல் தேவர்களைக் காக்க திருவுள்ளம் கொள்கிறார்
.
ஆனால் நரகாசுரனை கொல்வது திருமாலுக்கு அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. காரணம் நரகாசுரமன் தனது தாயின் கையால் அல்லாது வேறுயாராலும் கொல்ல முடியாதபடி ஏற்கனவே பிரமாவிடம் வரம் வாங்கி விட்டான். உடனே காத்தல் கடவுளான திருமால் பெரிய சதித் திட்டம் தீட்டுகிறார். தனது தேர்ச்சாரதியாக இரண்டாவது மனைவியான சத்தியபாமாவை (பூமாதேவியின் மறுஅவதாரம்) அமர்த்துகிறார். நரகாசுரனோடு நடக்கும் சண்டையின் நடுவில் அம்பு ஒன்று அவரைத் துளைக்கிறது. உடனே திருமால் மூர்ச்சை போட்டு விழுந்து விடுகிறார்.

உண்மையில் அப்படி அவர் மூர்ச்சைபோட்டு விழவில்லை. எல்லாம் நடிப்பு. இதனை விளங்கிக் கொள்ளாத சத்தியபாமா தனது கணவன் உண்மையிலேயே மூர்ச்சையாகி இறந்து விட்டார் என நினைத்து திருமாலின் வில்லை எடுத்து நரகாசுரன் மீது அம்பு எய்தி அவனைக் கொன்று விடுகிறார்.
உயிர் போகும் தருவாயில் நரகாசுரனிடம் உனது கடைசி ஆசை என்ன? என்று சத்தியபாமா கேட்கிறார். ”எனது மறைந்த நாளை மக்கள் எல்லோரும் கொண்டாட வேண்டும்”" என்கிறான் நரகாசுரன்.‘‘‘‘‘‘‘‘‘‘

இதுவே புராணம் கூறும் கதை
அத்துடன் எகிப்துக்குத் தெற்கே உள்ள கிரெட்டித் தீவை ஆண்ட மைனோஸ் என்ற மன்ன்ன் தனது அரண்மனைப் பாதாளச் சுரங்கத்தில் (முழெள்ளழள)  மினோடார் எனப்படும் மனித உடலும், காட்டெருமையின் தலையையும் உடைய அதிசய அரக்கனை அடைத்து வைத்திருந்த்தாகவும், அவனுக்கு பலி கொடுப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் 12 வாலிபர்களை அரசன் பாதாளச் சுரங்கத்தில் உள்ள மினோடர் அரக்கனுக்கு பலிகொடுத்த்தாகவும், ஏதென்ஸ் இளவரசன் தீசியஸ் அரக்கனின் பலியாளனாகச் சென்று, அரக்கனைக் கொன்று மைனோஸ் மன்ன்னுடைய மகளும், இளவரசியுமான ஏரியாடினா என்பவளை மணந்த்தாக கூறப்படுகிநன்ற பழங்கதையை சில வேளைகளில் நீங்கள் படித்திருப்பீர்கள்.


    இக்கதையானது உண்மையா என்றும், அரக்கன் என்பவன் இருந்தானா என்றும் ஆராய பிரபலமான புதைபொருள் ஆராய்ச்சி நிபுணர் ஆர்தர் இவான்ஸ் என்பவர். கிரெட்டித் தீவுக்கு சென்று மண்மேடு சூழ்ந்திருந்த அரண்மனையையும், பாதாளச் சுரங்கத்தினையும் கண்டு பிடித்து தோண்டிப் பார்த்தால் அச்சுரங்கத்தில் விசாலமான அறை ஒன்றிருந்த்து என்றும், அவற்றின் கதவு இரும்பினாலானது என்றும், அந்த அறையின் நான்கு சுவர்களிலும் காட்டெருமையின் ஓவியங்கள் தீட்டப்பட்டிருந்த்து என்றும் தெரிவித்தார். இதுபோல் அவனது அரண்மனைச் சுவர்களிலும் அவ் ஓவியங்களைக் கண்டதாகவும் கூறியிருந்தார். இது அவன் தனது இஷ்ட தேவதையை வணங்கி அத்தெய்வத்திற்கு பலியாக ஆண்டுக்கொரு முறை இளைஞர்களை பாதாளச் சுரங்கத்தில் பலி கொடுத்தான் என்ற முடிவுக்கு வந்த்தாகவும் தெரிவித்தார்.
                                                   இதை எழுதியவரின் கருத்துடன் உடன்படாமையால் 
வரலாற்றுக்கருத்துக்களை மட்டும் எடுத்துக்கொண்டு தமிழனை குரங்கு,அரக்கன்
 என்று அவர்கள் சொன்னதாக இவர் சொன்னவற்றை நீக்கிவிட்டேன்.அத்துடன்
 வெள்ளையரின் கருத்தை வேதமேனக்கொண்டு சொன்ன உதாரணத்தையும் 
எடுத்துவிட்டேன்.இதில் வந்த வரலாற்று தேடல்களை அறிய உதவியமைக்கு 
அந்த நல்லவர் அ.மயூரனுக்கு நன்றிகள்!!

இங்குள்ள பல கருத்துகள் ஆரியர்,திராவிட இனத்தை ஏமாற்றும் அறிவார்ந்தவர்கள் என்பதையும் தம் மூதாதையர் அதாவது எமது மூதாதையரும்,இன்றுசிங்களவரால் தொடர்ந்தும்  ஏமாற்றப்படுகிறோம் 
என்று மேதகு கூறியது மூலம் நாமும் முட்டாளாக இருந்தபடி முட்டாள்தனமாகவே எழுதவும் செய்கிறோம்.
               "சட்டியில் உள்ளதுதானே அகப்பையில்!!"
.

புதிய வாழ்வினைக் கட்டியெழுப்ப திண்டாடும் விடுதலைப் புலிகளின் முன்னாள் பெண் போராளிகள் (படம் இணைப்பு)

புதிய வாழ்வினைக் கட்டியெழுப்ப திண்டாடும்
விடுதலைப் புலிகளின் முன்னாள் பெண்
போராளிகள் (படம் இணைப்பு)
சிறிலங்காவில் பல பத்தாண்டுகளாகத் தொடர்ந்த போரினால் பெரும் பாதிப்புக்களை சந்தித்துநின்ற பத்மா, ராசாத்தி மற்றும் ஜனோ ஆகிய மூவரும் விடுதலைப் புலிகளமைப்பின் முன்னாள் பெண் போராளிகள்.

இப்பெண்கள் பற்றிய கதைகளை கேட்டு மட்டக்களப்பில் இருந்து Rebecca Murray எழுதிய செய்திக் கட்டுரையை The Christian Science Monitor என்னும் புகழ்மிக்க இணையத்தளம் வெளியிட்டுள்ளது.

இலங்கைத்தீவிலுள்ள பல்லாயிரக்கணக்கான முன்னாள் போராளிகளின் வாழ்வு ஒளிமயமானதாக இருக்கும் என்பதைக் காட்டும் நம்பிக்கையின் சமிக்கையாக இவர்கள் இருக்கிறார்கள்.

சிறிலங்காவில் 26 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்த கொடூரமான போரின் விளைவாக பத்மா மற்றும் ராசாத்தி ஆகிய இருவரும் ஒற்றைக் கண்பார்வையினை இழந்தவர்கள். விடுதலைப் புலிகளின் கடற்புலிகள் அணியுடன் இணைந்து செயற்பட்ட யனோ தனது ஒற்றைக் காலினை இழந்து நிற்கிறாள்.

ஐ.ஓ.எம் நிறுவனத்தின் உதவியினால் இவர்கள் சிறிலங்காவினது ஆடை உற்பத்தித் தொழில்துறையில் இவர்கள் மூவருக்கும் வேலைவாய்ப்புக் கிடைத்திருக்கிறது.

ஆனால் புனர்வாழ்வின் பின்னர் விடுவிக்கப்பட்டிருக்கும் இவர்களது தோழிகள் மற்றும் தோழர்களில் பெரும்பாலானவர்கள் வேலையற்றவர்களாகவே இருக்கும் அதேநேரம் மாதமொன்றுக்கு 6000 ரூபாயினை பெறுவதையிட்டு இவர்கள் அகமகிழ்கிறார்கள்.

குறித்த இந்த ஆடை உற்பத்தி நிறுவனத்தில் இவர்கள் பருத்தி துணியிலான ரீ-சேட்டுக்களை உற்பத்தி செய்யும் பணிகளில் ஈடுபட்டிருக்கிறாhர்கள்.

விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகளான இவர்கள் சமூகத்துடன் மீண்டும் இணைந்திருந்தாலும் இன்னமும் பல தடைகளைத் தாண்டிப் பயணிக்கவேண்டியுள்ளது.

சிறிலங்காவில் வாழும் சிறுதேசியமான தமிழர்களுக்குத் தனிநாடு கோரிப் போராடிவந்த தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா அரசாங்கத்திற்கும் இடையில் கடந்த பல பத்தாண்டுகளாகத் தொடர்ந்த கொடூரமான போரின் விளைவாக 100,000 தமிழர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

2004ம் ஆண்டு புலிகள் அமைப்பின் தலைவர் வே.பிரபாகரனுக்கும் அந்த அமைப்பினது கிழக்குப் பிராந்தியத் தளபதியாக இருந்த கேணல் கருணாவிற்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டைத் தொடர்ந்து கருணா அந்த அமைப்பிலிருந்து பிரிந்து அரசாங்கத்துடன் இணைந்த கொண்டார். இந்த நிலையில் வன்முறைகளும் ஆட்கடத்தல்களும் என்றுமில்லாதவாறு அதிகரித்தது.

2009ம் ஆண்டின் இறுதிப் பகுதியில் போர் உக்கிரமடைந்ததைத் தொடர்ந்து நாட்டினது வடக்குப் பகுதியிலிருந்து இடம்பெயர்ந்த 300,000 அதிகமான தமிழ் அகதிகள் அரசாங்கத்தினால் நிர்வகிக்கப்பட்ட இடம்பெயர்ந்தோர் முகாம்களில் தங்கவைக்கப்பட்டார்கள்.

கடந்த மாதம் வெளியிடப்பட்ட புள்ளி விபரங்களின் அடிப்படையில் 25260 பொதுமக்கள் மாத்திரமே இன்னமும் முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருக்க, ஏனையோர் அவர்களது சொந்த இடங்களில் மீள்குடியேற்றப்பட்டிருக்கிறார்கள்.

இடிந்தழிந்த வீடுகள், அழிந்துவிட்ட உள்ளளுர் உட்கட்டுமானங்கள் இன்னமும் திருத்தப்படாத நிலையில் போதிய வேலை வாய்ப்புக்கள் இன்றி மீள்குடியேற்றப்பட்ட மக்கள் மோசமானதொரு சூழமைவில் வசித்து வருவதாகத் தெரிகிறது.

சிறிலங்காவிலுள்ள வேலைத்தகுதி பெற்ற இளைஞர்களில் வெறும் மூன்றில் ஒரு பகுதியினருக்கு மாத்திரமே வேலை வாய்ப்பு கிடைத்திருப்பதாக மத்திய வங்கி கணக்கிடுகிறது.

விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் பெண்போராளிகள் பெரும்பாலும் கல்வியினை இடைநடுவில் விட்டவர்களாகவும் உள நலன் பாதிக்கப்பட்டவர்களாகவும் காயமடைந்தவர்களாகவுமே காணப்படுகிறார்கள்.

இதன் காரணமாக இவர்கள் தங்களுக்குப் பொருத்தமான பணிகளைத் தேடிப் பிடிப்பதற்குப் பாடாய்ப்படுகிறார்கள்.

"முதலில் எங்களுக்கு வாழுவதற்கு ஒரு வீடும் பொருத்தமானதொரு தொழிலும்தான் தேவையாகவுள்ளது. இங்கு எங்களுக்கான வேலை வாய்ப்பினைப் பெற்றுத்தருவதற்கு எவருமில்லை. போர் இடம்பெற்ற அந்தக் காலப்பகுதியினை நான் முற்றாக வெறுக்கிறேன். ஒரு வீட்டினைக் கட்டுவதோடு எங்களது குடும்பங்களைப் பராமரிப்பதற்கே நாங்கள் விருப்புகிறோம்" என ராசாத்தி தனது உள்ளக் கிடக்கையினை எங்களிடம் கூறுகிறார்.

இந்த ஆண்டு நாட்டினது கிழக்குப் பகுதியில் கட்டடங்கள், வீதிகள், பாலங்கள் என்பனவற்றை சிறிலங்கா அரசாங்கம் நிர்மாணித்து வருகிறது. ஆனால் மட்டக்களப்பு மாவட்டத்தின் பெரும்பாலான குடும்பங்கள் மீன்பிடி மற்றும் விவசாயத்தின் ஊடாகக் கிடைக்கும் மிகவும் குறைந்தளவிலான வருமானத்திலேயே தங்கியிருக்கின்றன.

மாவட்டத்தின் கிராமப்புறத்தில் மதுப்பாவனை வீதம் அதிகரித்துக் காணப்படும் அதேநேரம் காணிப்பிணக்குகள் அடிக்கடி தோன்றி மறைகின்றன. போர் காலத்து நிலைமைகள் மீண்டும் ஏற்படுபவதற்கு இவை வழிவகுத்து விடுமோ என்ற அச்சம் இவர்களிடத்தே மேலோங்கிக் காணப்படுகிறது.

இந்தப் பெண்கள் போராளிகளானது எவ்வாறு?

தனது வயல்நிலத்தில் வேலைசெய்துகொண்டிருந்த போது பத்மாவினது தந்தையார் புலிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இது நடந்து ஐந்து ஆண்டுகளின் பின்னர் பத்மா 16 வயதை அடைந்திருந்தபோது அவள் புலிகளால் கட்டாய ஆட்திரட்டலுக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறாள்.

"பாடசாலைக்குச் சென்றுகொண்டிருந்த போது நான் புலிகளால் அழைத்துச் செல்லப்பட்டேன். இதனை அறிந்த எனது அம்மா அவர்களது பணியகம் சென்று கேட்டபோது என்னைத் தாங்கள் அழைத்துச்செல்லவில்லை எனக் கூறிவிட்டார்கள்" என பத்மா கூறுகிறாள்.

அதேபோலவே தனது வீட்டுக்கு அருகேயிருந்த கோவிலுக்குச் சென்றுகொண்டிந்தபோது அப்போது 15 வயதினை அடைந்திருந்த ராசாத்தி புலிகளால் அழைத்துச் செல்லப்பட்டாள்.

இவளது இரண்டு நண்பிகள் புலிகளின் பிடியிலிருந்து தப்பியோடியபோதும் ராசாத்தி அடிப்படைப் பயிற்சிகளின் பின்னர் முல்லைத்தீவு பகுதியிலிருந்த ஒரு முகாமிற்கு அனுப்பப்பட்டிருக்கிறாள்.

அப்போது 21 வயதை அடைந்திருந்த ஜனோ தானாக முன்வந்தே புலிகள் அமைப்புடன் இணைந்து கொண்டதாகக் கூறுகிறாள்.

கடலிலும் தரையிலும் இவள் சமரிட்டிருக்கிறாள். 2009ம் ஆண்டினது ஆரம்பப் பகுதியில் போர் உக்கிரமடைந்த நிலையில் தங்களது முற்றுகைக்குள் அகப்பட்ட பகுதிகளை இலக்குவைத்து படையினர் செறிவான எறிகணைத் தாக்குதல்களை மேற்கொண்டிருக்கிறார்கள்.

இந்த நிலையில் ஏற்பட்ட ஆட்பற்றாக்குறையினைப் போக்குவதற்காக முன்னைய போர்களின் போது தங்களது உடல் அவயவங்களை இழந்தவர்களையும் கூட புலிகள் களமுனைக்கு அனுப்பியிருக்கிறார்கள்.

இவர்களுள் ஒரு காலினை இழந்த ஜனோவும் ஒருத்தி. "என்னைச் சுற்றி அதிகம்பேர் இறந்து கிடந்தார்கள். துயரமான இந்த நிகழ்வினை வாழ்நாளில் நான் மறக்கமாட்டேன்" என்கிறாள் அவள்.

புனர்வாழ்வு, வேலை வாய்ப்புக்கான பாதை

சிறிலங்கா அரசாங்கத்தினால் நிர்வகிக்கப்படுகின்ற 'புனர்வாழ்வு முகாம்களில்' 3,000 பெண் போராளிகள் உள்ளிட்ட 11,000 புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக மனித உரிமைக் கண்காணிப்பகம் கூறுகிறது.

விடுதலைப் புலிகளின் போர் அணிகளில் மூன்றில் ஒரு பகுதியினர் பெண்களைக் கொண்ட படையணிகளே என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

"விடுதலைப் புலிகளால் கட்டாய ஆட்திரட்டலுக்கு உட்படுத்தப்பட்டமை, கண்முன்னே உறவுகளும் நண்பர்களும் துடிதுடித்து மடிந்தமை மற்றும் எறிகணைத் தாக்குதலுக்கும் துப்பாக்கிக் குண்டுகளுக்கும் இரையாகி காயமடைந்தமை ஆகிய காரணங்களினால் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகள் இன்னமும் உள ரீதியாகப் பாதிக்கப்பட்டவர்களாகவே உள்ளார்கள்" என இதுவிடயம் தொடர்பில் ஆய்வுகளை மேற்கொண்ட ஆய்வாளர் சொனி இன்பராஜ் கூறுகிறார்.

"கல்வியினை இழந்து நிற்பது, நிச்சயமற்ற எதிர்காலம், குடும்ப உறவுகளைப் பறிகொடுத்திருப்பது மற்றும் கல்வியினைத் தொடரமுடியாத நிலையில் இருப்பது போன்ற சோகங்கள் இவர்களது உரையாடல்களில் தொனிக்கிறது. இது போன்று துன்பங்கள் இருப்பினும் மீண்டும் சமூகத்துடன் இணைந்திருக்கும் புலிகள் அமைப்பின் முன்னாள் பெண் போராளிகளான இவர்களிடத்தே வாழ்க்கை தொடர்பான நம்பிக்கை அதிகமுள்ளது" என்கிறார் இவர்.

படிப்படியாக...

கிளிநொச்சியில் விடுதலைப் புலிகளின் மருத்துவ அணியுடன் இணைந்து செயற்பட்ட சுதர்சினி என்ற இன்னொரு முன்னாள் போராளியும் மீண்டும் சமூகத்துடன் இணையும் முனைப்புக்களில் ஈடுபட்டிருக்கிறாள்.

"விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களுக்கும் பொதுமக்களுக்கும் நான் மருத்துவப் பணியாற்றி இருக்கிறேன். செறிவான எறிகணைத் தாக்குதல்களாலும் விமானக் குண்டுத் தாக்குதல்களாலும் காயமடைந்த பல பொதுமக்கள் அங்கிருந்தார்கள்" என்கிறாள் அவள்.

"போரின் இறுதிக் கட்டத்தில் கிளிநொச்சியில் மூர்க்கமான மோதல்கள் இடம்பெற்றிருந்தன" என மார்பிலும் அடிவயிற்றிலும் காயமடைந்த சுதர்சினி கூறுகிறாள்.

"கடினமான காலமது. எறிகணை மற்றும் குண்டுத் தாக்குதல்களால் பொதுமக்கள் பெரும் இடர்களைச் சந்தித்தார்கள். பொதுமக்களான எனது நண்பர்கள் பலர் கொல்லப்பட்டனர்" என அவள் தொடர்ந்து கூறினாள்.

மேலே குறிப்பிட்ட ஏனைய மூன்று முன்னாள் போhளிகளையும் போலவே சுதர்சினியும் ஐ.ஓ.எம் நிறுவனத்தின் உதவியுடன் சுயதொழில் ஒன்றை ஆரம்பித்திருக்கிறாள். அருகேயுள்ள பலசரக்குக் கடையில் பணிபுரியும் சுதர்சினி நாளொன்றுக்கு 1000 ரூபாயைக் கூலியாகப் பெறுகிறாள்.

விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்களுக்கு தொழிற்பயிற்சிகளை வழங்கும் செயல்திட்டத்தில் ஐ.ஓ.எம் நிறுவனம் சிறிலங்காவினது அரச திணைக்களங்களுடன் இணைந்து பணிசெய்கிறது.

கிழக்கு மாகாணத்தில் மாத்திரம் விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளில் 660 பேர் ஐ.ஓ.எம் நிறுவனத்தில் தங்களது பதிவுகளை மேற்கொண்டிருக்கிறார்கள். இவர்களில் 50க்கும் அதிகமானவர்கள் பெண்கள்.

தையல், கால்நடை வளர்ப்பு மற்றும் விவசாயம் ஆகிய பணிகளுக்காக ஐ.ஓ.எம் நிறுவுனம் மட்டக்களப்பு மாவட்டத்தின் இந்த முன்னாள் பெண் போராளிகளுக்கு நிதியுதவியினை வழங்கியிருக்கிறது.

பாதிக்கப்பட்ட இந்தப் பெண்களில் பெரும்பாலானவர்கள் துணை இழந்த பெண்களாக இருக்கும் அதேநேரம் தங்களது குடும்பத்திற்குத் தேவையான வருமானத்தைச் சம்பாதிப்பதோடு தங்களது வாழ்வினை மெல்ல மெல்ல மீண்டும் கட்டியெழுப்புகிறார்கள்.

விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகளுக்கான இந்த செயல்திட்டமானது குறிப்பிட்ட ஐ.நா அமைப்புக்கள் மற்றும் அனைத்துலகச் செஞ்சிலுவைக் குழுவின் ஆலோசனைகளுக்கு அமைய அனர்த்த முகாமைத்துவ அமைச்சினால் தயாரிக்கப்பட்டது.

லைபீரியா மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் போரின் பின்னர் கைக்கொள்ளப்பட்ட இதேபோன்ற செயல்திட்டங்களை அடிப்படையாகக் கொண்டே சிறிலங்கா தனது செயல்திட்டத்தினைத் தயாரித்திருக்கிறது.

பல்வேறுபட்ட கட்டங்களைக் கொண்டிருக்கும் இந்த செயல்திட்டத்தில் முதல் அவர்களைத் தரப்படுத்தும் நடைமுறை கைக்கொள்ளப்படுகிறது. குறித்த அந்த முன்னாள் போராளி நாட்டினது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கிறாரா என்றும் இந்தச் செயன்முறையின் போது ஆராயப்படுகிறது.

புனர்வாழ்வின் பின்னர் சமூகத்துடன் மீளவும் இணைக்கப்பட்டிருக்கும் முன்னாள் போராளிகள் தொடர்பான அனைத்து விபரங்களும் படைத்தரப்பினரால் பேணப்படுகின்றன.

"தாங்கள் விடுதலைப்புலிகள் அமைப்புடன் இணைந்திருந்த காலப்பகுதியில் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் பயிற்சிகளை முன்னாள் பெண் போராளிகள் பயன்படுத்துவதற்கு சமூகம் அனுமதிக்க மறுப்பதுதான் பெரும் பிரச்சினையாக உள்ளது" என்கிறார் இன்பராஜ்.

"தமிழ் சமூகத்தில் காலம் காலமாக இருப்பதைப் போல பெண்களென்றால் வீட்டுப் பணிகளை மாத்திரம் தான் செய்யவேண்டும் என்ற நிலைமையினை மாற்றி, தச்சுத் தொழிலாளர்களாகவும், கட்டடப் பணியாளர்களாகவும், கணனி வல்லுநர்களாகவும் பெண்கள் பணிசெய்வதற்கு இந்தச் சமூகம் அனுமதிக்கவேண்டும்" என்கிறார் அவர்.

புலிகள் அமைப்பின் முன்னாள் பெண் போராளிகளை மீண்டும் சமூகத்துடன் இணைப்பதற்கு ஏற்ற உருப்படியான திட்டங்கள் முன்வைக்கப்படவேண்டும் எனக் கூறும் இன்பராஜ் போரின் மத்தியில் சிக்குண்டு உடல் உறுப்பிழந்தவர்களாக மாறியிருப்பவர்கள் சமூகத்துடன் மீளவும் இணையும் வகையிலான தகுந்த பலனைத் தரவல்ல செயல்திட்டங்கள் முன்வைக்கப்படவேண்டும் என்றும் கூறுகிறார்.

முன்னாள் போராளிகளாக இனங்காணப்பட்டவர்கள் மத்தியிலுள்ள மன அச்சத்தினைப் போக்கும் வகையிலும் அவர்களும் இந்தச் சமூகத்தில் நல்ல குடிமக்களாக வாழ வழிசெய்யும் வகையிலுமான ஒருங்கிணைக்கப்பட்ட நடவடிக்கையினை அரசாங்கம் முன்னெடுப்பது அவசியமானது என அனைத்துலக நெருக்கடிகளுக்கான குழு அண்மையில் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் சுட்டிக் காட்டியிருந்தது.
மொழியாக்கம் செய்தவர் தி.வண்ணமதி

ஜயாவின் பதிவுகளும்-எனது பின்னூட்ட முரண்களும்…09 -ரூபன்

ஆண்டு 1975, மூன்றாம் பகுதி
தமிழர் விடுதலைக் கூட்டணியின் அந்தத் தீர்மானத்தின் பின்னணியில், அனைத்துலக மற்றும்
தேசிய ரீதியிலான ஒரு அரசியல் பரிணாம நிலைமையும் இருந்து கொண்டுதானிருந்தது.
மூன்றாம் உலகநாடுகளில் தமது தோல்வியைச் சந்தித்து வந்த அமெரிக்க ஏகாதிபத்தியம்,
வேறு புதிய முகாம்களை அமைத்துக் கொள்ளும்  அவசர அவசியமான நிலைக்குத் தள்ளப்பட்டது.
இந்நிலையில் 75ஆம் ஆண்டு சிறீமாவின் கூட்டரசாங்கத்தின் புதிய அரசியல் குடியரசுச்
சட்டத்தின் ஆண்டு நிறைவான 1975 மே 22ம் திகதி, கொழும்பு தெற்கு தேர்தல் தொகுதியில்
இருந்து இராஜினாமாச் செய்திருந்தார் யூ.என்.பி. தலைவர் ஜே.ஆர். ஜெயவர்த்தனா.
இராஜினாமாச் செய்த ஜெயவர்த்தனா, ”இடைத் தேர்தலை நடத்தும்படி” கோரிக்கையும்
விடுத்திருந்தார்…..72இல் இப்புதிய அரசியல் அமைப்புக் கொண்டுவரப்பட்டபோது, தந்தை
செல்வா எவ்வாறு நடந்துகொண்டாரோ, அதேபோல ஜே.ஆர் இப்பொழுது நடந்து கொண்டார். இப்போது
காங்கேசன்துறை இடைத்தேர்தலில் தந்தை செல்வா வென்றதும், ”தமிழீழ தேசிய இனம்
சுதந்திரமடைய வழங்கப்பட்ட ஒர் ஆணையாக நான் இந்த தேர்தலின் தீர்ப்பை கணிக்கின்றேன்”
என்றும்,  தமிழர் ஜக்கிய முன்னணியின் சார்பில் நான் இந்த ஆணையை நடைமுறைக்கிடுவதாக
எனது உறுதியான வாக்குறுதியை வெளிப்படுத்துகின்றேன்.” என்று தெரிவித்ததன் பின்னர்
ஜே.ஆர் இத்துணிச்சலான சவாலில் இறங்கினார்.
அமெரிக்க ஏகாதிபத்தியத்தை தம் உயிரைக்கொடுத்து எதிர்த்துவந்த மூன்றாம் உலகமக்களின்
வீரத்தை அறுவடைசெய்து, உயிருள்ள ஸ்ராலினிசத்துக்கு எதிராகவும் (விமர்சனத்துக்கு
அப்பால் அதன் தாயகக் கோட்பாட்டுக்கும்) அணிசேரா நான்காம் உலகத்தை உருவாக்கி, தனது
சமூகஏகாதிபத்தியத்தை நிலைநிறுத்த முற்பட்டது ரசியா…
இந்த ஆடுகளத்தில் கருத்தரித்து ஆடப்பட்டதுதான் ‘தமிழீழ விடுதலைப் போராட்டம்’!.
இந்தப் படுபயங்கரமான ஆடுகளத்துக்கு இருதரப்பினரும் வலதுசாரி மத்தியதர
வர்க்கத்தினையும் குட்டி முதலாளித்துவத் தரப்பினரையும் கூட்டி அணிதிரட்டும்
முயற்சியின் ஒரு திருப்பு முனையாக இலங்கையில் நிலவிவந்த இனவாதக் கொடும்வாளை கையில்
எடுக்கத்துணிந்தனர்…
தெற்கிலே சிறீமாவின் கூட்டரசாங்கத்துக்குள் வெடிப்பும் பிளவும் ஏற்பட்டிருந்தது.
நாட்டில் தொழிலாளி வர்க்கமோ தன்னிச்சையாகப் பொங்கி வெடிக்கத்தயாராக இருந்தது.
தெற்கிலே ஜே.ஆரின் ராஜினாமாவும், வடக்கிலே கூட்டணியின் புதிய அரசியல் அமைப்புக்கு
எதிராக மாபெரும் ஆர்ப்பாட்டமும் நடத்தது. இந்த ஆர்ப்பாட்டம் அரச பொலீஸ்
இயந்திரத்தால் தடுத்து நிறுத்தப்பட்டு, முள்வேலி அடைத்து ஒடுக்கப்பட்டும் இருந்தது.
(இம்முறை சுதந்திரதினம் தேர்தலை ஒட்டி வந்திருந்ததால் இவர்கள் அதில் அதிக
எதிர்ப்பைக் காட்டியிருக்கவில்லை.)
தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து தமிழீழச் சுதந்திரத்தின் ஆணையை தமதாக வெளிப்படுத்திய
கூட்டணியின் முதலாவது இப்போராட்டம் முட்கம்பிகளால் தடுக்கப்பட்டது, இவர்களின்
தீவிரவாத இளைஞர்களைக் கொதிக்கச் செய்தது. இதற்கு ஒரே மாற்றுவழி நம்மிடமுள்ள
”தமிழ்த்துரோகிகளை” ஒழிப்பதுதான் என்று இந்த ஆடுகளத்தைத் திறந்தது கூட்டணி!…
தெற்கிலே யூஎன்பிக்கு இருந்ததைவிடவும் வடக்குக் கிழக்கிலே சிறீமாவின் கூட்டணி
( வி. பொன்னம்பலத்தின்   முரண்பாட்டுக்கு வெளியே) தமிழர் கூட்டணிக்கு சவாலான
நெருக்குதலாகவே இருந்து வந்தது. இந்தநிலையில் துரையப்பாவை பல காரணங்களுக்காகப்
பழிவாங்குவது தமிழர் கூட்டணிக்குத் தவிர்க்கமுடியாத அவசரமாக அமைந்தது.
1973 மாசிமாதம் 10ஆம் திகதி அமிர்தலிங்கத்தைக் தமிழரசுக்கட்சியின் தலைவராக
நியமிக்கும் முன்மொழிவுக் கடிதத்தை சமர்ப்பித்த இராசரத்தினம், சித்திரை 09ஆம் திகதி
சென்னைக்கு சென்றடைந்திருந்தார்.
இந்தியாவில் இருந்த இவர் அமிர்தலிங்கத்தின் மகனான காண்டீபனுக்கு சென்னை பச்சையப்பன்
கல்லூரியில் அனுமதிப்பத்திரத்தைப் பெற்றார். 1973ஆம் ஆண்டு யூன் மாதம் 16ஆம் திகதி
சனிக்கிழமை இது பச்சையப்பன் கல்லூரியில் பதியப்பட்டது. ( இரசீது இல: 16778 :
விண்ணப்பப்படிவ இல: 5680. – நன்றி- ‘இராசரத்தினத்தின் நாட்குறிப்பிலிருந்து’ )
1973 யூன் 29ஆம் திகதி வெள்ளிக்கிழமை காண்டீபனும், திரு கபாலியின் சிபாரிசுக்
கடிதத்துடன் நவரத்தினத்தின் மகன் சிறீ நமச்சிவாயமும், ஜனார்த்தனன் மற்றும்
இராசரத்தினத்தால் பச்சையப்பன் கல்லூரியில் சேர்க்கப்பட்டனர். ( நன்றி: அதே
நாட்குறிப்பிலிருந்து)
மேற்படி இக்குறிப்புக்களைத் தருவதற்கு இரு முக்கிய காரணங்கள் இருக்கின்றன…
1. துரையப்பாவின் கொலையை அடுத்து, 77 தேர்தலுக்கான கூட்டணியினரின் தேர்தல்பிரச்சார
மேடைகளில், அமிர்தலிங்கமும் அவரது பாரியார் மங்கையற்கரசியும்  தமது மகன் காண்டீபன்
”துரையப்பாவின் கொலையை அடுத்து எந்தக்காட்டுக்குள்ளே எங்கே இருக்கிறான் என்று
தமக்குத் தெரியாது என்றும், இவன் சாப்பிட்டானா இல்லையா என்பதே தமக்குத் தெரியாது”
என்றும் நீலிக்கண்ணீர் வடித்த காட்சி இன்னும் என் நெஞ்சைவிட்டு அகல மறுக்கிறது! 
அதாவது இவர்களின் அன்றைய நாடகம்: காண்டீபனும் துரையப்பா கொலையில் சம்பந்தப்பட்டது
என்பதுதான்!
2. ஐயரின் இரண்டாவது பதிவின்படி இவர் தேடப்பட்ட நபர் என்பதாலுமாகும். இவர்
எதற்காகத் தேடப்பட்டார் என்று , ஜயர் தனது 21 பதிவுகள் வரையும்
வெளியிட்டிருக்கவில்லை! என்பதோடு அவரின் பதிவின் குறிப்பை கீழே தருகிறேன்…
” அப்போது தான் முதன் முதலாகப் பிரபாகரனைச் சந்திக்கிறேன். இங்கிருந்துதான்
பிரபாகரனுடனான வரலாறு ஆரம்பமாகிறது. பிரபாகரனைச் சந்தித்த போது, செட்டியிடம் சில
பலவீனங்கள் இருந்தாலும் அவர் துணிச்சல் மிக்கவரும், வீரமுள்ளவரும் என்பதால் அவருடன்
இணைந்து செயற்பட்டதாகக் கூறுகிறார். பலவீனங்களை நிவர்த்திசெய்துகொண்டால் செட்டியைத்
தான் தனது தலைவனாக ஏற்றுக்கொள்வதாகவும் அவர் கூறுகிறார். நாமும் அவருடன் இணைந்து
செயற்பட ஆரம்பிக்கிறோம். துரையப்பா கொலையில் தொடர்புடைய நால்வரில் கலாவதியும்
கிருபாகரனும் கைதுசெய்யப்பட பற்குணம் என்பவர் தமிழ் நாட்டிற்குத் தப்பிச்சென்று
விடுகிறார். பிரபாகரன் மட்டுமே இலங்கையில் இருக்கிறார்.
அவ்வேளையில் தான் தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவராக இருந்த அமிர்தலிங்கத்தின்
மகன் காண்டீபன் இந்தியாவிலிருந்து மயிலிட்டி என்ற இடத்திற்கு வருகிறார். இவரும்
தேடப்படுபவராக இருந்ததால் இந்தியாவில் தலைமறைவாகியிருந்தார்.” (ஆதாரம்:  ஜயரின்
பதிவு இரண்டு’)
மேலும் இப் பதிவில்…
”அவ்வேளையில் இளைஞர் பேரவையில் ஆதரவாளரான தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர்
குமரகுரு என்பவர் பிரபாகரனை இந்தியாவிற்கு அனுப்புவதாக உறுதியளித்திருந்தார்.
ஆனால் காண்டீபன் இலங்கைக்கு வந்ததும், பிரபாகரனை இந்தியாவிற்கு அனுப்புவதற்குப்
பதிலாக காண்டீபனை இந்தியாவிற்கு அனுப்பிவைக்கிறார். கொலையில் நேரடியாக ஈடுபட்ட
தன்னை அனுப்பாமல் காண்டீபனை அனுப்பிய இந்த நடவடிக்கை காரணமாக பிரபாகரன்
கூட்டணியினர் மீது வெறுப்படைந்து மறுபடி எம்மிடம் வருகிறார். அதன் பின்னர் தான்
இந்தியாவிற்கு இனித் தலைமறைவாகப் போவதில்லை என முடிபிற்கு வந்து எம்முடன் இணைந்து
அரசியல் வேலைகளில் ஈடுபடப்போவதாகக் கூறுகிறார். பிரபாகரனுக்குத் தெரிந்தவர்கள்
சிலர், நான், குலம், ராகவன், அனைவரும் இணைந்து சிலரது ஆதரவுடன் புத்தூர் வங்கிக்
கொள்ளையில் ஈடுபடுகிறோம். பிரபாகரன், செட்டியின் உறவினரான செல்லக்கிளி,
குமரச்செல்வம் ஆகியோர் நேரடியாக வங்கிக்குள் சென்று கொள்ளையில் ஈடுபடுகின்றனர்.”
(மேற்படி இவற்றை நிதானமாக வாசகர்கள் வாசிக்கவும்)
இனி, துரையப்பாவின் கொலையை அடுத்து அடுத்தநாள் வெளிவந்த செய்தித்தாள் பதிவு…
LTTE MASKED GUNMEN KILL JAFFNA MAYOR
- News paper clip (Daily News) on 28th July 1975
Mr. Alfred Duraiyappah Mayor of Jaffna and President of the SLFP branch in
Jaffna was shot dead on 27.07.1975 afternoon at Punnelavy in the Vaddukoddai
electorate when he was about to enter a temple.
Mr. D.K. Rajaratnam MMC a member of the management committee of the temple who
accompanied him was also shot at and injured in the arm. He is reported to be
out of danger. According to first reports three masked men shot at Mr.
Duraiyappah and Mr. Rajaratnam as they got off the Mayor’s car. Immediately
after the shooting the gunmen drove away in the Mayor’s car which the police
later found abandoned at Sendankulam. The police have launched massive search
for the killers.
A special police team headed by Mr. Ana Senevirathne D.I.G. Range B is now in
Jaffna conducting investigations The team was sent on the orders of the Prime
minister Mrs. Sirimavo Bandaranayake. The Jaffna Police cordoned off the entire
peninsula minutes after the shooting.
All vehicles are being searched by the Police in an attempt to apprehend the
assassins. The driver of the Mayor’s car has given the Police a brief
identification of the assassins with regard to their cloths. Police said.
Mr. Duraiyappah visits the temple every Sunday and Police believe the shooting
was planned.The inquest into the death of Mr. Duraiyappah will be held today by
the Malakkam Magistrate Mr. J.M.D. Jesurathnam. The Government Analyst and a
ballistic expert from Colombo are expected to testify at the inquest.
Thousands gathered at the Jaffna hospital as the news of Mr. Duraiyappah’s death
spread. The Minister of Posts and Telecommunications Mr. Chelliah Kumarasuriar
visited the hospital later in the evening. Mr. Duraiyappah was 48. He entered
politics in 1952 and became Mayor of Jaffna in 1958.
In 1960 (March) he created major upset in Jaffna politics when he beat the Tamil
Congress leader Mr. G.G. Ponnambalam and a Federal Party candidate at the
general election to win the Jaffna seat. In July of the same year he was
re-elected to the Jaffna seat defeating Mr. Ponnambalam and the Federal Party
candidate. He lost at the 1965 and 1970 general elections.He was educated at St.
Johns College Jaffna and later passed out as a Proctor from the Ceylon Law
College.
இதைவிட…
இக்கொலையில் ஈடுபட்டவர்கள் யார் யார் என ஜயர் தனது இரண்டாவது பதிவில்
சுட்டிக்காட்டியிருக்கிறார். அது பின்வருமாறு..
” இதன் பின்னர் பிரபாகரன் தனக்குத் தெரிந்தவர்களைச் சேர்த்துக்கொண்டு துரையப்பாவைக்
கொலைசெய்யும் முயற்சியில் வெற்றி பெறுகிறார். இதில் ஈடுபட்டவர்கள், பிரபாகரன்,
கிருபாகரன், கலாவதி, நற்குணராஜா என்ற நால்வருமே”
மேலும்…
” ஆனால் இக்கொலையை நிறைவேற்றியவர்கள் யார் என்பது வெளியுலகிற்கும் பொலீசாருக்கும்
தெரியாத இரகசியமாகவே இருந்தது. பின்னதாக கலாபதியையும் கிருபாகரனையும் பொலீசார்
கைதுசெய்துவிட்டனர்.”
இப்பொழுது எஞ்சியிருந்தவர்கள் பிரபாகரனும், நற்குணராஜா என்ற இருவருமே” (ஜயாவின்
இரண்டாவது பதிவின்படி..)
ஜயாவுடனான முரண்பாடு (03)
ஜயாவிடம் ஒரு கேள்வி:?  இதில் ‘‘நற்குணராஜா” என்பது யார்??
இந்த ‘நற்குணராஜா’ ஜயாவின் இதுவரையான (21 பதிவுகளிலும் காணாமல் போனதேன்?? ஜயா பதில்
சொல்வாரா???)
பற்குணம், துரையப்பாவின் கொலையில் கார் சாரதியாக பங்கெடுக்கவில்லையா??
ஜயாவின் ஜந்தாவது (05) பதிவு…
” அதே வேளை பற்குணம் புகைப்பிடிக்கும் பழக்கத்தைத் தவிர சந்தர்ப்பங்களில் மதுபானம்
அருந்தும் பழக்கத்தையும் கொண்டிருந்தார். தவிர, இந்தியாவிலிருந்து திரும்பியதும்
இந்தியாவில் பெண்களுடன் தொடர்புகள் கொண்டிருந்ததாகவும் எமக்கெல்லாம் கூறினார்.
மத்தியகுழுக் கூட்டங்களில் பிரபாகரன் இது குறித்து விவாதங்களை
முன்வைக்காவிட்டாலும், அதற்கு வெளியில் எம்மைத் தனித்தனியாகச் சந்தித்து, பலதடவைகள்
பற்குணத்தின் இயல்புகள் குறித்து எம்மிடம் குறைகூறுவது வழமை. பற்குணம்
ஒழுக்கமற்றவர் என்பதைப் பிரபாகரன் எம்மிடம் கூறுவார்.”
மேலும்…
” பிரபாகரனைப் பொறுத்தவரை தேனீர், கோப்பி போன்றவற்றை கூட அருந்தாத தூய
ஒழுக்கவாதியாகவே காணப்பட்டார். அவரைப் பின்பற்றிய எம்மில் பலர் இந்த ஒழுக்கவாதத்தை
கடைப்பிடித்திருந்தனர். பிரபாகரன் மீதிருந்த தனிமனிதப்பற்று என்பது பற்குணம்
கூறுவதை ஏற்கத் தடையாக இருந்தது. பிரபாகரனுக்கும் பற்குணத்திற்கும் இடையில் நிகழும்
விவாதத்தில் நாமெல்லாம் மௌனம் சாதித்தாலும் பிரபாகரனை இந்தியாவிலிருந்து திடீரென
வந்த பற்குணம் குறைகூறுவது எமக்கெல்லாம் நியாயமாகப்படவில்லை.-”
இங்கே கவனிக்கப்பட வேண்டியது…
” இந்தியாவிலிருந்து திடீரென வந்த பற்குணம் குறைகூறுவது எமக்கெல்லாம்
நியாயமாகப்படவில்லை.-” என்ற ஜயரின் கூற்றில் இருக்கும் நியாயத்தன்மைதான்!
பற்குணம் எனப்படும் ‘சரவணன்’ பற்றி ‘லங்காராணி’ பதிவுகளை இங்கே விட்டுச் செல்கிறது.
இப்பதிவு 1978 ஆண்டே அச்சேறியும் உள்ளது.
லங்காராணியில் பயணம் செய்யும் சரவணன் எனப்படும் ”பற்குணம்” இப்பயணத்தின்
பாத்திரத்தைக் கடந்து (இதை வாசகர்கள் வாசித்துப் பார்க்கவும்) இறங்கும்போது
உணர்ச்சிவசப்படும் இளைஞனாகப் பதியப்பட்டிருக்கிறது.
இவன் தனது கையை வில்லுக்கத்தியால் அறுத்து, ஒழுகிய இரத்தத்தால் அந்தக்கப்பலில்
எழுதிய வாசகமும் லங்காராணியில் பதிவாகியிருந்தது. இப்பாத்திரத்தில் வரும்
வெள்ளைவேட்டிக்காரன் அவரை நிச்சயம் ‘பண்ணைக்கு’ வரும்படி வற்புறுத்துகிறார்.—-
குறிப்பு : (லங்காராணியில்  பற்குணம் வெள்ளவத்தையில் ஒரு முதலாளியின் மகன் போல்
நடித்து வாழ்வதாகவே தகவல்கள் உண்டு!)
பற்குணம் பற்றிய ஜயரின் பார்வை: ” பற்குணம் இந்தியாவில் வாழ்ந்த வருடங்களில் ஈழப்
புரட்சி அமைப்பு என்ற ஈரோஸ் (EROS) உடன் தொடர்புகளை ஏற்படுத்தியிருந்தார். அருளர்
என்ற அருட்பிரகாசத்துடன் ஏற்பட்ட தொடர்புகளூடாக அரசியல் விடயங்களில் அக்கறை
உடையவராகவும் அதே வேளை ஈரோஸ் அமைப்பின் அனுதாபியாகவும் கூட மாற்றமடைந்திருந்தார்.”
ஆதாரம் : ஜயாவின் பதிவு 05…
ஈரோசின் ஆதரவாளராகக் இவர்களால் கருதப்பட்ட பற்குணம் இவர்களின் மத்திய குழுவில்
வைத்த கோரிக்கை: ”தொடர்ச்சியான விவாதங்களின் பின்னர் பற்குணம் ஒரு கருத்தை
முன்வைக்கிறார். அவர் தனியே பிரிந்து சென்று புதிய அமைப்பாக இயங்க விரும்புவதாகவும்
அதற்காக 25 ரூபா பணமும் ஒரு கைத்துப்பாக்கியும் வழங்குமாறு கோருகிறார். இந்தக்
கோரிக்கை வியப்பாக இல்லாவிட்டாலும் அதிர்ச்சி தருவதாக அமைந்தது என்னவோ உண்மைதான்.”
(ஆதாரம் ஜயரின் பதிவு 05)
பற்குணம் என்ற போராளியின் அரசியற் படுகொலை!
”பற்குணம் இந்தக் கோரிக்கையை மத்தியகுழுவில் தான் முன்வைக்கிறார். அப்போது
பிரபாகரன் ஏதும் பேசவில்லை. மத்திய குழுக் கூட்டம் முடிவடைந்ததும் பிரபாகரன்
எம்மைத் தனித் தனியே சந்திக்கிறார். அப்போது, இயக்கத்திலிருந்து விலகிச் சென்று
புதிய இயக்கம் உருவாக்கினால் மரண தண்டனை என்பதை பற்குணம் மறந்துவிட்டுப் பேசுகிறார்
என்றும், இவருக்கு மரண தண்டனை தான் தீர்வு என்றும் எல்லோரிடமும் கூறுகிறார்.
இந்த விடையம் பற்குணத்திற்குத் தெரியாது. அவர் தவிர்ந்த, நான் உள்பட்ட அனைத்து
மத்திய குழு உறுப்பினர்களும் அவர் கூறுயதை ஆமோதிக்கிறார்கள். நாம் ஒரு இராணுவக்
குழு அதற்கு இராணுவக் கட்டுப்பாடுகள் உண்டு; மீறினால் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்;
இயக்கம் முழுவதுமே அழிக்கப்பட்டுவிடும் என்ற கருத்துக்கள் தான் மேலோங்குகிறது.
இப்போது நாம் அனைவருமே பற்குணத்தின் மரண தண்டனையை ஏற்றுக்கொள்கிறோம். அவர்
கொல்லப்பட வேண்டியவர் தான் என்பது எம்மளவில் முடிபாகிவிட்டது.”
பற்குணம் என்ற போராளி கொல்லப்பட்ட விதம்:
”இதனிடையே தாயகத்தில் பற்குணம் கொல்லப்படுவதற்கான முடிபு உறுதிப்படுத்தப்படுகிறது.
அவ்வேளையில் பற்குணம் கொழும்பிற்கு செல்கிறார். கொழும்பில் வேலை
பார்த்துக்கொண்டிருந்த எமது மத்திய குழு உறுப்பினரான நாகராஜா(வாத்தி), பற்குணத்தை
புளியங்குளம் முகாமிற்கு அழைத்து வருகிறார். அங்கு இரவிரவாக பற்குணத்துடன்
பிரபாகரன் மற்றும் மத்திய குழு உறுப்பினர்கள் நண்பர்களாகப் பேசிக்
கொண்டிருக்கின்றனர். நள்ளிரவிற்குச் சற்றே பிந்திய வேளையில் பற்குணத்தோடு உரையாடிக்
கொண்டு இருக்கையிலேயே அவரைத் தனது கைத்துப்பாக்கியால் பிரபாகரன் கொலை
செய்துவிடுகிறார். அவ்வேளையில் பேபி, தங்கா, நாகராஜா, குலம் போன்றோர்
அங்கிருக்கின்றனர். பற்குணம் இறந்து போகிறார்.
துரையப்பா கொலைச் சம்பவத்திற்கான செலவுகளுக்காக தனது தங்கையின் நகைகளை அடகுபிடித்து
பணம்கொடுத்த பற்குணத்தையே கொலைசெய்ய வேண்டியதாகிவிட்டது என்று பிரபாகரன் பின்னரும்
பல தடவைகள் கூறி வருந்தியிருக்கிறார்.”
குறுக்கீடாக ஓர் ஆதாரம்:
ஒன்று..
இரண்டு:
இடையே ஒரு ஜயரின் ‘சப்பைக்கட்டு’—–
”இந்தச் சம்பவம் நிகழ்ந்த போது நான் சேலத்திலேயே இருந்ததால் இது எனக்கு உடனடியாகத்
தெரியாது.”
(தெரிவதால் ஏதாவது மாற்றம் நிகழுமா? அதுதான் நீங்கள் மேலேயே கூறிவிட்டீர்களே!)
உங்கள் மனச்சாட்சிக்கு கொஞ்சம் கஸ்டமாக இருக்கிறது போலத் தெரிகிறது! இதற்குமேல்
பற்குணத்தின் மரணம் பற்றி ஜயருக்கு எதுவும் தெரியாது…
‘லங்காராணியின்’ கருத்துப்படி சரவணனான பற்குணத்தின் காதலி , லங்காராணியில் வரும்
”ராணி”.
ஆனால் ஜயரின் கருத்துப்படி சரவணனான பற்குணம் இக் காதலுக்காகச் சுட்டுக்
கொல்லப்படவில்லை!!
அவர் புதிய இயக்கத்தைக் கோரினார்….இது  (ஜயரின் ஆதாரம்…)
தொடரும்.
ரூபன்

ஜயாவின் பதிவுகளும்-எனது பின்னூட்ட முரண்களும்…08-ரூபன்

ஆண்டு 1975, இரண்டாம் பகுதி
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு (சர்வதேச)அரசியலைப் பொறுத்து, இவ்வாண்டு அன்று
முக்கியமான ஆண்டாக இருந்தது. இவ்வாண்டில் அன்று அரசியல் அரங்கில் பல
‘விசித்திரங்கள்’ நடக்கத் தொடங்கின.
முதலில் உள்நாட்டில்: சிறீமாவின் கூட்டு முன்னணிக்குள், வெடிப்புக்கள் உருவாகி
இருந்தன. பல புதிய கட்சிகள் உருவாகின. (காங்கேசன்துறை வேட்பாளர் வி.பொன்னம்பலத்தின்
முரண்பாடும் இவ்வாண்டில் வெளிப்பட்டிருந்தது – பாராளுமன்ற ‘இடது அரசியலிலும்’.
…)மறுபுறத்தே பாராளுமன்ற அரசியலுக்கு வெளியே தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகளை
மதித்து, கம்யூனிசக் கட்சியின் இடது (சீனசார்பில்) இருந்து: ‘தமிழ் மக்கள் ஜனநாயக
முன்னணி’ என்ற ஒன்றும் உருவாகி இருந்தது. இருந்தும் இது தமது ‘அரசியல் அறிக்கையை’
முன்வைத்து ஒர் போர்க்குணமுள்ள அமைப்பாக அன்று வெளிவந்திருக்கவில்லை…..
அன்று சுதந்திர தினத்துக்குப் பின்னான இரண்டாம் நாள் நடந்த (06 .02 .1975)
காங்கேசன்துறை இடைக்காலத் தேர்தலின் இறுதி அரசியற் கூட்டத்தின் போது……
கூட்டணியின் ‘முற்றவெளி’க் கூட்டம் மிகவும் உணர்ச்சிக் கொந்தளிப்பாக நடந்து
முடிந்தது. வி.பொன்னம்பலம் ‘ஜந்தம்சக் கோரிக்கையை’ முன்னிறுத்தி தேர்தல் பிரச்சாரம்
செய்தபோதும், கூட்டணியினரின் தேர்தல் பிரச்சாரம், அதை எதிர்கொள்வதற்குப் பதில்,
துரையப்பாவின் ”துரோகத்தனத்தையும்” (தமிழாராய்ச்சி படுகொலை -74, மற்றும் யாழ்
‘கம்பஸ்’ திறப்பு விழாவின் போது: -நாட்டியப் பேரொளியை- (பெயர் இங்கே
தவிர்க்கப்படுகிறது!) கூட்டிக் கொடுத்ததாகவும், அரச இராணுவப் பொலிசாரை ”சிங்களப்
பொலீஸ் நாய்கள்” என்ற அடிப்படையிலும் எதிர்ப் பிரச்சாரங்கள் அமைந்தன.
தமிழாராய்ச்சி நடவடிக்கையின் சன்சோனிக்கமிசன் விசாரணையில் சாட்சியளித்த சீ.ஜ.டி
பத்மநாதனின் புலன் விசாரணைச் சாட்சியத்தை அடுத்து, இவர்கள், இவரையும் ”தமிழ்த்
துரோகி” என அவ் விசாரணையிலேயே தெரிவித்ததும் இங்கே குறிப்பிடத்தக்கது…
(தமிழ்ப் பொலீசார் ஒருவர் ”தமிழ்த் துரோகியாக” வெளிப்படுத்தப்பட்டதும் இதுவே முதல்
நிகழ்வாகும்!)
வி.பி.ஜந்தம்சக் கோரிக்கையை வெளியிட்டு, வீடுவீடாக வாக்குக் கேட்டபோது…..
சிறீமாவின் குமாரசூரியர்: ” இந்த ஜந்தம்சக் கோரிக்கை கம்யூனிசக் கட்சியின்
கோரிக்கையே ஒழிய, இது ‘கூட்டுமுன்னணியின்’ கோரிக்கை அல்ல” என இக்கோரிக்கையை
-சுதந்திரக் கட்சி – சார்பாக எதிர்த்தும் இருந்தார்.
இதையடுத்து வி.பொன்னம்பலம் தேர்தலில் நிற்பதற்கு மறுத்தார்…
இதையடுத்து ”கூட்டுமுன்னணி”- கம்யூனிச கட்சி உட்பட- அவரைத் ‘திருப்திப்படுத்தி’
தேர்தலில் நிற்கவைத்தது..
தேர்தலில் தந்தை செல்வா வெற்றி பெற்றபோதும், வி.பி 9.000 வாக்குக்களைப்
பெற்றிருந்தார்! இது கடந்தகால தேர்தலில் (1970) இவர் இதே தொகுதியில் (இரண்டாவது
இடமாகப்) பெற்ற வாக்குகளை விட அதிகமாக இருந்தது என்பதும் இங்கு
குறிப்பிடத்தக்கது!..
இடைத் தேர்தலில் தந்தை செல்வா பெரும்பான்மை வாக்குகளால் வெற்றி பெற்றதன் பின்னர்
ஆற்றிய உரையில்: “ஆட்சியிலிருந்த சகல சிங்கள அரசாங்கங்களும், எமது அடிப்படை
உரிமைகளை மறுத்தும் எம்மை ஒடுக்கப்பட்ட மக்களின் நிலைமைக்குத் தள்ளுவதற்காக
சுதந்திரத்தில் இருந்து பெருக்கெடுத்த அதிகாரத்தைப் பயன்படுத்தியும் வந்துள்ளன
என்பது துன்பகரமானது. நான் எனது மக்களுக்கும் நாட்டுக்கும் கூற விரும்புவது
என்னவெனில், ஏற்கனவே தமிழ் மக்களுக்குரிய இறைமையை அனுபவித்த தமிழீழ தேசிய இனம்
சுதந்திரமடைய வழங்கப்பட்ட ஒரு ஆணையாக நான் இந்த தேர்தலின் தீர்ப்பை கணிக்கின்றேன்
என்பதே ஆகும். தமிழர் ஜக்கிய முன்னணியின் சார்பில் நான் இந்த ஆணையை
நடைமுறைக்கிடுவதாக எனது உறுதியான வாக்குறுதியை வெளிப்படுத்துகின்றேன்.” என்று
கூறியிருந்தார்.
எப்பொழுதும் மக்களுடன் பேசாத இந்த மேல் தட்டு வர்க்கத்தினர், ”இந்த ஆணையை
நடைமுறைக்கிடுவதாக எனது உறுதியான வாக்குறுதியை வெளிப் படுத்துகின்றேன்.” –
என்று(காலனித்துவத்தில்) யாருடன் பேசினார்கள்??
சுருக்கமாக அன்று நிலவிய சர்வதேச நிலைமைகள்….
லாவோஸ், கம்போடியா…… முதல் வியட்னாம் வரை கைப்பற்றிக் கொண்டிருந்த அமெரிக்கப்
படைகள், தெற்காசியாவில் ஏகாதிபத்திய எதிர்ப்பின் வீரம்செறிந்த மக்கள்
போராட்டத்துக்கு முகங்கெடுக்க முடியாமல் புற முதுகிடும் நேரம் நெருங்கியிருந்தது…..
இதனால் தெற்காசியாவின் மறுமுனையைக் கைப்பற்றும் அமெரிக்காவின் வேண்டுகோளின் பதிலாக
இவை வெளிப்பட்டனவா?…
வியட்னாம் மக்களின் துணிகரமான வீரம்செறிந்த போராட்டம், அமெரிக்காவின் படுதோல்வியை
இவ்வருடத்தின் ஏப்பிரல் மாதத்துக்கு முன்னரே உறுதிப்படுத்திவிட்டது!
‘தமிழீழக் கோரிக்கையை’ 60 களில் முன்வைத்த ‘அடங்காத்தமிழன்’ சுந்தரலிங்கத்தின்
கோரிக்கையையும், பின் நவரத்தினத்தின் கருத்தையும் புறக்கணித்த தமிழரசுக்கட்சி, 1960
டிசம்பரில் தமிழரசுக் கட்சி செயற்குழுவினுள் சுந்தரலிங்கத்தின் கருத்தை ஒரு
பிரேரணையாக வவுனியாவைச் சேர்ந்த ஏ. சிற்றம்பலத்தினால் மீண்டும்
கொண்டுவரப்பட்டபோது!…. (இது 1960ல் சிறிமாவோ பண்டாரநாhக்கவின் அரசாங்கம் ஆட்சிக்கு
வந்ததன் பின்னர் தமிழரசுக் கட்சி அரசாங்கத்துடன் நடாத்திய பேச்சுவார்த்தைகள்
முறிந்து போனதன் பின்னராகக் கொண்டுவரப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.)
இது முன்வைக்கப்பட்டபோது.. ‘தமிழரசுக் கட்சியின்’ – கமிட்டியில் -  37 பேர் இதற்கு
ஆதரவாகப் பேசிய நிலைமையில், அதற்கு எதிரான விவாதத்துக்கு மீண்டும் முன்னணியில்
நின்றவர் – இன்றைய (75இல்) தமிழரசுக் கட்சியின் தலைவர் அமிர்தலிங்கமே!
இவரின் இறுதிவரையான பிரச்சாரம்:   “பிரிந்து போவது பற்றி யோசிப்பதற்கு இன்னமும்
காலம் வந்துவிடவில்லை”  என்பதாகவே இருந்தது…
இன்று புதிதாகக் காலம் எல்வாறு கனிந்தது??
மாசி மாதத்தில் இருந்து சித்திரை மாதத்துக்குள், கூட்டணி முதல்  – யூ.என்.பி ஈறாக
அமெரிக்காவுக்கு தமது விசுவாசமான உறுதியை வெளிப்படுத்தியும் இருந்தன.
ஏப்பிரல் மாதத்தின் முதல் இரு வாரத்தில் தனது தோல்வியை உறுதி செய்துகொண்ட
அமெரிக்கா, தெற்காசியாவின் -இலங்கையில்- தனது நிலையை வலுப்படுத்தத் தொடங்கியது…
1975 ஆம் ஆண்டு மே’ மாதம் 14 -16 திகதிகளில் இலண்டனில் நடந்த ‘றுழசடன ஊரி ஊசiஉமநவ
-75′ போட்டியில் முதலாகப் பங்குபற்றிய இலங்கை துடுப்பாட்டாக்குழுவின் விளையாட்டின்
போது, ‘ஈழ விடுதலை முன்னணி’ரினர் -இலண்டன்- மைதானத்தில் திடீரென படுத்திருந்து
எதிர்ப்புத் தெரிவித்தனர்.
இதையடுத்து ….
1975 ஏப்பிரல்’ 05 ஆம் திகதி, தமிழ்நாடு (இந்தியாவில்), திருவான்மையூரில் இருந்த
‘ஸ்ரேட் பாங்கில்’ கொள்ளைச்சம்பவம் இடைபெற்றது!
இன்று வங்கி மூடும் நேரத்தில் உட்புகுந்த நான்கு முகமூடி அணிந்த துப்பாக்கி
நபர்கள், மனேஜர் உட்பட அங்கிருந்த ஜந்து ஊழியர்களையும் அறைக்குள் தள்ளிப்
பூட்டிவிட்டு, மொத்தமாக 36,000 ரூபாய்களைக் கொள்ளையடித்திருந்தனர்.
(இக்கொள்ளைச் சம்பவம் தற்போது நடந்த -2010- சென்னை ரயில் குண்டுவெடிப்புச்
சம்பவத்தில், மீண்டும் இது ஈழத்தமிழர் ஆதரவுக் கொள்ளையா? என ஆராயப்பட்டதும்
குறிப்பிடத்தக்கது……)
இக்கொள்ளைச் சம்பவத்தின் பின்னரே ‘செட்டி’ இலங்கையில் கைதுசெய்யப்பட்டார்! என்பதும்
குறிப்பிடத்தக்கது….
தொடரும்…
ரூபன்