தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 2 september 2012

தமிழகத்தில் மீண்டும் சூடுபிடிக்கும் இலங்கைப் படையினர் பயிற்சி விவகாரம்!


இந்தியா இலங்கையுடன் சேந்து சீனாவுக்கு பயந்ததாக சொல்லி தமிழருக்கு எதிராக செயலாற்றுகையில் தமிழ்நாட்டு தமிழர் இந்தியாவின் எதிரிகளுடன் இணைந்து தமிழ்நாட்டை தனிநாடாக்கினால் தவறா????தமிழா சிந்திப்பாயா!!!
இலங்கைப் படையினருக்குப் பயிற்சியளிக்கும் விவகாரம் தமிழ்நாட்டில் மீண்டும் பெரும் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது.
வெலிங்டனில் உள்ள இந்தியப் பாதுகாப்பு அதிகாரிகள் பயிற்சி நிலையத்தில் இரண்டு இலங்கைப் படை அதிகாரிகளுக்கு பயிற்சியளிக்கப்படும் விவகாரம் தெரிய வந்ததும், உடனடியாகவே இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் எழுதினார் தமிழக முதல்வர் ஜெயலலிதா.
இராணுவ அதிகாரியான மேஜர் திஸநாயக்க, கடற்படை அதிகாரியான கப்டன் ஹேவாவசம் ஆகியோரை தமிழகத்தை விட்டு மட்டுமன்றி இந்தியாவை விட்டே வெளியேற்ற வேண்டும் என்று ஜெயலலிதா கோரியிருந்தார்.
அவர் இது போன்ற கோரிக்கையை முன்வைப்பது இது முதலாவது தடவையல்ல.
ஏற்கனவே தாம்பரம் விமானநிலையத்தில் பயிற்சி பெற்ற 9 இலங்கை விமானப்படையினரை வெளியேற்றக் கோரியும், பின்னர் வெலிங்டனில் கருத்தரங்கிற்காக சென்ற மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ் உள்ளிட்ட இலங்கை இராணுவ அதிகாரிகளை வெயியேற்றக் கோரியும் அவர் கடிதங்களை அனுப்பியிருந்தார்.
தமிழக முதல்வரின் கடிதம் இந்தியப் பிரதமரின் கவனத்திற்குச் சென்றதோ இல்லையோ அது தமிழ்நாட்டில் உள்ள ஏனைய அரசியல் கட்சிகளுக்குப் புதிய உற்சாகத்தை கொடுத்துள்ளது.
இப்போதெல்லாம் தமிழக காங்கிரஸ் உட்பட்ட எல்லாக் கட்சிகளுமே இலங்கை விவகாரத்தைப் பற்றி அறிக்கை வெளியிடுவதில் ஆர்வம் காட்டுகின்றன.
இலங்கைப் படையினருக்கு பயிற்சியளிக்கப்படும் விவகாரத்தில் கட்சி வேறுபாடுகளின்றி தமிழ்நாடே எதிர்க்கின்ற நிலை உருவாகியுள்ளது.
இதற்கு காங்கிரஸ் தலைவர்கள் கூட விதிவிலக்காக இல்லை.
டெசோ மாநாடு பற்றிய வாதப்பிரதிவாதங்கள் சற்று ஓயத் தொடங்கியுள்ள நிலையில் இலங்கைப் படையினருக்கு பயிற்சியளிக்கப்படும் விவகாரம் எல்லாக் கட்சிகளுக்குமே உற்சாகத்தைக் கொடுத்துள்ளது.
மத்திய அரசுடன் அறிக்கைப் போர் ஒருபுறம் நடக்க இதைச் சாட்டாக வைத்து தமக்கிடையில் குற்றச்சாட்டுகளை சுமத்திக் கொள்வது இன்னொருபுறம் நடக்கிறது.
வீதி மறியல், ரயில் மறியல், முற்றுகைப் போராட்டங்கள், உண்ணாவிரதம், உருவபொம்மை எரிப்பு என்று தமிழக அரசியல் கட்சிகளின் போராட்டங்கள் சுறுசுறுப்படைந்துள்ளன.
இவையெல்லாம் இலங்கை அரசுக்கு வெறுப்பை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.
ஏற்கனவே மூன்று நான்கு முறை இலங்கைப் படையினரை தமிழ்நாட்டில் இருந்து வெளியேற்ற இணங்கிய மத்திய அரசு இம்முறை அதில் அவ்வளவாக அக்கறை காண்பிக்கவில்லை.
தமிழக முதல்வரிக் கடிதத்திற்கு பிரதமரிடம் இருந்து பதில் கூட வரவில்லை.
இந்த விவகாரம் பூதாகரமாகி வந்தநிலையில் தமிழ்நாட்டு தலைவர்கள் எதிர்ப்பு இருந்தாலும் இலங்கைப் படையினருக்கு பயிற்சிகள் தொடரும் என்று அறிவித்து சர்ச்சையை இன்னும் சூடாக்கினார் பாதுகாப்பு இணை அமைச்சர் பல்லம் ராஜு.
இது தமிழக அரசியல் தலைவர்களுக்கு கடும் சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டின் உணர்வுகளுக்கு மத்திய அரசு மதிப்பளிக்கவில்லை, தம்மைக் காயப்படுத்துகிறது என்று அவர்கள் கடுப்பாகினர்.
மத்திய அரசில் அங்கம் வகிக்கும் திமுக கூட இதனை கடுந்தொனியில் கண்டிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது,
உண்மையில் திமுக வுக்கு இந்த விவகாரம் ஒரு சோதனை தான்.
ஏனென்றால் மத்திய அரசிலும் தொடர்ந்து நிலைத்திருக்க வேண்டும். அதேவேளை மத்திய அரசின் செயற்பாடுகளையும் கண்டிக்க வேண்டும் என்ற இருதலைக் கொள்ளியின் நிலை.
இந்தநிலையில் தமிழக முதல்வர் மீண்டும் ஒரு கடிதத்தை பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு எழுதினார்.
அதைப் படிப்பதற்கு புதுடெல்லியில் மன்மோகன் சிங் இருக்கவில்லை. அவர் ஈரான் புறப்பட்டுச் சென்றிருந்தார்.
முன்னரெல்லாம் தமிழ்நாட்டில் இருந்து எதிர்ப்புக் கிளம்பியதும் இலங்கைப்படை அதிகாரிகளை வேறு மாநிலங்களுக்கு மாற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. இம்முறை அப்படி நடந்து கொள்ளவில்லை.
அதுமட்டுமன்றி பல்லம் ராஜுவின் மூலம் கடும்போக்கான கருத்தையும் வெளியிட்டது.
கடந்த மே மாதம் தொடக்கம் இரு இலங்கை அதிகாரிகளுக்கும் வெலிங்டனில் பயிற்சியளிக்கப்பட்டு வருகிறது.
11 மாதங்கள் நடக்கவுள்ள இந்தப் பயிற்சியில் இவர்கள் பங்கேற்பது தொடர்பாக மாநில அரசுக்கு தகவல் வழங்கவில்லை.
முன்னைய சந்தர்ப்பங்களில் தமிழ்நாட்டின் எதிர்ப்பை வெறும் உணர்வு பூர்வமான விடயமாகவே மத்திய அரசு அணுகியுள்ளது.
விவகாரம் வெளியே தெரிந்து போனதால் இலங்கைப் படையினர் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டனரே தவிர, தமிழ்நாட்டில் பயிற்சியளிப்பதில்லை என்ற கொள்கை முடிவு எடுக்கப்படவில்லை.
அதனால்தான் தாம்பரத்தல் விமானப் படையினருக்கும் வெலிங்டனில் ஜெகம் டயஸுக்கும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வெளியேற்றப்பட்ட போதும் வெலிங்டனில் பயிற்சி பெற்ற இலங்கை படை அதிகாரிகள் வெளியேற்றப்படவில்லை.
இலங்கை விவகாரத்தில் தமிழநாடு அரசுக்குத் தெரியாமல் பயிற்சி கொடுப்பது என்ற நிலைப்பாட்டிலேயே இந்திய அரசு இருக்கிறது என்பது இதன்மூலம் உறுதியாகிறது.
இப்போது அதுபற்றி தெரிந்தாலும் பரவாயில்லை என்று குளிர்விட்டுப் போன நிலைக்கு வந்துள்ளது போலுள்ளது.
பல்லம் ராஜுவின் கருத்து அதனையே நிரூபிக்கிறது.
தமிழ்நாட்டின் உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுக்காமல்  மத்திய அரசு நடந்து கொள்வது  தமிழக அரசியல் கட்சிகளுக்கு கடும் சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
எனினும் மன்மோகன் சிங் நாடு திரும்பிய பின்னர் தான் இலங்கைப் படையினரை வெளியேற்றுவது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று மத்திய அமைச்சர் நாராயணசாமி கூறியிருந்தார்.
வெலிங்டனில் பயிற்சிபெறும் இரு இலங்கை அதிகாரிகளையும் குறைந்த பட்சம் வேறு மாநிலத்துக்கு மாற்றவதற்கேனும் இந்திய பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை எடுக்கவில்லை.
அதற்கும் கூட பிரதமர் மன்மோகன் சிங்கை எதிர்பார்ப்பதாக கூறப்பட்டது.
இந்த முடிவை எடுப்பதற்கு மன்மோகன் சிங் தேவையில்லை. அது ஒன்றும் அவரின் கீழ் உள்ள அமைச்சும் அல்ல.
பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே. அந்தோனி நினைத்திருந்தால் அந்த முடிவை எடுத்திருக்கலாம்.
அவரே இன்று இந்திய அமைச்சரவையில் நம்்பர் 2 ஆக இருக்கிறார்.
ஆனால்  அவர் அந்த முடிவை எடுக்க விரும்பவில்லை என்பதே உண்மை.
தற்போது இந்தியாவில் 1500 வரையிலான இலங்கைப் படையினர் பயிற்சி பெற்று வருகின்றனர்.
இந்தநிலையில் ஒரேயடியாக இலங்கைப் படையினருக்கான பயிற்சிகளை இந்தியாவினால் நிறுத்திவிட முடியாது.
அதுவும் கடந்த வாரம் இருநாட்டு இராணுவ அதிகாரிகளுக்கும்  இடையிலான சந்திப்பு கொழும்பில் ஆரம்பமான போதே இந்த விவகாரம் சூடுபிடித்திருந்தது.
தமிழ்நாட்டின் அழுத்தங்களுக்கு அடிபணிந்து இலங்கைப் படையினருக்கான பயிற்சிகளை இந்தியா இடைநிறுத்தினால், சீனாவுடன் இன்னும் அதிகமான நெருக்கத்தை ஏற்படுத்தி விடும் என்பதே புதுடெல்லியின் கவலை.
இந்த அச்சம் இந்தியாவின் இராஜதந்திரிகள், அரசியல்வாதிகள் என எல்லா மட்டங்களிலும் உள்ளது.
சீனாவுக்காக இலங்கையை கைக்குள் போட்டுக்கொள்ள வகுத்த புதுடெல்லியின் வியூகம், தமிழ்நாட்டைத் தமது கட்டுகு்குள் வைத்திருப்பதற்குச் சவாலாக மாறியுள்ளது.
தமிழ்நாட்டின் நம்பகத் தன்மையை புதுடெல்லி இழந்து வருவது, இந்தியாவின் சமஷ்டி முறைக்கான புதிய அச்சுறுத்தலாக உருவெடுக்கலாம் என்பதை புதுடெல்லி கவனத்தில் கொள்வதாகவே தெரியவில்லை.
ஹரிகரன்

Geen opmerkingen:

Een reactie posten