வல்வெட்டித்துறையைச் சேர்ந்த பெண் மற்றும் அவரது இரண்டு குழந்தைகள் கடந்த 9ம் திகதி வடமேற்கு லண்டனில் சடலங்களாக மீட்கப்பட்டு இருந்தனர்.
இந்த மரணங்கள் குறித்து ஸ்கொட்லன்ட்யாட் பொலிசார் மற்றும் பிரதேசத்திற்குரிய பொலிஸ் நிலைய விசாரணை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.
தற்கொலை செய்து கொண்ட 33 வயதுடைய ஜெயவாணி வாகீஸ்வரனின் பிரேதே பரிசோதனை அறிக்கை நேற்று வெளியாகியுள்ளது. அவ்வறிக்கையின்படி, ஜெயவாணி வாகீஸ்வரன் கையிற்றில் தொங்கியதனால் ஏற்பட்ட கழுத்து நெரிசலால் மரணமாகியுள்ளதாக பொலிசார் உறுதியான முடிவுக்கு வந்துள்ளனர்.
எனினும் இவர் தற்கொலை செய்வதற்கு முன்னதாக அல்ககோல் பாவித்தமை, குறிப்பாக மது அருந்தி இருப்பதான எந்த தகவல்களும் அவரது பிரேத பரிசோதனையில் வெளிவந்ததாக பொலிசாரோ அல்லது வைத்தியசாலைத் தரப்புகளோ குறிப்பிடவில்லை. அத்துடன், இந்த சம்பவத்திற்கு முக்கியத்துவம் அளித்த பிரித்தானிய ஊடகங்களும் அதுபற்றிக் குறிப்பிடவில்லை.
இதேவேளை மரணமாவதற்கு முன்பு ஜெயவாணியால் கொலை செய்யப்பட்டதாகக் கருதப்படும் அவரது இரண்டு குழந்தைகளான 5 வயதுடைய அனோபன், மற்றும் 8 மாதமான நதீபன் ஆகியோரது மரணங்கள் குறித்த பிரேத பரிசோதனைகள் இன்று இடம்பெறவுள்ளன. அதன் அடிப்படையில் அதன் பிரேத பரிசோதனை அறிக்கையும் இன்றே வெளிவரவுள்ளது.
இந்த வகையில் தற்கொலை குறித்து இறுதியாகக் கிடைத்த விசாரணை அறிக்கையில் இருந்து பெறப்பட்ட தகவல்கள் என London evening standard பத்திரிகை நேற்று வெளியிட்ட தகவலில்,
தனது பிள்ளைகளையும் கொலை செய்து தானும் தற்கொலை செய்த ஜெயவாணி வாகீஸவரன், இரண்டு கிழமைக்கு முன்பாக புதுவருட தினத்தில் தான், பிள்ளைகள் மற்றும் கணவன் உள்ளிட்டோர் அடங்கிய குடும்பப் படத்தை தனது முகநூலில் பதிவேற்றி இருந்தார்.
இலங்கையில் இடம்பெற்ற இனப்பிரச்சினையை தொடர்ந்து அங்கிருந்து புலம்பெயர்ந்த வல்வெட்டித் துறையை பிறப்பிடமாகக் கொண்ட 36 வயதான கணக்காளர், சக்திவேல் வாகீஸ்வரன் இறந்த தனது மனைவியினதும் பிள்ளைகளதும் உடல்களை கண்டு கடந்த வியாழக்கிழமை பொலிசாருக்கு அறிவித்திருந்தார்.
அவர் இப்போது தேற்றமுடியாத துயரத்துடன் இருப்பதுடன் என்ன செய்வது என்று தெரியாது இருக்கிறார். பேசமுடியாத துயரத்திலும் இருகிறார். வாகீஸ்வரனின் குழந்தைகளான 5 வயதுடைய அனோபன், 8 மாதம் உடைய நதீபன் .. ஆகியோரின் தாயார் ஜெயவாணியின் செயலுக்கான காரணத்தை தெரியாது விடினும், குழந்தைகளுக்கு நெருக்கமான சிறுவர்களும் தமது அஞ்சலியைச் செலுத்தி உள்ளனர்.
இந்தக் கொலை தொடர்பான விசாரணையை மேற்கொண்டுள்ள பொலிசார் தாம் வேறு எந்த சந்தேக நபர்களையும் தேடவில்லை எனத் தெரிவித்துள்னர். காரணம் தற்கொலைக்கு முன்னதான இரட்டைக் கொலை என அவர்கள் உறுதியாக நம்புகின்றனர்.
இந்தக் குடும்பத்துடன் 2 வருடங்களாக நெருக்கமாக அதே வீட்டில் இருந்த அவர்களின் நண்பரான சாந்தன் சிவபாதம், இந்த மரணங்கள் குறித்து கருத்து தெரிவிக்கையில்,
முதலாவது சிறுவனான 5 வயதுடைய அனோபன், மிகச் சந்தோசமான சிறுவன் புத்திசாலி, மிகவும் நட்பானவன் எனவும், அதேவேளை மற்றைய குழந்தையும் மகிழ்வான குழந்தை. அவர்களுடைய அறைக்கு அருகிலேயே எனது அறையும் இருந்தது... அந்தக் குழந்தைகள் என்னுடன் விளையாடுவார்கள்... எனக்கு அழுகை வருகிறது... தாங்க முடியவில்லை... எனத் தெரிவித்துள்ளார்.
36 வயதுடைய சக்திவேல் வாகீஸ்வரன் உள்நாட்டு யுத்தம் காரணமாக லண்டன் வந்து தனது கல்வியை தொடர்ந்து அதன்பின் திருமணம் முடித்திருந்தார். 10 வருடங்களுக்கு முன் தமிழ் மக்கள் மீதான நெருக்குதல்கள் தொடர்ந்த போது லண்டன் வந்தார்.
சௌத் பாங் பல்கலைக்கழகத்தில் கல்வியைத் தொடர்ந்தார். இவரது மனைவி ஜெயவாணி 2010ல் வாகீஸ்வரனுடன் இணைந்துகொண்டார். அதன் பின் அவர் தமக்கென சொந்த வீட்டை வாங்கி Vaasi Accountancy நிறுவனத்தையும் உருவாக்கியிருந்தார்.
இது ஒரு மிகத் துயரமான நிகழ்வு. 2 ஆவது குழந்தை பிறந்த பின்பே அவர்களுக்கு இடையில் பிரச்சினை ஏற்பட்டு இருக்கிறது. ஆனால் அது என்ன என்று எனக்குத் தெரியாது. வாகீஸ்வரனின் மனைவி ஜெயவாணி, கடின உழைப்பு, புத்திசாலித்தனம் உள்ளவர்.
இலங்கையில் பல்கலைக்கழக கல்வியை முடித்திருந்தார். இருவரும் எப்போதும் சந்தோசமாகவே இருந்தனர். ஆனால் இந்த சம்பவம் துயரமானது எப்படி நடந்தது என்பது புதிரானது. என சாந்தன் சிவபாதம் தெரிவித்துள்ளார்.
இதே வேளை கடந்த புதன்கிழமை இரவு Woodgrange Close வீட்டில் இருந்து (வாகீஸ்வரனின் வீடு) இரவு முழுவதும் குழந்தையின் அழுகுரல் தொடர்ந்து கேட்டுக்கொண்டு இருந்ததாக அயலவர்கள் கூறுகின்றனர். மறுநாள் ஜெயவாணியும் அவரது பிள்ளைகளும் மரணமானதாக 5.30 அளவில் அறியப்பட்டது.
இவர்களின் திருமண உறவில் பல சந்தர்ப்பங்களில் சண்டைகள், சச்சரவுகள் இருந்தன... கிறிஸ்துமஸ்சிற்கு ஒரு கிழமைக்கு முன்பாகவும், வீட்டில் பெரியளவிலான சத்தத்துடன் சண்டை போட்டதனை கேட்டேன்...
அதன் பின் செவ்வாய் அல்லது புதன் கிழமை குழந்தை நீண்ட நேரம் அழுது கொண்டிருந்தது... அதனைத் தொடர்ந்து தாயார் மிகவும் விரக்தி அடைந்தவராகவும் குழந்தையை அழவேண்டாம் என்று கத்தி அதட்டிய சத்தம் கேட்டதாகவும் அயலவர்கள் தெரிவித்துள்ளனர்.
வாகீஸ்வரனின் 39 வயதுடைய நெருங்கிய உறவினர் மகேந்திரன் சத்தியநாராயணன் கூறுகையில், நாங்கள் மிகவும் வேதனை அடைந்துள்ளோம்.. இதனை நம்ப முடியவில்லை மெல்ல மெல்ல நம்பத்தான் வேண்டும்... தேற்ற முடியாத பேசமுடியாத நிலையில் வாகீசன் இருக்கிறார்.
Geen opmerkingen:
Een reactie posten