கேட்பவன் கேணையன் என்றால் என்ற பழமொழி தான் நினைவுக்கு வருகிறது. ஒருவரைப் பிடிக்கவில்லை என்றால் உடனே அவரைத் துரோகியாக்கி, அவர் சிங்களவனின் கைக்கூலி என்று பழிசுமத்தும்
கலாச்சாரம் தமிழர்கள் மத்தில் தற்போது வளர்ந்து வருகிறது.
அதிர்வுக்கு எதிராக அவதூறு பரப்புரை: யாழ், மனிதன் இணையத்தின் ஈனச் செயல்
ஈனப் பிழைப்பு நடத்தும் லங்கா சிறி மற்றும் தமிழ் வின் இணையங்கள்.
அதிர்வுக்கு எதிராக அவதூறு பரப்புரை: யாழ், மனிதன் இணையத்தின் ஈனச் செயல்
(3ம் இணைப்பு) மஹிந்தவுக்கு அடங்கிய அதிர்வின் அம்பலம்
தமிழ் மொழியானது இந்திய மொழிகளிலேயே மிகப் பழமையான ஒரு மொழியாகும். தமிழ் மொழியின் தனித்தன்மையே மற்ற மொழிகளைக் காட்டிலும் பெரிதும் . மாறாமல் இயங்கி வரும் சிறப்பே ஆகும். தொல்காப்பியர்க் காலத்து தமிழுக்கும் . இப்போதைய தமிழுக்கும் வேறுபாடுகள் மிகவும் குறைவு. ஆனால் சமஸ்கிருத மொழியோ, அரபி மொழியோ இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய அதே ஒற்றுமையோடு இன்றில்லை எனலாம். தற்சமயம் எழுந்துள்ள தமிழ் ஒருங்குறியில் புதிய எழுத்துக்களை இணைக்க மேற்கொண்ட முயற்சியின் விளைவாக ஏற்பட்ட பிரச்சினைகளை மக்களில் பெரும்பாலானோர் பெரிதான தெளிவு அற்ற நிலையில் இருப்பதை காண முடிகிறது. அதனைப் போக்கவே இந்தப் பதிவினை இடுகிறோம். தமிழ் மக்களுக்கு இருக்கும் தனிக்குணமே எந்தவொரு விடயத்தையும் பல்கி அணுகி ஆராய்வது இல்லை. எதைச் சொன்னாலும் கண்மூடித் தனமாக எதிர்ப்பார்கள், இல்லை ஆதரிப்பார்கள், opponents point of view-ல் இருந்து எதனையுமே சிந்திப்பதில்லை. அதனால் தெளிவும் கிட்டுவதில்லை.
தமிழ் ஒருங்குறி:
இன்று தமிழர்களில் பெரும்பாலானோர் கணணியைப் பயன்படுத்தி வருகின்றனர். உலகம் முழுதும் கணணியின் பயன்பாடு பெருகிய பின்னர் தத்தம் தாய்மொழிகளில் கணணியைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கைப் பெருகிய கொண்டு வருவது அறிந்ததே. அதற்கு தமிழ் மட்டும் என்ன விதிவிலக்கா? இல்லை தமிழில் கணணியின் ஊடாக இணையத்தில் எழுதுவோர், பதிவோர், கிறுக்குவோர்கள் ஏராளம். ஒரு மொழியின் இருப்பை இத்தகு செயல் எப்போதுமே உறுதி செய்துக் கொண்டே இருக்கும். இப்படி தமிழில் எழுதுவதற்கு உதவியாக இருப்பது யுனிகோட் என்னும் எழுத்து முறை. இது கணணிப் பயன்ப்பாட்டுக்கு உருவாக்கப் பட்டவை.
யுனிகோட் எனப்படும் ஒருங்குறி முறையென்பது, உலகளவில் உள்ள அனைத்து மொழிகளின் எழுத்துகளையும் உள்ளடக்கி உருவாக்கப்பட்ட கணினி எழுத்து குறியீட்டு முறையாகும். இம்முறையில் ஒவ்வொரு மொழிக்கும் இடம் வழங்கப்பட்டிருக்கிறது. இன்றைய கணினி, இணைய யுகத்தில் இத்தகைய ஒருங்கிணைப்பின் அவசியத்தை உணர்ந்து முக்கியமான மென்பொருள் தயாரிப்பாளர்கள் இணையத்தளங்கள் உள்பட அனைவரும் இக்குறியீட்டு முறையை ஏற்றுக் கொண்டுள்ளன.
கணினித் தமிழ் வளர்ந்த தொடக்க காலத்தில் ஆளுக்கு ஒரு எழுத்துரு, குறியீட்டு முறை என்று சிக்கல் இருந்தது. இதனால் ஒருவர் உருவாக்கிய கோப்பை வேறொருவர் பயன்படுத்த முடியாத நிலை இருந்தது. அவ்வாறு பயன்படுத்த வேண்டும் எனில் அந்தக் குறிப்பிட்ட எழுத்துரு வேண்டும். இணையம் வளர்ந்த சூழலிலும் இது பெரும் இடராகவே இருந்தது.ஆனால் ஒருங்குறியின் வரவினால் இணையத்தில் இருந்த இடர்ப்பாடு களையப்பட்டது. இதனால் தமிழ் இணையத்தளங்கள் பெருகியதோடு, உலகம் முழுக்க தமிழர்கள் ஒரே குறியீட்டு முறையைப் பயன்படுத்தி, எண்ணற்ற படைப்புகளையும், தகவல்களையும் இணையத்தில் ஏற்றி வைத்துள்ளனர்.இன்றைய தலைமுறையே கணினியைப் பெருமளவில் பயன்படுத்துகிறது என்றால், வளரும் தலைமுறை முழுக்க கணினியை அடிப்படையாகக் கொண்டே மொழியைக் கற்கும் சூழல் வரும். ஏற்கெனவே இத்தகைய உலகளாவிய ஒதுக்கீட்டில் தமிழ் எழுத்துகளுக்கு 128 இடங்கள் மட்டுமே கிடைத்துள்ளது. அந்தக் குறுகிய அளவிற்குள்ளும் அனைத்துத் தமிழ் எழுத்துகளையும் ஒருவாறாக உள்ளே கொண்டு வந்துள்ளனர்.
தமிழ் எழுத்து:
தமிழ் மொழி தனக்கென ஒரு இலக்கண வரம்பைக் கொண்டதொரு மொழியாகும். ஒரு மொழி இப்படித் தான் பேசப்படல் வேண்டும், எழுதப் படல் வேண்டும் என்று இலக்கண வகுத்து standardise செய்யப்பட்டுள்ளது. இப்படியான வரன்முறைகள் இல்லாத பல மொழிகள் காலப் போக்கில் சிதைந்தும், கலந்தும்,. உருமாறியும் போய்விட்டன. ஆகவே ஒரு மொழி நீண்டகாலம் சீராக இயங்க இலக்கணங்கள் அவசியப் படுகின்றன. தமிழ் மொழி உட்பட அனைத்து தெற்காசிய மொழிகளின் எழுத்தும் பிராமி என்னும் எழுத்தில் இருந்து உருவாகி வந்தவை ஆகும். அசோகரின் காலத்துக்கு முன இந்தியாவில் எழுதும் முறை இல்லாமல் இருந்திருக்கிறது. கிரேக்கரின் வருகையால் அசோகர் காலத்தில் கிரேக்கரின் எழுத்துக்களைப் பின்பற்றி அசோக பிராமி எழுத்து முறையினை அசோகர் ஏற்படுத்தி வைத்தார். ஆனால் தமிழ் பிராமி எழுத்துக்களும் அதே காலக்கட்டத்தில் தோன்றியது. அதன் தோற்றம் அசோகரின் பிராமியில் இருந்து வந்தவையா? அல்லது கிரேக்கர் பீனிசியரின் அரேபியரின் வியாபரத் தொடர்பால் தமிழ் பிராமி ஏற்படுத்தப்பட்டதா என்பது இன்னும் சரியாக ஊர்சிதப்படுத்தப்படவில்லை. காரணம், அசோகரின் ஆளுகைக்குள் பண்டைய தமிழகம் வந்திருக்கவில்லை. அசோகரின் பிராமியில் இருந்து தமிழ் பிராமி ஒலியன்கள் பெரிதும் மாறுபடுவதுமே. அசோகரின் பிராமியில் ba, bha, ga, gha, என ஒலிகளுக்கு தனி எழுத்து கொடுக்கப்பட்டு வடமொழி எழுதுவதற்கு உகந்ததாக இருந்திருக்கிறது. இத்தகைய எழுத்துக்கள் தமிழில் இல்லை. ஆனால் தமிழ் பிராமியில் ழ, ற போன்ற எழுத்துக்கள் உள்ளன. இவைய் அசோகனின் பிராமியில் இல்லை. அசோக பிராமி தமிழில் எடுத்து கையாண்டு இருந்தால் தானாகவே ba, bha, போன்ற அழுத்தமான ஒலிகளுக்கு தமிழ் எழுத்துக்கள் தோன்றி இருக்கும் அல்லவா.. ஆகவே இந்திய எழுத்துக்கள் உருவாகும் போது தனித்தனியே வடபிராமி, தென் பிராமி உருவாகி இருக்க வேண்டும்.
தமிழில் எழுத்துக்கள் 247 எனப் படித்து இருப்போம் ஆனால்உண்மையில் தமிழின் எழுத்துக்கள் 31 ஆகும். அவை உயிர், மெய், ஆய்தம். உயிர் மெய் எழுத்துக்கள் உயிரும் மெய்யும் புணர்ந்து வருவதால் உண்டான எழுத்துக்கள். தமிழ் எழுத்துக்கள் தமிழ் பிராமியாக இருந்து பிற்காலத்தில் வட்டெழுத்துகளாக மாற்றம் ஆனது. ஒலைச் சுவடிகளில் தமிழ் பிராமி எழுதப் படுதல் கடினம் என்பதால் அது வட்டெழுத்துக்களாக மாற்றம் கண்டன. வட்டெழுத்துக்கள் பாண்டிய நாட்டிலேயே பெரிதும் பயன்பாட்டில் இருந்தன. அந்த வட்டெழுத்தினையே சோழர்களும், சேரர்களும் பயன்படுத்தியும் வந்தனர். இந்த வட்டெழுத்தினை அழித்து சோழர்கள் பிற்கால் இன்றைக்கும் பயன்படும் தமிழ் எழுத்தினை உருவாக்கி புழக்கத்தில் விட்டனர். எழுத்தின் வரி வடிவங்கள் மாறினாலும் தமிழ் பிராமி எழுத்து முதல் இன்று வரை தமிழ் எழுத்தின் ஒலி மாற்றம் காணவில்லை எனலாம்.
கிரந்தம்:
கிரந்தம் என்றால் என்ன என்று இன்று பலபேருக்கு தெரிய வாய்ப்பில்லை. தமிழில் கிரந்த எழுத்துக்களும் உள்ளன. இன்று நாம் பயன்படுத்தும் கிரந்தம் ஜ, ஸ, ஷ, ஹ, ஸ்ரீ. இந்த எழுத்துக்கள் தமிழ் எழுத்துக்களோடு இணைந்து பயன்பட்டு வரும் கிரந்த எழுத்துக்கள் ஆகும். வடநாட்டில் இருந்து சங்க மருவிய காலத்தில் குடியேறிய மக்கள் சமணர், பௌத்தர், பிராமணர் போன்றோர் தமது மொழியினை எழுத கிரந்த எழுத்துக்களை உருவாக்கினர். கிரந்த எழுத்துக்கள் பெரிதும் சமஸ்கிருதம், பாலி மொழிகளை எழுதவே இந்த எழுத்துக்களை உருவாக்கினர். அதாவது வடமொழியினை வட நாட்டில் வாழ்ந்த மக்கள் நகரியில் எழுத தொடங்கினர் . ஆனால் தென்னாட்டுக்கு வந்த சிறுபான்மையின மக்கள் கிரந்த எழுத்தை உருவாக்கினர் எனலாம். தமிழ் மன்னர்களின் ஆட்சி சிதைந்து தமிழகம் களப்பிரர் கைக்கு சென்ற பொழுது ஆட்சியாளர்களாக இருந்த களப்பிர மன்னர்கள் சமஸ்கிருதத்தையே ஆட்சி மொழியாக கொண்டனர். அவர்களின் கொடையால் கிரந்தம் ஆட்சிக் கட்டிலும் ஏறியது.
இதனையே தமிழின் இருண்டகாலம் என அழைக்கப்படுகிறது. இங்கு ஒப்பு நோக்க வேண்டியது என்னவென்றால். தென்னாட்டுக்கு முதலி வந்த சமணரும், பௌத்தரும் தமது சமய நூல்களை பெரிதும் தமிழில் இயற்றினர். அவர்கள் கிரந்தத்தை தமிழில் பயன்படுத்தவில்லை. தமது சமய நூல்களைப் பாலி, சமஸ்கிருத மொழிகளில் எழுதும் போதும் அவர்கள் கிரந்தத்தினைப் பயன்படுத்தி இருக்க வேண்டும். தமிழில் எழுதும் போது தமிழ் எழுத்தினை பயன்படுத்தி உள்ளனர். இரண்டையும் கலக்கவில்லை. தமிழகம் பல்லவரின் ஆட்சிக்கு வந்த பின கிரந்தம் தமிழகம் எங்கும் ஆட்சியாளார்களால் பயன்படுத்தப் பட்டு வந்திருக்கின்றன. அவர்கள் காலத்தில் தான் கிரந்த எழுத்துக்கள் கன்னடம், தெலுங்கு, மாலைதீவுகள், தென் கிழக்காசியா ஆகிய நாடுகளுக்கு பரவின எனலாம். இன்றும் தாய்லாந்து, சிங்களம், மலையாளம் ஆகிய மொழிகள் கிரந்தத்தினையே பயன்படுத்தி வருகின்றனர். கிரந்தத்திலிருந்தே கன்னடம், தெலுங்கு எழுத்துக்கள் உருவாகின. அந்தக் காலக்கட்டத்தில் திராவிட மொழிகளில் சமஸ்கிருதம் மானவாரியாக கலக்கப்பட்டன. சமஸ்கிருத சொற்களை தமிழில் எடுத்தாள எழுத்துக்கள் இல்லாததால் கிரந்த எழுத்துக்கள் நடைமுறைக்கு வந்தது. இருந்தாலும் இந்தக் காலக்கட்டங்களிலும் தமிழையும் சமஸ்கிருதம், மணிபிராவளம் சார்ந்த மொழிகளையும் தனித்தனி மொழிகளாகவே பாவித்து வந்தனர். அதாவது தமிழ் மொழியில் தேவையான இடங்களில் சமஸ்கிருத சொற்களை தமிழ்ப் படுத்தியும் ( உதா. அமிர்தம் -அமிழ்தம், கஷாயம் – காழகம்), சில இடங்களில் அப்படியே கிரந்த எழுத்தினையும் பயன்படுத்தியும் வந்தனர். ஆனால் ஒரு இடத்திலும் தமிழ் மொழி கிரந்த எழுத்தில் எழுத்ப்படவில்லை. அதாவது இன்றைய ஆங்கில சொற்கள் தமிழில் இருந்தாலும், பயன்படுத்தினாலும் ( உதா. பஸ், ஏர்போர்ட், ) தேவைக்கு ஏற்ப சில கிரந்த எழுத்துக்களும், சில சொற்கள் தமிழில் எழுதி வருவதைப் போல எழுதி வந்தனர். ஆனால் ஒரு போதும் தமிழ் மொழி கிரந்தத்தில் எழுதப்படவில்லை.
அதாவது இன்றைய நிலையில் தமிழ் மொழி ஆங்கில எழுத்தால் எழுதப்பட்டு நூலாக வருகிறாதா ? இல்லையே இதே நிலை தான் அன்றும் சமஸ்கிருத சொற்கள் தமிழில் பயன்பட்டு வந்தன. ஆனால் இங்கிருந்த வடமொழியாளர்கள் சமஸ்கிருதத்தைப் பயன்படுத்த கிரந்த எழுத்துக்களைப் பயன்படுத்தினர். மாறாக நகரியினைப் பயன்படுத்தவில்லை. இந்த நிலை நீடித்ததால் இங்கிருந்த வடமொழியாளர்களின் மொழியில் தமிழ் சொற்கள் ஏராளமாக கலந்து மணிப்பிரவாளமாக மாற்றம் கொண்டது. மணிப்பிரவாள நடையில் சமய இலக்கியங்கள் சில உருவாகின. ஆனால் அன்றும் மணிப்பிரவாளத்தையும் தமிழையும் போட்டுக் குழப்பிக் கொள்ளவில்லை இரண்டும் தனித்தனி மொழியினைப் போன்ற செயல்பட்டு வந்தன. மணிபிராவளத்தின் தாக்கத்தால் சேரலம் மலையாளமாக உருவாகியது, கன்னடம், தெலுங்கு மொழிகள் உருவாகின. பல்லவ மன்னன் மகேந்திரவர்மனால் எழுதப்பட்ட மட்டவிலாச பிராகசன என்னும் நூல் கிரந்ததில் எழுதப்பட்டாலும் அது தமிழ் நூல் இல்லை. அது பிராகிருதம் சமஸ்கிருதம் கலந்த நடை. இதை அடியொற்றி வைணவ இலக்கியங்கள் மணிப்பிரவாள நடையில் எழுதப்பட்டன. அவை சமஸ்கிருதம் தமிழ் கலந்து எழுதப்பட்டன. ஆனால் அவை தமிழ் எனக் கொள்ளப்படவில்லை. ஆனால் மணிப்பிரவாள நடை மக்களுக்கு புரியாத படியாலும், மக்களிடம் பெரிதும் ஆர்வம் இல்லாததாலும். மணிபிராவாளம் வழக்கொழிந்து போயின. ஒரு வேளாய் மணிப்பிரவாள தொடர்ந்து தமிழகத்தில் இருந்திருந்தால் தற்கால் செந்தமிழ் மொழி இல்லாமல் போயிருக்கும். ஆனால் தமிழகத்தின் சோழ, பாண்டிய நாடுகளைத் தவிர்த்து கேரளம், கன்னடம், ஆந்திரம், சிங்களம் ஆகிய பகுதியில் இருந்த மக்கள் கிரந்த எழுத்தினைப் பயன்படுத்தினதாலும், வரன்முறை இன்றி சமஸ்கிருத சொற்களைக் கலந்தததாலும் அவர்களின் திராவிட மொழி சிதைந்து தனித்தனி மொழிகளாக மாற்றம் கண்டன. ஆனால் தமிழர்கள் மணிப்பிரவாளத்தை ஒதுக்கினப் படியால் தமிழ் மட்டும் தப்பித்துக் கொண்டது.
சமஸ்கிருத எழுத்து எது?
பழங்காலம் முதலே சமஸ்கிருத மொழி ஒரு எழுத்து மரபினைப் பேணாமல் இரண்டு வித எழுத்துக்களைப் பயன்படுத்தி வந்தது. ஒன்று நகரி எழுத்து, இதுவே இன்று மேம்படுத்தப்பட்டு தேவநகரி எழுத்தாக மாறியுள்ளது. தற்கால இந்தி மொழி இந்த எழுத்தினாலே எழுதப் படுகிறது. மற்றொன்று கிரந்தம் தற்சமயம் கிரந்தத்தில் சமஸ்கிருதம் பெரிதும் எழுதப்படுவதே இல்லை. இந்திய விடுதலைக்கு பின் சமஸ்கிருத மொழியில் இருந்த சிக்கலை அறிந்த இந்திய நடுவண அரசு சமஸ்கிருதத்தை எழுத நகரி எழுத்துக்களையே பரிந்துரை செய்து அதனை நடைமுறையிலும் கொண்டு வந்தது. இதனால் சமஸ்கிருத மொழியில் இருந்த எழுத்துக் சிக்கல் தீர்ந்தது. கிரந்தத்தில் இருந்த பல்வேறு இலக்கியங்கள் தேவநகரியில் இன்று மாற்றம் செய்யப்பட்டு விட்டது. கிரந்தத்தில் இருந்து உருவான மலையாள லிபி, கன்னட-தெலுங்கு லிபி, சிங்கள் லிபி ஆகியவை அந்தந்த மொழிகள் எழுதப் பயன்பட்டு வருகின்றன. கிரந்ததில் இருந்து உருவான தாய், பர்மிய லிபியிக்களும் வழக்கில் இருக்கின்றன. ஆனால் மலாய, இந்தோனோசிய, தக்கலோக் ஆகியவை ரோமன் எழுத்துக்களுக்கு மாறிவிட்டன. இதற்கு சமயம் சார்ந்த காரணங்களும் இருக்கலாம். முறையே அவர்கள் இஸ்லாமிய, கிறித்தவ மதங்களுக்கு மாறிவிட்டன. ஆனால் சமஸ்கிருதத்துக்கு என உருவான கிரந்தம் சமஸ்கிருதம் எழுதப் பயன்படாமல் போய்விட்டது.
தமிழில் கிரந்தம் தேவையா?
இந்நிலையில் கடந்த 2010 ஜூலை 10ம் நாள், சிறீ ரமண சர்மா என்ற பார்ப்பனர், யுனிகோடு சேர்த்தியம் அமைப்புக்கு ஒரு பரிந்துரையை முன்வைத்துள்ளார். அதன்படி தமிழ் எழுத்துகளுக்கான இடத்தை அதிகப்படுத்தி அதில் 26 கிரந்த எழுத்துகளைச் சேர்க்க வேண்டும் என்று கோரியுள்ளார்.
இவையெல்லாம் காலப்போக்கில் கழிந்து, இன்றும் தமிழ் தமிழாகவே நிலைத்து நிற்கிறது. எக்காலத்திலும் தமிழ் வடமொழியின் உள்ளீடுகளை ஏற்க முடியாது. காரணம் இரண்டும் வெவ்வேறானவை. இரண்டின் எழுத்து, ஒலிப்பு முறை, மொழிப் பகுப்பு ஆகியவை எப்போதும் ஒன்றுபோல் இருக்க முடியாது.இன்றும் புழக்கத்தில் இருக்கும், ஜ, ஷ, ஹ, ஸ ஸ்ரீ ஆகிய கிரந்த எழுத்துகள் தமிழ் எழுத்துகளிலும், யுனிகோட் முறையிலும் ஏற்கெனவே இடம் பெற்றுள்ளன. ஆனால் சிறீ ரமண சர்மா எனும் இந்தப் பார்ப்பனர் முன்வைத்துள்ள 26 கிரந்த எழுத்துகளை எந்தத் தமிழனும் படித்திருக்கவோ, பயன்படுத்தியிருக்கவோ முடியாது. காரணம் அடிவயிற்றிலிருந்து எழுப்பும், ப, பா, மா, உட்ட், தா உள்ளிட்ட ஒலிகளை எக்காலத்திலும் தமிழர்கள் பயன்படுத்தியதே கிடையாது.சர்மாவே தனது முன்வைப்பில் எழுதியிருப்பதைப் போல சமஸ்கிருதத்தை எழுதுவதற்காக சேர்க்கப்பட வேண்டிய எழுத்துகள் தானாம் அந்த 26 கிரந்த எழுத்துகளும்!.“இவை இம்மொழியில் இன்றும் பயன்பாட்டில் உள்ளனவா? என்ற கேள்விக்கு, ஆம். சில நேரங்களில் என்றும் “சமஸ்கிருத எழுத்துகளை தமிழ்நாட்டில் வெளியிடுவதற்குப் பயன்படுகிறது” என்றும் குறிப்பிட்டுள்ளார்.அதற்கு அவர் காட்டியிருக்கும் எடுத்துக்காட்டுகள்: 1951ம் ஆண்டு சென்னை, காமகோடி கோஷஸ்தனம் வெளியிட்டுள்ள ‘ஸ்ரீ சதாஸிவ பிரமேந்திராவின் ஸிவ மானச பூஜா கீர்த்தனாஸ்’ மற்றும் ஆத்ம வித்யா விலாச என்னும் நூலும், 1916ம் ஆண்டு வெளியான டி.எளி. நாராயண சாஸ்திரி என்பாரின் ‘போஜ சரிதம்’ என்னும் நூலுமாகும்.இவைதான் இன்னும் புழக்கத்தில் இருக்கின்றனவாம். இதை தமிழ் ஒதுக்கீட்டில் இணைத்து ‘விரிவாக்கப்பட்ட தமிழ்’ என்ற பெயரில் அங்கீகரிக்க வேண்டுமாம். அப்படி இவ்வெழுத்துகள் தமிழ் என்ற பெயரில் இணைக்கப்பட்டால், அது விரிவாக்கப்பட்ட தமிழாக இருக்காது.
அதாவது சிறீ ரமண சர்மாவின் கிரந்த எழுத்துக்களைப் பாதுக்காக்கும் முயற்சிக்கு அவர் சமஸ்கிருத மொழியினைத் தான் பயன்ப்படுத்தி இருக்க வேண்டும். அதாவது கொங்கனி மொழி மூன்று எழுத்து முறைகளைக் கொண்டிருப்பது போல், சமஸ்கிருதத்தை எழுத கிரந்தத்துக்கு இடம் கோரி இருக்க வேண்டும். ஆனால் அது அவ்வளவு எளிதான காரியமில்லை. மாறாக அவர் தமிழ் தானே இருக்கு இதில் சேர்த்து விடலாம் என்று நினைத்துவிட்டார். இது எப்படி இருக்கின்றது என்றால் தமிழில் ழ, ள, ற, ன, ஒலியன்களை எழுத ஆங்கிலத்தில் தனி எழுத்துக்களை ஒதுக்க வேண்டும் என்று நாம் கோரினால் என்னவாகும்? ஏற்கன்வே இந்திய ஆங்கிலயே இலக்கியங்களில் ழ என்பதை zh என்று எழுதுகிறோம். இதற்கு எல்லாம் ஆங்கிலத்தில் இடம் கேட்டால் விடுவார்களா அவர்கள்?
குழம்பிப் போன தமிழர்களுக்கு.
இந்த யூனிகோட் பிரச்சினை வெடித்ததும் சில தமிழர்கள் குழம்பி போய் விட்டனர். அதாவது தமிழில் இருக்கும் ஜ,ஷ,ஸ,ஹ, போன்ற கிரந்தத்தைத் தான் நீக்கப் போகிறார்களோ எனவும். அப்படி என்றால் ஸ்டாலின் போன்ற பெயர்களை எப்படி எழுதுவார்கள் என்று கேள்வி எழுப்பினர். ஆனால் அவர்களுக்கு சொல்வது எல்லாம் இந்த ஐந்து எழுத்துக்களும் ஏற்கனவே யூனிக்கோட்டில் உள்ளன. அவை நீக்கப்படப் போவதில்லை. இந்த ஐந்து எழுத்துக்களோடு மேலும் ஐந்து உயிர் எழுத்துக்களும் 21 உயிர்மெய் எழுத்துக்களும் தமிழில் சேர்ந்தால் என்னவாகும்? யோசித்துப் பாருங்கள் தமிழில் மொத்த எழுத்துக்கள் 544 ஆகிவிடும். ஏற்கனவே நமது பிள்ளைகள் 247 எழுத்துக்களைப் படிக்க முடியாமல் திணறி வருவது அனைவரும் அறிந்ததே. இப்போது புரிந்ததா நாம் எதிர்ப்பது எதனை என்று? அதாவது தமிழ் எழுத்துக்கள் வேறு, கிரந்தம் வேறு. தற்சமயம் நாம் கிரந்ததில் இருந்து ஐந்து எழுத்துக்களை மட்டும் கடன் வாங்கி பயன்படுத்தி வருகிறோம். கிரந்ததிலேயே தமிழை எழுதுவது தமிழ் எழுத்துக்களை அழிக்கும் முயற்சியாகும். தமிழ் எழுத்துகளுக்கும் கிரந்தத்துக்கும் இருக்கும் சில வரி வடிவ உருவ ஒற்றுமையை வைத்துக் கொண்டு இரண்டும் ஒன்று என வாதிடுவது, தமிழ் மலையாள எழுத்துகளின் உருவ ஒற்றுமையை வைத்து இரண்டும் ஒன்று எனக் கூறுவது போல் ஆகும்.
என்ன தான் தீர்வு?
நமக்கு எழும் முதல் கேள்வி சமஸ்கிருதத்தை ஏன் தமிழில் எழுத வேண்டும், அதற்கு புதிதாக எழுத்துக்களை சேர்ப்பது சரியா. அப்படியானாள் அரபி சொற்களை தமிழில் எழுத அரவி எழுத்துக்களை யூனிக்கோட்டில் சேர்த்தால் ஏற்றுக் கொள்வோமா?
ஆங்கிலம் படிக்க ஆங்கில எழுத்துக்களைப் படிக்க வேண்டும், சீனம் எழுத சீன எழுத்துக்களைத் தான் பயன்படுத்த முடியும், அதே போல சமஸ்கிருதம் எழுத தேவ நகரியைத் தான் பயன்படுத்த வேண்டும். அதற்கு உடன்படாதவர்கள் சமஸ்கிருத எழுத்தினை தேவநகரியில் இருந்து கிரந்தத்துக்கு மாற்றலாம். இல்லை என்றால் நடுவண் அரசிடம் கோரி இரண்டு எழுத்து முறைகளையும் பயன்படுத்தலாம். யூனிக்கோட்டில் கிரந்த சமஸ்கிருத்தக்கு தனி இடம் கோரலாம்.
ஏற்கனவே மலையாள லிபியில் சமஸ்கிருதத்தை எழுத வழி உண்டு. எழுத்துக்களுக்கு பஞ்சம் இல்லை. ஆகவே சமஸ்கிருதத்தை எழுத மலையாள லிபியை பயன்படுத்தலாம். தமிழ் கிரந்தமும் மலையாள லிபியும் 99 சதவீதம் ஒரே வரி வடிவத்தை கொண்டிருப்பவை. ஆகவே சமஸ்கிருதம் எழுத முனையும் ஒரு சதவீதம் தமிழர்களுக்காக 99 சதவீதம் தமிழர்கள் புது எழுத்துக்களைப் படிக்க வேண்டுமோ. அது மேலும் நம் மீது புது சுமையாக இருக்கும். இதனால் தமிழ் மீது பற்றுக் குறையுமே ஒழிய தமிழ் படிக்கும் ஆர்வம் வராமல் போகலாம். குறிப்பாக இளைய தலைமுறைத் தமிழர்கள் குழம்பி போவார்கள். ஆகவே சமஸ்கிருதத்தை தென்மொழியில் எழுதிப் படிக்க நினைப்பவர்கள் மலையாள லிபியைப் பயன்படுத்துங்கள் யார் வேண்டாம் என்றது. கிரந்த எழுத்தைக் காப்பாற்றத் தான் வேண்டும் என்றால் சமஸ்கிருத மொழியில் கிரந்த எழுத்துக்கு இடம் வாங்க்கி கொள்ளுங்கள்.
தமிழில் இருக்கும் ஜ,ஷ,ஸ,ஹ,ஶ,ஸ்ரீ போன்ற எழுத்துகளே தேவையற்றது தான். இருப்பினும் அதன் பயன்பாட்டையும் குறைக்கலாம். ஸ்ரீ என்ற எழுத்து தேவையே இல்லை. அதற்கு சிறீ என்று தமிழிலேயே எழுதலாம். ஜ, ஷ, ஸ, ஹ என்பதைக் கூட மாற்றித் தமிழிலயே எழுத வழிவகை செய்யலாம்.
எம்மை பொறுத்த வரைக்கு தமிழ் மேலும் எளிமை படுத்தப் பட வேண்டும். அதன் எழுத்துக்களை அதிகரித்து தேவை இல்லாத சுமையை வருங்கால சந்ததிதிகள் மேல் திணிப்பதால். அவர்கள் தமிழை முற்றுமாக புறந்தள்ளி ஆங்கில மொழியே விரும்பும் நிலை ஏற்படலாம் அல்லவா?
சிந்தியிங்கள்.. செயல்படுங்கள்….
மேலும் படிக்கவும்
உசாத்துணை: